Wednesday, May 31, 2017

Income tax Return

ஒரு எஸ்.எம்.எஸ். போதும் - ஆதார், பான்கார்டை இணைக்க புதிய வசதி ...

வருமானவரி செலுத்துவோர் தங்களின் ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) மூலம் இணைக்கும் வசதியை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தயுள்ளது.

வரும் ஜூலை மாதம் முதல் வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டு எண்ணோடு, ஆதார் எண்ணையும்  இணைத்து இருக்க வேண்டும் என்று மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், பான் கார்டு எண்ணையும் இணைக்க பல்வேறு வசதிகளை வருமான வரித்துறை அறிமுகப்டுத்தி வருகிறது.

இணையதளம் மூலம் பான்கார்டு எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் இ-வசதியை வருமானவரித்துறை அறிமுகம் செய்து இருந்தனர். அதில் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும், பான் கார்டில் இருக்கும் பெயரும் சிறிய எழுத்துப்பிழை இருந்தாலும், பிறந்த தேதியும், பாலினம் சரியாக இருக்கும் பட்சத்தில் நாம் குறிப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு ஒரு பாஸ்வேர்டு அனுப்பப்படும் அதை இணைதளத்தில் பதிவிட்டால் பான்கார்டும், ஆதார் கார்டும் இணைக்கப்படும்.

இந்நிலையில், இப்போது வருமானவரி செலுத்துவோர்களுக்கு வசதியாக எஸ்.எம்.எஸ். மூலம் ஆதார், பான் எண்ணை இணைக்கும் வசதியை வருமானவரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக நேற்று பல தேசிய நாளேடுகளில் இது தொடர்பாக வருமானவரித்துறையினர் விளம்பரம் செய்துள்ளனர்.

இதன்படி, வருமானவரி செலுத்தும் எந்த தனிநபரும், தங்களின் ஆதார் எண்ணையும், பான் எண்ணையும் குறிப்பிட்டு 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் இணைக்கப்பட்டு விடும்.

மேலும், எஸ்.எம்.எஸ். வசதியை பயன்படுத்த விரும்பாத நபர்கள், வருமானவரித்துறையின் அதிகாரப்பூர்வ இணைதளத்தில் ஆதார், பான்கார்டு இணைக்கும் தளத்தில் சென்று இணைக்கும வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...