Friday, February 20, 2015

மார்ச் 7க்குள் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கணும்!மீண்டும் இன்னொரு வாய்ப்பு கிடைக்காது

சென்னை:வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழுவதும், 85 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு, அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். பதிவு செய்தோர், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பதிவை புதுப்பிக்க வேண்டும். பிற இடங்ளுக்கு குடி பெயர்தல், கவனக்குறைவு மற்றும் பல்வேறு காரணங்களால், 10 சதவீதம் பேர் புதுப்பிக்க தவறி விடுவதால், பதிவு மூப்பை இழந்து விடுகின்றனர்; வேலைவாய்ப்பும் பாதிக்கிறது.இது போன்றோர் பயன்பெறும் வகையில், '2011 முதல் 2013 வரை, பதிவை புதுப்பிக்கத் தவறியோர், மார்ச் 7ம் தேதி வரை, பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்' என, அரசு சிறப்பு சலுகை அறிவித்தது. அன்று முதல், ஏராளமானோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும், இணைய தளம் வாயிலாகவும் பதிவை புதுப்பித்து வருகின்றனர்.வேலைவாய்ப்பு இயக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அரசின் சிறப்புச் சலுகை, மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. இந்த வாய்ப்பை தவற விட்டால், மீண்டும் புதுப்பிக்கும் வாய்ப்பு கிடைக்காது. வேலைவாய்ப்புகளிலும் முன்னுரிமை பெற முடியாமல் போகும்' என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...