Saturday, May 27, 2017

ஏழாவது ஊதியக்குழு கருத்துக்கேட்பு துவக்கம்

பதிவு செய்த நாள்27மே2017 01:15

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை தொடர்பான, கருத்துக்கேட்பு கூட்டம், சென்னையில், நேற்று துவங்கியது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள், ௨௦௧௬ல், அமல்படுத்தப்பட்டன. அதை தங்களுக்கும் செயல்படுத்த வேண்டும் என, தமிழக அரசு
ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.இது தொடர்பாக, பரிந்துரைகளை அளிக்க, நிதித்துறை செயலர் சண்முகம் தலைமையில், ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, அரசு ஊழியர் சங்கங்களிடம், கருத்துக்கள் கேட்க முடிவு செய்தது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், சென்னை, கடற்கரை சாலையில் அமைந்துள்ள, லேடி வெலிங்டன் பள்ளியில் நேற்று துவங்கியது; இன்றும் நடக்கிறது.

இது குறித்து, நிதித்துறை செயலர், சண்முகம் கூறியதாவது:அரசு அங்கீகாரம் பெற்ற, 149 சங்கங்களிடம், மனுக்களை பெற உள்ளோம். அதன்பின், ஜூன், 2 மற்றும் 3ல், ஓய்வூதியர் சங்கங்கள் மற்றும் அங்கீகாரம் பெறாத சங்கங்களிடமும், மனுக்கள் பெறப்படும். ஜூன் இறுதிக்குள், அறிக்கை
சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Will central govt employees retiring before January 1, 2026 lose out on 8th Pay Commission benefits?

Will central govt employees retiring before January 1, 2026 lose out on 8th Pay Commission benefits? There is an increased concern among the...