Saturday, May 27, 2017

முதல்வர் பங்கேற்கும் ஏற்காடு கோடை விழா ஏராளமான பிழைகளுடன் அலட்சிய அழைப்பிதழ்

பதிவு செய்த நாள்27மே2017 00:37


சேலம்: ஏற்காடு கோடை விழா இன்று துவங்குகிறது. முதல்வர் பங்கேற்கும் இவ்விழா தொடர்பான அழைப்பிதழ், ஏராளமான பிழைகளுடன் அச்சிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் காட்டியுள்ள அலட்சியம், பல தரப்பினரையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

ஏற்காட்டில், 42வது கோடை விழாவை, முதல்வர் பழனிசாமி, இன்று துவக்கி வைக்கிறார். விழாவில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, நடராஜன், அரசு செயலர்கள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள, துவக்க விழா அழைப்பிதழில், ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன. 'தமிழக முதல்வர் பழனிசாமி, விழா பேருரை ஆற்றுவார்கள்' எனக் குறிப்பிடுவதற்கு பதில், 'ஆற்றுவர்கள்' என அச்சிடப்பட்டுள்ளது

. கலைநிகழ்ச்சி விபரங்களை அச்சிடுவதிலும் ஏராளமான குளறுபடிகள். அதில், மே 27ல், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நேரத்தை குறிப்பிடும் இடங்களில், காலை, 11:00 மணிக்கு அடுத்து, மாலை, 1:00 மணி, நண்பகல், 2:00 மணி, மாலை, 3:00 மணி, இரவு, 4:00 மணி, இரவு, 5:00 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. இதே குளறுபடிகள், அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்துள்ளது. மே 28 நிகழ்ச்சி நிரலில், மாலை, 3:00 மணி, மதியம், 4:00 மணி, மதியம், 4:30 மணி என அச்சிடப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு நேரம் கூட சரியாக குறிப்பிடாமல், அலட்சிய போக்குடன் அச்சிடப்பட்டுள்ள அழைப்பிதழை பார்க்கும் பலரும் முகம் சுளிக்கின்றனர்.

No comments:

Post a Comment

How chatbots became the new-age parenting guru

How chatbots became the new-age parenting guru  AI tools like ChatGPT are not only coming in handy for homework assignments ( don’t judge, p...