Thursday, March 19, 2015

NAAC upholds 5-yr term for VC


LUCKNOW: In a meeting with governor Ram Naik, representatives from National Assessment and Accreditation Council (NAAC) stressed need for increasing term of vice-chancellors in state university. The NAAC team batted for a five-year term of office for VCs against the current three year period.

The NAAC team is in the city to hold an inspection of the B R Ambedkar University. The team members cited shortage of teaching faculty in the higher education sector to reason their arguments besides quoting University Grants Commission recommendations in this regard.

In response, Governor Ram Naik also acknowledged the idea and recalled that the demand had surfaced in a meeting of vice-chancellors held in January. He also assured to examine the idea in detail and act in the interest of educational institutions.

After judges, IPS officer tries to change DOB to extend service

CHENNAI: Age-correction by judges and top government officers to extend their service beyond the original retirement date seems to have blossomed into an art in Tamil Nadu.

After TOI last week published reports, based on documents in its possession, showing how two serving district judges are about to become judges of Madras high court on the basis of 'rectified' dates of birth, another similar case of a senior IPS officer who is on the verge of retirement has come to light.
The 1956-born IPS officer and additional director-general of police (state traffic planning cell), S Rajendran, has obtained a 'rectified' certificate from a tahsildar, and has been trying to incorporate it in his SSLC book (school leaving certificate), so that he would get an additional service period of three years. His 'new' date of birth (DOB) is January 15, 1959.

MCI orders faculty surveillance to rein in doctors

HYDERABAD: It would be no longer easy for teaching staff in medical colleges to take up lucrative private practice on the city outskirts by leaving the campus before the stipulated 4 pm deadline.

With many medical teaching staffers in both Andhra Pradesh and Telangana known to leave by noon for their private clinics, the Medical Council of India has now made it mandatory for all medical colleges to switch over to Radio Frequency Identification (RFID) system.RFID is a fool-proof system under which the regulator of medical education seeks to create a database of all teaching staff by integrating their Aadhaar cards, photographs and fingerprints. "There would be sensors to track the movement of faculty members of all medical colleges. Each of them would have a high-end computer system installed and connected to a central server stationed at MCI headquarters," said Dr K Ramesh Reddy , MCI member.

Dr Ramesh Reddy , a member of MCI sub-committee on RFID system, said that the new surveillance system on faculty members is mandatory for both private and government sector colleges.

Most importantly , it would be equally difficult for private medical colleges to resort to the dubious practice of recruiting ghost faculty for a day at the time of annual Medical Council of India (MCI) inspection, a common phenomenon witnessed across majority of 33 private medical colleges including 15 in Telangana.

"The new surveillance system would create havoc in our functioning if it is implemented as due to shortage of qualified faculty members, we are forced to hire ghost faculty from outside. Their services remain only on paper," said a dean of a private medical college, on conditions of anonymity .

It is estimated that private medical colleges in the two states are faced with 60% faculty shortage for their postgraduate, specialty and super-specialty seats, but they continue to escape MCI's radar due to poor monitoring.However, the scene in government medical colleges is said to be comparatively better.

Speaking to TOI, a senior office bearer of state medical council said that private medical colleges find the 1:1 (one professor for one student) norm fixed by MCI for postgraduate and specialty course seats difficult, compelling them to hire the services of ghost faculty , who actually exist but never teach.

Even in government medical colleges, it is pointed out that they too often resort to hoodwinking MCI by largescale transfers of teachers from one government medical college to another just before inspection, only to be repatriated to their parent institution after inspection.

Interestingly , in its notification on RIFD system addressed to all deans principals of medical colleges and released on Tuesday , MCI's deputy secretary Ashok K Harit acknowledged that a previous attempt to implement the faculty surveillance system did not work out.

சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்

ஒருகாலத்தில் செல்வசெழிப்புக்கு எடுத்துக்காட்டாக சிட்டுக் குருவிகளைத்தான் சொல்வார்கள். எங்கு சிட்டுக்குருவிகள் அதிகமாக இருக்கிறதோ, அங்கு விவசாயம் செழித்தோங்குகிறது என்பார்கள். பொதுவாக காகமும், சிட்டுக்குருவியும் மனிதர்கள் வாழும் பகுதிகளில்தான் அதிகம் இருக்கும். மக்களை சார்ந்தே இதன் வாழ்க்கையும் இருக்கும். சிட்டுக்குருவிகள் அடர்ந்த காடுகளிலோ, மலைகளிலோ, மனித நடமாட்டம் இல்லாத இடங்களிலோ பெரும்பாலும் காணப்படுவதில்லை. வீடுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிலும் குறிப்பாக, உணவு தானியங்கள் சிதறிக்கிடக்கும் இடங்களில்தான் அதிகமாக வசிக்கும். மனிதர்களோடு பழகாவிட்டாலும், மனித நடமாட்டம் இருக்கும் இடத்தில்தான் அதிகமாக காணப்படும். இந்த செல்லக்குருவிகள் பயிர்களில் உள்ள கதிர்களை கொத்துவது கிடையாது. வீணாக கிடக்கும் உணவு தானியங்கள், சின்னஞ்சிறு பூச்சிகளைத்தான் கொத்தி தின்னும். மென்மையான இதயம் கொண்ட சிட்டுக்குருவிகள், வீடுகளில் ‘கீச் கீச்’ என்று கத்திக்கொண்டு, தத்தி தத்தி நடந்துவந்து கீழே கிடக்கும் உணவு தானியங்கள், சிதறிக்கிடக்கும் உணவுப்பொருட்களை கொத்தி கொத்தி உண்ணும் அழகை காண கண்கோடி வேண்டும் என்பார்கள். அவ்வப்போது வீடுகளில் சிந்திக்கிடக்கும் தண்ணீரையும், பாத்திரங்களில் உள்ள தண்ணீரையும் போய் குடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீர் இல்லையென்றால், சிட்டுக்குருவி இல்லை. மைனா, லவ் பேர்ட்ஸ், கிளி, கோழி போல வீடுகளில் கூண்டுகளில் அடைத்து வளர்க்க முடியாது என்றாலும், தானாகவே வீடுகளில் உயரமான இடங்களில் வைக்கோல், சிறு சிறு குச்சிகள், கந்தல் துணிகளை வைத்து கூடு கட்டி குடியிருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக்குருவி இனம் அழிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், நவீன வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடுகட்ட எந்தவித வசதியும் இல்லை. அவைகளுக்கான உணவுப்பொருட்கள் வீடுகளில் சிந்திக் கிடப்பதுமில்லை, யாரும் போடுவதும் இல்லை. தண்ணீரும் கிடைப்பதில்லை. மேலும், இந்த சிட்டுக்குருவிகள் மின்சார விசிறியில் சிக்கியும் உயிரிழந்துவிடுகிறது. செல்போன் டவரில் இருந்து வெளியாகும் காந்த கதிர்களை சிட்டுக் குருவிகளின் மென்மையான இதயம் தாங்கமுடியாமல் நின்றுவிடுகிறது. எல்லாவற்றையும் விட பெரிய கொடுமை என்னவென்றால், செக்ஸ் பலத்துக்கு ‘சிட்டுக்குருவி லேகியம்’ என்று இந்த சிறு பறவைகளை கொன்று தயாரிக்கிறார்கள். அழிந்துவரும் இந்த சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற ‘உலக சிட்டுக்குருவி தினம்’ நாளை 20–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த இனத்தை காப்பாற்றுவது மக்களிடம் தான் இருக்கிறது. ஓரிரண்டு சிட்டுக்குருவிகள் தென்படும்போது சிறிது தானியத்தை 2 நாட்கள் தொடர்ந்து போட்டால் வரத் தொடங்கிவிடும். பல இடங்களில் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை காப்பாற்ற பறவை ஆர்வலர்கள் சிறிய மண்பானை குடுவைகளை வீடுகளில் வைப்பதை எல்லோரும் பின்பற்றலாம். கோடைகாலத்தில் இதுபோன்ற பறவைகளுக்காக வீடுகளில் உயரமான இடத்தில் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்தால் சிட்டுக் குருவிகளுக்கு புத்துயிர் கொடுக்கமுடியும். கோடையில் மக்களுக்காக தண்ணீர் பந்தல்களை வைக்க அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் முற்படும் போது, வாயில்லா இந்த ஜீவன்களுக்கும் தண்ணீர் வழங்கினால், இந்த உயிர்களையும் காப்பாற்றலாமே!

சென்னையில் இந்திய கால்நடைகளை நேசிக்கும் இயக்கம், இதற்காக பொதுமக்களுக்கு ஆங்காங்கு வைக்க குவளைகள் வழங்கியது. இதுபோல, சென்னை மாநகராட்சி ஆணையராக ராஜேஷ் லக்கானி இருந்தபோது, மாநகராட்சி பூங்காக்களில் சிட்டுக்குருவி போன்ற பறவைகளுக்காக மரங்களில் அவைகளுடைய கூடுகள்போல வைத்து, உணவு தானியங்கள் போடுவதற்கும், தண்ணீர் வைப்பதற்கும் வசதி செய்ய முயற்சி எடுத்தார். அவர் மாற்றப்பட்டபோது, அந்த முயற்சியும் நின்றுபோனது. அவரை பின்பற்றி, சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள், செயல் அதிகாரிகள் பூங்காக்களில் இந்த வசதிகளை செய்துகொடுத்தால், பொதுமக்களும் ஆர்வத்தோடு பங்கேற்பார்கள். ‘சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவோம்’, செல்ல பறவைகளுக்கு வாழ்வு கொடுப்போம்.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது; மாணவர் சேர்க்கை நடைபெறும் மத்திய அரசு அறிவிப்பு

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மூடப்படாது என்றும், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி விவகாரம்

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தொடர்ந்து நடத்தப்போவதில்லை என்று தொழிலாளர் காப்புறுதி திட்ட கழகம் (இ.எஸ்.ஐ. கார்ப்பரேசன்) கடந்த ஜனவரி மாதம் 5–ந் தேதி அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பல்வேறு கட்டங்களாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், மருத்துவ கல்லூரிகளை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்க இ.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி மாதம் 10–ந் தேதி சென்னை வந்த தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை மத்திய இணை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயாவிடம் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மனு கொடுத்தனர்.

தமிழக அரசு கடிதம்

இந்த பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 11–ந் தேதி கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், ‘‘இ.எஸ்.ஐ. நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வெளியேற்றவும், அங்கு மேலும் மாணவர் சேர்க்கை நடக்காமல் இருப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த கடினமான முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாணவர்களின் அதிர்ச்சியை போக்குவதற்காக சென்னை மற்றும் கோவையில் இயங்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதாக கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசின் நிபந்தனைகளை சம்பந்தப்பட்ட அமைச்சரை ஏற்க செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

மூடப்படாது

இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து இயங்குமா? என்றும், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன ஆகும்? என்பது குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகள் மூடப்படாது என்றும், மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய துணை மருத்துவ ஆணையர் டாக்டர் விவேக் ஹண்டா, சென்னை, பெங்களூரு, கொல்கத்தாவில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிகளின் முதல்வர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மாணவர் சேர்க்கை நடைபெறும்

இந்த கல்வி ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களின் நலன் தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள ஆணையை வரவேற்கிறோம். மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கல்லூரி தொடர்பான நிலைப்பாட்டை மீண்டும் பரிசீலனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த கல்வி ஆண்டு 2015–16–க்கான மாணவர் சேர்க்கைக்கான மத்திய மற்றும் மாநில அளவிலான ஒதுக்கீடுகள் தொடர்பான விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வானதி சீனிவாசன்

இந்த தகவலை சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் பா.ஜ.க. துணைத்தலைவர் வானதி சீனிவாசன் நேற்று தெரிவித்தார். இதையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆனந்தத்தில் துள்ளி குதித்தனர்.

இந்த நல்ல முடிவை எடுத்த மத்திய அரசுக்கும், மகிழ்ச்சியுடன் தெரிவித்த வானதி சீனிவாசனுக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

பிளஸ்–2 கணித பாட தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பம் அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம்

பிளஸ்–2 கணித தேர்வில் வினா ஏற்படுத்திய குழப்பத்துக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் விளக்கம் அளித்து உள்ளார்.

கணிதம்–விலங்கியல் தேர்வு

பிளஸ்–2 பொதுத்தேர்வு கடந்த 5–ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ–மாணவிகள் எழுதி வருகிறார்கள்.

பிளஸ்–2 தேர்வுகள் இம்மாதம் 31–ந் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றன.

எளிதாக இருந்தது

எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிரீத்திகா, பிரியங்கா ஆகியோர் கூறியதாவது:–

கணித தேர்வு வினாக்கள் மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் எளிமையாக இருந்தது.

தவறான வினா?

10 மதிப்பெண் பிரிவில் 58–வது வினாவில் கழித்தல் குறியீடு போடுவதற்கு பதிலாக கூட்டல் குறியீடு போடப்பட்டுள்ளது. புத்தகத்தில் இதே வினா கழித்தல் குறியீடுடன் உள்ளது.

வினாத்தாளை பார்த்ததும் 58–வது கேள்வி தவறாக அச்சிடப்பட்டுள்ளதோ என்று நினைக்க தோன்றியது. பிளஸ் போட்டு விடை அளிக்கலாமா? அல்லது மைனஸ் போட்டு விடை அளிக்கலாமா? என்று குழப்பமாக இருந்தது. சில மாணவர்கள் கேள்வியில் கேட்கப்பட்டபடி பிளஸ் போட்டு விடை அளித்துள்ளனர். சிலர் மைனஸ் போட்டு விடை அளித்துள்ளனர். எது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட குழப்பமான கேள்விகளுக்கு விடை அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து கணித ஆசிரியர் கூறும்போது, இந்த கேள்வி முழுக்க முழுக்க சரியானதுதான். கணிதத்தை மனப்பாடம் செய்து எழுதும் மாணவர்களுக்கு இந்த கேள்வி குழப்பமாக இருக்கலாம். ஆனால் புரிந்து படித்த மாணவர்களுக்கு இது மிக எளிதானதாகும் என்று தெரிவித்தார்.

தேர்வு துறை

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜனிடம் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்தால் முழு மதிப்பெண் அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பிளஸ்–2 கணித தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரியானதுதான். குறிப்பாக பிரச்சினை கிளப்பிய 58–வது கேள்வி குறித்து நாங்கள் பல கணித ஆசிரியர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள் அனைவரும் சரியானதுதான் என்று கூறுகிறார்கள். மைனஸ் போட்டும் கேள்வி கேட்கலாம், பிளஸ் போட்டும் கேள்வி கேட்கலாம். எனவே இந்த கேள்வி சரியானதுதான். கருணை அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்படும் கேள்வியே எழவில்லை.

இவ்வாறு கு.தேவராஜன் தெரிவித்தார்.

விலங்கியல்

நுங்கம்பாக்கத்தில் உள்ள கிரசென்ட் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கீர்த்திகா சந்திரசேகர், ஆப்ரின், சுமையா மற்றும் சபா ஆகியோர் விலங்கியல் தேர்வு குறித்து கூறியதாவது:–

விலங்கியல் தேர்வு வினாக்கள் எளிதாகத்தான் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்கள், 3 மதிப்பெண் வினாக்கள் ஆகியவை மிகவும் எளிதாக இருந்தது. விலங்கியல் வினாக்களை பொறுத்தமட்டில் திரும்ப, திரும்ப கேட்கப்பட்ட வினாக்கள் இல்லாமல் கடந்த ஆண்டுகளில் கேட்கப்படாத வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் உள்ள கேள்விகள் கேட்காமல் பெரும்பாலான வினாக்கள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. நாங்கள் 5 மதிப்பெண் வினாவாக எதிர்பார்த்த சில வினாக்கள் 10 மதிப்பெண் வினாக்களில் கேட்கப்பட்டிருந்தது. ஒட்டு மொத்தமாக வினாக்கள் எளிதாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தேவைதானா தடை?

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே குஜராத்தில் நடைமுறையில் இருக்கும் சட்டம்தான் இது. ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட சில பாரதிய ஜனதா கட்சி அரசாளும் மாநிலங்களும்கூட இதே கருத்தைத் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக, சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. இறங்கியிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் அரசைச் சாடுகின்றன.

நான்கு வயது நிரம்பாத ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டுவதை ஏற்கெனவே சட்டம் தடை செய்திருக்கிறது. கறவை மாடுகளைக் கொல்வதிலும் சில நிபந்தனைகளை வைத்திருக்கிறது. தற்போதைய சட்டத்தின்படி, மகாராஷ்டிரம், ஹரியாணாவில் மாட்டிறைச்சியை விற்றாலும், வைத்திருந்தாலும் குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனை என்பதுதான் எதிர்ப்பைக் கிளப்பி இருக்கிறது.

உலகிலேயே பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிக அளவு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு (சுமார் 20 லட்சம் டன்) இந்தியாதான். இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி 2011-இல் 1.9 பில்லியன் டாலரிலிருந்து 2013-இல் 3.2 பில்லியன் டாலராக அதிகரித்தது. இப்போது சுமார் 5 பில்லியன் டாலராகி இருக்கக்கூடும்.

இந்தியாவின் 48% தோல் ஏற்றுமதி தமிழ்நாடு மூலம் நடைபெறுகிறது. இதில் 30% தோல் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் தோல் தொழிற்கூடங்களில் பாதிப்பு கணிசமாக இருக்கும்.

மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வதன் நோக்கம் - பசுக்கள் கொல்லப்படுவதை முழுமையாகத் தடுப்பதற்காகத்தான். பசுவதை என்பது காந்தி காலத்திலிருந்தே மிகப்பெரும் விவாதமாக இருந்து வருகிறது. பசுவதை கூடாது என்பதை ஏற்றுக்கொண்ட மகாத்மா காந்தி, இந்திய சுதந்திரமா, பசுவதைத் தடுப்பா என்பதில் பின்னதுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு முதல்நாள் பசுவதைத் தடுப்பு மாநாடு நடத்தப்படுவதை வழக்கமாக்கி இருந்தார் காந்தியடிகள் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நமது அரசியல் சட்டத்தின் 48-ஆவது பிரிவான அரசுக்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறையில் பசுவதைத் தடுப்பு என்பதும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. பசுக்களும் விவசாயத்திற்கு பயன்படும் ஏனைய கால்நடைகளும் கொல்லப்படாமல் பாதுகாப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பசுவதைத் தடுப்பு இடம் பெற்றிருந்தது என்பது மட்டுமல்ல, நரேந்திர மோடி தனது தேர்தல் பிரசாரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பசுமைப் புரட்சிக்கும், வெண்மைப் புரட்சிக்கும் பதிலாக இறைச்சி ஏற்றுமதியை ஊக்குவித்து "சிவப்புப் புரட்சி' (பிங்க் ரெவல்யூஷன்) செய்து கொண்டிருக்கிறது என்று சாடியிருந்தார். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி பா.ஜ.க. பசுவதைத் தடை மற்றும் மாட்டிறைச்சி விற்பனைத் தடை மூலம் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது என்பதுதான் உண்மை. அந்தக் கருத்துடன் நாம் உடன்படாமலிருக்கலாம். ஆனால், மக்கள் மன்றத்தின் அங்கீகாரத்தை பா.ஜ.க. இந்தப் பிரச்னையில் பெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பல்வேறு நாடுகள் பல்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மிருகங்களின் வதைக்குத் தடை விதித்திருக்கின்றன. யூத மதத்துக்கு எதிரானது என்பதால் இஸ்ரேலில் குதிரை மாமிசம் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் கம்யூனிஸ நாடான கியூபாவில் பசுவதை தடை செய்யப்பட்டுள்ளது. எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏதோ இந்தியாவில் மட்டுமே மத நம்பிக்கையின் அடிப்படையில் பசுவதையும், மாட்டிறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டிருப்பதாகக் கூக்குரலிடுவது அர்த்தமற்றது.

மாமிசத்துக்கான நீர்த் தேவை மிக அதிகம். ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு செலவாகும் தண்ணீர் 15,415 லிட்டர். ஆட்டிறைச்சிக்கு 8,763, பன்றி இறைச்சிக்கு 5,988 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. தாவர உணவுகளுக்கான நீர்த் தேவை, ஒரு கிலோ பருப்பு உற்பத்திக்கு அதிகபட்சமாக 4,000 லிட்டர்தான். மற்ற காய்கறிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கிலோவுக்கு 800 லிட்டர் தண்ணீர் தேவை. நீர்த் தேவை குறித்த விழிப்புணர்வு மூலம் மக்களை சைவ உணவுக்கு மாற்றுவது இயலும். ஆனால், சட்டம் போட்டு மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த முடியாது. குறிப்பாக ஆடு, கோழியை விடுத்து, வெறும் மாட்டிறைச்சியை மட்டுமே தடை செய்வது பயனற்றது.

அடிமாடுகள் லாரிகளிலும், படகுகளிலும் மிக மோசமான முறையில் கொண்டு செல்லப்படுகின்றன. வலியில்லாமல் கொல்லும் முறை கையாளப்படுவதில்லை. நோய் இல்லா மாடுகளின் இறைச்சி என்று சான்று வழங்குவதில் பெரும் ஊழல், முறைகேடுகள் உள்ளன. இத்தனை இருந்தபோதிலும், மாட்டிறைச்சி நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

இந்நிலையில், இத்தனை பேரையும் பகைத்துக் கொண்டு இத்தகைய சட்டம் கொண்டு வருவது அவசியம்தானா என்பதை வாக்குவங்கியை மனதில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இப்போதைக்கு இல்லை என்றாலும், பிறகு நிச்சயமாக ஏற்படலாம். கொள்கைக்காக அரசியலும், ஆட்சி அதிகாரமுமா, இல்லை, ஆட்சியைப் பிடிப்பதற்காகக் கொள்கையா என்று பா.ஜ.க.வினர் திருப்பிக் கேட்டால் அதற்கு நம்மிடம் பதில் இல்லை.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...