Sunday, April 16, 2017

மாஜி' மந்திரிகள் மீதான புகார்களை தோண்டும் வருமான வரித்துறை

பதிவு செய்த நாள்16ஏப்  2017   05:00




அ.தி.மு.க., அமைச்சர்களை கலங்கடித்து வரும் அதே நேரத்தில், அக்கட்சியின் முன்னாள்அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில் முன்எப்போதும் இல்லாத வகையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர்,பல்கலை துணைவேந்தர் போன்ற அதிகாரிகள், வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகிவருகின்றனர்.கிடைத்த தகவல் அடிப்படையில் மட்டும், வருமான வரித்துறையினர் விசாரணைக்கு சென்று விடுவதில்லை.

ஓரிரு ஆண்டுகள் கூட காத்திருந்து, உரிய ஆவணங்கள் கிடைத்த பின் தான் சோதனை நடத்துவர். அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கரே உதாரணம்.கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவர் தொடர்பான ஆவணம் சிக்கியது. அதற்கு முன்பிருந்தே அவரையும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியையும், வருமான வரித்துறை கண்காணித்து வந்தது. ஆனாலும், விஜயபாஸ்கரின் வீட்டில், 7ம் தேதி தான் சோதனை நடத்தப்பட்டது.இதே பாணியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, பல முன்னாள் அமைச்சர்கள் பற்றிய விபரங்களையும், வருமான வரித்துறை தோண்ட துவங்கியுள்ளது. இதற்காக, ஒரு தனி குழு இயங்கி வருகிறது.

இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., தொடர்ந்து ஆட்சியை பிடித்துள்ளது. இதனால், தனிப்பட்ட முறையில்,அ.தி.மு.க., முக்கிய புள்ளிகள் பலர், சொத்துக்களை குவித்துஉள்ளனர்.

அமைச்சர்கள் பற்றி ஓரளவிற்கு விபரம் திரட்டி இருக்கிறோம். அதே வேளையில், பதவி பறிக்கப்பட்ட அமைச்சர்களும் சொத்துக்கள் குவித்திருப்பதை அறிவோம். அதன்படி, விஸ்வநாதன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.தற்போது, சில முன்னாள் அமைச்சர்களை பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அவர்கள் மீது எங்களுக்கும் சில புகார்கள் வந்துள்ளன. இவற்றை திரட்டி, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில், தனி குழு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...