Sunday, May 21, 2017

விகடன்

Last updated : 20:20 (19/05/2017)

''சாப்பிட்டியானு கேட்கக்கூட யாரும் இல்லக்கா!'' - மெரினா பீச் சுண்டல் சிறுவன்

 வெ.வித்யா காயத்ரி

னது சரியில்லையா, பொழுது போகவில்லையா நண்பர்களுடன் மெரினா பீச்சுக்கு சென்று கடல் அலைகளைப் பார்த்தபடி நீண்ட நேரம் அமர்ந்திருக்கப் பிடிக்கும். நேற்றிரவு நீண்ட கால நண்பர்களைப் பீச்சில் சந்திக்க பிளான் செய்தோம். சந்தோஷமும், இரவு நேரக் குளிர் காற்று வருடிக் கொண்டிருக்க, கடல் அலைகளின் துள்ளலைக் கவனித்தபடி சந்தோஷமாக நண்பர்களோடு அமர்ந்திருந்தேன். எங்கள் சந்தோஷத்துக்கு இடையூறாக அடிக்கடி “அக்கா!! சுண்டல் வாங்கிக்கோங்க பிளீஸ்” என்று டார்ச்சர் செய்த சிறுவனை கடுப்போடு பார்த்தேன்.

மெலிந்த தோற்றம், கையில் இரண்டு பாத்திரங்கள் எனச் சிரித்த முகத்தோடு நின்றவனைப் பார்த்ததும் 'என்ன மாதிரி மனுஷி நான்'' என்கிற வேதனையை அடக்கிக்கொண்டு 'ஹாய் மா'' என்றேன். ''ஹாய் கா'' என்றவனோடு பேச வேண்டும் என்று தோன்றியது. 'நீ விக்க போறப்ப நானும் உன்கூட கொஞ்ச தூரம் வரட்டுமா'' என்ற என்னை சற்று பீதியோடு பார்த்தான் அந்தச் சிறுவன். ''பயப்படாதமா... உன்கூட பேசணும்னு தோணுது அதான். பிடிக்கலைனா வரலை. இந்தா சுண்டல் கொடு'' என்றபடி பணத்தை நீட்டினேன். எதோ யோசித்தவன் ''சரி வாங்கக்கா காலாற நடப்போம். அப்பப்ப சுண்டலும் விக்கிறேன் ஓகேவா'' என்ற டீலோடு அவனுடன் நடக்கத் துவங்கினேன். 'ஹே நல்ல பிஸினஸ்டி அப்படியே போய்டு'' என்று கேலி செய்த நட்பு வட்டத்தை புன்னகையோடு கடந்தேன

''பேரு முத்துக்கிருஷ்ணன்க்கா. சொந்த ஊர் விருதுநகர். நான் பதினொண்ணாவது படிக்கிறேன். எனக்கு எட்டு வயசாறப்ப எதோ ஒரு சண்டைல அம்மா எங்களை விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. நாங்க நாலு பசங்க. அப்பா சென்னைல பழங்கள் விக்கிறார். எங்க வீட்டுல நான்தான் கடைசி பையன். அம்மா போன கொஞ்ச நாள்ல அப்பாவும் பிரிஞ்சு போயிட்டார். ஆனா ஒவ்வொரு மாசமும் வந்து எங்களுக்கு பணம் கொடுத்துட்டு போவார்.

அப்பா போன பிறகு எனக்கு எல்லாமுமா இருந்தவங்க என் அக்காதான். அவங்கதான் என்னை வளர்த்தாங்க. அக்கா என் கூட இருந்த வரைக்கும், என்னோட வாழ்க்கை சந்தோஷமாவே நகர்ந்துச்சு.நாலு வருஷத்துக்கு முன்னாடி அக்காவுக்குக் கல்யாணம் நடந்துச்சு. அவங்களும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க. நானும் அக்காவும் இருந்தது எங்க சொந்த வீட்டுல. கூட பிறந்த மத்த ரெண்டு அண்ணன்களும் பிரிஞ்சு போயிட்டாங்க. அக்கா கல்யாணத்துக்கு அப்புறம் அப்பாவும் வர்றதில்லை, பணமும் கொடுக்கிறதில்லை. ஒவ்வொரு வருஷமும் மே மாச லீவுக்கு சென்னை வந்து சுண்டல் விப்பேன். இதுல கிடைக்கிற காசை வைச்சு படிப்பு செலவுக்கு வைச்சுப்பேன். கவர்மென்டு ஸ்கூல்ல படிக்கிறதால நோட்டு புக்ஸ் வாங்க வைச்சுப்பேன்.

ஜூன் மாசம் தொறந்துட்டா விருதுநகர் போயிடுவே. தெனமும் காலையில எழுந்து அவசர அவசரமா எனக்குத் தெரிஞ்சத சமைச்சு சாப்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடுவேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அம்மா அப்பா பத்தி பேசுறப்ப ஏக்கமா இருக்கும். எனக்கு காய்ச்சல், மண்டை வலினாகூட ஓடிவந்து உதவுறதுக்கு யாருமே இல்லக்கா.

சாப்பிட்டியா... நல்லா இருக்கியா... இப்படி என்னைப் பத்தி கவலைப்பட ஒருத்தரும் இல்லக்கா. எல்லாச் சொந்தமும் இருக்காங்க. ஆனா யாரும் அண்டுறதில்லை. யாருமே இல்லாதவன் மாதிரி ஃபீல் பண்றேன். என்னை மாதிரி நிலைமை எந்த பையனுக்கும் வரக்கூடாது. வீட்டுல தனியா இருக்கப் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். அதனாலேயே ஸ்கூலுக்கு எப்படா போவோம், ஃப்ரெண்ட்ஸை பார்ப்போம்னு இருக்கும். வீட்டுக்கு வந்ததும் எதாவது ஒரு வேலைக்கு போயிடுவேன். ராத்திரி 11 மணிக்குத்தான் வருவேன். இப்படி ஓடியாடி படிச்சு பத்தாவதுல 314 மார்க்தான் வாங்கினேன். பத்தாவதுல என்ன மார்க் எடுத்த, பாஸ் ஆகிட்டியா இல்ல பெயிலானு கேட்கக்கூட ஆள் இல்லக்கா.

எல்லாரும் விருப்பப்பட்டு சந்தோஷமா கொண்டாடுற தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளையும் நான் என் இருட்டு அறையிலதான் கொண்டாடியிருக்கேன். அப்பா கடைசியா என்னைப் பிரிஞ்சி போனப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டு போனாங்க.. அந்த ரூபாயை முதலீடா வச்சுதான் இப்போ வரைக்கும் நான் சம்பாதிச்சுட்டு இருக்கேன். அந்த உழைப்பு தான் எனக்குச் சோறு போடுது. காலைல சுண்டல் ரெடி பண்ணுவேன். ராத்திரில அதை விப்பேன். ஒரு நாளைக்கு 700 ரூபா லாபம் கிடைக்கும். அதுல 300 ரூபாவ செலவு பண்ணிட்டு 400 ரூபாவ உண்டியல்ல போட்டுடுவேன். காசு கைல இல்லாத சமயத்துல அந்த சேமிப்பு பணம் தான் கைக் கொடுக்கும்.

எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மாவ பாத்ததும் இல்லை அம்மா கிட்ட பேசுனதும் இல்லை. அம்மா இல்லையேனு வருத்தப்பட்டிருக்கேனே தவிர அவங்களப் பாக்கணும், தேடிப்போகணும்னு மனசு சொன்னதில்ல. என்னோட அண்ணன்களும் என்னை மாதிரி எங்கையோ கஷ்டப்பட்டு இருப்பாங்கனு நினைச்சா மனசு வலிக்குது.நாங்க எல்லாம் ஒண்ணா சேருவோமா... சந்தோஷமா வாழுவோமானு தெரியல.

தனிமையாவே இருக்கிறதுனால எனக்கு சொந்தக்காரங்களை புடிக்கலை. யாரையும் நம்பத் தோணலை. நானா சுயமா உழைச்சு படிச்சு இன்ஜினியரிங் பட்டதாரி ஆகணும்னு நினைக்கிறேன். அதான் இப்போதைக்கு என் லட்சியம். என்னை விட்டுட்டுப் போன உறவுகள் திரும்ப வந்தா ஏத்துக்க மனசு இருக்குமானு தெரியல. தனிமைதான் எனக்கு நிரந்தரம்னு முடிவு பண்ணிட்டேன். சரிக்கா நேரமாகிட்டு பீச்ல இன்னும் நாலு எடத்துக்குப் போனா நெறையா சம்பாதிக்கலாம். ஸ்கூல் தெறக்கபோகுதில்லையா. வரேன்கா...''

''அம்மா சுண்டல் வாங்கிக்கோங்க... சுண்டல் சுண்டல்...'' அவன் குரல் என்னிடம் இருந்து கரையத் துவங்கியது. அவனுடைய சுமைகள் என்னுள் இறங்கிபோய் தவிக்க ஆரம்பித்தேன் நான்.

Aadhaar confusion

Posted Date : 12:19 (20/05/2017)

ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே பிறந்ததேதி: காரணத்தின் பின்னணி தெரியுமா?

 ராகினி ஆத்ம வெண்டி மு.

அலகாபாத்திலுள்ள ஒரு கிராமத்தில், அத்தனை மக்களும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். இந்த அதிசயத்தை, அந்தக் கிராமத்தினரே இப்போதுதான் உணர்ந்துள்ளனர்.

அலகாபாத்திலுள்ள கான்ஜாசா என்னும் கிராமத்தில் வாழும் அத்தனை மக்களும், ஜனவரி 1ஆம் தேதி பிறந்துள்ளனர். அவர்களின் ஆதார் அட்டை விவரங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பிறந்த தேதியாக ஜனவரி 1ஆம் தேதியைக்   குறிப்பிட்டுள்ளது, ஆதார் அட்டை. இந்தத் தவறு, தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது.

கான்ஜாசா கிராமத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளின் ஆதார் அட்டை விவரங்களை அரசு ஆசிரியர்கள் சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது தான் அந்தக் கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அங்கு வாழும் 10,000 பேருக்கும்  ஜனவரி 1-ம் தேதியே பிறந்தநாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை நாள்களாக ஆதார் அட்டையின் குளறுபடியால் ஒரு கிராமமே பாதிக்கப்பட்டிருந்தது தற்போதுதான் வெளிப்பட்டுள்ளது.

கிராம மக்கள் அனைவரும் தாங்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறியபோது, இந்தத் தவறு விரைவில் சரி செய்யப்படும்  என, அந்த கிராமத் தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை உரிய இடத்தில் தெரிவித்துவிட்டதாகவும்  திருத்தப்பட்ட புதிய ஆதார் அட்டை விரைந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Time Psycology

Last updated : 14:33 (20/05/2017)

'மாதங்களும் வாரம் ஆகும்... நானும் நீயும் கூடினால்..!' - ஏன் அப்படி?

#TimePsychology

 ஜோ கார்த்திக்

‘காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி’ என்று வைரமுத்து எழுதியதும், ‘மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்’ என்று வாலி எழுதியதும் எதனால்?  ‘ஒவ்வொரு நாளும் போறதே தெரியலை. அதுக்குள்ள ஒரு வருஷம் கடந்துடுச்சா, காலேஜ் முடிச்சு இத்தனை வருஷம் ஓடிப்போச்சா, நேத்துதான் பொறந்தா மாதிரி இருந்த குழந்தைங்க அதுக்குள்ள வளர்ந்துட்டாங்களே, எனக்கு இவ்வளவு வயசாகிடுச்சா...' என நேரமும் காலமும் விரைவாகக் கடந்து செல்வதை உணர்ந்து பிரமிக்கிறீர்களா? ஏன் இப்படித் தோன்றுகிறது? எப்போதும் அதே கடிகாரம், அதே 24 மணி நேரம், அதே 60 விநாடிகள்தான். பிறகு ஏன் இப்படி ஒரு பிரமிப்பு?

இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள, பல விஞ்ஞானிகள் தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், பிரேசில் உடல்நல உளவியலாளர்கள், `மனிதர்கள் எவ்வாறு  `காலம்-நேரம்’ கடப்பதை உணர்கிறார்கள்?' என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அதில் 15 வயதினர் முதல் 89 வயதினர் வரை உள்ள 233 ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும், கண்களை மூடி, 120 விநாடிகளை எண்ணும்படி கூறினர். 

A - 15-22
B - 23-29
C - 30-49
D - 50க்கு மேற்பட்ட வயதினர்

என்று வயதுவாரியாக அவர்களை ஆய்வுக்காகப் பிரித்தனர். அவர்கள் 120 விநாடிகளை எண்ண எடுத்துக்கொண்ட நேர விவரம் இந்தப் பட்டியலில் உள்ளது.

வயது

120 விநாடிகளை எண்ண எடுத்துக்கொண்ட நேரம்

15 - 22

115 விநாடிகள்

23 - 29

105 விநாடிகள்

30 - 49

110 விநாடிகள்

50 - க்கு மேல்

86 விநாடிகள்

`50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 23-29 வயதுடைய இளையவர்களும் ஏன் நேரத்தை விரைவாக எண்ணி முடித்தார்கள்?' என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதற்கு உடல்நல உளவியலாளர்கள் தரும் விளக்கம் சுவாரஸ்யமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. `அதற்கு, அவர்களின் வயது மிகமுக்கியக் காரணம்' என்கின்றனர். அதாவது, உங்களின் நேரத்தையும் காலத்தையும் தீர்மானிப்பது உங்களின் வயதுதான் என்கிறார்கள்.  நம்முடைய நேரத்தையும் காலத்தையும் நம் வயது எப்படித் தீர்மானிக்கும், அப்படித் தீர்மானிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். 

இன்றைய இளைய சமுதாயத்தினர், ஆழமான உளவியல் சிக்கல்களைக் கொண்டுள்ளனர். நேரத்தை  இணையத்திலும் ஸ்மார்ட்போன்களிலும் அதிவேகமாகக் கழிக்கிறார்கள். விரைவாக வயதாகிக்கொண்டே வருவதாக சில நேரங்களில் கவலைகொள்கிறார்கள். குடும்பப் பிரச்னைகளை நினைத்து மனதுக்குள் கவலைப்படுகிறார்கள்.  `30 வயதாகிவிட்டது இன்னும் வேலை கிடைக்கவில்லை' என்ற ஏக்கம் பல இளைஞர்களிடம்  காணப்படுகிறது. `வாழ்வில் எப்படி செட்டில் ஆவது, எப்போது செட்டில் ஆவது, வயதாகிக்கொண்டேபோகிறதே!' என்று நினைக்கிறார்கள். நாள்கள் வேகமாகக் கடந்து செல்வதை எண்ணி வருந்துகின்றனர். இவற்றை நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பது மிக முக்கியம்.

காரணம், இவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம்தான் உளவியல் சிக்கலில் சிக்கித் தவிப்பதிலிருந்து மனித சமூகம் விடுபடும். ஏனெனில், ஒருவரின் வயது தொடர்பான எண்ணங்கள்தான், அவரின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

மனதுக்குள் தோன்றும் கவலைகளும் அழுத்தங்களும், அதனால் உண்டாகும் பயமும் பதற்றங்களுமே உளவியல்ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இவை, நம் வாழ்நாள்களை அதிகளவில் பாதிக்கின்றன. இதனால்தான் பல நேரங்களில் நாம் காலத்தை இழப்பது போன்று உணர்கிறோம்.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ``மூளையில் சுரக்கும் `டோபமைன்' (Dopamine) என்னும் ரசாயன அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே, நமக்குள் வயது தொடர்பான எண்ணங்கள் உருவாவதற்கு அடிப்படைக் காரணம்' என்கின்றனர். ஒருவரின் வயது தொடர்பான எண்ணங்கள்தான் அவரின் வாழ்வைத் தீர்மானிக்கின்றன.

கோடை விடுமுறை, நம் நினைவிலிருந்து நீங்காதது. சிறு வயதில், கோடை விடுமுறை என்பது நீண்ட நாள்கள்கொண்டதாக நமக்குத் தோன்றும். ஆனால், வயது முதிர்வடையும்போது அப்படித் தோன்றுவதில்லை. நம் இளம் வயதில் முதல்முறையாக எதையாவது முயற்சிசெய்தால், நாம் அதன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ்கிறோம். அதாவது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள எடுத்துக்கொண்ட நேரம், முதல் வேலை, பெற்றோர் இல்லாத முதல் பயணம், பள்ளிக்கூடம் விடுமுறை, முதல் நீச்சல் பயிற்சி, முதல் பாலியல் உறவு... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றை நீங்கள் அனுபவித்து ரசித்திருப்பீர்கள். இவை அனைத்தும் உங்கள் நினைவிலிருந்து என்றும் நீங்காதவை. ஆனால், முதிர்ச்சியடைந்துகொண்டே வரும்போது, புதிய அனுபவங்கள் நம்மிடம் இயல்பாகவே குறைகின்றன. எனவே, காலத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு நம்மிடம் இல்லாமல்போகிறது. நம்மை அறியாமலேயே காலம் வேகமாக நகர்வதாக எண்ணிக்கொள்கிறோம். இதனாலேயே சில அற்புதக் கணங்களை நாம் இழந்துவிடுகிறோம்.  

நேரமும் நாள்களும், நமக்கு வயதாவதையே உணர்த்துகின்றன.  உங்களுக்கு வயதாகிவிட்டது என்று மற்றவர்கள் உங்களிடம் வாதம் செய்தால், அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்கள், உண்மைதானே? செய்ய முடியாததைக்கூட செய்து முடிக்க எண்ணுவீர்கள், அனைத்தையும் விரைவாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் இயல்பான நேரத்தைக்கூட அதிவேகமாகக் கடந்துவிடுவீர்கள்.

இதை வெகு ஜாலியாகவே கையாளலாம். ‘என்ன... ஒரு வயசு கூடிருச்சா?' என்று உங்கள் பிறந்த நாள் அன்று நண்பன் கிண்டலடித்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள். கடந்த பிறந்த நாளின்போது அந்த நண்பனுக்கு என்ன வயசோ, அதைவிட ஒன்று அவனுக்கும் கூடியிருக்கும்தானே?  

எளிமையான சில முயற்சிகள் மூலம் நேரத்தைக் கையாளலாம். வார இறுதி நாள்களை நீங்கள் மெதுவாகச் செலவழிக்க விரும்பினால், தொலைக்காட்சியில் நேரத்தை வீணாக்குவதற்குப் பதிலாக புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; புதிய அனுபவங்களைப் பெறுங்கள்; புதியதாகக் கற்றுக்கொண்டே இருங்கள். ஞாயிறு இரவு அமர்ந்து யோசித்துப்பாருங்கள். வார இறுதி நாள்கள் எவ்வளவு நீண்டது எனப் புரியும். 

நாம் உண்மையில் நேரம் பொறுமையாகக் கழிவதை விரும்புவோமா? இதை நாம் நமக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், அதிக மன உளைச்சல், மனச்சோர்வு, தனிமை, துயரம் எனப் பாதிப்படையும் நேரங்களில் நம் நேரம் மிகவும் பொறுமையாகக் கழியும். எனவே, நேரம் நமக்குத் தரும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது. புதுமைகள் எதுவும் இல்லாமல், செய்ததையே செய்து நேரத்தை முழுமையாகக் கழித்துவிட்டு, `எனக்கு நேரமே இல்லை' எனச் சொல்லப்போகிறோமா அல்லது புதிது புதிதாகக் கற்று ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ந்து அனுபவித்துக் கடக்கப்போகிறோமா என்பதை நாம்தான் முடிவுசெய்ய வேண்டும். 

இந்த சப்ஜெக்ட்டை கொஞ்சம் ஆழமாக யோசித்துப் படித்தால் உங்களுக்குள் புதைந்துகிடக்கும் பல்வேறுவிதமான திறன்களுக்கான கதவுகள் திறக்கும்.

நேரத்தை ஆள நான் ரெடியாகிவிட்டேன்... நீங்கள்?

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்கள்!

 பி.ஆண்டனிராஜ்

திருநெல்வேலியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரட்டையர்களான ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் ஆகியோர் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். 

இரட்டையர்கள் என்றால், உருவ ஒற்றுமை இருக்கும் என்பார்கள். ஆனால் இந்தச் சகோதரிகள், 10 ஆம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரட்டையர்களின் இந்த விநோத ஒற்றுமையைக் கண்டு சக மாணவர்கள் வியந்தனர். இவர்கள் இருவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்போதும் எடப்பாடியைச் சேர்ந்த இரட்டையர்கள் கார்த்திகா- கீர்த்திகா ஒரே மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vikatan


Last updated : 18:26 (20/05/2017)

காந்தி, நேதாஜியை விமர்சித்த மார்க்கண்டேய கட்ஜு ரஜினியை விட்டுவைப்பாரா?

 எம்.குமரேசன்

'முத்துக்களோ கண்கள்... தித்திப்பதோ கன்னம்... சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை... ' என்ற காலத்தைக் கடந்து ஒலித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்பட பாடல் வரிகள், அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. `அவருக்கும் தமிழுக்கும் தொடர்பே இல்லையே!' என உற்று நோக்கினால், 'நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கம்பர் விடுதியில் தங்கிப் படித்தவன். என் ஃபேவரைட் தமிழ்ப் பாடல் இது'  என்றது அவரது பதிவு. இது யாருடைய ட்விட்டர் பக்கம் எனப் பார்த்தால், நம்ம மார்க்கண்டேய கட்ஜு. இந்த கட்ஜு யார்?, இவர் ஏன் அடிக்கடி தமிழகம் பற்றியும் தமிழர்கள் பற்றியும் சகட்டுமேனிக்கு கருத்து வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்?

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1967-68 காலகட்டத்தில் கட்ஜு படித்துள்ளார். தமிழகத்தில் தங்கிப் படித்ததோடு கட்ஜுவுக்கும் தமிழகத்துக்கும் உள்ள பந்தம் முடிந்துவிடவில்லை. கடந்த 2004- 05ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். அதனால்தான் தமிழ்நாடு தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார். 

இந்த மார்க்கண்டேய கட்ஜு யார்... அவரின் பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கட்ஜு. தாத்தா கைலாஷ் நாத் கட்ஜு, அலகாபாத்தின் புகழ்பெற்ற வக்கீல். அரசியல்வாதியும்கூட. மேலும், மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்ததோடு, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களின் கவர்னராகவும் இருந்துள்ளார்.  தந்தை சிவநாத் கட்ஜு அலகாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். குடும்பமே வாழையடிவாழையாக நீதித்துறையில் பணியாற்றியுள்ளது. மார்க்கண்டேய கட்ஜுவின் ரத்தத்திலேயே சட்டம் ஊறியிருந்தது. சட்டம் பயின்ற அவர், அலகாபாத் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்து, வக்கீலாகப் பணியாற்றினார். 

கடந்த 1991ம் ஆண்டு, அலகாபாத் நீதிமன்றத்தில் (பொறுப்பு) தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2004ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், விரைவிலேயே டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியானார். பிறகு, 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பதவி. சுமார் 20 ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்த கட்ஜு, 2011ம் ஆண்டு ஓய்வுபெற்றார். பிறகு  பிரஸ் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டுவந்தார். ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பல பதிவுகள், அதிர்ச்சி ரகம். மார்க்கண்டேய கட்ஜுவின் விமர்சனத்திலிருந்து மகாத்மா காந்தி முதல் ரஜினிகாந்த் வரை எவரும் தப்ப முடியாது.


கடந்த 2015ம் ஆண்டு கட்ஜு ஃபேஸ்புக் பக்கத்தில், 'பிரிட்டிஷாரின் ஏஜென்ட்தான் காந்தி. அவர் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார். இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், பிரிட்டிஷாரின் கைக்கூலி. நேதாஜி, ஜப்பானிய பாசிஸவாதிகளின் ஏஜென்ட்' எனப் பதிவிட்டிருந்தார். ஒருமுறை, 'வெளிநாட்டிலிருந்து பத்து மில்லியன் டாலர் எனக்குக் கொடுத்தால், நானும்தான் சேவை செய்வேனே' எனப் பதிவிட்டு, மதர் தெரசாவை வம்புக்கு இழுந்தார். டெல்லி சட்டமன்றத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஷாஷியா இல்மியாவின் அழகைப் போற்றிப் புகழ்ந்தார். 'கிரண்பேடிக்குப் பதிலாக இல்மியாவை டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்தால், எளிதாக வெற்றி பெற்றுவிடும்' என ஜொள்ளியிருந்தார். 'இந்தியர்களில் 90 சதவிகிதம் பேர் முட்டாள்கள்' என்றும் ட்விட்டியிருந்தார்.

கட்ஜுவும் அருண் ஜெட்லியும் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2013ஆம் ஆண்டு அவர் எழுதிய கட்டுரையில், 'குஜராத் கலவரத்தில் மோடியின் கைங்கர்யம் இல்லை என்று நம்பவில்லை ' என எழுதியிருந்தார்.  இதனால் அருண் ஜெட்லிக்கும் கட்ஜுவுக்கும் பெரும் வார்த்தைப்போர் மூண்டது. ‘குஜராத் கலவர வழக்கிலிருந்து உச்ச நீதிமன்றம் மோடியை விடுவித்தது. `உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தவரை, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியே விமர்சிக்கலாமா?' என்றும் கேள்வி எழுந்தது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, உச்ச நீதிமன்ற நீதிபதியே நம்பவில்லையா?' எனவும் கண்டனம் குவிந்தது. இதனால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கும் கட்ஜு ஆளானார். 

2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக கட்ஜு கொடுத்த பேட்டி, தேர்தல் ஆணையத்தையே ஆட்டிவைத்தது. 'அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்' எனத் தேர்தல் ஆணையம் கூவிக்கொண்டிருக்கையில், ``இந்தத் தேர்தலில் நான் வாக்களிக்கப்போவதில்லை. இவர் ஜாட்டா... இஸ்லாமியரா... யாதவரா... இந்துவா எனப் பார்த்து வாக்களிப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகமா? எனது ஒரு வாக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. நான் ஏன் அந்த ஆட்டுமந்தைக் கூட்டத்தில் போய் நிற்க வேண்டும்?'' என்று கூலாக பேட்டி கொடுத்தார் கட்ஜு.

பெண்களையும் கட்ஜு விட்டுவைத்ததில்லை. ''பெண்களால் பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. இளம் பெண்களின் உடல் அழகைப் பார்த்து விட்டில்பூச்சியாக விழுந்து எரிந்துபோகாதீர்கள்'' என்றும் இளைஞர்களுக்கு அறிவுரையும் கட்ஜுவிடமிருந்து கிடைத்திருக்கிறது.

கட்ஜு சமீபத்தில் ரஜினியைச் சீண்டியிருந்தார். ட்விட்டரில் அவர், ‛‛தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்? அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன். படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்... அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ என குறிப்பிட்டிருந்தார்




Vikatan

ரயில்ல கைதட்டினோம்... இப்ப ரயில்லயே வேலை பார்க்குறோம்!” திருநங்கை ராகரஞ்சனி

 ஶ்ரீதேவி.கே

சக மனுஷியாக வாழ ஆசைப்படும் திருநங்கைகளின் மனம் இந்தச் சமூகத்தின் காலடியில் நசுங்கித் தவிக்கிறது. எனக்கும் மரியாதை வேண்டும், உரிமை வேண்டும் என கதறி அழுகிறது. நானும் இந்த மானுட சமூகத்தின் ஒரு பகுதிதானே என்று திமிறி எழுகிறது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வந்த இந்த இனத்துக்கான விடியல் வெளிச்சம் ஆங்காங்கே தென்பட ஆரம்பித்துள்ளது. 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளாவில் அந்த வெளிச்சத்துக்கான கீற்று, திருநங்கைகள் முகங்களில் விழுந்துள்ளது. கேரள மெட்ரொ ரயில் நிறுவனத்தில் 23 திருநங்கைகளுக்கு வேலை வழங்கி அவர்களை தலைநிமிரச் செய்துள்ளது. அவர்களின் கல்வித் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஹவுஸ் கீப்பிங், டிக்கெட் கவுன்டர் போன்ற பிரிவுகளில் கேரள மெட்ரோ ரயில் நிறுவனம் அமர்த்தியுள்ளது. இதற்கான பயிற்சிகளும் திருநங்கைளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில், டிக்கெட் கவுன்டரில் பில்லிங் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ராக ரஞ்சனி, ‘‘நிறைய அவமானங்கள் பட்டாச்சு. பருவம் எட்டிப் பார்க்கும் காலத்துல பெண் தன்மையை உணர்ந்தேன். வீட்டுல இருக்கிறவங்க 'இப்படி எல்லாம் நடந்துக்காதே'னு திட்டுவாங்க. வெளியில இருக்கிறவங்க காதுபடவே கிண்டலடிச்சாங்க. எங்கேயும் தலைகாட்டாம ஒரு ரூமுக்குள்ளயே வாழ்ந்திடலாம்னு தோணுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அவமானங்கள் பழகிடுச்சு. எம்.காம் முடிச்சேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். என்னை திருநங்கைன்னு வெளியில காட்டிக்காம ஒரு ஹோட்டலில் மேனேஜரா வேலைப் பார்த்தேன். வாழ்க்கை சந்தோஷமா போய்ட்டிருந்துச்சு. எப்படியோ நான் திருநங்கை என்கிற விஷயம் நிர்வாகத்துக்குத் தெரிஞ்சு, உடனடியா வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. இப்படி நிராகரிப்பைச் சந்திக்கும்போதெல்லாம் மிகுந்த அவமானமாக உணர்ந்தேன்.

அடுத்த ஆறு வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். முழுமையான திருநங்கையா என்னை மாத்திக்கிட்டேன். ஒரு திருநங்கை தன்னைப் பராமரிக்கவே நிறைய செலவு பிடிக்கும். அப்புறம் சாப்பிடறதுக்கு, தங்கறதுக்கு என கையேந்தும் நிலைமைக்குப் போனேன். எங்களை மாதிரியானவங்களை இந்தச் சமூகம் ஈஸியா பாலியல் தொழிலில் தள்ளுது. போலீஸ் தேடித் தேடி துரத்தும். பயந்து பயந்து ஓடுவோம். இப்படி வாழறதுக்கு செத்துடலாம்னு பலமுறை தோணும். கேரளாவுல மட்டும் முப்பதாயிரம் திருநங்கைகள் இருக்காங்க. நிறைய பேர் நகரத்தின் முக்கிய பகுதிகளில் வாழ்வாதாரத்தைத் தேடி அலையறாங்க. ஒருநாள் கொச்சின் பகுதியில் போலீஸ் எங்களை ரொம்ப கொடுமையா நடத்துச்சு. எங்களை அடிச்சு, 'நீ ஆம்பளையா, பொம்பளையா?'னு கேட்டு, டிரஸ்ஸை கழற்றவெச்சு செக் பண்ணினாங்க. அப்படி ஒரு கொடுமையை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது'' எனச் சொல்லி சில நிமிடங்கள் அமைதியாக இருக்கிறார்.

'' 'பொழப்பு நடத்த நினைச்சா, இங்கே இருக்காதே. பெங்களூருக்கோ மும்பைக்கோ ஓடிப்போய்டு'னு போலீஸ் சொல்லிச்சு. பொறந்த மண்ணுல வாழ எங்களுக்கு உரிமை இருக்கு. திருநங்கையாக பிறந்துட்டதாலே ஊரைவிட்டு ஓடணுமா? நானும் ஒரு ஹோட்டல்ல மேனேஜரா வேலைப் பார்த்திருக்கேன். நல்லா படிச்சிருக்கேன். வேலையை விட்டுத் துரத்திட்டா நான் என்ன பண்றது?'னு போலீஸைப் பார்த்துக் கேட்டேன். எங்களைப் பெரிய போலீஸ் ஆபீசர்ஸ் முன்னாடி கூட்டிட்டுப்போய் நிறுத்தினாங்க. 'பிச்சையும் எடுக்கக் கூடாது, பாலியல் தொடர்பான வேலைகளிலும் ஈடுபடக் கூடாதுன்னா எங்களுக்குக் கெளரவமான வேலையைக் கொடுங்க'னு கேட்டோம். எங்களில் 43 பேர்கிட்டே நேர்காணல் நடத்தினாங்க. அதில் 23 பேரை கேரள மெட்ரோ ரயில் திட்டத்தில் வேலைப் பார்க்க செலக்ட் பண்ணினாங்க. பில்லிங், ஹவுஸ் கீப்பிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், சாப்ட் ஸ்கில், கம்ப்யூட்டர் டிரெயினிங்னு எங்களின் திறமைக்கும் படிப்புக்கும் தகுந்த வேலை கொடுத்திருங்காக. பில்லிங் செக்ஷனில் டிக்கெட் கொடுக்க எனக்கு டிரெயினிங் கொடுத்திருக்காங்க. திருநங்கைகளை ரயிலில் கடை (பிச்சை) கேட்டுப் பார்த்திருப்பீங்க. அதே ரயிலில் இனிமே நாங்க தலைநிமிர்ந்து நடக்கப்போறோம். எங்க வேலையைச் சந்தோஷமா பார்க்கப் போறோம்'' என்கிற ராக ரஞ்சனி குரலில் மகிழ்வும் நெகிழ்வும்.

எல்லாத் திருநங்கைகளுமே மரியாதையா வாழவே விரும்புகிறார்கள். அதற்கு இது ஓர் ஆரம்பம் என்கிற ராக ரஞ்சனி, ''இந்தியன் ரயில்வேயிலும் திருநங்கைகளுக்கு வேலை தரணும். கேரளாவில் திருநங்கைகளுக்கான உரிமைகளைப் பாதுகாக்க நிறைய நல்ல விஷயங்கள் நடந்துட்டிருக்கு. அவங்க புகார் கொடுக்க ஒரு நீதிக்குழுவை உருவாக்கியிருக்கு. அரசு கட்டடங்களில் திருநங்கைகளுக்கு தனிக் கழிவறைகளை கட்டிக்கொடுக்க உத்தரவு போட்டிருக்கு. மூன்றாம் பாலினத்தவருக்காகவே கேரளாவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தறங்க. இதுபோல நிறைய மாற்றங்கள் தொடர்ந்து நடக்கணும். பருவ வயதுலதான் ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குள்ளே ஏற்படும் பாலின மாறுபாட்டை உணர்வாங்க. அப்போ, வீட்டிலேயும் வெளியிலேயும் ஒதுக்கப்படறாங்க. இதனால், அவங்க படிப்பை முழுமையா தொடர முடியாமல் தவிப்பாங்க. இதுக்கும் கேரளாவில் ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. திருநங்கைகள் தங்கி படிக்கிறதுக்கான பள்ளிக்கூடத்தை ஆரம்பிச்சிருக்காங்க. திருநங்கை ஒருத்தரையே ஆசிரியராவும் போட்டிருக்காங்க. எங்களுக்கும் சம உரிமை உண்டுனு சட்டம் சொல்லுது. திருநங்கைகள் திருமணம் செஞ்சிக்கவும் சமூக வாழ்க்கை வாழவும் அங்கீகரிக்கப்படணும். படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் சிறப்பு ஒதுக்கீடுகள் கொடுக்கணும். கேரள மெட்ரோ ரயிலில் கிடைச்சிருக்கிற வாய்ப்பு, இந்தியா முழுக்கவும் எதிரொலிக்கும்னு நம்பறோம்'' என்கிறார் ராகரஞ்சனி.

ராகரஞ்சனியின் இந்தப் பயணம் வெல்லட்டும். திருநங்கைகள் அனைத்து வகை பணிகளிலும் இடம்பெறட்டும்.

VC search panel

Three VC search panels submit names to governor

Siddharth Prabhakar | TNN | May 21, 2017, 01.13AM IST

Chennai: After courting controversies and delaying the selection of vice-chancellors to three universities, the search committees of University of Madras, Anna University (AU) and Madurai Kamarajar University (MKU) submitted lists of VC nominees to governor C Vidyasagar Rao on Saturday.

"While the MKU and Anna University search panels met the governor on Friday, University of Madras panel got an audience only on Saturday morning," a government official told TOI. This comes after the Madras high court, acting on a public interest litigation, on Thursday giving two weeks for the chief secretary and the higher education secretary to fill the VC posts. UNOM since January 2016, Anna University since May 2016. Madurai Kamarajar University has been without a VC since April 2015, Univeristy of Madras since January 2016, and Anna University since May 2016.

Officials said the governor had been unhappy with the very constitution of the search panels. Officials said the governor insisted on a retired high court judge to head each panel, but the state government has requested that this time the condition may be relaxed. It is not known if the panels' meetings with the governor happened after he agreed.

As mandated by the state government, each committee has submitted three names based on UGC norms. This has raised hopes among academic circles that the governor would appoint the VCs at the earliest on the lines of Tamil Nadu Fisheries University, where he interviewed the candidates in person recently. Higher education minister K P Anbazhagan is likely to be part of the interview process.

Sources said the governor has the option of rejecting the names, since the selection process and constitution of the search panels have been mired in controversies. Noted academicians and social activists have submitted memoranda alleging bribery in the process.

AICTE


10,000 TN engg seats down, no admission in 28 tech institutes

Vinayashree J | TNN | May 21, 2017,

Chennai: As many as 28 technical institutions in Tamil Nadu will not carry out admissions for the upcoming 2017-18 academic year, leading to a reduction of about 10,000 BE/BTech seats in the state.

All India Council for Technical Education (AICTE) chairman Anil Sahasrabudhe who was in the city on Saturday said that 22 colleges had applied for closure in the state. This includes five engineering colleges (about 8,700 seats), 3 diploma colleges and 14 MBA/MCA institutes which applied for closure voluntarily due to lack of intake.

Six other institutions were placed under the 'No admission' category by the AICTE due to deficiencies, said officials. Among the six colleges, two were inspected last year while four others were inspected this year by the governing body. "The six were placed under zero admission due to complaints and lack of facilities," said AICTE regional officer R Balamurugan. Another 1,500 engineering seats will be reduced across these institutes, he added. These colleges are in Kanyakumari, Madurai, Coimbatore, Salem and Karaikal.

Besides this, 154 other institutions have applied for reduction in intake, and closure of courses, said AICTE officials. The AICTE recently carried out a surprise inspection on 311 colleges in the country of which 41 were in Tamil Nadu. Among these colleges that comprise 3% of the technical institutions in the country, Sahasrabudhe said that more than 60%, i.e. about 187, had deficiencies.

These shortcomings range from minor to major ones and included faculty shortage, lack of infrastructure, payment related issues, issues related to 6th pay commission norms, and planning approval. AICTE officials said that some of the colleges which had minor complaints were given a show cause notice and were given up to three months to address the issues. Some non-performing institutions have also been given a warning by AICTE.

Colleges which have applied for closure will not carry out admissions from the upcoming year. However, the official closure will be issued based on approval from the Tamil Nadu government once a report is submitted.

From next year, the AICTE is planning to automatically close down colleges that have not been able to maintain a minimum of 30% intake over five consecutive years, said Balamurugan.

Meanwhile, the AICTE has also approved 16 new institutions that will come up in the state in the upcoming year. This includes eight pharmacy colleges, two engineering, two government polytechnic colleges, and four post- graduate management diploma colleges. The only addition of engineering seats this year will be the 300 seats of Amrita School of Engineering, Chennai campus, which will be an addition under the single window counselling conducted by Anna University.

Prist University campuses in Chennai and Madurai will now be deemed universities while the diploma courses in MGR Film Institute will be closed and instead will be offered as degree courses.

Sahasrabudhe was speaking at a conclave organised by the consortium of self-financing professional arts and science colleges in Tamil Nadu. The engineering conclave organised on Saturday was planned to deliberate on and arrive at viable strategies for finetuning the current technical education system. The measures suggested included faculty training programmes, induction programmes for students and teachers, creating interaction between industry and academia, and development of tech parks among institutions.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...