Sunday, May 21, 2017

ஒரே மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டையர்கள்!

 பி.ஆண்டனிராஜ்

திருநெல்வேலியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்ச்சி விகிதத்தில், விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. இதனிடையே, நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரட்டையர்களான ஜோனிகா வளன், ஜோஷிகா வளன் ஆகியோர் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். 

இரட்டையர்கள் என்றால், உருவ ஒற்றுமை இருக்கும் என்பார்கள். ஆனால் இந்தச் சகோதரிகள், 10 ஆம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரட்டையர்களின் இந்த விநோத ஒற்றுமையைக் கண்டு சக மாணவர்கள் வியந்தனர். இவர்கள் இருவரும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளின்போதும் எடப்பாடியைச் சேர்ந்த இரட்டையர்கள் கார்த்திகா- கீர்த்திகா ஒரே மதிப்பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025