Wednesday, March 4, 2015

MUHS recommends 26 new colleges in Maharashtra

NASHIK: The Maharashtra University of Health Sciences (MUHS) has recommended a list of 26 colleges that have applied to open undergraduate courses during the academic year 2015-16. The proposals of five colleges have been rejected for not filling the necessary criteria.

However, the university administration claims the colleges will only be able to start from the next academic year (2016 -17) as procedures and permission from the state and central council would take at least another year.

There has been only one nursing college which has been able to seek permission from the state and central government. If all the recommended colleges get the nod, it would create at least 1,300 additional seats.

Registrar of the university, Kashinath Garkal, said that applications for opening colleges or starting a new course are supposed to be made by the institutions by October 31, after the notification is issued. "The colleges have to comply with the norms mentioned in the prospective plan according to the different parameters mentioned in them. The colleges are considered according to the population nearby and infrastructural aspects which are considered and recommended to the state government once the university is satisfied," he said.

Garkal said that the institution also has to get permission from the central council and state government which have independent heads for different categories. "The proposal again comes to MUHS for final consent. Officials recheck the facilities and infrastructure that was mentioned during the first application. An affiliation committee is set up to check the facts and the academic council approves it. It is only after this that the college can start functioning," he added.

He said the process is lengthy it would be another year before any of these colleges are be able to start the courses.

"So far, a nursing college, the Anand Charitable Trust, Anand Hospital, from Vaijapur, has been able to seek permission from state government and central council. The process of giving the final consent will begin," he said.

Five applications have been received for medical colleges, one for a dental college, two each for Ayurveda, Bachelor of Paramedical Technology (BPMT) and homeopathy colleges, six for physiotherapy and eight for nursing.

At present there are 35 medical colleges, 28 dental, 62 Ayurveda, 6 Unani, 45 homeopathy, and 155 colleges of allied health sciences, which amounts to 331 institutes across the state.

Ayush doctors may get nod to do abortions

NEW DELHI: Here's something ayurveda gurus like Charak and Susrutha may not have imagined. Modern ayurvedacharayas, homoeopaths and other Ayush doctors may soon be allowed to conduct non-invasive abortions.

The health ministry has worked out changes to the Medical Termination of Pregnancy (MTP) Amendment Bill. The revised bill proposes to allow Ayush doctors to conduct non-invasive procedures on women seeking to terminate pregnancy. The draft bill will soon be sent to the Cabinet.

"We have made revisions to the earlier draft and proposed that Ayush doctors who are registered healthcare specialists be allowed to carry out non-invasive procedure, which would mean prescribing medicines etc," a senior health ministry official told TOI.
Another key amendment seeks to increase the period for abortion to 24 weeks from the present 20 weeks.

The government's proposal, originally formulated taking a cue from a study conducted by Population Council, is aimed at increasing access to safe abortion by expanding the number of healthcare providers.

Estimates show around 7 million abortions are conducted in India every year and over 50% of them are said to be illegal.

Initially, the government had decided to allow midwives and Ayush doctors to do even invasive procedures for abortion, but dropped it following mounting objections from allopathic practitioners, particularly Indian Medical Association (IMA) and Federation of Obstetric and Gynaecological Societies of India (FOGSI).

IMA, a pan India voluntary organization with a membership of 2.5 lakh allopathic practitioners, said even the latest move can put patients at risk as well as allow unethical practices and sex selective abortions.

BANGALORE CHEAPEST, SINGAPORE COSTLIEST CITY IN WORLD


பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக்கிழமை (மார்ச் 5) தொடங்குகிறது. மொத்தம் 8.43 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தத் தேர்வு மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.

இதில் முதல் 10 நிமிஷங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிஷங்கள் விடைத்தாள் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் வழங்கப்படும். 10.15 முதல் 1.15 வரை தேர்வு நடைபெறும்.

மாணவர்கள் 3 மணி நேரம் எந்தவித சிரமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 3,000-க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதும் உதவியாளர்களைக் கேட்டுள்ளனர். அரசாணையின்படி, தகுதியுள்ள அனைவருக்கும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே பெரும்பாலும் தேர்வு உதவியாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். எனவே, உதவியாளர்களை வழங்குவதில் எந்தவித சிரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்வு மையங்களுக்குத் தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை தனித்தேர்வர்களாக 42,693 பேர் எழுத உள்ளனர்.

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்: தேர்வுப் பணிகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

10 தேர்வறைகளுக்கு ஒருவர் என்ற வீதத்தில் 4,500-க்கும் மேற்பட்டோர் தேர்வு மையங்களைக் கண்காணிக்க உள்ளனர். அதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களுக்குரிய மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மாணவிகள் அதிகம்: பிளஸ் 2 தேர்வை 3 லட்சத்து 90,753 மாணவர்களும், 4 லட்சத்து 52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் அதிகமாக உள்ளது. இந்தத் தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர் எழுதுகின்றனர்.

கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள், பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன.

விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்...: சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில் 53 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

புதுச்சேரியில்...: புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம் ரூ.30க்கு அனுமதி திட்டம் துவக்கம்

வேலூர் : சிறையில் கைதிகள் தொலைபேசியில் பேச மாதம், 30 ரூபாய்க்கு அனுமதி கொடுக்கும் திட்டம் துவங்கியது.

வேலூர் மத்திய சிறையில், மொபைல் ஃபோனை முற்றிலும் ஒழிக்க சிறைத்துறை நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது. இதனால், சிறையில் பொது தொலைபேசியை, சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பணம் செலுத்தி, கைதிகள் பேசிக் கொள்ளலாம்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் உள்ள, மொபைல் ஃபோன் கலாச்சாரத்தை ஒழிக்க, பொது தொலைபேசி திட்டம், நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. சிறையில், ஆறு இடங்களில், பொது தொலைபேசி உள்ளது. மாதம், 30 ரூபாய்க்கு இதில் பேசிக் கொள்ளலாம். இந்த ஃபோனில் பேச விரும்பும் கைதிகள், கன்ட்ரோல் ரூமில் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.அதில், அவர்களுக்கு, மூன்று ஃபோன்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படும். அதில், ஒரு வக்கீல், இரண்டு உறவினர்களை சேர்க்கலாம். அவர்களுடைய எண்களை குறிப்பிட்டு, கைதி வழங்குவார்.அவர்களுடைய கைரேகை பதிவு செய்யப்படும். இதற்காக ஆரம்பத்தில், 80 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 50 ரூபாய் டிபாஸிட்டாக வரவு வைக்கப்படும். மீதமுள்ள, 30 ரூபாய்க்கு ஃபோனில் பேசிக் கொள்ளலாம்.

மாதத்திற்கு, மூன்று முறை அரை மணி நேரம் மட்டும் இதற்கு அனுமதி வழங்கப்படும். அவர்கள் தொலைபேசி இருக்கும் இடத்திற்கு சென்று, அங்குள்ள ரேகை வைக்கும் இடத்தில் கை ரேகை பதிவு செய்து, பின்னர் தொலைபேசிக்கு மேலே உள்ள டிஸ்பிளேயில் அவர்கள் கொடுத்த, மூன்று ஃபோன் எண்கள் வெளியாகும்.அதில் அவர்கள், யாருடன் பேச விரும்புகின்றார்களோ, அந்த எண்ணை தேர்வு செய்தால், தானாகவே ஃபோன் டயல் ஆகும். அவர்கள், யாருடன் பேசுகிறார்கள் என்ற விவரம், எங்களுக்கு தெரிய வரும்.இந்த சேவை, கைதிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று ஒரே நாளில், 102 கைதிகள், தொலைபேசியில் பேசினர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tuesday, March 3, 2015

பலவிதமாக பயன்படும் பாதம்- ஆங்கிலம் அறிவோமே 47

Return to frontpage
ஒரு வாசகர் ‘contemporary என்றால் என்ன அர்த்தம்?’ என்று கேட்கிறார். சம காலத்தில் வாழ்ந்த அல்லது வாழ்கிற என்பதை இந்த வார்த்தையால் குறிப்பிடுவோம். ஜவஹர்லால் நேருவும் மகாத்மா காந்தியும் contemporaries. ஜவஹர்லால் நேருவும் ராகுல் காந்தியும் contemporaries அல்ல.

Contemporary என்பதற்கு நவீன, சமீபத்திய என்றும் அர்த்தம் உண்டு. This is a contemporary artwork.

ஆக contemporary என்பதற்கு இணையான வார்த்தைகளாக co-existent, modern, recent, concurrent ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

பலவித பயன்பாடு

Foot என்றால் பாதம் மட்டுமல்ல. 12 அங்குலங்கள் மட்டுமல்ல. ஆங்கிலத்தில் பலவிதங்களில் பயன்படுகிறது இந்த வார்த்தை.

Put your foot down என்றால் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது எனும்போது அதை நடக்கவிடாமல் உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துவது என்று பொருள். She wanted to marry Girish but her father put his foot down.

Getting caught on the wrong foot என்றால் எதிர்பாராமல் ஒன்று நடைபெறு வதால் ஏற்படும் வியப்பைக் குறிக்கிறது.

Get off on the wrong foot என்றால் ஒரு சூழலையோ, உறவையோ தவறாகத் தொடங்குவது என்ற அர்த்தம். Every evening I return home, we seem to get off on the wrong foot. We fight.

Put your best foot forward என்றால் கடும் உழைப்பை அளித்து வெற்றி பெற முயல்வதைக் குறிக்கிறது.

My foot என்பது திட்டு வார்த்தை. “நான் எது சொன்னாலும் நீங்க கேட்பீங்களே’’ என்று யாராவது கூறும்போது நீங்கள் “My foot’’ என்று கூறினால் “அதுக்கு வேற ஆளப் பாருங்க’’ என்று உஷ்ணமான அர்த்தம்.

CONJUNCTIONS

“Conjuctions-ஆல் என்ன பயன்?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். கூடவே அவர் கருத்துக்கு ஆதரவாக ஒரு வாக்கியத்தையும் அளித்திருக்கிறார்.

“Murali took a bag. He went to bus stand.”இப்படி இரண்டு வாக்கியங்கள் அமைப்பதற்குப் பதிலாக Murali took a bag and went to bus stand என்பதில் என்ன பெரிய வசதி ? என்கிறார்.

NOUNகளைத் தவிர்ப்பதற்காக PRONOUN என்பது போல் இங்கு PRONOUN-ஐயும் தவிர்க்க CONJUNCTION உதவுகிறதே!

FANBOYS

முதலில் CONJUNCTION என்றால் என்ன என்று பார்ப்போம். CONJUNCTIONS என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் இதை விளங்கிக் கொள்வது மேலும் எளிதாக இருக்கும்.

AND, BUT, THAT, WHERE, NOR, BECAUSE போன்றவை CONJUNCTIONS.

முக்கியமான CONJUNCTIONS- ஐ நினைவுகொள்ள FANBOYS என்ற வார்த்தையை நினைவில் கொள்ளலாம்.

அதாவது for, and, nor, but, or, yet, so போன்ற CONJUNCTIONS-ன் முதல் எழுத்துகளை இணைத்தால் FANBOYS.

CONJUNCTIONS என்பவை வாக்கியங்களை இணைக்கும் வார்த்தைகள். சில சமயம் இரண்டு வார்த்தைகளை இணைப்பதாகவும் இருக்கும்.

வாசகர் குறிப்பிட்ட Murali took a bag and went to bus stand என்பதில் and எனும் CONJUNCTION இரண்டு வாக்கியங்களை இணைக்கிறது.

Rama and Lakshmana are brothers என்பதில் உள்ள and இரண்டு வார்த்தைகளை மட்டுமே இணைக்கிறது. Five and five make ten என்பதிலும்தான்.

சில conjunctions இணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

Either or. அதாவது இரண்டில் ஒன்று. Give me either coffee or tea. Anything is OK.

Neither nor அதாவது இரண்டுமே வேண்டாம். I want neither coffee nor tea. I don’t feel like having anything.

Both - and அதாவது இரண்டுமே. Give me both biscuits and fruits. I am very hungry.

Not only But also, அதுமட்டுமல்ல, இதுவும். I want my son to be not only educated but also disciplined.

Whether or அதுவோ, இதுவோ. I don’t care whether you are happy or not.

இப்படி ஜோடியாகப் பயன்படுத்தப்படும் conjunctionsஐ, correlatives என்பார்கள்.

HABIT - CUSTOM

Habit என்பது தனி நபர் தொடர்பானது. Custom என்பது சமூகம் அல்லது நாடு தொடர்பானது. எனவே Getting up at 6.00 a.m. is my custom என்று சொல்லக் கூடாது. அது Habit தான். Drinking coffee is an Indian custom என்று சொல்லலாம்.

Habit என்பது சமீபக் காலத்தில்கூட உருவாகியிருக்கலாம். ஆனால் Custom என்பது தொன்று தொட்டு வருவதாக இருக்க வேண்டும். நீதிபதிகள்கூடத் தீர்ப்பளிக்கும்போது சட்டத்தோடு Custom என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்வதுண்டு.

It is customary என்றால் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒன்று என்று பொருள். Customer என்பதற்குக்கூட இந்த அடிப்படை உண்டு. Customer என்றால் வாடிக்கையாளர் அதாவது தொடர்ந்து நம்மிடம் தொடர்பு கொண்டிருப்பவர்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

ஆதார் இலவச விண்ணப்ப படிவம் ரூ.50-க்கு விற்பனை: சேலத்தில் நூதன மோசடி

சேலம் மாவட்டத்தில் அரசின் இலவச ஆதார் விண்ணப்பத்தின் நகலை, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 34 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். மத்திய, மாநில அரசின் பல்வேறு சலுகை, நிதி உதவி, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை விளங்கி வருகிறது. ஆதார் அட்டை வழங்குவதற்காக பள்ளிகளில் முகாம் அமைத்து வழங்கும் பணி நடந்தது. 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆதார் அட்டை பெற்ற நிலையில், மீதியுள்ளவர்கள் ஆதார் அட்டை பெறவில்லை.

இந்நிலையில், ஆதார் அட்டை உள்ளவர்கள் மட்டுமே காஸ் சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் என்று மத்திய அரசு திடீரென அறிவிப்பு வெளியிட்டது. பின், நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஆதார் அட்டை காஸ் சிலிண்டர் மானியம் பெற தேவையில்லை என அறிவித்தது. இருப்பினும், பல காஸ் சிலிண்டர் நிறுவனங்கள் ஆதார் அட்டையை நுகர்வோர்களிடம் கேட்டு வற்புறுத்தி வருகின்றன.

மேலும், அரசின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஆதார் அட்டை பிரதானமாக உள்ளதால், பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை பெற மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் 11 தாலுக்கா அலுவலகம், நான்கு நகராட்சி அலுவலகம், மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என மொத்தம் 20 இடங்களில் ஆதார் அடையாள அட்டை புகைப் படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஆதார் அடையாள அட்டை எடுத்தவர்களின் குடும்பத்தில் விடுபட்டவர்களுக்கும், கடந்த 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கும், வார்டு விட்டு வார்டு, தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடந்து வருகிறது.

புதியதாக ஆதார் அடையாள அட்டை வேண்டுவோருக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கும் புதியதாக விண்ணப்ப படிவம் இலவசமாக அளிக்கிறது. தற்போது, அரசின் இலவச விண்ணப்ப படிவங்கள் குறைந்த அளவே வந்துள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் கூடுதல் விண்ணப்பம் வந்த பின்னரே, புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுப்பவர்களுக்கான பணி தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

குறைந்தளவு ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்ப படிவம் வந்துள்ள நிலையில், அவற்றை நகல் எடுத்து மக்களை ஏமாற்றி ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்கின்றனர். அரசு இலவசமாக அளிக்கக் கூடிய ஆதார் அடையாள அட்டைக்கான விண்ணப்பப் படிவத்தை மட்டுமே ஆதார் புகைப்பட மையங்களில் எடுத்துக் கொள்கின்றனர். விண்ணப்பத்தை நகலை எடுத்துக் கொண்டு வருபவர்களை திரும்ப அனுப்பி விடுகின்றனர்.

சேலம் அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஆதார் விண்ணப்ப படிவத்தின் நகல் கன ஜோராக விற்பனை நடக்கிறது. அந்த பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடைகளிலும், சிலரும் விண்ணப்ப படிவ நகலை, மக்களிடையே ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.

ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் மையம் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதையும் புதியதாக ஆதார் அடையாள அட்டை எடுக்க வேண்டியவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்ற அரசின் விழிப்புணர்வு விளக்கத்தை மக்களிடம் தெளிவாக எடுத்து கூறதாததாலே, இதுபோன்ற மோசடி கும்பல் நூதன முறையில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். எனவே, ஆதார் விண்ணப்ப நகலை விற்பவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கவும் வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 29.01.2026