Sunday, February 15, 2015

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு



இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே ரசிகர்களின் இருதயத் துடிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...

உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து கடுமையாக அதிகரித்துள்ளது.

"‘உலகக்கோப்பையை வென்றால் போதும், இந்தியாவுடன் தோற்றால் கவலையில்லை." என்று பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதற்கு நேரெதிரான மன நிலையில் உலகக்கோப்பை வெல்வது முக்கியம்தான் ஆனால் பாகிஸ்தானுடன் தோற்றுவிடக்கூடாது என்பதே அதைவிட முக்கியம் என்பதாகவே ரசிகர்களின் மனநிலை இதுவரை இருந்து வந்துள்ளது இப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக ஐதராபாத்தில் ரசிகர்கள் சிலரைச் சந்தித்து இந்தியா-பாக் மோதல் பற்றி ரஞ்சனி ராஜேந்திரா சேகரித்த செய்திகள் வருமாறு:

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் டிரெய்னராக இருக்கும் டி.ராகுல் என்பவர் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இந்தியா வெற்றி பெறும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்திய பேட்ஸ்மென்களுக்கும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக இந்தப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய பேட்டிங் பலமாக உள்ளது.” என்றார்.

நரேஷ் வீரவல்லி என்ற பொறியியலாளர்: "இந்தப் போட்டியை நான் நிச்சயம் பார்க்காமல் விடப்போவதில்லை. நண்பர்களுடன் ஸ்போர்ட்ஸ் பார் அல்லது என் வீட்டில் ஒன்று சேர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்திருக்கிறோம்.” என்றார்.

குரிஷாப் சிங் என்ற உணவக உரிமையாளர் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர். இவர் கூறும்போது, “இந்தியா தோற்றுவிடும் என்று என் உளமனது கூறுகிறது. சமீபமாக நம் அணி சிறப்பாக விளையாடவில்லை. குறைந்த தரமான அணிகளிடம் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனாலும், எனக்கு இந்தப் போட்டி ஆர்வமூட்டுகிறது, இந்தியா எப்படியாவது வென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். மேலும் அன்று ஞாயிற்றுக் கிழமை வணிக ரீதியாக உணவகத்தில் அதிக கூட்டம் வரும் நாள். ஆனாலும், உணவகத்தில் உள்ள தொலைக்காட்சியில் எப்படியும் லைவ் காட்சிகளை பார்ப்பேன் என்றே கருதுகிறேன்.” என்றார்.

இந்தப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வர்ணனையாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமிதாபின் குரல் நிச்சயம் அந்த ஆட்டத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...