சட்டம் கொண்டுவந்தது அகிலேஷ்... பாராட்டு கிடைத்தது ஆதித்யநாத்துக்கு!

ஆனால் இந்த விதியை கொண்டு வந்தது அகிலேஷ் யாதவின் அரசு. சில மணி நேரத்தில் உண்மை நிலவரம் தெரியவந்தது. முதலில் 'ஆதித்யநாத் அதிரடி' என செய்தி வெளியிட்ட ஆங்கில இணையதளங்கள் 'உத்தரபிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிககளில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்துள்ளது' என தலைப்பை திருத்தி செய்தி வெளியிட்டன.
கடந்த மார்ச் 10ம் தேதி அகிலேஷ் யாதவின் அறிவிப்பின்படி, உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் National Eligibility-cum-Entrance Test (NEET) தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே இனிமேல் உத்தரபிரதேச மருத்துக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நாட்டிலேயே இந்த மாநிலத்தின்தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற மாநிலங்களில் எஸ்.சி,. எஸ்.டி., பி.சி பிரிவினருக்கு ஒதுக்கீடு உள்ளது.
அகிலேஷ் யாதவ் புகுத்திய விதியை ஆதித்யநாத் ரத்து செய்யாமல் அமல்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment