Monday, May 1, 2017

அரசு மருத்துவர்களைத் தள்ளாட வைக்கும் நீட் தேர்வும் ஒதுக்கீடும்! 

SAKTHIVEL MURUGAN G

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு குறித்த சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. தமிழக மாணவர்களின் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 'நீட் தேர்வு' பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இதே வேளையில் 'முதுநிலை மாணவச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான உள்ஒதுக்கீடு இல்லை' என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் பத்து நாள்களுக்கும் மேலாகப் போராடிவருகிறார்கள்.



இவர்களின் போராட்டம் குறித்தும், முதுநிலை மருத்துவத்துக்கான நீட் தேர்வு குறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களிடம் பேசினோம்.

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் "இந்தக் கல்வியாண்டுக்கான முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே `நீட் தேர்வை' நடத்தியது மத்திய அரசு. இதை நடத்திய இந்திய மருத்துவ கவுன்சிலிங், சரியான வழிகாட்டுதலையும் விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கெனவே உள்ள ஒதுக்கீடுகளையும் கணக்கில்கொள்ளவில்லை. இதனால் முதுநிலை படிக்க விண்ணப்பித்த மாணவர்கள் `நீட் தேர்வில் அனைவருக்கும் ஒரே ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று தொடுத்த வழக்கில், தமிழக மருத்துவத் துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்ய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராடிவருகிறார்கள். இவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், உடனே இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டைப் (Service quota) பாதுகாத்திட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளாக வேலைசெய்யும் மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர கடந்த ஆண்டு வரை 50 சதவிகிதம் தனி இடஒதுக்கீடு (Service Quota) இருந்தது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 600-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பயன்பெற்றுவந்தனர். இவர்கள் முதுநிலை மருத்துவம் படிப்பதால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களின் சேவை அதிகரித்து, அரசுப் பொது மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகிறார்கள். தமிழகம் பல மாநிலங்களைவிட மருத்துவத் துறையிலும், மனிதவளக் குறியீட்டிலும் முன்னேறியிருப்பதற்கு இதுவும் மிக முக்கியக் காரணம்" என்கிறார் ரவீந்திரநாத்.

"கிராமம் மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு போனஸ் மதிப்பெண், மத்திய, மாநில அரசுக்கான 50 சதவிகித ஒதுக்கீடு, 25 சதவிகித உள்ஒதுக்கீடு எனப் பல சிக்கல்களுடன் இருக்கிறது முதுநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை. எம்.பி.பி.எஸ் படித்து முடித்தவுடன் அரசு வேலையில் சேராமல் இருப்பவர்கள், நீட் தேர்வின் மூலம் ஒதுக்கீடு இல்லாமல் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்புகிறார்கள். ஆனால், அரசு மருத்துவமனையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் குறிப்பிட்ட வருட அனுபவ போனஸ் மதிப்பெண்களுடன் மாநில ஒதுக்கீட்டில் உள்ள உள்ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை விரும்புகிறார்கள். இவர்கள் புதியதாகப் படித்து முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதுபவர்களுடன் தேர்வு எழுதும்போது பெரும் போட்டியைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. இதனால் இவர்களுக்கு இடம் கிடைக்காமல்போக வாய்ப்பு அதிகம். போனஸ் மதிப்பெண்களுடன் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்று அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு இது சோதனையான காலம்தான்'' என்கிறார் நீட் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ள இளம் மருத்துவர்.

மருத்துவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் 'முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விரிவான வழிகாட்டுதல் வரையறையை' இந்திய மருத்துவ கவுன்சில் மே முதல் வாரத்தில் நீதிமன்றத்துக்குத் தாக்கல்செய்ய வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்யவும் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



 மே முதல் வாரத்தில் இளநிலை (எம்.பி.பி.எஸ்) படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. அதே சமயத்தில் முதுநிலை படிப்புக்கான ஒதுக்கீடுகுறித்த நீதிமன்ற வழக்கு விசாரணையும் வர இருக்கிறது. இந்த விசாரணைக்குப் பின் வழங்கப்படும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மருத்துவத் துறையில் மிகுந்த முக்கியத்துவம் பெற இருக்கிறது.

சேலத்தில் விரைவில் விமான நிலையம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளளார்.

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக சிலர் தமிழக அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர். செம்மலை அமைச்சராக இருந்த போது சேலம் மாவட்டத்திற்கு என்ன கொண்டு வந்தார். மேட்டூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள அடிப்படை  பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன. எடப்பாடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சுற்றிலும் ரிங் ரோடு அமைக்கப்படும்' என்றார்.
#HBDBelovedThalaAJITH ஹேப்பி பர்த்டே அஜித்குமார்!
ராகுல் சிவகுரு




இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடும் 'தல' அஜித் குமாருக்கு, தமிழ் சினிமாவில் இது வெள்ளிவிழா ஆண்டு! தனது ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கும் அஜித் குமாருக்கு அனிருத், பிரேம்ஜி, விக்ரம் பிரபு, தனுஷ், ராகுல்தேவ், சிவகார்த்திகேயன், லட்சுமி மேனன், 'சிறுத்தை' சிவா, டி. இமான் போன்ற பல திரைத்துறைப் பிரபலங்கள், ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்! கடந்த 1993-ல், மாருதி ராவ் என்பவரது இயக்கத்தில் வெளியான 'பிரேம புஸ்தகம்' எனும் தெலுங்கு படத்தில், சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் திரை அறிமுகம் கண்டார் அஜித்குமார்; பின்னர் அதே ஆண்டில், செல்வாவின் இயக்கத்தில் வெளியான 'அமராவதி' தான், அஜித்தின் முதல் நேரடி தமிழ்ப்படம்!



வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா-அஜித் காம்போவில், ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில், கிழக்கு ஐரோப்பாவில் விரைவாக உருவாகி வரும் படம்தான் விவேகம். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அஜித்தின் 57-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஜித்குமாரின் பர்த்டே ஸ்பெஷல் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வெளியான விவேகம் படத்தின் இரண்டாவது போஸ்டர்தான், முன்னே நீங்கள் பார்த்தது! அதில் தனது தோள்பட்டையில், மரம் ஒன்றை தூக்கியபடி மரண மாஸ் லுக்கில் இருக்கிறார் அஜித்குமார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ம் தேதி, விவேகம் வெள்ளித்திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!
இந்தியாவில் 1.5 கோடி ஆக்டிவா விற்பனை: ஹோண்டா சாதனை! 

ராகுல் சிவகுரு







இந்தியாவில் கடந்த 2001-ம் ஆண்டில், ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்கூட்டர்தான் ஆக்டிவா; தற்போது இதன் விற்பனை அளவு 1.5 கோடியைத் தாண்டிவிட்டதுடன், இந்த எண்ணிக்கையை இந்தியாவில் எட்டிய முதல் ஸ்கூட்டரும் இதுதான்! கூடவே உலகில் அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் என்ற பெருமையை, ஹீரோவின் ஸ்ப்ளெண்டரிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறது ஆக்டிவா!





மாதத்துக்கு சராசரியாக 2 லட்சம் ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்றுத் தள்ளுகிறது ஹோண்டா. அதாவது ஸ்கூட்டர் செக்மென்ட்டில் 32 சதவிகித மார்க்கெட் ஷேர் என்பது கவனிக்கத்தக்கது! இது இந்தியாவில் ஸ்கூட்டர்கள் மீதான டிமாண்டையே பறைசாற்றுகிறது. மேலும் ஸ்ப்ளெண்டர், ஜூபிட்டர் போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, காலத்துக்கு ஏற்ப தனது ஸ்கூட்டரை அப்டேட் செய்து வந்ததாலேயே, மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. மெட்டல் பாடி, டியுப்லெஸ் டயர்கள், AHO, BS-IV 110சிசி HET இன்ஜின், மொபைல் சார்ஜிங் பாயின்ட், காம்பி பிரேக் சிஸ்டம் (CBS), மெயின்டனென்ஸ் ஃப்ரி பேட்டரி ஆகியவை, இந்த ஸ்கூட்டரின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் ஆகும்!

கொலை சதியிலிருந்து ஸ்ரீராமாநுஜர் உயிர்காத்த பெருமாளும் தாயாரும்! #SriRamanujaJayanti

ஶ்ரீராமாநுஜரை தெய்வப் பிறவி என்று நம்பிய பக்தர்கள் இருந்ததைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவரைக் கொன்று விடுவதற்குக் காத்திருந்த சிலர் செய்த சதியைப் பற்றித் தெரியுமா..? தெய்விக அவதாரமாக பூமியில் ஒருவர் பிறக்கப் போகிறார். அவர் சாதி, சமயம் பாராமல், மானிட ஒற்றுமையை வலியுறுத்துவார். அகிலமெங்கும் ஆன்மிகநெறியைப் பரப்புவார். அவரே ஆதிசேஷனின் மறு அவதாரமான   ஶ்ரீராமாநுஜர்’ என்று அவர் பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே நம்மாழ்வாரால் கூறப்பட்டது. அத்துடன் ராமாநுஜரின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்று அவர் பிறப்பதற்கு முன்னரே தனது சீடரான மதுரகவி ஆழ்வாருக்கு அளித்தார் நம்மாழ்வார்.
ஶ்ரீராமாநுஜர்
ஶ்ரீபெரும்புதூரில் ஆசூரி கேசவ சோமயாஜிக்கும் காந்திமதி அம்மையாருக்கும் பிள்ளையாக அவதரித்தார் ஶ்ரீராமாநுஜர். இவரது தாய் மாமா திருமலையில் பணிபுரிந்தவர் என்பதால், இவரை `திருமலை நம்பி’ என்று கூறுவர்.
ராமாநுஜரின் மிகப் பெரிய விசுவாசி’ என்றும், `ராமாநுஜரின் நிழல்’ என்றும் அவரின் சீடரான கோவிந்தனைக் கூறுவார்கள். ஒருநாள் கோவிந்தன் நந்தவனத்தில் இருந்த பாம்பின் வாயில் கையை விட்டு, பின்பு நீராடி தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்ததைக் கண்டறிந்தார் ராமாநுஜர். "கோவிந்தா , பாம்பின் வாயில் யாராவது கையைவிடுவார்களா? ஒருவேளை அது உன்னைக் கடித்திருந்தால் என்ன செய்வாய்?’’ என்று கடிந்துக்கொண்டார்... அதற்கு கோவிந்தனோ, "அந்தப் பாம்பின் நாக்கில் முள் குத்திவிட்டதால், வலியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தப் பாம்பின் நாக்கிலிருந்த முள்ளை அகற்றவே அவ்வாறு செய்தேன்’’ என்றார். இத்தகைய மனம் படைத்த கோவிந்தன்தான் பின்னாளில் ராமாநுஜரின் உயிரைக் காத்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய ஆசார அனுஷ்டானங்களைத் தீவிரமாகக் கடைப்பிடித்த ஸ்ரீராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன.இளவயதில் வேதாந்தக் கருத்துக்களைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு ராமாநுஜரும் கோவிந்தரும் குருகுலம் சென்றனர். அங்கிருந்த யாதவபிரகாஸரின் கருத்துகளைக் கேட்கக் கூட்டம் அலை அலையாக வரும். ராமாநுஜர் வருகைக்குப் பிறகு நடந்த கதையே வேறு. இயற்கைக்குப் புறம்பான கருத்துகளைக் கூறிவந்த யாதவபிரகாஸரின் கருத்துகளை எதிர்த்து, தம்முடைய கருத்துகளை எடுத்துக்கூறி வந்தார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத யாதவபிரகாஸர் ராமநுஜரைக் கொல்லச் சதி திட்டம் தீட்டினார்.
ஸ்ரீராமாநுஜர்
`காசிக்குச் செல்லும்போது, கங்கையில் ராமாநுஜரைத் தள்ளிவிடலாம்’ என்று தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார் யாதவபிரகாஸர். இது எப்படியோ கோவிந்தனுக்கு தெரிந்துவிட,  ராமாநுஜரிடம் இந்த விஷயத்தைக் கூறி, அந்தக் குழுவில் இருந்து தப்பி ஓடிவிடச் சொன்னார்.
ராமாநுஜரும் தப்பி ஓடி, வழி தெரியாமல் ஒரு காட்டில் நடு இரவில் மாட்டிக்கொண்டார். அப்போது காஞ்சி வரதராஜப் பெருமானும், பெருந்தேவி தாயாரும் வேடன் வேடுவச்சியாக வந்து காப்பாற்றி, காஞ்சியில் கொண்டுவந்து அவரைச் சேர்த்தார்கள். தக்க சமயத்தில் இந்த உதவியை கோவிந்தன் செய்யாவிட்டால், ராமாநுஜர் நமக்குக் கிடைத்திருப்பாரா? உலகமே கண்டிராத வகையில் 120 ஆண்டுகள் பூவுலகில் உடல்நலம் சிறிதளவும் குன்றாமல் வாழ்ந்தவர்.

ஸ்ரீராமாநுஜரின் ஜீவிய காலத்திலேயே அவரது விக்கிரகங்களும் சிலைகளும் சிஷ்யர்களால் தயாரிக்கப்பெற்று பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவற்றில் ஸ்ரீரங்கம்- 'தானான திருமேனி’, மேல்கோட்டை- 'தானுகந்த திருமேனி’, ஸ்ரீபெரும்புதூர் - 'தமர் உகந்த திருமேனி’ ஆகிய மூன்று விக்கிரகங்களையும் ஸ்ரீராமாநுஜரே தழுவி, தமது ஆசிகளோடு அளித்தார்.

MAY DAY


17,845 appear for TNTET

Tamil Nadu State Transport Corporation operated special buses to the centres

A total of 17,845 candidates, aspiring for graduate teachers in government schools, appeared for the Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) in the two districts on Sunday.
In Ramanathapuram district, 9,127 candidates appeared for the paper II eligibility test, conducted by the Teachers Recruitment Board. The tests were held in 12 centres amid tight vigil. A total of 308 candidates were absent.

The district administration, coordinating with the education department made arrangements for the examinations, held in the two education districts of Paramakudi and Ramanathapuram.
Candidates were allowed to enter the examination centres after thorough check up with the help of police personnel. Basic facilities such as drinking water and uninterrupted power supply were ensured at the centres.

Differently abled candidates were allotted centres in the ground floor with ramp facility and about 30 visually impaired candidates took the examinations with the help of scribes. The Tamil Nadu State Transport Corporation operated special buses to the centres for the benefit of the candidates.
Chief Educational Officer K. Jayakannu inspected the arrangements.

In Sivaganga district, 8,718 candidates appeared for the test in more than ten centres, while 325 candidates absented. Mr Selvaraj, joint director, Teachers recruitment board inspected the examination centres with CEO Senthivel Murugan.

NEWS TODAY 31.01.2026