Sunday, November 2, 2014

மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!

நாட்டு விடுதலைக்காகப் போராடி வெள்ளையனை விரட்டிய காங்கிரஸ் கட்சியில் நடக்கும் குழப்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நடக்காத அளவில், தமிழ் நாட்டுக் காங்கிரசில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி உள்ளதை, தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள்  நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அப்போது கருத்து தெரிவித்த ஜி.கே.வாசன் த.மா.கா.  மீண்டும் உருவாகும் என்ற கேள்வி பொழுது போக்கானது என்று கூறி இருந்தார்.
அநத சமயத்தில் நாடளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் காங்கிரஸ் கட்சிக்கு இருந்தது. அதனால் அப்போது இதற்கான முக்கியத்துவம் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய அளவில் குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் தமிழக அரசியல் களத்தில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு, குறிப்பாக ஜி.கே. வாசன் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பழைய தலைமுறைக்கு பதிலாக புதிய வீச்சோடு புறப்படும் இளம் தலைமுறை தொண்டர்களின் தேவை உருவாகி உள்ளதாலேயே இந்த சூழல் தோன்றி உள்ளது என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பு.

அந்த வகையில்,மறைந்த கருப்பையா மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க காரணம் என்ன? அந்த கட்சி சாதித்தது என்ன? தொடர்ந்து இந்திய காங்கிரசில் ஐக்கியமானது எதனால்? என்பது குறித்த ப்ளாஷ்பேக் இது...

1931 ஆகஸ்ட் 19 ஆம் தேதி  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில்கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் பிறந்தவர் ஜி.கே.மூப்பனார். இளம் வயதில் இருந்தே காங்கிரஸ் இயக்கம் மீது ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த மூப்பனார், தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக 1965 ல் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்புகளை வகித்த அவர் ராஜ்ய சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு   சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ் நாட்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் இதனை எதிர்த்தனர். அதனையடுத்து  ஜி. கே. மூப்பனார் தனது தலைமையில் எதிர்ப்பாளர்களை அணி திரட்டி  ”தமிழ் மாநில காங்கிரஸ்” என்ற பெயரில் புதிய கட்சியைத்  தொடங்கினார்.

கட்சித் தொடங்கிய உடனே  தேர்தலைச்  சந்தித்த  த.மா.க., 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்களில் வெற்றி பெற்றது. அத்தோடு சட்டமன்ற தேர்தலுடன்  நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும்  20 இடங்களில் வென்றது. இந்த வெற்றிக்கு, திமுக - தமாகா  கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த "வாய்ஸும்' பக்க பலமாக இருந்தது.
1996-98 காலகட்டத்தில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்தது. இக்கட்சியின் சார்பில்  ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர்.

பின்னர்,1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் 3 இடங்களில் மட்டுமே வென்றது. பின்னர் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால்  1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை விட்டு வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, தமிழக அரசியலில் வளர்ந்து வந்த இயக்கமான  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் , புதிய தமிழகம் கட்சியையும் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் எந்தத்  தொகுதிகளிலும் வெற்றிபெற வில்லை.

தொடர்ந்து  2001 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று 23 இடங்களைப்  பிடித்தது. இந்நிலையில், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூப்பனார் மறைந்தார். பின்னர் அவரின்  மகன் ஜி. கே. வாசன் த.மா.க. வின்  தலைவரானார். ஜி.கே வாசனின் தலைமைக்குப் பிறகு டெல்லி தலைவர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டால்,  2002 ஆம் ஆண்டில்  த.மா.க. இந்திய தேசியக் காங்கிரசுடன் ஐக்கியமாகி விட்டது.

இதுதான் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சுருக்கமான வரலாறு.
ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள நிகழ்வுகள், மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வருவதற்கான சூழல் தோன்றியுள்ளதைக் காட்டுவதாகவே உள்ளது.  இவற்றையே இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில்  ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சூசகமாக உணர்த்தி  உள்ளார்.

அவ்வாறு தனிக்கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில் அது பழைய தமிழ் மாநில காங்கிரஸ்  என்ற நாமகரணத்தை கொண்டிருக்குமா அல்லது இன்றைய தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப, காங்கிரஸ் என்ற வார்த்தையே இல்லாதவாறு, புதிய நாமகரணத்தை கொண்டிருக்குமா என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.

- தேவராஜன்

இன்டர்நெட் பயன்பாட்டு வேக தரவரிசை இந்தியாவுக்கு 116வது இடம்


இன்டர்நெட் வசதி என்பது இன்று இன்ரியமையாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. அதிலும் இன்று அதிவேக இன்டர்நெட் இல்லாமல் இயங்க முடியாது என்று உலகமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதன் அடிப்படையில் இன்டர்நெட் வேகத்தை கொண்டு வரிசைப்படுத்தி வெளிவந்துள்ள தரவரிசை ஒன்றில் இந்தியா வளர்ந்துவரும்  நாடுகளின் வரிசையில் பின் தங்கியுள்ளது.
 
ஹாங்காங் நொடிக்கு 49.2 மெகாபைட் வேகத்தில் வழங்கி உலகநாடுகள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா இந்த தரவரிசையில் 116வது இடத்தை பிடித்துள்ளது.
 
மற்ற நாடுகளின் தரவரிசை:
 
ஹாங்காங்: 1
இன்டர்நெட் வேகம்: 49.2 Mbps
 
தென் கொரியா: 2
இன்டர்நெட் வேகம்: 46.9 Mbps
 
ஜப்பான்: 3
இன்டர்நெட் வேகம்: 40.5 Mbps
 
ரொமானியா: 4
இன்டர்நெட் வேகம்: 38.6 Mbps
 
லாட்வியா: 5
இன்டர்நெட் வேகம்: 33.5 Mbps
 
சுவிஸர்லாந்து: 6
இன்டர்நெட் வேகம்: 29.9 Mbps
 
பெல்ஜியம்: 7
இன்டர்நெட் வேகம்: 29.5 Mbps
 
சிங்கப்பூர்: 8
இன்டர்நெட் வேகம்: 28.3 Mbps
 
ஹங்கேரி: 9
இன்டர்நெட் வேகம்: 28.0 Mbps
 
பல்ஜேரியா: 10
இன்டர்நெட் வேகம்: 27.9 Mbps
 
அமெரிக்கா: 11
இன்டர்நெட் வேகம்: 27.1 Mbps
 
இந்தியா: 116
இன்டர்நெட் வேகம்: 6.9 Mbps

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

ருமான வரி  செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம்.
இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.

அவசியம் தேவை

* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.
* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.
* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.
* வெளிநாட்டு பயணச் செலவுக்காக 25,000 ரூபாய்க்குமேல் பணமாகச் செலுத்தும்போது தேவைப்படும்.
* வங்கியில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது தேவைப்படும்.
* 50,000 ரூபாய்க்கு அதிகமான தொகையை மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள் போன்ற முதலீடுகளில் முதலீடு  செய்யும்போது தேவைப்படும்.
* காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்தும் பிரீமியம் 50,000 ரூபாய்க்குமேல் அதிகமாக இருக்கும்போது தேவைப்படும்.
* தங்கம், வைரம், வெள்ளி போன்றவை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் வாங்கும்போது தேவைப்படும்.

கறுப்புப் பணம் தடைபடும் 

மேலே சொன்ன எல்லா செயல்பாடுகளின்போதும் அவசியம் பான் கார்டு எண் தேவைப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளில் பான் கார்டுகள் அங்கம் வகிப்பதற்கு மிக முக்கிய காரணம் கறுப்புப் பணம் ஊடுருவுதலைத் தடை செய்வதற்காகத்தான்.
நமது அனைத்து பரிவர்த்தனைகளும் பான் கார்டு எண் மூலம் வருமான வரித் துறையால் கண்காணிக்கப் படும். இருப்பினும் இந்தச் செயல்பாடுகளில் பல தரப்புகளில் காணப்படும் அலட்சிய போக்கு காரணத்தால் இன்றைய நிலையில் கறுப்புப் பணம் களையப்படுவதாகத் தெரியவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம் லஞ்சம், கணக்கில் வராத வருவாய்.

பான் கார்டு இருந்தால்...


சரி, ஒருவர் பான் கார்டு வாங்கியதால், அவரும் வருமான வரி கட்ட வேண்டுமா என்றால், கிடையாது. நிதி ஆண்டில் வருமானம், தற்போதைய நிலையில் ரூ. 2.5 லட்சம் தாண்டும்போதுதான் வரி கட்ட வேண்டும். பான் கார்டு வைத்திருப்பதில் இன்னொரு நன்மை உண்டு. அதை அனைத்து அரசு மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

மெட்ராஸ் ஐ எஸ்கேப் ஆவது எப்படி? டாக்டர் ரவிஷங்கர்




நம் ஊரில் சிலர் இப்போது விஜயகாந்த் போல சிவந்த கண்களுடன் திரிகிறார்கள். அதற்குக் காரணம் ‘மெட்ராஸ் ஐ’யா? இல்லை வேறு எதாவது பிரச்னையா?  கண் மருத்துவர் ரவிஷங்கரிடம் பேசினோம்.
அது என்ன ‘மெட்ராஸ் ஐ’?
மெட்ராஸில் 1970--களின்போது கண்களை ஒரு புதுவிதக் கண் நோய் தாக்கியது.  மெட்ராஸில் அந்த நோயைக் கண்டுபிடித்த காரணத்தால், ‘மெட்ராஸ் ஐ’ எனப் பெயர் வைத்தார்கள். இது மிக வேகமாகப் பரவக்கூடியது. முன்பு வெயில் காலங்களிலும், மழை சீசன் தொடங்கும்போதும் வந்த இந்த கண் நோய், இப்போது எல்லா சீசன்களிலும் வருகிறது. அடினோ (Adeno) வைரஸால் வரும் இந்த நோயை, மருத்துவ மொழியில் ‘வைரல் கன்ஜன்சிவிடிஸ்’ (viral conjuncivitis) என்பார்கள். மிகமிக வேகமாகப் பரவும் இந்த நோய், நிச்சயம் பரவும் வாய்ப்புள்ளது.
‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பை எப்படிக் கண்டறிவது?
கண்கள் சிவந்திருக்கும், கண்களில் மண் இருப்பது போன்று அரிப்பு ஏற்படும், கண்கள் வீங்கிவிடும், கண்களில் எப்போதும் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும். சிலருக்கு முகத்தில் நெறி கட்டிக்கொள்ளும். தொண்டை வலியும், காய்ச்சலும்கூட ஏற்படும்.
‘மெட்ராஸ் ஐ’யை எப்படித் தவிர்ப்பது?
‘மெட்ராஸ் ஐ’ வராமல் தடுக்க எந்த மருந்தும் கிடையாது. இந்த கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்ப்பதன் மூலம் நோய் பரவுவது இல்லை. சம்பந்தப்பட்ட நபர் உபயோகித்த பொருள்கள் மூலமோ, பாதிக்கப்பட்டவரது கண்ணீரின் மூலமோதான் பரவும். ‘மெட்ராஸ் ஐ’  பாதிக்கப்பட்டவர், கண்களைக் கசச்கிய பிறகு பயன்படுத்தும் பொருட்கள் மீது, மற்றவர்கள் கை வைத்தால் கிருமி அவரது கையிலும் தொற்றிக்கொள்ளும். அவர் தன் கண்களைத் தொடும்போது, கிருமி கண்ணில் பரவிப் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர் கண்ணைத் தொட்டாலோ, பாதிக்கப்பட்டவருக்குக் கண்ணில் மருந்துவிட நேர்ந்தாலோ, கையை சோப் போட்டுக் கழுவ வேண்டும். அவரின் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சுய மருத்துவம் தவறு
தவறான மருந்து கண் பார்வையைப் பாதிக்கும். மருந்துக் கடைகளில் நாமே ஆயின்மென்ட்களை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. சிலர் ‘மெட்ராஸ் ஐ’ தானாகச் சரியாகிவிடும் என்று அதை அப்படியே விட்டுவிடுவார்கள்.  இதுவும் தவறு. முதலில் சரியானதுபோல் தோன்றினாலும், பின்னால் பெரிய பிரச்னைகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரைப் பார்க்கவேண்டும். தொடுதல், கண்ணீர் மூலம் நோய் பரவுவதால், செயற்கைக் கண்ணீர் மருந்து (Tear Substitutes), வைரஸ் பரவாமல் இருக்க ஆன்டி வைரஸ் ஜெல் என்று மருத்துவர் மருந்துகளைப் பரிந்துரைப்பார்.  பிரியமானவர்களுக்கு  அன்பைத் தரலாம். கண் நோயைத் தரலாமா?
தள்ளியிருப்பது தவறில்லை
கண்ணாடியைப் பயன்படுத்தினால் ‘மெட்ராஸ் ஐ’ பரவாது என்பது தவறான தகவல். காற்று, கண்ணீர், கைப்பட்ட பொருள்கள் என பல வகைகளில் பரவக்கூடியது இந்த நோய். ‘மெட்ராஸ் ஐ’ தாக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்துக்கு மேலானவர்கள் மாணவர்களே. உங்கள் குழந்தைக்கோ, உங்களுக்கோ மெட்ராஸ் ஐ பாதிப்பு இருந்தால், அது குணமாகும் வரை பள்ளிக்கும் வேலைக்கும் விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதைப் போல் பாதிக்கப்பட்டவரிடமிருந்து தற்காலிகமாகத் தள்ளியே இருங்கள்.
- கு.அஸ்வின்

தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்!


மிழ் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். எளிமையான குடு்ம்பத்தில் பிறந்து தனது கந்தர்வ கானக் குரலால் தமிழகத்தை 40 களில் கட்டிப்போட்டவர். இசையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.

தங்க நிற உடல் கந்தர்வ குரல் ஆழமான பார்வை இதுதான் எம்.கே.தியாகராஜபாகவதர்.  நாடக உலகில் இருந்து திரையுலகம் வந்த பாகவதர் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களைக் கட்டிப்போட்டவர். அவரது ஹரிதாஸ் திரைப்படம் 3 தீபாவளியை கடந்து ஓடியதே அவரது புகழுக்கு சாட்சி.
திரையுலகில் புகழின் உச்சியை தொட்ட பாகவதர், வழக்கு ஒன்றில் சிக்கி அதிலிருந்த மீள முடியாமல் உடல் கெட்டு மனம் கெட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தம் இறுதிநாளில் சர்க்கரை நோயின் தாக்கத்தால் கண்பார்வை பறிபோனது. அதற்கு மேல் சென்னையில் இருக்க முடியாமல் தன் சொந்த ஊருக்கு திரும்பி அங்குள்ள தனது குலதெய்வம் கோவிலில் தங்கி வாழ்ந்தார்.
இந்த நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதிவாரத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 1 ஆம் தேதி தன் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார் ஏழிசை மன்னர் பாகவதர்.  காலம் அவரது நினைவை சிதைத்தாலும் அவரது புகழை சிதைக்க முடியவில்லை. அவரைப்போல் திரையுலகில் புகழின் உச்சத்தை தொட்டவர்கள் எவரும் இல்லை.
தங்கத்தட்டில் உணவருந்திய  அந்த ஏந்தல், இறுதிக்காலத்தில் அன்றாட உணவிற்கே அவதிப்பட்டதாக சொல்வார்கள். அந்த வகையில் அவரது வாழ்வு பலருக்கு பாடம். இன்று அவருக்கு 55வது நினைவு நாள். நினைவுதினமான இன்று  தமிழ்த்திரையுலகின் முன்னோடி என்ற வகையில் கூட திரையுலகம் அவருக்கு இன்று மரியாதை செலுத்தவில்லை.
புகழின் உச்சத்தில் இருந்தபோது, தென்மாவட்டம் ஒன்றிற்கு ரயில் ஏற வந்த பாகவதரை மக்கள் அடையாளங்கண்டுகொள்ள, அவரை தரிசிக்க வந்த கூட்டத்தால் பாகவதர் 4 மணிநேரம் தாமதமாக சென்றதாக சொல்வார்கள். தனது காருக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவரது கையை தொட்டு முத்தமிட சாரிசாரியாக மக்கள் திரண்டுவந்ததை ஆச்சர்யம் பொங்க சொல்வார்கள் அக்காலத்தில். 
ஆனால் திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓரிரு உறவினர்களைத்தவிர அவரை வணங்கிச் செல்ல இன்று எவரும் வரவில்லை.திருச்சி மாவட்ட விஸ்வகர்மா சங்கத்தினரும்,  அவரது உறவினர்களும் இன்று காலை வந்து தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு சென்றனர்.
"இதுதான் ஒரு முன்னோடிக் கலைஞனுக்கு திரையுலகம் காட்டும் மரியாதையா?" என அவரது உறவினர்கள் புலம்பியபடியே நகர்ந்தனர் அங்கிருந்து.

-சி.ஆனந்தகுமார், 

அள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்! விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள்...

ஆர்வமும் சிறிதளவு ஆதரவும் இருந்தால், அனுதினமும் நம் வாழ்க்கையில் ஆச்சர்யங்கள் அலங்கரிக்கும். பிடித்த துறையில், விடாமுயற்சியோடும் நம்பிக்கையோடும் உழைத்தால், அதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும் என்கிறார்கள் தாரணியும், யாழினியும். இவர்கள் இருவரையும் விருதுநகரின் வித்தியாசப் பெண்மணிகள் என்றே சொல்லலாம். காரணம், ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப் படும் அப்ளிகேஷன்களை இவர்களே உருவாக்கி, மாதத்துக்கு 60 ஆயிரம் ரூபாய்க்குமேல் சம்பாதிக் கிறார்கள்.
 படிப்பை எளிமைபடுத்தும் ஆப்ஸ்கள்!
விருதுநகரில் இருந்தபடி பல அப்ளிகேஷன்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை  அறிய அவர்களைச் சந்தித்துப் பேசினோம். முதலில் இல்லத்தரசியாக இருக்கும் தாரணி சண்முகராஜனிடம் பேசினோம்.
“சின்ன வயதில் இருந்தே எனக்கு படிப்புமேல ஆர்வம் அதிகம். மாணவர்களுக்குப் படிப்பதை எளிமைப்படுத் தணும். இதுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்யணும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். சமீபகாலமா ஸ்மார்ட்போன் பிரபலமா இருக்குறதால, இதன்மூலம் ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. அந்த யோசனையில உருவானதுதான் இந்த அப்ளிகேஷன்கள் எல்லாம். இதுவரைக்கும் 13 அப்ளிகேஷன்களைத் தயார் செய்திருக்கோம்’’ என்று பெருமைபொங்கச் சொன்னார் தாரணி. மேற்கொண்டு அவரே பேச ஆரம்பித்தார்.
‘‘எங்களோட அப்ளிகேஷன்கள் பெரும்பாலும் மாணவர்களை மையப்படுத்திதான் இருக்கும். குறிப்பா, வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களோட நுழைவுத் தேர்வுகளை எளிமைப்படுத்துவதற்காகவும் நாங்க ஆப்ஸ் உருவாக்குகிறோம். ஜீஆர்இ (GRE) ஜீமேட் (GMAT), சேட் (SAT) போன்ற தேர்வுகளுக்கும் அப்ளிகேஷன்களை உருவாக்கி இருக்கிறோம்.
அப்ளிகேஷனை உருவாக்கும்போது, அவை  வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்கணும். நாங்கள் உருவாக்கும் அப்ளிகேஷன்கள் அந்த வகையில் இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை சோதித்துப் பார்த்தபின்பே, அதை மற்றவர்கள் பயன்படுத்தத் தருவோம்’’ என்றவர், அவர் உருவாக்கும் ஆப்ஸை வடிவமைக் கும் டிசைனரான யாழினியை அறிமுகப்படுத்தினார். தாரணியின் கணவரின் தங்கைதான் இந்த யாழினி. பிஎஸ்ஜி கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் (B.Sc-Computer Science) படித்துவிட்டு,  புராடக்ட் டிசைனில் முதுகலைப் படிப்பும் படித்த யாழினியுடன் பேசினோம்.
 டிசைனர் யாழினி!
‘‘ஆரம்பத்துல நாங்க தயாரிச்ச அப்ளிகேஷன்களுக்கு வரவேற்பு குறைவாகவே இருந்துச்சு. இதனால வருமானமும் சொல்லிக்கிறமாதிரி கிடைக்கலை. நம் முயற்சியின் மீது நாம் நம்பிக்கை வைக்கணும். அப்போதுதான் முன்னேற்றத்துக்கான பாதை எளிமை யாகும்னு தொடர்ந்து உழைக்க ஆரம்பிச்சோம். நாள் ஆக ஆகத்தான் படிப்படியா வரவேற்பு அதிகமாச்சு.

எங்கள் அப்ளிகேஷனை பயன்படுத்தி னவங்க கொடுத்த ஆலோசனைதான் எங்களை இப்போ எல்லோருக்கும் அடையாளப்படுத்தி இருக்கு. அவர்கள் கொடுத்த ஆலோசனையை வச்சுதான் பல்வேறு யுத்திகளை ஆப்ஸ் தயாரிக்கும் போது பயன்படுத்தினோம். அவங்களுக்குப் பயன்படுத்த எளிதாக இன்னும் புதிய புதிய அப்டேட்களைக் கொடுத்தோம்.
 வருமானம் ரூ.60 ஆயிரம்!
கூகுள் ஆட் சென்ஸ் (Google Ad Sense) என்கிற தளத்தில் எங்கள் அப்ளிகேஷனை விளம்பரம் செய்தோம். ஆரம்பத்தில் மாத வருமானம் 5,000 ரூபாய் அளவுக்குதான் இருந்தது. கூகுளில் சர்ச் செய்யும்போது பல விளம்பரங்கள் வரும். அதுபோல எங்கள் அப்ளிகேஷனில் விளம்பரங்கள் டிஸ்பிளே ஆவதன் மூலமா, சமீப காலமா எங்களால் மாதம் 60,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியுது. இதுவரை ஆறு லட்சம் வாடிக்கை யாளர்கள் எங்கள் அப்ளிகேஷனை பயன்படுத்திகிட்டு இருக்காங்க’’ என்று சொன்னார் மகிழ்ச்சி பொங்க.
‘‘இப்ப புதுசா நாங்க குழந்தை களுக்காகவும் அப்ளிகேஷன்களை உருவாக்கினோம். அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கு. சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு உறுதுணையா அப்ளிகேஷன் இருந்தா நல்லாருக்கும்னு வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு மெயில் வந்துருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னார் யாழினி.
தாரணி - யாழினி கூட்டணியில் உருவான 13 அப்ளிகேஷன்களில் 11 அப்ளிகேஷன்கள் கூகுள் ஆண்ட்ராய்டு தளத்துக்காகவும், 2 அப்ளிகேஷன்கள் ஆப்பிள் நிறுவனத்தோட ஐஓஎஸ் தளத்துக்காகவும் உருவாக்கித் தந்திருக் கிறார்கள்.
 கடந்து வந்த பாதை!
இந்த வெற்றியை சுவைக்க அவர்கள் பட்ட கஷ்டங்களைச் சொன்னார் தாரணி. “ஆரம்பத்தில் வருமானம் குறைவாக இருந்தபோது, எங்கள் ஆர்வம் குறையலை. நாங்க முதல் அப்ளிகேஷன் தயாரிக்கும்போது எனக்கு ஐந்து மாதத்துல குழந்தை இருந்துச்சு. குழந்தையையும் கவனிச்சுட்டு, அப்ளிகேஷன் டெவலப் பண்றது கஷ்டமா இருந்தாலும் விடாம முயற்சி செஞ்சதாலதான் இப்ப இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். 

யாழினியும் அப்ளிகேஷனை டெவலப் செய்வதற்காகத் தினமும் ஆறு மணி நேரம் வேலை பார்ப்பாங்க. கடின உழைப்புக்குப் பிறகுதான் நிறைய விளம்பர ஏஜென்சிகள் மூலமா எங்களுக்கு வாய்ப்புகள் வந்துச்சு. கூகுள் டெவலப்பர் கன்ஸோல் (Google developer Console) என்ற தளத்தில் பதிவு செய்ததாலயும், அதிக வாய்ப்புகள் வந்துச்சு.
இன்னும் கொஞ்ச நாள்ல புதுசா ஒரு நிறுவனம் ஆரம்பிக்க இருக்கிறோம். அந்த நிறுவனத்தோட பெயர் பப்பில் தாட்ஸ் (Bubble Thoughts). கூடிய விரைவில் நாங்கள் தொழிலதிபர் ஆகவேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என்று சொல்லும்போது இருவர் முகத்திலும் பளிச் சந்தோஷம்.
சமையல் முதல் சாஃப்ட்வேர் வரை தங்கள் முத்திரையைப் பதித்துவரும் இன்றைய தலைமுறை பெண்களுக்கு இந்த தாரணியும் யாழினியும் சிறந்த உதாரணம். 

State formulates guidelines to curb violence in colleges

:

Following a rise in incidents of student violence, the State government’s department of higher education has framed guidelines for the maintenance of law and order in city colleges.

“The department has identified six colleges, including Presidency College, Pachaiyappas College and Government Arts College, Nandanam, where students have been involved in violence. These guidelines will ensure that peace is restored on and off campus,” said Hemant Kumar Sinha, principal secretary.

The guidelines will provide for counselling of and action against those indulging in violence. Students will also be monitored on campus. “The guidelines will be similar to the anti-ragging measures. The department will work with the transport department and police,” Mr. Sinha said.

Once the guidelines are issued, the principal, vice-principal and wardens will be held responsible. A three-tier structure will ensure implementation. “Colleges will have certain responsibilities, the university and directorate of collegiate education will be the next level and the department of higher education willoversee the process,” he said.

Following a spate of violence at Presidency College in September, the principal was transferred to the Government Arts College in Vellore. Transport department officials said buses on routes that pass through Government Arts College, Nandanam, Presidency and Pachaiyappa's colleges are frequently targeted.

Many students objected to the increased monitoring. “It feels less like a college and more like prison, with the police checking bags and providing security to the principal at all times,” said a student of Presidency College. “We have tried protesting a number of times, but in vain. A few students who have been indulging in violence have given all of us a bad name.”

NEWS TODAY 31.01.2026