Friday, February 20, 2015

சமுதாயத்தை பயமுறுத்தும் பூதம் என சர்க்கரை நோயை மருத்துவர்கள் பூதாகரமாக்குவதாக சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது.

சமுதாயத்தை பயமுறுத்தும் பூதம் என சர்க்கரை நோயை மருத்துவர்கள் பூதாகரமாக்குவதாக சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் உடல் உழைப்பு மிகுந்தவர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் வராமல் இருந்த நீரிழிவு, இப்போது நம்மில் அரிசியை பிரதானமாக உண்ணும் மக்கள், எந்த உணவாக இருந்தாலும் அளவு தாண்டி உண்பவர்கள் மற்றும் ஸ்ட்ரெஸ் உள்ளவர்களுக்கும் பருமனாக இருப்பவர் களுக்கும் என உலகம் முழுவதுமே தாக்குவதாக அறியப்படுகிறது. 20 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கே வரும் டைப் 1 நீரிழிவானது, அமெரிக்காவிலே கடந்த பத்தாண்டுகளில் 23% அதிகரித்து உள்ளதாகவும், இந்தியாவில் இப்போது இருப்பதைவிட இரு மடங்கு அதிகரித்து 2025ல் 7 கோடி மக்களுக்குப் பரவும் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

தொற்றுநோய்களாலும் புற்றுநோய் களாலும் மாண்டு கொண்டிருந்த மனிதகுலம் இப்போது நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் நோய், இவற்றால் வரும் மாரடைப்பு, வாதம் என 40லிருந்து 80 வயது வரை வாழும் வாழ்க்கை யையே பயமுறுத்தி ஆட்டம் காண வைத்திருக் கிறது. 40 - 50 வயதுகளில் இறந்து கொண்டு இருந்த இந்தியர்களை, மருத்துவ அறிவியல் வளர்ச்சியானது இன்று 80 வயது வரை சராசரியாக வாழ வைத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், மக்கள் அனைவருக்கும் மருந்துச் சுமையோ, மருத்துவச் செலவோ இல்லாத வயோதிகத்தை அளிக்கவே நவீன மருத்துவம் விரும்புகிறது.

இளம் வயதினருக்கு - 20 வயதுக்குக் கீழே இன்சுலின் உடலில் சுரக்காததால் பாரம்பரியத்தால் வருபவர்களுக்கு Type I DM என்றும், இன்சுலின் சுரந்து, திடீரென இன்சுலின் சுரப்பது பற்றாமல் அல்லது சுரக்கும் இன்சுலின் வேலை செய்யாமல், நடுத்தர வயதினருக்கு வருவதை ஜிஹ்ஜீமீ மிமி ஞிவி என்றும், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பமாக இருக்கும் போது மட்டும் வரும் கர்ப்ப கால சர்க்கரை (Gestational Diabetes) என மூன்றாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. இதில் முதலாவதும் (Type I DM) மூன்றாவதும் (Gestational Diabetes) முழுமையாக இன்சுலினால் மட்டுமே குணப்படுத்தப்படுகிறது.

சர்க்கரை நோய் என்று வந்த பின்பு இனிப்பு, கிழங்கு, பழங்களைத் தவிர்த்து அரிசி பதார்த்தங்களைக் குறைத்து, தினசரி உடற்பயிற்சியை தவமாக செய்து, மாதாமாதம் ரத்தப் பரிசோதனை செய்து மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உண்டு வந்தால் சுகாதாரமான, தரமான வாழ்க்கைக்கு
உத்தர வாதம் உண்டு.

சர்க்கரை நோய் வருவதற்கு உடலில் சர்க்கரையை குறைக்கும் இன்சுலின் சுரக்காமல் (Insulin Deficiency) போவதும் சுரக்கும் இன்சுலின் குறைக்க வேண்டிய சர்க்கரையின் அளவைக் குறைக்காமல் (Insulin Resistance) போவதும் காரணம். அதனால், உடலில் இன்சுலின் சுரப்பதைத் தூண்டும் மருந்துகள் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide), சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலின் வேலை செய்வதைக் கூட்டும் மருந்துகள் (Insulin Sensitizers Metformin, Pioglitazone), இன்சுலின் சுரப்பியை பாதுகாக்கும் மருந்துகள் (Acarbose, Miglitol, voglibose), இன்சுலின் ஊசிகள் (Insulin)...

இவை தவிர உடலில் சர்க்கரையை உறிஞ்சாமல் தடுக்கும் மருந்துகள் என பல்வேறு ஆராய்ச்சிகளின் விளைவாக புதுப் புது நீரிழிவு மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் அதிகரிக்கவே, இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்யும் ஒவ்வொரு கம்பெனியும் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சர்க்கரை நோயின் ஒவ்வொரு நிலைக்கும் மருந்து கண்டுபிடிக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகின்றன.

சர்க்கரை நோய் மருந்துகளில் மிக மலிவாக கிடைக்கும் (Sulfonylurea, Glimepiride, Glipizide, Gliclazide, Glibenclamide) மருந்துகளின் மிக முக்கிய பக்க விளைவு சர்க்கரையின் அளவை மிகக் குறைத்து (Hypoglycemia) விடுவதாகும். அதனால், இம்மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அளவாக அடிக்கடி உணவுடன், நேரத்துக்கு மருந்துகளை உட்கொள்ளுவது, மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு சரியான நேரத்தில் உட்கொள்ளுவது மற்றும் விரதம் இருப்பதையும் காலம் தள்ளி சாப்பிடுவதையும் தவிர்ப்பது, அதிக உணவையும் அதிக இடைவேளையையும் தவிர்ப்பது, அதிக உடற்பயிற்சி யைத் தவிர்ப்பது என நோயையும் அதன் மருந்துக்கான விளைவையும் தன் உடலின், உணவின் மாற்றங்களையும் புரிந்து நடந்து கொண்டால் பாதிப்பின்றி பத்திரமாக வாழலாம்.

சர்க்கரை நோய் மருந்துகளில் அடுத்து பரவலாக உபயோகப்படுத்தப்படுபவை இன்சுலின் வேலை செய்வதைக் கூட்டும் (Insulin Sensitizers Metformin, Pioglitazone) மருந்துகள். இவற்றுக்குச் சர்க்கரை அளவை உடனடியாகக் குறைக்கும் பக்கவிளைவு கிடையாது. Metformin மருந்துகள் எல்லா சர்க்கரை நோய் மருந்துகளுடன் சேர்த்து தரப்படுகின்றன. எடை கூடாது. இன்சுலின் ஊசி போட வேண்டிய அளவுக்கு நோயைத் தள்ளாது. Pioglitazone மருந்துகள் சர்க்கரையின் அளவை நன்றாகக் குறைக்கும் சக்தி உடையவை. ஒரு சிலருக்கு எடை கூடலாம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதய, சிறுநீரக நோயாளிகளுக்கு தர மாட்டார்கள்.

உணவில் உள்ள சர்க்கரையின் அளவை உறிஞ்சும் சக்தியைக் குறைக்கும் (Insulin Sparer) மருந்துகள் சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த கொடையாகும். Acarbose, Miglitol, Voglibose மருந்துகள் எல்லாச் சர்க்கரை நோய் மருந்துகளுடனும் தரப்படுகின்றன. இன்சுலின் ஊசி ஜிஹ்ஜீமீ மி மற்றும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியாத Type II நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தரப்படுகிறது. வேலை செய்யும் நேரம், கால அளவு, சர்க்கரையை குறைக்கும் தன்மையைப் பொறுத்து பல்வேறு வகை இன்சுலின் ஊசிகள் வந்து கொண்டே இருக்கின்றன. உடலிலேயே ஊசியைப் பொருத்தி தேவைக்கு ஏற்ப வெளியிடும் கம்ப்யூட்டர் ஊசிகளும் உள்ளன. பருமனைக் கூட்டும் இன்சுலின் ஊசிகளிலிருந்து, எடையை பாதிக்காத ஊசிகள் வரை விஞ்ஞானத்தின் வளர்ச்சி எல்லையே இல்லாதது.

சர்க்கரை நோயாளிகளின் உறவினர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஹைப்போ கிளைசிமியா என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 60mgக்குக் கீழே செல்லும்போது ஏற்படும் நிலை. நீரிழிவு உள்ளவர்களுக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாத ஜுரம், வாந்தி, பேதி என்ற நிலையிலும் மருத்துவர் அறிவுறுத்தலுக்கு அதிகமாகவோ, வயதானவர்கள் தெரியாமல் மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதோ, உணவு குறைவாக உட்கொண்டு, உடற்பயிற்சியை அதிகப் படுத்தும் போதோ, திருமணம் மற்றும் குடும்ப விழாக்களில் ஆர்வமாக மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டு உணவை மறக்கும் போதோ ஏற்படலாம்.

ஹைப்போ கிளைசிமியாவின் அறிகுறிகளாக உடல் நடுக்கம், வாந்தி, குமட்டல், படபடப்பு, மனப்பதற்றம், பசி மற்றும் மயக்கமாகி, உடல் வலிப்புடன் உளறுவதாக மாறலாம். இதில் எந்த அறிகுறி இருந்தாலும், இன்சுலின் எடுப்பவராக இருந்தாலும், காரணமின்றி அரை மயக்க நிலையில் இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் கரைசலோ, சர்க்கரைக் கரைசலோ, இனிப்புகளோ தொட்டு தொட்டு வைத்து மருத்துவரை அணுகும் வரை மருந்தாக தர வேண்டும். சர்க்கரை நோய் மருந்துகளுக்கு இருக்கும் இன்னொரு முக்கியமான பக்க விளைவு உடல் பருமனைக் கூட்டுவதாகும். இது நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது நடைபெறும்.

ஒருவர் ஒழுங்காக மருந்து உட்கொண்டு உணவு, மருந்து, நடைப்பயிற்சி என்று எல்லாம் செய்தும் மாதா மாதம் ரத்தப் பரிசோதனை செய்யாவிட்டால் ஒருசில மாதங்களிலேயே சர்க்கரை கூடி உடல் மெலியக் காணப்படுவார்கள். சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். பார்வை மங்கலாகும். விரல் நுனி, கை, கால் இழுப்பதுடன் மரத்துப் போகும் உணர்வும் ஏற்படலாம். அதிக அளவு சர்க்கரை உடலில், ரத்தத்தில் இருக்குமானால் நரம்புகளில் பாதிப்பு (Diabetic Peripheral Neuritis) ஏற்பட்டு கால்களில் மரத்துப்போதல், வலி, புண் ஏற்படலாம். சர்க்கரை நோயைப் பற்றி தெளிவாக அறிந்து மருத்துவர் அறிவுரையின் பேரில் நடந்து கொள்ளுபவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடற் பயிற்சி என வாழ்க்கை நோய் பற்றிய தெளிவு வந்துவிடுவதால் மற்ற நோய்கள் வராமல் வாழ் நாட்களை நீட்டித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...