Wednesday, May 31, 2017

2 ஆண்டுக்கு பின் பட்டமளிப்பு விழா : சென்னை பல்கலை அறிவிப்பு

பதிவு செய்த நாள்30மே2017 21:53

புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப் பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. சென்னைப் பல்கலை துணைவேந்தராக இருந்த தாண்டவன், 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் இன்றி பல்கலை நிர்வாகம் முடங்கியிருந்தது. மேலும், 2015, செப்டம்பருக்குப் பின், பட்டமளிப்பு விழாவும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், புதிய துணைவேந்தராக, சென்னைப் பல்கலையின் முன்னாள் பேராசிரியர் துரைசாமி, மே, 27ல் பதவியேற்றார். இதையடுத்து, உயர்கல்வித் துறை உத்தரவுப்படி, ஜூலை முதல் வாரத்திற்குள் பட்டமளிப்பு விழா நடத்தப்பட உள்ளது.அதனால், '159வது பட்டமளிப்பு விழாவில், பி.எச்டி., முடித்தோர் சான்றிதழ்கள் பெற, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பதிவாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலையின், www.unom.ac.in என்ற இணைய தளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, 'பதிவாளர், சென்னைப் பல்கலை' என்ற முகவரிக்கு, 500 ரூபாய்கான வங்கி வரைவோலையுடன் அனுப்ப வேண்டும். பல்கலையின் விசாரணை பிரிவிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...