Saturday, May 2, 2015

ஜி மெயிலுக்கு இரண்டடுக்குப் பாதுகாப்பு



பத்தாண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நண்பர்கள் ஜி மெயிலைத் தான் பயன்படுத்துகிறார்கள். அதன் வசதிகளை முழுமையாக அனுபவிக்கிறோமா? அவசரத்துக்கு நமக்கு உதவும் என்பதற்காக நம்மில் பலர் டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்ற பெரும்பாலான ஆவணங்களின் விவரங்களை மெயிலில் சேமித்து வைப்பதை வழக்கமாக்கிவைத்துள்ளனர். வங்கிகள் பலமுறை தொடர்ந்து எச்சரித்துவருகிறபோதும் சிலர் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டுகளைக்கூட மெயிலில் பாதுகாத்து வைத்திருக்கின்றனர்.

நமது மெயிலை யார் பார்க்கப் போகிறார்கள் நம்மிடம் தானே பாஸ்வேர்டு என நினைத்துக்கொள்கிறார்கள். இது அறியாமை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மெயில்களின் பாஸ்வேர்டுகள் கண்டறியப்பட்டுத் தனிநபர் தகவல்களைத் திருடுவது சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. இதைத் தடுக்க மின்னஞ்சல் நிறுவனங்களும் பல்வேறு வகையான பாதுகாப்பு உத்திகளை அறிமுகப்படுத்திவருகின்றன.

ஜி மெயிலைப் பொறுத்தவரை அதன் ‘டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ என்னும் வசதி பாதுகாப்புக்காக உள்ளது. ஆனால் அதை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த வசதியை மிகவும் சுலமாக நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் நமது ஜி மெயிலை ஹேக்கர்களிடமிருந்து எளிதாக நாம் பாதுகாத்துக்கொள்ளலாம்.

இதனால் என்ன நன்மை என்று கேட்டால் இந்த வசதியை ஏற்படுத்திக்கொண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் நீங்கள் ஜி மெயில் அக்கவுண்டில் லாக் இன் செய்யும்போது உங்கள் மொபைலுக்கு எண்களால் ஆன சங்கேதக் குறியீடு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டும்.

அதை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்கள் மெயிலைத் திறக்க முடியும். தவறான நபர்கள் உங்கள் மெயிலின் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்தால்கூட உங்கள் மொபைலுக்கு வரும் சங்கேதக் குறியீடு அவர்களுக்குத் தெரியாது என்பதால் மெயில் பாதுகாப்பாக இருக்கும்.

தினந்தோறும் நாம் பயன்படுத்தும் கணினியில் தினமும் சங்கேதக் குறியீடு கேட்குமோ எனப் பதற்றம் அடைய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட கணினியில் நீங்கள் ஒருமுறை சங்கேதக் குறியீட்டை உள்ளீடு செய்து, அதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி பணித்தால் போதும்.

மறுமுறை அதே கணினிக்கு சங்கேதக் குறியீடு தேவைப்படாது. ஆனால் புதிதாக நீங்கள் ஒரு கணினியில் மெயிலைத் திறக்க முயன்றால் அது சங்கேதக் குறியீடு கேட்கும். அதை உள்ளீடு செய்தால் மட்டுமே மெயில் திறக்கும். சரி ‘2 ஸ்டெப் வெரிஃபிகேஷன்’ வசதியை எப்படிப் பெறுவது?

ஜி மெயில் அக்கவுண்டை லாக் இன் செய்துகொள்ளுங்கள். இப்போது, மேலே தெரியும் பட்டையின் வலது மூலையில் வட்ட வடிவமாகத் தெரியும் உங்கள் புரொஃபைல் ஐகான் மீது மவுஸை நகர்த்திச் சொடுக்குங்கள்.

கீழே தென்படும் உங்கள் பெயர், மெயில் ஐடி ஆகியவற்றுக் கீழே அக்கவுண்ட் என்னும் சொற்கள் தெரியும். அதில் அக்கவுண்ட் என்னும் சொல்லின் மீது மவுஸை வைத்துச் சொடுக்குங்கள்.

பின்னர் தென்படும் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில் signing in என்னும் தலைப்பின் கீழே ‘2-Step Verification’ என்னும் சொற்கள் காணப்படும். அது ஆஃப் என்றிருக்கும். அதைச் சொடுக்கினால் தென்படும் பக்கத்தில் நீங்கள் பயன்படுத்தும் மொபைல் எண் கேட்கப்படும்.

மொபைல் எண்ணை உள்ளீடு செய்தால் கூகுளில் இருந்து மொபைல் எண்ணைச் சரிபார்ப்பதற்காகச் சங்கேதக் குறியீட்டை அனுப்புவார்கள். அதைக் கணினியில் உள்ளீடு செய்துவிட்டால் போதும். இந்த வசதி செயல்பட ஆரம்பித்துவிடும். மொபைல் போன் இல்லாதவர்கள் எண்களாலான சங்கேதச் சொற்களைப் பயன்படுத்தலாம் அதற்கும் வசதி உள்ளது.

மொத்தம் 10 சங்கேத எண்கள் தரப்படும். அவற்றைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் சங்கேத எண்களைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவோர் இந்த வசதியை இதுவரை பயன்படுத்தவில்லை என்றால் இப்போதே பயன்படுத்தத் தொடங்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: http://bit.ly/ZjTQPp

பாஸ்வேர்டு இல்லாமல் திறக்கும் வசதி; விண்டோஸ் 10-ல் அறிமுகமாகிறது

சியாட்டில்,

கம்ப்யூட்டர்கள், டேப்லட்டுகள், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களை லாக் இன் ஓப்பன் செய்வதற்கு நாம் தற்போது பரவலாக பாஸ்வேர்டு முறையை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், முதல்முறையாக பாஸ்வேர்டு இல்லாமலேயே கம்ப்யூட்டர்களுக்குள் நுழையும் வசதியை மைக்ரோசாப்ட் கொண்டு வருகிறது. விண்டோஸ் இயங்குதள வரிசையில் கடந்த ஓராண்டாக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருப்பது விண்டோஸ் 10. வழக்கமான விண்டோஸ் இண்டர்பேஸை முற்றிலுமாக மாற்றியிருப்பதாக கூறும் மைக்ரோசாப்ட் யூசர் பிரெண்ட்லியாக நிறைய ஆப்ஸ்களை பாதுகாப்பு உறுதியுடன் இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீனமாக்கியிருக்கிறது.

குறிப்பாக, வழக்கமான இண்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பதிலாக ஸபார்ட்டரான் எனும் புதிய பிரவுஸரை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்துகிறது. மேலும், பாஸ்வேர்டு இல்லாமல் கைரேகை, முகம் மற்றும் ஐரிஸ் ஐடென்டிபிகேஷன் வழியாக கம்ப்யூட்டரை திறக்கும் புதிய முறையும் அறிமுகமாகிறது. விண்டோஸ் ஹலோ என்ற இந்த புதிய வசதியில், நாம் எழுத்துக்களை பாஸ்வேர்டாக கொடுக்க வேண்டியதில்லை. மாறாக, நமது முகத்தையே அடையாளமாகக் கொண்டு ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரை திறக்கலாம். இது ஹேக்கர்களிடமிருந்து நமது கம்யூட்டர்களையும் பாதுகாக்கும். ஆனால், இந்த புதிய பாதுகாப்பு அம்சமானது இனிமேல் வெளிவர உள்ள லேட்டஸ்ட் கருவிகளில் மட்டுமே இயங்கும். குறிப்பாக, RealSense F200 sensor கொண்ட சிப்களில் மட்டுமே இது இயங்கும். இதுபோன்ற, நடைமுறை சிக்கல்கள் பல இருப்பினும் விண்டோஸ் 10-ல் வெளியாகும் இந்த வசதி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்

புதுடெல்லி,

அக்டோபர் 15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து கணக்கு

லோக்பால், லோக் அயுக்தா சட்டம், 2013–ன் கீழ் மத்திய அரசு ஊழியர்கள், தங்களது சொத்துகள், கடன்கள் பற்றிய கணக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த வகையில், 2014, 2015 ஆண்டுகளுக்கான சொத்துகள், கடன்கள் பற்றிய கணக்கு விவரங்களை மத்திய அரசு ஊழியர்கள் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த மாதம் 30–ந்தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டிய 2014–ம் ஆண்டுக்கான கணக்கையும், ஜூலை மாதம் 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய 2015–ம் ஆண்டுக்கான கணக்கையும், வரும் அக்டோபர் 15–ந்தேதி அன்றோ, அதற்கு முன்னதாகவோ மத்திய அரசு ஊழியர்கள் தாக்கல் செய்து விட வேண்டும்.

கடிதம்

இது மத்திய பணியாளர் நலன், பயிற்சிகள் துறை அமைச்சகம், மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு பணியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் இந்த கணக்குகளை தாக்கல் செய்ய வசதியாக இந்தக் கடிதம், மாநில அரசுகளின் தலைமைச்செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்கல் செய்யாவிட்டால்?

இந்த கணக்கில் மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்கள் கையில் உள்ள ரொக்க கையிருப்பு, வங்கி டெபாசிட்டுகள், பத்திரங்கள், கடன் பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதி ஆகியவற்றில் செய்துள்ள முதலீடுகள், காப்பீடு பாலிசிகள், வருங்கால வைப்பு நிதி, பெர்சனல் கடன்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும்.

லோக்பால் சட்டப்படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களது சொத்து கணக்கை தாக்கல் செய்ய தவறினால், அவை ஊழல் செய்து சேர்த்த சொத்துகளாக கருதப்படும் என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சிகள் துறை ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர் விடுமுறை

தற்போது பள்ளிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி படித்து வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கோடை விடு முறையை கொண்டாட சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

இதனிடையே மே 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொழிலா ளர் தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் இந்த விடுமுறையை கழிக்க சென்னை உள்ளிட்ட வெளியூரில் தங்கி பணியாற்றி வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். குறிப் பாக 3 நாட்கள் விடு முறையை கொண்டாட தென் மாவட்டங் களுக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதில் அதிகப்படியான வாகனங்கள் நேற்று காலை 6 மணி முதல் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. இதனால் வாகனங்களுக்கு விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் வரி வசூலிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சுங்கச்சாவடியில் இருந்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இந்த போக்குவரத்து நெரி சலை சரிசெய்ய சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் சென்னையில் இருந்து தென்மாவட்டங் களுக்கு செல்லக்கூடிய 6 வழிப் பாதையாக இருந்ததை கூடுதலாக 2 வழிகளை ஏற்படுத்தி 8 வழிப்பாதையாக திறந்து விட்டனர். இதன் மூலம் போக்குவரத்து ஓரளவு சீரானது. இருப்பினும் அதிகள வில் வாகனங்கள் வந்ததால் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அதன் பின்னரே படிப்படியாக போக்குவரத்து சீரானது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

நீதிபதிகளின் ஓய்வு வயது

அமெரிக்க நாட்டின் 4–வது ஜனாதிபதியாக 1809–ம் ஆண்டு முதல் 1817–ம் ஆண்டு வரை பணியாற்றி, நிர்வாகத்திறனாலும், உதிர்த்த பல அரும்பெரும் கருத்துகளாலும் இன்றளவும் உலகம் முழுவதும் நினைத்துக்கொண்டிருக்கும் தலைவர் ஜேம்ஸ் மேடிசன். அரசியல் சட்டத்தின் பொருளை நீதித்துறை போல பாராளுமன்றமும் உறுதிபடுத்தி வைத்துள்ளது என்று அன்று தெரிவித்தார்.


ஆக அரசியல் சட்டம்தான் ஜனநாயகத்தின் நான்கு தூண்களான சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம், பத்திரிகை ஆகிய 4 அமைப்புகளுக்கும் வழிகாட்டியாக விளங்கும் புனித நூலாகும். தன்னிச்சையாக செயல்படும் இந்த ஒவ்வொரு அமைப்பும், எவ்வாறு அடுத்த அமைப்பின் பணிகளில் தலையிட முடியாது என்பதை அரசியல் சட்டம் ஆணித்தரமாக தெரிவித்துள்ளது. அதை தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும், நீதிபதி டி.எஸ்.சிவஞானமும் அடங்கிய ஒரு பெஞ்சு தங்கள் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. 1962–ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதிகளின் பதவி காலத்தின் அதிகபட்ச வயது 62 என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு 65 ஆக வகுக்கப்பட்டது.


பொதுவாக உடல் உழைப்பை பயன்படுத்தி மேற்கொள்ளும் பணிகளுக்குத்தான் வயது முதிர்ந்த காலத்தில் ஓய்வு வழங்கப்படவேண்டும். ஏனெனில் வயது முதிர்ச்சியின் காரணமாக உடல் நிலை அந்த பணிகளுக்கு ஒத்துழைக்காது. ஆனால், கத்தியை தீட்டத்தீட்டத்தான் கூர்மை ஆகும், பட்டை தீட்டத்தீட்டத்தான் வைரம் ஒளிவிடும். அதுபோல அறிவாற்றலை பயன்படுத்தும் பணிகளுக்கு வயது ஆக ஆகத்தான் ஞானத்தின் ஆழமும் அதிகமாக இருக்கும் என்ற வகையில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தாலும் அவர்கள் ஆற்றலை தொடர்ந்து வேறுவகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து சமீபகாலமாக நிலவி வருகிறது. இதை மையமாக வைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வுகால வயதை உயர்த்த வேண்டும். இப்போதெல்லாம் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்துள்ளது என்ற கருத்தில் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகளின் ஓய்வுகால வயதுவரம்பை உயர்த்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. நமது நீதிபதிகள், இது தங்களுக்கு பயன் அளிக்கும் வழக்குத்தானே, இதை பரிசீலிக்க உத்தரவிடலாமே என்று நினைக்காமல், இதை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. பாராளுமன்றம்தான் விரிவாக விவாதித்து, நீதிபதிகளின் வயது வரம்பை உயர்த்தலாமா? என்பதை பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக நாங்கள் இதுகுறித்து ஏதாவது முடிவு அறிவித்தால், அது அரசியல் சட்டத்தை மீறியதாகும் என்றும் பாராளுமன்றத்தின் பணிகளில், நீதிமன்றம் தங்களுக்கு பயன் அளிக்கும் கருத்து என்றாலும், தலையிடாது என்பதை ஆழமாக பதித்து விட்டது.


அரசியல் சட்டத்தின் உட்கருத்தை சென்னை நீதிமன்றம் நன்றாக உறுதிப்படுத்திவிட்டது. நீதித்துறை பாராளுமன்ற பணிகளில் தலையிடுகிறது என்ற விமர்சனங்கள் சில நேரங்களில் வரும் இந்த காலகட்டத்தில் தங்கள் ஓய்வு வயது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது பாராளுமன்றம்தான் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியும், மற்ற நீதிபதிகளும் கூறிவிட்டனர். இது நிச்சயமாக பாராட்ட வேண்டிய ஒன்றாகும். நீதிபதிகளின் ஓய்வு காலத்தில் அவர்களின் ஆற்றலை, பல ஆலோசனைகளை அவர்களிடம் இருந்து பெறும் வகையிலும், பல்வேறு ஆணையங்களில் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் இன்னும் தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் ஓய்வுகால பயன்களையும் அதிகரிக்க வேண்டும்.

Friday, May 1, 2015

தினத்தந்தி – டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் வெற்றி நிச்சயம் வழி காட்டுதல் நிகழ்ச்சி சென்னையில் நாளை நடக்கிறது

சென்னை,

தினத்தந்தியும் டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் ‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி? என்பதை அவர்களே அறிந்துகொள்வதற்கு வசதியாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற சிறப்புமிக்க வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, ‘ தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனம் ஏற்கனவே 13 ஆண்டுகள் நடத்தி முடித்து விட்டது. இந்த ஆண்டு 14–வது ஆண்டாக தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.சி.எஸ்.கன்வென்ஷன் சென்டரில் நடத்தப்படுகிறது. தினத்தந்தி நிறுவனம், டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.

இலவசமாக பங்கேற்கலாம்

வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி ஏ.சி.எஸ்.மருத்துவக்கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவ–மாணவிகள் காலை 7 மணியில் இருந்தே தங்கள் பெயர்களை நேரில் பதிவு செய்து நிகழ்ச்சியில் இலவசமாக கலந்து கொள்ளலாம். மாணவர்களுடன் பெற்றோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ள கல்லூரி, கல்லூரியாக ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் வெற்றிநிச்சயம் புத்தகம் முற்றிலும் இலவசமாக தினத்தந்தி வழங்குகிறது. புத்தகத்தில் அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டு உள்ளது. இது மாணவ–மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்

ஐ.பி.எஸ்.அதிகாரி மு.ரவி

இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியை நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு காவல்துறை தலைவர் முனைவர் மு.ரவி தலைமையேற்று தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் என்ஜினீயர் ஏ.சி.எஸ்.அருண்குமார் முன்னிலை வகிக்கிறார். துணைத்தலைவர் (நிர்வாகம்) இராம.வாசகம் வரவேற்று பேசுகிறார். கல்விப்பணியில் தினத்தந்தி என்ற தலைப்பில் தினத்தந்தியின் தலைமைபொதுமேலாளர்(புரமோசன்ஸ் ) ஆர்.தனஞ்செயன் பேசுகிறார்.

இதையடுத்து பல்வேறு துறை வல்லுனர்கள், பல்வேறு துறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார்கள்.

பொறியியல் துறை பற்றி டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக டீன் பேராசிரியர் டாக்டர் சிரில்ராஜ் பேசுகிறார். அதே பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. மீர் முஸ்தபா உசேன் மருத்துவத்துறை பற்றி விளக்கம் அளிக்கிறார்.

சிவில் சர்வீசஸ் படிப்பு குறித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (நெல்லை கவிநேசன்) பேராசிரியர் டாக்டர் எஸ்.நாராயணராஜன் பேசுகிறார்.

சட்டத்துறை

சட்டத்துறை குறித்து சேலத்தை சேர்ந்த வக்கீல் பிஆர்.ஜெயராஜன் விளக்கம் அளிக்கிறார். பட்டய கணக்கியல் துறை குறித்து மதுரை சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் டி.தவமணி பேசுகிறார். கல்விப்பணியில் ஏ.சி.எஸ்.கல்வி நிறுவனங்கள் என்ற தலைப்பில் டாக்டர் எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ரமா வைத்தியநாதனும், அதே பல்கலைக்கழக துணைத்தலைவர்(கல்வி) டாக்டர் பி.டி.மனோகரன் கலை மற்றும் அறிவியல் குறித்தும் பேசுகிறார்கள்.

ஓட்டல் நிர்வாகத்துறை பற்றி புதுச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முன்னாள் முதல்வர் எஸ்.முத்தானந்தமும், விளையாட்டுத்துறை பற்றி தமிழ்நாடு உடல்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமியும் விளக்கம் அளிக்கிறார்கள்.

முடிவில் சென்னை தினத்தந்தியின் மேலாளர் டி.ராக்கப்பன் நன்றி கூறுகிறார்.நிகழ்ச்சியை புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார்.

இலவச பஸ் வசதி

‘வெற்றி நிச்சயம்’ நிகழ்ச்சிக்கு வரும் மாணவ–மாணவிகளுக்காக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் எங்கெல்லாம் இருந்து வரும் என்ற விவரம் வருமாறு:–

அயனாவரம் பஸ்நிலையம், முகப்பேர் பஸ்நிலையம், வடபழனி பஸ்நிலையம் எதிரில், கோயம்பேடு ரோகினிதியேட்டர் அருகே, பொன்னேரி பஸ்நிலையம், செங்குன்றம் பஸ்நிலையம் எதிரில், அம்பத்தூர் சிங்கப்பூர் ஷாப்பிங் மையம் அருகே, பெரம்பூர் ரெயில்நிலையம், மூலக்கடை சிக்னல் அருகே, திருவொற்றியூர் பஸ்நிலையம் மேடவாக்கம் பஸ்நிலையம், தாம்பரம் வசந்தபவன் ஓட்டல், வேளச்சேரி பஸ்நிலையம் எதிரில், கிண்டி சப்–வே அருகே உள்ள பெட்ரோல் பங்க், அடையாறு டெப்போ, பட்டினம்பாக்கம் பஸ்நிலையம், தியாகராயநகர் கிருஷ்ணவேணி தியேட்டர், வள்ளுவர் கோட்டம் சிக்னல், படப்பை பஸ்நிலையம், காஞ்சீபுரம் அபிராமி ஓட்டல், திருவள்ளூர் பஸ்நிலையம், ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், செங்கல்பட்டு பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து காலை 7.30 மணி முதல் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் புறப்படும்.

நிகழ்ச்சி முடிந்ததும் திரும்பி செல்ல இலவச பஸ்வசதி செய்யப்பட்டுள்ளது.

பஸ்களுக்காக மேலும் தொடர்பு கொள்ளவேண்டிய செல்போன் நம்பர்கள் 9176374333, 9952950282, 9841835609, 9445343658, 9003174679, 8122934384

Thursday, April 30, 2015

Age is no bar for a super-specialty degree

It’s not every year that a 71-year-old receives a degree for completing a super-specialty medical course. But on Thursday, at the Tamil Nadu Dr. MGR Medical University’s convocation, septuagenarian M.A. Bose will receive his degree for an M.Ch in neurosurgery.

For 35 years, Dr. Bose has practiced as a general surgeon and ENT specialist in Aruppukottai, just over 50 km from Madurai. He had done his MBBS and MS from Madurai Medical College and then completed a DLO and worked at Christian Medical College, Vellore and later in JIPMER, Puducherry before setting up his own 12-bed clinic in Aruppukottai.

Also a sports enthusiast, Dr. Bose was a middle-distance runner and a basketball player and had captained the team from Madurai as a student.

So why neurosurgery? “It was partly due to my competitive spirit. A lot of doctors junior to me were coming into practice with super-specialty degrees. And, I have always found neurosurgery an interesting field and have had an affinity for the subject. And so, even though it was late, I decided to do it,” said Dr. Bose.

In 2010, he joined the course at Madras Medical College. “The selection committee interviewed him and after finding that there was no age criteria for the course, decided to admit him. However, he did not receive the stipend that is given to other students as he was not eligible,” said Jhansi Charles, registrar of the university.

Staying with his son in Arumbakkam, Dr. Bose would travel 10 km every day for his course. At the end of 2013, his son passed away. “After this happened, I became very depressed. I could not concentrate at all for a year. It was only in my third attempt that I managed to pass the exam,” he said.

Dr. Bose completed the programme in 2014. His future plans? “I am happy with my practice. Once every few months perhaps, I will get a neurosurgery case. It will be interesting,” said this grandfather of eight.

71-year-old Dr. M.A. Bose is all set to receive his M.Ch in neurosurgery

NEWS TODAY 31.01.2026