Wednesday, May 31, 2017

Chennai Silks

இடிக்கும் பணி தொடங்கியது... தரைமட்டமாகிறது சென்னை சில்க்ஸ்...

தியாகராய நகரில் இருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க தீயணைப்பு துறையினர் கடந்த 10 மணி நேரமாக போராடி வருகின்றனர். 

அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்ட போதிலும், இதுவரை கட்டடத்திற்குள் மீட்பு படை வீரர்கள் செல்ல முடியாதபடி கரும்புகையுடன், தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. 

கட்டடத்தில் இருந்து வெளியேறும் நச்சுவாயுக்கள் மிகுந்த புகையால் தியாகராயர் நகர் திணறி வருகிறது. அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் உள்ளோர் வீடுகளை பூட்டி விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். 

இதற்கிடையே தீயை அணைக்க புதிய யுக்தியைக் கையாண்டுள்ள மீட்பு படையினர் கட்டடத்தில் துளையிட்டு அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர்.

மேலும் கட்டடச் சுவர்கள் விரிசல் அடையாமல் இருப்பதற்காக நான்கு புறம் வழியாகவும் தண்ணீர் அடிக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான வெப்பத்தால் விரிசல் கண்டுள்ள சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. 

தீ கொளுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாததால்,அசாம்பாவித சம்பவங்களைத் தடுக்க  கட்டடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்கப் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மீண்டும் ஆய்வு நடத்தியுள்ளார். 

Dailyhunt

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...