Wednesday, May 31, 2017

'ஊதினால்' உயிருக்கு உலை இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்
பதிவு செய்த நாள்30மே2017 22:35





புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'புகையிலையை கைவிடுங்கள், வறுமையை ஒழிக்கலாம், வளர்ச்சியை ஏற்படுத்தலாம்' என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

புகைப்பது ஒரு கெட்ட பழக்கம், புகைப்பது பணத்தை வீணடிக்கிறது, புகைப்பது உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. 2014 கணக்கின் படி, 124 நாடுகளில் 43 லட்சம் எக்டேர் விவசாய நிலங்களில் 80 லட்சம் டன் அளவிலான புகையிலை விளைவிக்கப்படுகிறது. இதில் 90 சதவீதம் நடுத்தர வருமான மற்றும் ஏழை நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலும் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் தான் அதிகளவில் புகையிலை விளைவிக்கப்படுகிறது. உலகில் அதிகளவில் புகையிலை விளைவிக்கும் நாடாக சீனா உள்ளது.

70 லட்சம்
புகையிலை பயன்பாட்டால் உலகளவில் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் 9 லட்சம் பேர் புகைப்பவர்களின் அருகே சுவாசிப்பவர்கள். 80 சதவீதம் பேர் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
4000
புகையிலையில் முக்கியமானது 'சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய்
ஏற்படுத்தக்கூடியவை.
33
உலகளவில் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டுமெனில் இதற்கு விதிக்கப்படும் வரியை அதிகப்படுத்த வேண்டும். 33 நாடுகள் தான் புகையிலை சில்லரை விலையில் 75 சதவீதத்தை வரியாக வசூலிக்கிறது.
10ல் 1
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களில் 10ல் ஒன்று, சட்ட விரோதமான முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
23
உலகளவில் புகையிலை பயன்படுத்தும் 23 கோடி இளைஞர்கள் ஏழ்மையில் வாழ்கின்றனர்.
10%
உலகில் ஏழை நாடுகளில் 10 சதவீத குடும்பங்களில் வருமானத்தை விட 10 சதவீதம் அதிகமாக புகையிலைக்கு செலவழிக்கி்ன்றனர். இதனால் உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு வருமானம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
1000 கோடி
உலகில் தினமும் ஆயிரம் கோடி சிகரெட் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...