Friday, February 20, 2015

திருமணத்துக்கும் நோ.. கர்ப்பத்துக்கும் நோ.. கத்தார் ஏர்வேஸின் கட்டுப்பாடு

Dinamani

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றும் விமானப் பணிப் பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும், திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் அடையவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் குறித்து தற்போதுதான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

அதாவது, கத்தார் ஏர்லைன்ஸில் விமானப் பணிப் பெண்ணாக பணியாற்ற திருமணம் செய்தவராக இருக்கக் கூடாது, வேலைக்கு சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளவும் கூடாது, திருமணத்துக்குப் பிறகு கர்ப்பம் அடைவது என்பது கூடவே கூடாது என்பது போன்ற விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் மீது விசாரணை நடத்திய பன்னாட்டு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனமும் இதனை உறுதி செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் இடையே ப்ரீமியம் விரைவு ரயில்

சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் இடையே ப்ரீமியம் சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,

ரயில் எண் 22353: பிப்.26,5, மார்ச் 5,12,19,26 ஆம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் பாட்னாவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்து, இங்கிருந்து புறப்பட்டு மாலை 6.55 மணிக்கு பெங்களூர் கன்டோன்மன்ட் சென்றடையும்.

ரயில் எண் 22354: பிப்.22, மார்ச் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் கன்டோமன்ட்டில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.10 மணிக்கு வந்தடையும். பின்பு, இங்கிருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாட்னா சென்றடையும்.

இந்த ரயில் சியோக்கி, ஜபல்பூர், நாக்பூர், விஜயவாடா, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9-year-old sits for Class X exams in Assam

GUWAHATI: A Class V student from Assam's Darrang district appeared in the Class X state board examination that began from Thursday.

Shamim Mehfiz, a nine-year-old boy, was granted permission by the Secondary Education Board of Assam (Seba) to appear in this year's board examination.

"Yes, I am going to appear in the matriculation examination and I am hopeful about clearing it. Usually, I study for around five or six hours during the day. I put in four hours of study in the morning, one hour in the evening and two hours at night," Mehfiz said.

But Seba clarified that the boy's results would not be declared if he is unable to prove that he is at least 15 years of age. According to the rules of the board, a candidate has to be at least 15 to sit in the board examination.

A senior official of Seba said Mehfiz is aware of the board rules. "We have issued provisional admit cards to candidates who have mentioned their age as being less than 15 while submitting the forms. Before the results are declared, he or she will have to prove that he or she has attained the age of 15," the official said.

Though some students aspire to clear the board examination at an early age, mainly to set records, Seba rules do not allow for such cases, he added.

"Usually when we find in the application that a student is underage, we issue provisional admit cards. It is the duty of the candidate to prove his age later," the official said.

MUMBAI VARSITY VC ASKED TO ABSTAIN FROM ATTENDING OFFICE

அரசின் உடனடி கவனத்திற்கு...

Dinamani

சென்னையில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்பட நாட்டில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை கிடையாது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, தற்போது பயிலும் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு இந்த மருத்துவக் கல்லூரிகள் மூடப்படும்.

இதைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், இந்த முடிவை அரசு மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய இதுபற்றி கருத்துத் தெரிவித்தபோது, இ.எஸ்.ஐ.யின் முன்னுரிமை, தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீடுதான், மருத்துவக் கல்லூரிகள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

மருத்துவக் கல்லூரிகளை மூடிவிடுவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளையும் படிப்படியாக மூடிவிடுவார்கள் அல்லது அரசு - தனியார் பங்கேற்பு மருத்துவமனைகளாக மாற்றப்படலாம்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவத்துக்காக தனியார் பெருமருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2008-09 நிதியாண்டில் இத்தகைய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பரிந்துரைக்கான செலவு ரூ.5.79 கோடியாக இருந்தது. 2012 - 13-ஆம் ஆண்டில் ரூ.334.57 கோடியாக (57 மடங்கு) உயர்ந்துவிட்டது. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று போதுமான மருத்துவர்கள் இல்லை அல்லது இந்த மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை என்பதாக பொதுக் கணக்குக் குழு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது. இதற்கு இ.எஸ்.ஐ. அளித்துள்ள பதிலில், அரசு - தனியார் பங்கேற்பு மூலம் சேவைத் தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தனது மருத்துவமனைகளையும் படிப்படியாக மூடிவிட்டு, தற்போது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சேவைக்கு இணையாக, உடல்நலம் குன்றியதற்காக மருத்துவ ஆலோசனை பெற்றால் அதற்கான கட்டணம், மருந்துச் செலவுகள் ஆகியவற்றை மட்டும் வழங்குவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமைச்சர் பதிலும், மருத்துவக் கல்லூரிகளை மூடும் முடிவும் வெளிப்படுத்துகின்றன.

இப்போதும்கூட, தொழிலாளர்கள் உடல் நலம் குன்றி வேலைக்குச் செல்ல முடியாத நாள்களுக்கான சம்பளம் ஈட்டுறுதி, தொழிற்கூட விபத்தில் நிரந்தர அல்லது தாற்காலிக ஊனம் அடைந்தால் அதற்கான மாதாந்திர இழப்பீட்டுத் தொகை ஆகியன, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் போலவே வழங்கப்படுகின்றன. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளரின் குடும்பத்தினர் அனைவரும் சிகிச்சை பெற முடிவதைப்போல, குடும்பத்தில் மூன்று பேருக்கான மருத்துவக் காப்பீட்டை ஒரே சந்தாத் தொகையில் உள்ளடக்கும் திட்டங்களையும் தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வைக்கின்றன. ஆகவே, மருத்துவச் சேவையை தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, தொழிற்கூடங்கள், தொழிலாளர்கள் வழங்கும் சந்தாத்தொகை மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவற்றோடு, வெறுமனே நிர்வாகக் கண்காணிப்பை மட்டும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு தொழிலாளர் அமைச்சகம் வந்துவிட்டது என்பது தெளிவு.

தற்போது இ.எஸ்.ஐ. கழகத்தில் 1.96 கோடிப் பேர் உறுப்பினராக உள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 51,728 படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளன. பல நூறு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிறைவு செய்யும் நடவடிக்கைகளில் இ.எஸ்.ஐ.சி. ஈடுபடாது என்பதும் தெளிவு.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் முடிவு எதுவாக இருந்தபோதிலும், சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக சுமார் 150 மருத்துவர் படிப்புக்கான இடங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்ல, தொழிலாளர் துறை, தனியார் கல்லூரிகள் எவ்வாறு நிர்வாக ஒதுக்கீட்டில் 40 விழுக்காடு இடங்களை நிரப்புகின்றனவோ அதேபோன்று ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தி, 40 விழுக்காடு இடங்களை நிரப்ப முடியும். (தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 20 விழுக்காடு இடங்கள் ஈட்டுறுதிக் கழக உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.) இந்த நடைமுறை தொழிலாளர்களின் குழந்தைகளின் மருத்துப் படிப்புக்கு தனிவாசலாக அமையும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு மருத்துவக் கல்லூரி ஈரோட்டில் இயங்கி வருகிறது.

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தெளிவுபடுத்தும் வரை தமிழக அரசு அமைதி காக்க வேண்டியதில்லை. இப்போதே அதிகாரிகளை நேரில் அனுப்பி, பேசி, சாதகமான முடிவு காண்பது மிக எளிது. அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு தேவையாக இருக்கும் இன்றைய சூழலில், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசின் பொறுப்புக்கு மாற்றிவிடுவதில் மத்திய தொழிலாளர் துறைக்கு எந்தவித சங்கடமும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவை. இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அதற்கு துணையாக அமையும். பல தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவராகும் வாய்ப்பும் தொடரும்.

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது

சென்னை:வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.

Thursday, February 19, 2015

'லிங்கா' பிரச்சினை: எதிர் போராட்டக் களத்தில் ரஜினி ரசிகர்கள்!

Return to frontpage

லிங்கா' விநியோகஸ்தர்கள் 'பிச்சை எடுக்கும் போராட்டம்' நடத்தும் அதேநாளில், அவர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

'லிங்கா' தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தர முன்வந்துள்ள 10% நஷ்ட ஈடு தொகையை ஏற்க மறுத்த விநியோகஸ்தர்கள், பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அப்போராட்டம் நடைபெறவுள்ள தேதி குறித்த அறிவிபபி விரைவில் வெளியிடவுள்ளனர்.

இதற்காக அரசியல் தலைவர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு கேட்டு விளம்பரம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விநியோகஸ்தர்கள் நடத்தவிருக்கும் இந்தப் போராட்டத்தை எதிர்த்து, அதேநாளில் ரஜினி ரசிகர்கள் எதிர் போராட்டம் நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.

இதற்காக, தமிழகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போரட்டத்தை நடத்தவும், அதற்கு ரஜினி ரசிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கான பக்கங்களிலும் இதற்கான ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

இணையத்தில் ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "எதையும் இழப்போம் ரஜினிக்காக, எதற்காகவும் இழக்கமாட்டோம் ரஜினியை. ரஜினி ரசிகர்களின் எச்சரிக்கை. தலைவர் ரஜினியின் புகழை கெடுக்க, அவர் செல்வாக்கை ஒழிக்க வஞ்சக சூழ்ச்சி செய்பவர்கள் அடங்காவிட்டால், அவர்களை கண்டித்து, தலைவருக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் போராட்டம் ரஜினி ரசிகர்களால் நடத்தபடும்.

1996-ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002-ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011-ல் தங்கள் தலைவனுக்காக கோயில் கோயிலாக அலைந்தவர்கள் திராணி இவ்வளவுதானா?

எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால்தான் அந்தக் கூட்டம் இப்படி ஆட்டம் போடுகிறது.

நமது பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான், செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் சதி கூட்டம். தலைவரின் தம்பிகளே, வாருங்கள் ஒரு கை பார்ப்போம், தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம், பிரம்ம ராட்சர்களே பொங்கி எழுவோம் நம் தலைவருக்காக" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருமே ஒரே நாளில் போராட்டக் களத்தில் குதிக்க முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

NEWS TODAY 28.01.2026