Monday, January 12, 2015

தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள்: தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

கோப்பு படம்

தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர்கள் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பி.காம். படித்துவிட்டு ஓர் ஆண்டாக சென்னை கோயம்பேடு அடுத்த நெற்குன்றத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த போலி டாக்டர் வெங்கடேசன் (57) என்பவரை கடந்த நவம்பர் மாதம் போலீஸார் கைது செய்தனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டத்தில் போலீஸ் அதிரடி சோதனையில் 14 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜபாளையத்தில் 7, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு போலி டாக்டர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

எம்பிபிஎஸ் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி டாக்டர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் மருத்துவம் படித்த உண்மையான டாக்டர் யார்? போலி டாக்டர் யார்? என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

80 ஆயிரம் டாக்டர்கள்

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் வி.எஸ்.துரைராஜ் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் 1915-ம் ஆண்டு முதல் இதுவரை 1,09,252 பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் இறந்து இருப் பார்கள். சில டாக்டர்கள் வெளிநாடுகளில் குடியேறி உள்ளனர். தற்போது தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர்.

போலி டாக்டர்களை எளிதில் கண்டுபிடிக்க டாக்டர்கள்தான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மருத்துவம் படித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் அனைவரும் தங்களுடைய பதிவு எண் சான்றிதழை, சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டு மற்றும் லெட்டர் பேடில் தன்னுடைய பெயர், படிப்பு மற்றும் பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

30 ஆயிரம் போலிகள்

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் துணை தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வரும் சுமார் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளனர். போலி டாக்டர் செய்யும் தவறு, உண்மையான அனைத்து டாக்டர்களையும் பாதிக்கிறது. இதனால் டாக்டர்கள் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை போய்விடுகிறது. எனவே போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மாவட்டந் தோறும் தனிப்படை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புகார் அளிக்கலாம்

பொதுமக்கள் சிகிச்சைக்கு செல்லும் போது, அந்த டாக்டர் போலி என்ற சந்தேகம் இருந்தாலோ அல்லது போலி டாக்டர் என தெரியவந்தாலோ உடனடியாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கு, எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலை 044-26265678 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம். போலி டாக்டர் என தெரியவந்தால், போலீஸில் ஒப்படைத்து விடுவோம் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தலைவர் வி.எஸ்.துரைராஜ் தெரிவித்தார்.

மின்னணு முறையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தலில் ஓட்டுப்போட அனுமதி மத்திய அரசு தீவிர பரிசீலனை

புதுடெல்லி

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் தேர்தலில் ஓட்டுப்போட மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஓட்டுப்போடுவது தொடர்பாக பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தற்போதைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேர்தலின்போது தங்களது சொந்த தொகுதிக்கு நேரடியாக வந்து ஓட்டுப்போடலாம் என்கிற சமத்துவமற்ற முறை பின்பற்றப்படுகிறது. எனவே, அவர்கள் வெளிநாட்டில் இருந்தவாறே, எளிதாக வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து தனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

குழு அமைப்பு

இதைத்தொடர்ந்து இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு அனைத்து தரப்பினரிடமும் இதுபற்றி கருத்துகளை கேட்டறிந்து அதனை பரிந்துரையாக மத்திய அரசிடம் அண்மையில் அளித்தது.

இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு இந்த வாரத்தில் இதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மின்னணு முறையில் ஓட்டு

இந்த குழுவின் பரிந்துரைகள் பற்றிய விவரம் தெரிய வந்து உள்ளது.

அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறை (ஆன்லைன்) மூலம் தங்களுடைய தொகுதிகளில் ஓட்டுப்போடலாம்.

பரீட்சார்த்த சோதனை

இந்த ஓட்டுப்பதிவு முறை முதலில் நாட்டில் ஒன்றிரண்டு பாராளுமன்ற தொகுதிகளில் பரீட்சார்த்தமாக சோதனை செய்து பார்க்கப்படும். இது நடைமுறை மற்றும் செயல்முறை ரீதியில் அனைத்து விதத்திலும் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பட்சத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் இந்த முறைக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், நமது ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக ‘மறைமுக வாக்குப்பதிவு’ செய்வதை போன்று வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஓட்டுப்போட அனுமதிக்கலாம் என்ற மற்றொரு முறையும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தல் விதிகளில் மாற்றம்

மத்திய அரசின் இந்த பரிந்துரைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால், மறைமுக வாக்கு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு ஆகிய முறைகளை அமல்படுத்துவது தொடர்பான தேர்தல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, January 11, 2015

Sweet surprise in suspicious parcel for VHP leader TNN | Jan 11, 2015, 02.00 AM IST

CHENNAI: Police were called in after a VHP leader in Chennai received an anonymous parcel delivered at his house in Puzhal on Saturday. However, the content turned out to be Tirunelveli halwa and Srivilliputhur milk-khoa. 

VHP leader Thanikachalam's wife Kalyani received the parcel from a courier agency. She grew suspicious as it weighed about 500g and there was no address of the sender on the parcel which had the words 'sweet khana'.

Kalyani informed her husband about the parcel after keeping it outside the house. He alerted the Puzhal police who took the parcel and kept it on a sand-laden bullock cart at the police station. A team of Bomb Detective and Disposal Squad (BDDS) sleuths came and found it was just a sweet box.

Puzhal police personnel tasted the halwa and milk-khao and later distributed them to the complainants and others. Police said the parcel also contained bills for the purchase. tnn

Mad Rush Eases at Gas Dealers Across City

The New Indian Express

CHENNAI: If you are one among the 55 per cent of registered gas consumers in Tamil Nadu who have not yet registered for Direct Benefit Transfer for LPG (DBTL), you need not dread at waiting for your turn in long queues at the gas agency.

According to gas suppliers in Chennai, the scene now is peaceful compared to the rush they witnessed prior to January 1. “We used to get around 500 forms daily, now we get only 150,” said a dealer in Adyar.

As a consequence of this, agencies have begun to accept the ‘name-change’ requests from many consumers who were turned away earlier. “In December we refused to collect these regularisation forms as we had to finish our seeding formalities. But now we are relatively free and are accepting them,” said another gas agency dealer.

Senior Oil company officials said as of January 8, 45 per cent of consumers have been keyed into the system to receive the subsidy directly into their bank accounts. While Ariyalur leads with 59 per cent, the figure for Chennai is again comparatively lower at 38.32 per cent. Across the country, half the 15.3 per cent consumers have been fully registered (Cash Transfer Compliant) and so far Rs.1260 Crore have been transferred.

“More people are aware of the scheme and have begun to trust it as the cash has begun to get transferred into the accounts,” said a senior Indane official.

The subsidy amount, around Rs.300, arrives in the account after 3 to 4 working days once the gas cylinder has been delivered, officials said.

வாங்க பொங்கல் வைக்கலாம்!

தை மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் தினம் பிரதானமானது. அதுவும் பானை வைத்து கொண்டாடும் பொங்கல் மட்டுமில்லாமல் பலவகையான பொங்கலும் அந்த தினங்களில் உண்டு என்கிறார் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி லட்சுமி மணிகண்டன்.
 "மிக்ஸி, கிரைண்டர், ஓவன், கியாஸ் அடுப்பு  என்று அதிநவீன அடுப்பறை சாதனங்கள் பல தோன்றி விறகில்லா சமையலை வினாடி நேரத்தில் செய்து முடிக்கும் ‘ஈஸி’ கிச்சன் யுகத்தில்தான் நாம் இருக்கிறோம்.  பண்டிகை பட்சணங்கள், பலகாரங்களைக்கூட மெனக்கெட்டு வீட்டில் செய்வதில்லை யாரும். குளுகுளு கண்ணாடி ஷோரூம் அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள இனிப்புகளை, கைவீசிப்போய் கணக்குப் பார்க்காமல் காசு கொடுத்து பை நிரப்பி கொண்டுவந்து ருசித்து கொண்டாடுகிறோம். தை முதல் நாள் பொங்கலைக்கூட குக்கர் விசில் குலவையிட கொண்டாடும் காலம் இது.
அந்தக்காலத்தில் அப்படியில்லை.... தை மாதம்தான் விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகம் இருக்கும். முக்கிய அறுவடை காலமும் அதுதான். பருவமழை தவறாமல் பெய்த காலத்தில், ஆடிப்பட்ட விவசாயம் அமோக விளைச்சலை கொடுத்தது. தினை, சாமை, வரகு, குதிரைவாலி என்று சிறுதானிய வெள்ளாமை தை மாத அறுவடையில் வீடு வந்து சேர்ந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு தோதாக மூன்று நாள் பொங்கல் பண்டிகையை முகம் மலர்ந்து கொண்டாடினார்கள்.

முதல் நாள் வாசல் பொங்கல்:  மெழுகிக்கோலமிட்ட வாசலில் அடுப்புக்கல் கூட்டி, தோகை சரசரக்கும் தோரணக்கரும்பு ஊன்றி, மஞ்சள் கொத்து கோர்த்து பானைகளில் தொங்கவிட்டு, பூசுற்றி பொட்டுவைத்து  பகலவனுக்கு ஒரு பச்சரிசி பொங்கல், குலசாமிக்கு ஒரு தினை அரிசி பொங்கல், மூத்தகுடியாம் முன்னோர் நினைவாக வரகரிசி பொங்கல் என்று மூன்று பொங்கல் வைத்து முதல் நாளை கொண்டாடுவார்.

 இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல்:  தொழுவம் மெழுகி, கால்நடைகள் கழுவி, கழுத்து மணி மாட்டி, கொம்புச்சாயம் பூசி, வண்ணப்பொடிகள் தூவி, சந்தனம் தெளித்து, குங்குமம் இட்டு, மாட்டுக்கு ஒரு பொங்கல், பட்டிகாக்கும் நாய்க்கும் ஒரு பொங்கல், ஆட்டுக்கு ஒரு பொங்கல், களத்து மேட்டு காவல்
தெய்வத்துக்கும் ஒரு பொங்கல் என்று பல பொங்கல் வைத்து, மஞ்சு விரட்டி மாடு பிடித்து படையலிட்டு பழமும் சர்க்கரை பொங்கலும் கலந்து ஆவினுக்கு ஊட்டி கொண்டாடும் பொங்கல் அது..

மூன்றாம் நாள் காணும் பொங்கல்: வீட்டில் செய்த பலகாரங்கள் கரும்புடன் கனிகள் பல கூடையில் நிரப்பி, புத்தாடை பளபளக்க, பூவாசம் கமகமக்க, கொம்பு, சேகண்டி, மத்தளம், உருமை, வாத்தியங்கள் முழங்கும் சத்தம் முன்செல்ல... இளசுகள் சேர்ந்து ஓடைக்கரை மரநிழலில் கூடி, அரளி, ஆவாரை, சரக்கொன்றை பூக்களைப்பறித்து வீசி விளையாடி, பேசி உறவாடும் காணும் பொங்கல் காளையரும் கன்னியரும் கண்ணால் பேசி காதலை பரிமாறும் பொங்கல். இப்படியாக, நடக்கும் பொங்கல் பலகாரம் படைக்க, அன்றைய மக்கள் பயன்படுத்தியது ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை மண்பானை, கலயம், சுட்ட அடுப்பு, ஆரோக்கியம் கெடுக்காத சிறுதானியங்கள்.

காலம் அதை மறந்து போனாலும், எங்களைப் போன்ற சிலர் இன்னும்  அதை கடை பிடித்து கொண்டாடி வருகிறோம்.

வாருங்கள் எங்கள் வீட்டிற்கு... பணியாரம், கொழுக்கட்டை, கைமுறுக்கு, கம்புசாதம், கைகுத்தல் அரிசி சோறு, கீரைகுழம்பு, கொள்ளுரசம், வாழைதண்டு பொரியல், ராகிதோசை என்று ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, விறகு அடுப்பு பயன்படுத்தி சமைக்கிறோம்... வெண்பொங்கல், தினை, வரகு, சாமை, கைகுத்தல் அரிசி பொங்கல் என்று தினம் ஒரு பொங்கல் சமைக்கிறோம்... பாரம்பரியம் காக்கிறோம்" என்கிறார்.

- ஜி.பழனிச்சாமி

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

சிக்கனுடன் எதற்கு எலுமிச்சை...?


ணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால், நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
உலகின் வல்லரசு நாங்கள் என்று மார்த்தட்டிக் கொள்ளும் நாடுகள் உருவாகும் முன்பே... தமிழ் மண்ணில் நாகரீகமும், வாழ்வியல் முறையும் ஓங்கி உயர்ந்திருந்தது. காலையில் பல் துலக்குவதில் தொடங்கி, படுக்கைக்கு செல்லும் வரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒவ்வொரு விஷயத்தையும் பரிசோதித்து பார்த்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.
சாதாரண ரசம் வைப்பதை கூட பல ஆண்டுகள், பல வகைகளில் செய்து பார்த்து, அதற்கு முழுவடிவம் கொடுத்திருப்பார்கள். இன்று எல்லாமே அவசர கதியில் செய்கிறோம். நாம் சாப்பிடும் உணவுக்குக் கூட ‘ஃபாஸ்ட் ஃபுட்’ என்று பெயர் வைத்துள்ளோம். இதனால், நம் தட்டில் எவ்வளவு சுவையான உணவு பரிமாறினாலும், அள்ளிக் கொட்டிக் கொள்வதால், அதன் ருசியும் பலனும் முழுமையாக தெரிவதில்லை. சாப்பிடும் போது பேசக்கூடாது என்பதை சிறுவயதில் இருந்தே கேட்டு வருகிறோம். ஏன் அப்படி சொன்னார்கள் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா? பேசாமல் சாப்பிட்டால், நன்றாக மென்று உண்ண முடியும். அதனால்தான் ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்று தமிழ் பாட்டி சொல்லி வைத்தாள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். சந்தோஷமான நேரங்களில் ஓட்டல்களில் சாப்பிட செல்லும்போது, அசைவ பிரியர்கள் ‘சில்லி சிக்கன்’ ஆர்டர் செய்வது வழக்கம். சிகப்பு நிறத்தில், எண்ணெயில் பொறித்து எடுத்து தட்டில் வைத்து பரிமாறுவார்கள். இதை, பார்க்கும்போதே, பக்கத்து டேபிளில் உள்ளவர்களுக்கும் கூட வாயில் எச்சில் ஊறும். சிக்கனுடன் கூடவே, இரண்டு துண்டு எலுமிச்சை பழங்களும் இருக்கும். சில்லி சிக்கனுக்கும், எலுமிச்சை பழத்திற்கு என்ன சம்பந்தம் என்று தெரியாமல், அதை அப்படியே விட்டுவிடுவோம். கொஞ்சம் விபரம் தெரிந்தவர்கள்  அதை, சிக்கன் மீது பிழிந்து விட்டு சாப்பிடுவார்கள்.
சிக்கனுடன், எலுமிச்சை பழத்துண்டை கொடுக்க முக்கிய காரணம் உள்ளது. சிக்கனில் அதிக அளவுக்கு இரும்புச் சத்து உள்ளது. இரும்புச் சத்தை நமது உடல் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், வைட்டமின்-சி தேவை. அதனால்தான், சிக்கன் சாப்பிடும் போது, வைட்டமின்-சி சத்து நிறைந்த எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டுச் சாப்பிடச் சொல்கிறார்கள்.

அதாவது, ''சிக்கன் மட்டுமல்ல... இரும்புச் சத்து அதிகம் உள்ள எந்த உணவை எடுத்துக் கொண்டாலும், அதனுடன் வைட்டமின்- சி சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். ஓட்டலில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்துவிடாமல், சிக்கனை சாப்பிட்டால் நீங்கள் கொடுத்த பணத்துக்குரிய பலன் கிடைக்காமல் போகும்.
ஆகையால், அடுத்த முறை ஓட்டலுக்கு போனால், எலுமிச்சை சாற்றை பிழிந்துவிட்டு, சிக்கனை ருசித்துவிட்டு வாருங்கள்!

-ஆறுச்சாமி

ஜனவரி 11: கொடி காத்த குமரன் நினைவு தின சிறப்பு பகிர்வு!



சிறு குழந்தையிலிருந்தே தேசிய கொடி என்றால் சட்டென்று எல்லோருக்கும் ஞாபகம் வருவது "கொடி காத்த குமரன்" என்ற பெயரை தான்!

ஆம், சாகும் தருவாயிலும் நமது தேசிய கொடியை தரையில் விழாமல் தாங்கி பிடித்தவர் அல்லவா! இன்று அவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் குமாரசாமி. அக்டோபர் 4, 1904 அன்று பிறந்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர இயலவில்லை. ஆதலால் கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தார்.



1923ஆம் ஆண்டு தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை திருமணம் செய்து கொண்டார். கைத்தறியில் போதிய வருமானம் கிடைக்கப்பெறாததால் ஈங்கூர் என்னும் ஊரில் கந்தசாமி கவுண்டர் நடத்திய பஞ்சு மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

பிறகு காந்திய சிந்தனையில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட குமரன், தேசபந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினரானார்.

1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.

இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது.

ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.

திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. ஆனாலும்
உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.

கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்திய அரசு இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு அக்டோபரில் அவரின் நினைவாக தபால் தலையை வெளியிடப்பட்டது.

- ஜி.கே.தினேஷ் ( மாணவப் பத்திரிகையாளர்)

NEWS TODAY 25.01.2026