வாழத்தான் முடியலை.. வா செத்துப் போகலாம்.. எப்படா இந்த கருமாந்திரம் முடியும்??
oneindia

சென்னை: தெய்வமகள் டிவி சீரியலின் இறுதி கட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன. வில்லி காயத்ரி தனது கையில் துப்பாக்கியுடன் பேசும் காதல் வசனங்கள்தான் இப்போது டிரெண்ட் ஆகியுள்ளது.
சத்யாவை கொலை செய்யணும், இல்லாவிட்டால் தான் செத்துப்போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்த காயத்ரி தன்னை கொல்ல தேடி வந்த கணவனை மடக்கி துப்பாக்கி முனையில் அடித்து துவைக்கிறாள்.
உன்மேல நான் காதலாக இருக்கிறேன். என்னோட காதலை நீ கொன்னுட்டியே என்று துப்பாக்கி முனையில் கண்களில் காதலுடன் காயத்ரி பேசும் வசனங்கள் அடடா ரகமாய் இருக்கிறது.
தெய்வமகளின் 1228வது எபிசோடு பார்க்க அத்தனை பேரும் ஆர்வமாக இருந்தனர் காரணம் சத்யாவை பிரகாஷ் காப்பாற்றி விடுவானா? அண்ணியார் காயத்ரியின் நிலை என்னவாகும் என்று அனைவரும் யுடுயூப்பை பார்க்க பத்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து டிரெண்ட் ஆக்கினார்கள்
கார் டிக்கியில் கடந்த 10 நாட்களாக மயக்க நிலையில் சுற்றிக்கொண்டிருந்த சத்யாவை இப்போதுதான் வெளியே எடுத்திருக்கிறார்கள். கார் டிக்கியில் இருந்து மீட்கப்பட்ட சத்யாவை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார் பிரகாஷ்.
கர்ப்பமாக இருக்கும் சத்யாவிற்கு தீவிர சிகிச்சை ஒரு பக்கம் நடக்கிறது. கடந்த ஒரு வாரகாலமாக தாசில்தார் சத்யாவின் கடத்தல்தான் பிளாஷ் நியூஷ். விவாதமேடை நடக்கவில்லை என்பது வரைக்கும் ஆறுதல்தான்.
சத்யாவை தேடி அலையும் அம்மா, தங்கைகள் கண் கலங்க, அதை உச்சு கொட்டியவாறு பார்க்கும் இல்லத்தரசிகளின் கண்களிலும் கண்ணீர்தான். ஒரு வாரமா இப்படி அடைச்சு வச்சு சுத்தறாங்களே மூச்சு முட்டி செத்து போயிருவாளோ? என்பதுதான் திண்ணைகளில் விவாதமாக இருந்தது.
காயத்ரியை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியுமா? வழக்கம் போல ஏகாம்பரத்தின் சொதப்பலால் காயத்ரி தப்ப, குமார் மட்டும் அவளிடம் மாட்டிக்கொள்கிறான். காதல் கணவன் என்றும் பார்க்காமல் அவனை லெப்ட் ரைட் வாங்குகிறாள் காயத்ரி.
சத்யா காப்பாற்றப்பட்ட செய்தி காட்டில் இருக்கும் காயத்ரிக்கு தெரிய வர குமாரை மேலும் டார்ச்சர் செய்கிறாள். சத்யா சாகணும். இல்லையா நான் செத்துப்போயிருவேன். நான் தனியா சாகமாட்டேன். உன்னையும் கொலை பண்ணிட்டு நான் செத்துப்போயிருவேன் என்று குமாரை மிரட்டுகிறாள்.
கையில் துப்பாக்கி... கண்களில் நிறைய காதல், வாயில் வழியும் ரத்தம் என காயத்ரி மிரட்டல் நடிப்பு... அண்ணியாரே என்று கூவுகின்றனர் அவரது ரசிக கண்மணிகள். சேர்ந்து வாழத்தான் முடியலை... நாம ரெண்டு பேரும் சேர்ந்து செத்துப்போவோம் என்று துப்பாக்கியை வைத்து மிரட்டியதோடு நேற்றைய எபிசோடு முடிந்துள்ளது. என்ன நடக்குமோ? பதை பதைப்போடு காத்திருக்கின்றனர் காயத்ரி ரசிகர்கள்.
No comments:
Post a Comment