Thursday, August 3, 2017

மானாமதுரை-சிவகங்கை ரோடு புதுப்பிக்க சர்வே பணி துவக்கம்

பதிவு செய்த நாள் 02 ஆக

2017
22:25

 மானாமதுரை மானாமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் அண்ணாத்துரை சிலையிலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரையும் ,சிப்காட்டிலிருந்து- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வரை ரோட்டில் குண்டும்,குழியுமாக இருப்பதினால் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும்,மேலும் ரோடு ஓரங்களில் மணல் குவியல் அள்ளப்படாமல் இருப்பதால் அந்த வழியாகச் சைக்கிள், டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்து வருவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் நேற்று நெடுஞ்சாலைத்துறையினர் காந்தி சிலை பகுதியில்
புதிதாகரோடு போடுவதற்காக சர்வே பணி மேற்கொண்டனர்.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது: இந்த ரோடு தற்போது    தான் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.இதனையடுத்து சேதமடைந்த ரோட்டை சீரமைக்க தற்போது சர்வே பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.
கோவளம் - திருப்போரூர் சிற்றுந்து வசதி அவசியம்


பதிவு செய்த நாள் 02 ஆக
2017
22:21

கோவளம் : கோவளம் - திருப்போரூருக்கு சிற்றுந்து போக்குவரத்தை துவக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில், கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.தாலுகா தலைமையிடமாக விளங்கும் திருப்போரூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள் உள்ளிட்டவற்றிக்கு, மேற்கண்ட பகுதிவாசிகள் வந்து செல்கின்றனர்.அதேபோல, பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள, திருப்போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதலை பண்ணை, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகு குழாம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.இவ்விரு பகுதிகளுக்கும் சென்று வருவதற்கு, இவ்விரு பகுதிவாசிகளுக்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லை. இதனால், ஆபத்தான முறையில், படிகளில் தொங்கியபடி, ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலை உள்ளது.இந்நிலையை போக்க, திருப்போரூர் - நெம்மேலி பாலத்தின் வழியாக, கோவளம் - திருப்போரூர் சிற்றுந்து வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வசதியை ஏற்படுத்தும் பட்சத்தில், கிராமவாசிகளும் பயன்பெறுவர். அரசுக்கும் நல்ல வருவாய் ஏற்படும்.சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பகுதியில் ஆய்வு செய்து, சிற்றுந்துகளை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

dinamalar
பல்லாவரத்தில் 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு

பதிவு செய்த நாள் 02 ஆக
2017
22:00

பல்லாவரம் : சென்னை, பல்லாவரம் நகராட்சியில் உள்ள, 42 வார்டுகளிலும், பொதுமக்கள், 100 சதவீதம் கழிப்பறையை பயன்படுத்துவதாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. திறந்தவெளி கழிப்பறையை தடுக்கும் வகையில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 1,689 தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.இதையடுத்து, முதல்கட்டமாக, 29 வார்டுகளில், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு உள்ளதாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. மற்ற, 13 வார்டுகளில், இதற்கான நடவடிக்கைகள்   கொள்ளப்பட்டன.மாணவர்களிடம், பள்ளி மற்றும் வீடுகளில் கழிப்பறையை தான் பயன்படுத்தி வருகிறோம் என, உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டன. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடமும், உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டன. இந்த கடிதங்களுக்கு, நகராட்சி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.இதையடுத்து, 42 வார்டுகளிலும், 100 சதவீதம் கழிப்பறை பயன்பாடு உள்ளதாக, அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.இது தொடர்பாக, பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால், commr.pallavapuram@tn.gov.in என்ற மின் அஞ்சல் மூலமாக, 15 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
டில்லியில் நெரிசல் பகுதியில் வாகனம் நிறுத்த ரூ.2,500 கட்டணம்

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:06



புதுடில்லி: புதுடில்லியில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில், 'அபராத' வாகன நிறுத்துமிடங்களை அமைக்க, டில்லி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சட்டவிரோத வாகன நிறுத்தங்களை கட்டுப்படுத்த, புதிய வாகன நிறுத்துமிட கொள்கையை டில்லி மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ளது.

வடக்கு டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள தெருக்களை தேர்ந்தெடுத்து, 'அபராத வாகன நிறுத்துமிடங்கள்' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பகுதிகளில், 200 அடி அகலமுள்ள சாலைகள், அபராத வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும். இந்த இடங்களில் வாகனம் நிறுத்துவோர் சாதாரண கட்டணத்தை விட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு தகுந்தபடி அபராதம் செலுத்துவது போல், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 - 500; ஆட்டோவுக்கு ரூ.300 -- 1,500; கார்களுக்கு ரூ.100 - 2,500; பஸ், வேன்களுக்கு ரூ.400 - 2,500 ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக, கமலா நகரில் ஆறு சாலைகள், மாடல் டவுன் - 2ல், நான்கு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar
தமிழகத்தில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு 
dinamalar

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
01:02



சென்னை : 'வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு, கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில், ஒரு வாரம் வெயில் வாட்டிய நிலையில், மூன்று நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில், அதிகபட்சமாக, 15 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நேற்று, சென்னை நகரில் பரவலாக மழை பெய்ததில், மாலை வரை, 1.5 செ.மீ., பதிவானது. மாலை, பல இடங்களில், லேசான மழை தொடர்ந்தது. இந்த மழை தொடரும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், ''வங்கக்கடலில், மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், வரும் மூன்று நாட்களுக்கு, லேசானது முதல் கனமான மழை பெய்யும். 4, 5ம் தேதிகளில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.

கேரளா: ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு


கேரளாவில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தலையாய பிரச்னையாய் இருப்பது மாதவிடாய். இதனை கருத்தில் கொண்டு பல தனியார் நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கதொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பள்ளி ஆசிரியைகளுக்கு இதனை அறிமுகப்படுத்தியுள்ளது கேரள தனியார் பள்ளி சங்கம் (All Kerala Self-Financing Schools Federation).இந்த சிறப்பு விடுப்பு நேற்றைய தினமான ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இதனால் 1200 பள்ளிகளில் உள்ள ஒரு லட்சத்திற்கு மேலான ஆசிரியைகள் பயன்பெறுவார்கள் என தெரிவித்த அணைத்து கேரள தனியார் பள்ளிகள்சங்க முதல்வர் ராமதாஸ், கேரள தனியார் பள்ளிகளில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவில் புதிதாய் தொடங்கப்பட்டுள்ள இந்த மாதவிடாய்கால விடுப்பு இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்திகள் 
 
ராமேசுவரம்–அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமேசுவரம்–அயோத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
 
ராமேசுவரத்தில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் காரைக்குடி, சிவகங்கை ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
காரைக்குடி,

பிரதமர் மோடி கடந்த 27–ந்தேதி ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழாவுக்கு வந்திருந்தார். அப்போது ராமேசுவரத்தில் இருந்து அயோத்தி வரையிலான புதிய எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை அயோத்தி சென்றடைகிறது. மறுமார்க்கமாக அயோத்தியில் இருந்து புதன்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை ராமேசுவரம் வந்தடைகிறது. பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ராமேசுவரம், மானாமதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை வழியாக அயோத்தி செல்கிறது. இந்த ரெயிலால் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவிற்கு சுற்றுலா, ஆன்மிகம் தொடர்பாக வருவோருக்கு பயனுள்ளதாக உள்ளது.

ஆனால் ராமேசுவரம்–அயோத்தி செல்லும் ரெயில் ராமேசுவரத்தில் புறப்பட்டு நேரடியாக மானாமதுரை வந்து, பின்னர் புதுக்கோட்டையில் நின்று செல்கிறது. இடையே முக்கிய நகரங்களாக உள்ள சிவகங்கை, காரைக்குடியில் நின்று செல்வதில்லை. சுற்றுலா நகராக உள்ள காரைக்குடியிலும், புராதன நகராக விளங்கும் சிவகங்கையிலும் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமி.திராவிடமணி கூறுகையில், ராமேசுவரம்–அயோத்தி ரெயிலால் வட இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களையும், தென் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலம், ஆன்மிக தலங்களையும் பயணிகள் எளிதில் பார்த்து பயனடையும் வகையில் இயக்கப்படுகிறது. ஆனால் மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள காரைக்குடி, சிவகங்கையில் இந்த ரெயில் நின்று செல்வதில்லை. இதனால் சுற்றுலா நகரான காரைக்குடி, புராதன நகரான சிவகங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் புதுக்கோட்டை அல்லது மானாமதுரையில் இறங்கி பின்னர் தான் வரமுடிகிறது. இதனை தவிர்க்கும் வகையிலும், உள்ளூர் பயணிகள் பயனடையும் வகையிலும் காரைக்குடி மற்றும் சிவகங்கையில் அயோத்தி–ராமேசுவரம் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

NEWS TODAY 25.01.2026