Posted Date : 12:19 (20/05/2017)
ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே பிறந்ததேதி: காரணத்தின் பின்னணி தெரியுமா?
ராகினி ஆத்ம வெண்டி மு.
அலகாபாத்திலுள்ள ஒரு கிராமத்தில், அத்தனை மக்களும் ஒரே நாளில் பிறந்துள்ளனர். இந்த அதிசயத்தை, அந்தக் கிராமத்தினரே இப்போதுதான் உணர்ந்துள்ளனர்.
அலகாபாத்திலுள்ள கான்ஜாசா என்னும் கிராமத்தில் வாழும் அத்தனை மக்களும், ஜனவரி 1ஆம் தேதி பிறந்துள்ளனர். அவர்களின் ஆதார் அட்டை விவரங்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த கிராம மக்களுக்கும் பிறந்த தேதியாக ஜனவரி 1ஆம் தேதியைக் குறிப்பிட்டுள்ளது, ஆதார் அட்டை. இந்தத் தவறு, தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது.
கான்ஜாசா கிராமத்திலுள்ள பள்ளிக் குழந்தைகளின் ஆதார் அட்டை விவரங்களை அரசு ஆசிரியர்கள் சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்போது தான் அந்தக் கிராமத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அங்கு வாழும் 10,000 பேருக்கும் ஜனவரி 1-ம் தேதியே பிறந்தநாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தனை நாள்களாக ஆதார் அட்டையின் குளறுபடியால் ஒரு கிராமமே பாதிக்கப்பட்டிருந்தது தற்போதுதான் வெளிப்பட்டுள்ளது.
கிராம மக்கள் அனைவரும் தாங்கள் மொத்தமாக ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறியபோது, இந்தத் தவறு விரைவில் சரி செய்யப்படும் என, அந்த கிராமத் தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்த தகவல்களை உரிய இடத்தில் தெரிவித்துவிட்டதாகவும் திருத்தப்பட்ட புதிய ஆதார் அட்டை விரைந்து வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment