Thursday, May 11, 2017

 'இன்றும் நாளையும் வெயில் குறையும்'

சென்னை: 'தமிழகம் முழுவதும், இன்றும், நாளையும் வெப்பத்தின் தாக்கம் குறையும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:தமிழகத்தில், இரு நாட்களாக, ஆங்காங்கே சில இடங்களில், லேசான மழை பெய்துள்ளது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், திருச்சி, புள்ளம்பாடியில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. பூண்டி மற்றும் சமயபுரம், 6; சேர்ந்தமங்கலம், திருக்கோவிலுார், தம்மம்பட்டி, பெரம்பலுாரில், 5 செ.மீ., மழை பெய்துஉள்ளது.தற்போது, தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வரும் காற்று சந்திப்பதால், மழை பெய்கிறது. இன்னும், இரண்டு நாட்களுக்கு வெப்பம் குறைந்து, சில இடங்களில்மழை பெய்யும். கடலோர பகுதிகளில், 36 - 38; உள் மாவட்டங்களில், 40 - 42 டிகிரி செல்சியசாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...