Sunday, April 16, 2017

மூடு விழாவை நோக்கி நகர்கிறதா டாடாவின் 'நானோ' கார்?

பதிவு செய்த நாள்  16ஏப்  017 03:01




புதுடில்லி : டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பல்வேறு போராட்டங்களை வென்று, ஒரு வழியாக, 2009ல் தயாரித்து வெளியிட்ட, மலிவு விலை, 'நானோ' காரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த, 2016- - 17ம் நிதியாண்டில், நானோ கார் விற்பனை, 64 சதவீதம் சரிவடைந்து, 7,589 ஆக குறைந்துள்ளது. மார்ச் மாதம், வெறும், 174 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.கடந்த எட்டு ஆண்டுகளாக, நானோ கார் விற்பனையை அதிகரிக்க, டாடா மோட்டார்ஸ் பல்வேறு சலுகைகளையும், கவர்ச்சி கரமான பரிசு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது.இருந்த போதிலும், நானோ கார் விற்பனை உயராமல், ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது.

சாதாரண மக்களும், காரில் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், டாடா குழுமத்தின் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, ஒரு லட்சம் ரூபாய் விலையில், நானோ காரை அறிமுகப்படுத்தினார். அதன்பின், மாடல்களுக்கு ஏற்ப, கார் விலை உயர்த்தப்பட்டது.

எனினும், விற்பனை விலையை விட, கார் தயாரிப்பு செலவு அதிகமாக உள்ளதால், 6,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, 2016 அக்டோபரில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த, சைரஸ் மிஸ்திரி, இயக்குனர் குழுவுக்கு கடிதம் எழுதினார். நானோ கார் தயாரிப்பை நிறுத்தவும், அவர் யோசனை தெரிவித்தார்.

ஆனால், தன் கனவு திட்டமான நானோ கார் தயாரிப்பை நிறுத்த, ரத்தன் டாடா விரும்பவில்லை என, கூறப்படுகிறது.தற்போது, நானோ கார் விற்பனை மட்டுமின்றி, அதன் உதிரி பாகங்களுக்கான தேவையும் குறைந்து விட்டதாக, முகவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், நானோ கார் தயாரிப்பு நிறுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது குறித்து, டாடா மோட்டார்ஸ் எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகிறது.
மாஜி' மந்திரிகள் மீதான புகார்களை தோண்டும் வருமான வரித்துறை

பதிவு செய்த நாள்16ஏப்  2017   05:00




அ.தி.மு.க., அமைச்சர்களை கலங்கடித்து வரும் அதே நேரத்தில், அக்கட்சியின் முன்னாள்அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர்,பல்கலை துணைவேந்தர் போன்ற அதிகாரிகள், வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிவருகின்றனர்.கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டும், வருமான வரித்துறையினர் விசாரணைக்கு சென்று விடுவதில்லை.

ஓரிரு ஆண்டுகள் கூட காத்திருந்து, உரிய ஆவணங்கள் கிடைத்த பின் தான் சோதனை நடத்துவர். அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கரே உதாரணம்.கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவர் தொடர்பான ஆவணம் சிக்கியது. அதற்கு முன்பிருந்தே அவரையும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியையும், வருமான வரித்துறை கண்காணித்து வந்தது. ஆனாலும், விஜயபாஸ்கரின் வீட்டில், 7ம் தேதி தான் சோதனை நடத்தப்பட்டது.இதே பாணியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பல முன்னாள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது. இதற்காக, ஒரு தனி குழு இயங்கி வருகிறது.

இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. இதனால், தனிப்பட்ட முறையில்,அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலர், சொத்துக்களை குவித்துஉள்ளனர்.

அமைச்சர்கள் பற்றி ஓரளவிற்கு விபரம் திரட்டி இருக்கிறோம். அதே வேளையில், பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களும் சொத்துக்கள் குவித்திருப்பதை அறிவோம். அதன்படி, விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.தற்போது, சில முன்னாள் அமைச்சர்களை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அவர்கள் மீது எங்களுக்கும் சில புகார்கள் வந்துள்ளன. இவற்றை திரட்டி, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில், தனி குழு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

Saturday, April 15, 2017

சசிகலா விரும்பினால், அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன், இன்று காலை கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன், தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம், மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர், 'சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்'. மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலகியிருந்தது. 
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்த வருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் கூறினார்.
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

சகாயராஜ் மு




சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47.

சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். மன்னார்குடியில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர். அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மகாதேவன் மரணம் அடைந்த தகவல் உடனடியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. பரோலில் அவர் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டம் கொண்டுவந்தது அகிலேஷ்... பாராட்டு கிடைத்தது ஆதித்யநாத்துக்கு!

உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சமூக வலைதளங்கள் , மீடியாக்கள் புகழாரம் சூட்டிக் கொண்டாடின.
ஆனால் இந்த விதியை கொண்டு வந்தது அகிலேஷ் யாதவின் அரசு.  சில மணி நேரத்தில் உண்மை நிலவரம் தெரியவந்தது. முதலில் 'ஆதித்யநாத் அதிரடி' என செய்தி வெளியிட்ட ஆங்கில இணையதளங்கள் 'உத்தரபிரதேச அரசு,  தனியார் மருத்துவக் கல்லூரிககளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்துள்ளது' என தலைப்பை திருத்தி செய்தி வெளியிட்டன. 
கடந்த மார்ச் 10ம் தேதி அகிலேஷ் யாதவின் அறிவிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் National Eligibility-cum-Entrance Test (NEET) தேர்வின் கீழ் கொண்டு  வரப்பட்டுள்ளன. அதனால் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இனிமேல் உத்தரபிரதேச மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நாட்டிலேயே இந்த மாநிலத்தின்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  நாட்டின் மற்ற மாநிலங்களில் எஸ்.சி,. எஸ்.டி., பி.சி பிரிவினருக்கு ஒதுக்கீடு உள்ளது. 
அகிலேஷ் யாதவ் புகுத்திய விதியை ஆதித்யநாத் ரத்து செய்யாமல் அமல்படுத்தியுள்ளார். 

We had reported that the Uttar Pradesh government had ended caste-based reservations in private medical and dental colleges. The order originally issued on March 10 only reiterated the earlier policy which did not provide for quota in private colleges.

The only new thing in this order is bringing the private medical and dental colleges into the NEET system. The order was issued by the outgoing Akhilesh Yadav-led government but was now being implemented by the Yogi Adityanath-led BJP government.
The education department later clarified that the March 10 order merely reiterated the policy that private medical and dental colleges will come now come under the National Eligibility Cum Entrance Test, popularly known as NEET. Private colleges did not have any provision for reservation that government medical and dental colleges have.
"Reservation was never a part of the admission process in private sector medical and dental colleges as per the prevalent policy made in 2006. There has been no change in any policy whatsoever," director general medical education Dr VN Tripathi quoted as saying by the Times of India.
"Private medical and dental colleges have been brought under the umbrella of National Eligibility Cum Entrance Test for the first time. Seats in these colleges for post graduate courses are being filled through the NEET score," Tripathi told TOI.
Since taking over, the new government has launched several initiatives to improve the education system in UP and control cheating and corruption.

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி

ஜன. 14 முதல் ‘ரயில்ஒன்’ செயலியில் முன்பதிவில்லா பயணச்சீட்டுக்கு 3% தள்ளுபடி ரயில்வேயில் எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில்ஒன்...