Saturday, August 19, 2017

ஓய்வூதியர்களே... உடனே வாங்க!

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:42

கோவை:அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கருவூலம், சார் கருவூலம் அல்லது வங்கிகளில் நேரில் ஆஜராகி, தாங்கள் உயிருடன் இருப்பதற்கான, 'லைப் சர்ட்டிபிகேட்' சமர்ப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலைக்குள், ஓய்வூதியர்கள் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, பங்கேற்காதவர்களின் ஓய்வூதியம் உடனடியாக நிறுத்தப்படும் என அறிவுறுத்தியுள்ளார், மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான, 2017-18ம்ஆண்டுக்கான நேர்காணல், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை நடந்தது.இதுவரை நேர்காணலுக்கு ஆஜராகாத, ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், உடனடியாக தாங்கள் சார்ந்துள்ள கருவூலத்துக்கு வந்து, தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ள வேண்டும். நேர்காணலுக்கு வராதவர்களின் ஓய்வூதியம், ஆகஸ்டு முதல் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டவருக்கு ரயில்களில் சிறப்பு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:08


கோவை;வெளிநாட்டினர், 'பாரின் டூரிஸ்ட் கோட்டா' எனும் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 'டிக்கெட்' முன்பதிவு செய்து இந்திய ரயில்களில் பயணிக்கலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:வெளிநாட்டினர் தங்களது அதிகாரப்பூர்வ 'பாஸ்போர்ட்' உடன் சிறப்பு இடஒதுக்கீட்டில், 365 நாட்கள் வரை முன்பதிவு செய்யலாம். 'பெர்த்', 1ஏ, 2ஏ மற்றும் 'எக்சிகியூட்டிவ் சேர்' உள்ளிட்ட வகுப்புகளில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.சர்வதேச மொபைல் எண் கொண்டு கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும்; 'டிக்கெட்' உறுதியானதற்கான எஸ்.எம்.எஸ்., அந்த எண்ணுக்கு வந்துவிடும். கட்டணத்தை சர்வதேச, 'டெபிட்', 'கிரெடிட்' கார்டுகள் மூலமும் செலுத்தலாம். டிக்கெட் ரத்துசெய்யும் பட்சத்தில், 50 சதவீத கட்டணம் மட்டுமே திரும்ப வழங்கப்படும்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.



மாற்று திறனாளிகளுக்கு புதிய சலுகை

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:57


புதுடில்லி: மத்திய பணியாளர் நலத்துறை, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு துறைகளில் பணியாற்றும், மாற்று திறனாளி பெண் ஊழியர்கள், தங்கள்   குழந்தைகளை பராமரிக்க, மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த, 1,500 ரூபாய், தற்போது, 3,000 ரூபாயாக, உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைக்கு இரண்டு வயதாகும் வரை, இந்த நிதியுதவி, வழங்கப்படும்.ஏழாவது, மத்திய சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மாற்று திறனாளி பெண் ஊழியர்களுக்கான, குழந்தை பராமரிப்பு தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ரூ.50 நோட்டு அறிமுகம்

பதிவு செய்த நாள்18ஆக
2017
23:43

மும்பை : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 'புளோரோசென்ட்' எனப்படும், ஒளிரக் கூடிய, நீல வண்ணத்துடன் கூடிய, புதிய, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. புதிய நோட்டின் பின்புறம், கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள கல்தேரின் படம் இடம்பெறும். அசோக சின்னம், நோட்டின் முன்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும். மஹாத்மா காந்தி படம், நடுவிலும், நோட்டின் வரிசை எண், ஏறுமுகமாக அதிகரிக்கும் வகையில், மேல் இடது பக்கத்திலும், கீழ் வலது பக்கத்திலும் இடம்பெறும். ஏற்கனவே உள்ள, பழைய, 50 ரூபாய் நோட்டுகளும் செல்லும்.


வீடு வீடாக அளந்து அபராதம் விதிக்கும் திட்டம் 'வேட்டை' ஆரம்பம்! மாநகராட்சிக்கு எதிராக மக்களிடம் கடும் எதிர்ப்பு!
பதிவு செய்த நாள்
ஆக 18,2017 23:49



அனுமதியற்ற கூடுதல் கட்டடங்களுக்கு, அபராதம் விதிக்கும் திட்டத்துக்கு மக்களிடம் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது.ஆண்டுக்கு ஆயிரத்து 72 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடும் கோவை மாநகராட்சிக்கு, எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்ற நிதி இல்லை. அதனால், தமிழ்நாடு நகர உள்கட்டமைப்பு நிதி சேவை குழுமம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனங்களிடம் கடன் பெறுவதற்கு, மாநகராட்சி முயற்சித்து வருகிறது. அவ்வாறு கடன் பெறுவதற்கு, திருப்பிச்செலுத்துவதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை, காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.

ஆனால், 2008லிருந்து, சொத்து வரி மாற்றப்படவில்லை. கவுன்சில் அல்லது அரசு அனுமதியின்றி சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண விகிதங்களை மாற்றி அமைக்க முடியாது. அதனால், அனைத்து கட்டடங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, மறுஅளவீடு செய்து, வரி விதிப்பை மாற்றியமைக்க, 182 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. கூடுதல் கட்டுமானம் இருந்தால், அதற்கான வரித்தொகையை, அபராதமாக, 13 அரையாண்டுக்கு செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கட்டடங்களை அளவீடு செய்ய வருவோர், வசூல் வேட்டை நடத்தவே, இத்தகைய திட்டம் பயனுள்ளதாக இருக்குமென்று அஞ்சுகின்றனர். வீடு கட்ட அனுமதி கோரும்போதும்கட்றாங்க...'கட்டிங்' வெட்றாங்க!
கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அனுமதியின்றி கட்டிடம் கட்டுவதால், நகர ஊரமைப்புத் துறைக்குச் செலுத்தும் 'கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம்' செலுத்துவதில்லை.முழுமையாக சொத்து வரியும் விதிக்கப்படுவதில்லை. இவர்களிடம் 'கட்டிங்' வாங்கிக் கொண்டு, பேருக்கு நோட்டீஸ் அனுப்பி, மாநகராட்சி மீது வழக்குப் போடுவதற்கே, அதிகாரிகளே 'ஐடியா' கொடுத்து விடுகின்றனர். இந்த வழக்குகளையும் முறையாக ப்படுவதில்லை.இத்தகைய வழக்கு செலவுக்கே, மாநகராட்சி பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. ஒரு வழக்கில் கூட, மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு பெறப்பட்டு, வரி வசூலித்ததாக தகவல் இல்லை.இதேபோல், ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'பல்க்' இணைப்பு என்ற பெயரில் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளது, மாநகராட்சி. முறையாக கட்டணம் வசூலிப்பதில்லை. இவற்றை சரி செய்தாலே, மக்களிடம் பணம் பறிக்கத்தேவையில்லை.-நமது நிருபர்-
அவசர சட்டம் என்ன ஆகும்:  அமைச்சர் விஜயபாஸ்கர் மழுப்பல்

'நீட் தேர்வு குறித்த பிரச்னையில், இனியும் அவசர சட்டத்திற்கு அவசியம் இருக்குமா' என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளிக்க மறுத்தார். இதனால், அந்த சட்டத் தை அமல் படுத்துவதில் அரசு பின்வாங்கலாம் என தெரிகிறது.




'நீட்' எனப்படும், மருத்துவ படிப்புக்கான, பொது நுழைவுத்தேர்வில், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க வழி செய்யும் சட்ட மசோதா வுக்கு, மத்திய அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இறுதிக்கட்ட சரிபார்ப்புக்கு பின், தமிழக அரசிடம் அளிக்கப்பட்டு, அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. மற்றபடி, அனைத்து பணிகளும் முடிந்து, தயார் நிலையில், அவரச சட்ட மசோதா, உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் நினைத்தால், ஒரு விநாடியில், அறிவிப்பை வெளியிட்டுவிட முடியும். ஆனாலும், இப்பிரச்னையில், தற்போதுள்ள நிலையே, அடுத்த வாரம், 22ம் தேதி வரை நீடிக்கும் என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறி, சமரச பார்முலாவை தரும்படி கேட்டுள்ளது. இதனால், அவசர சட்ட வரைவு


மசோதா, கிடப்பில் இருக்க, சமரச பார்முலாவை உருவாக்கும் பணிகளில், அரசு ஈடுபட்டுள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டில்லியில், நேற்று, நிருபர்களிடம், அவர் கூறியதாவது;

உச்ச நீதிமன்ற உத்தரவு, தமிழகத்துக்கு சாதக மானது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இப்பிரச்னை யில், தாமதம் ஏற்பட்டுவிட்டதாக நாங்கள் கருத வில்லை.அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள, அரசு இடங்களுக்கு மட்டுமே, நீட் தேர்வு விலக்கு.
அகில இந்திய ஒதுக்கீட்டில், 456 இடங்கள், ஏற்கனவே 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்காக உள்ளன. தனியார் கல்லூரி, நிகர்நிலை பல்கலைக் கழகம் ஆகியவற்றில், அவர்களுக்கு இடங்கள் உள்ளன.

இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ள கருத்துக்கள், எதிர்ப்பானவை அல்ல; அதனுடனும், தமிழக அரசு, தொடர்ந்து பேசி வருகிறது.மாணவர் சேர்க்கைக்கு, நிறைய நாட்கள் தேவை இருக்காது; ஐந்து நாட்கள் போதும். ஒரு வாரத்தில் அனைத்து பணிகளையும் முடித்துவிடலாம்.
உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கேட்டுள்ளபடி, நீட் தேர்வு எழுதியவர்கள் உள்பட எந்த தரப்பு மாணவர்களும், பாதிக்கப்படாத வகையில், ஒரு சமரச தீர்வை, தமிழக அரசு சமர்ப் பிக்கும். சமரச பார்முலாவை வடிவமைப்பது குறித்து, மருத்துவ கவுன்சில் உள்பட அனைத்து தரப்பினரிடமும், தமிழக அரசு உயர் அதிகாரிகள், ஆலோசனை செய்து வருகின்றனர். இவ்வாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், கூறினார்.

அப்போது, 'சமரச பார்முலாதான் முடிவு எனில், அவசரச் சட்டத்தின் கதி என்ன' என்று கேட்கப் பட்டது. அதற்கு, வெறும் புன்னகையை மட்டும் பதிலாக தந்து, அமைச்சர் நழுவினார். இதன் மூலம், இரண்டு விஷயங்கள் தெளிவாகின் றன. ஒன்று, 22ம் தேதி வரை, அவசர சட்டத் திற்கு வாய்ப்பே இல்லை. இரண்டு, சமரச பார்முலாப்படியே, இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை.இதனால், இவ்வளவு நாட்களாக பேசப்பட்டு வந்த, அவரச சட்டம் பிறப்பிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

டில்லி நிருபர்களுக்கு அழைப்பு: டில்லி ஊடகங் களுக்கு தகவல் தர வேண்டாமென்ற வாய் மொழி உத்தரவு, நேற்று, திடீரென மாறியது. டில்லி நிருபர்களும் அழைக்கப்பட்டனர். அமைச் சர் விஜயபாஸ்கர், தன் பேட்டியில், மத்திய அரசை வெகுவாக புகழ்ந்துகொண்டே இருந்தார். பிரதமரில் துவங்கி, ஒவ்வொரு மத்திய அமைச்சரின் பெயரையும் வரிசயைாக குறிப்பிட்டு, நன்றி தெரிவித்தார்.

நமது டில்லி நிருபர்
முதுநிலை மருத்துவம் படித்தும்  பயனில்லை: பரிதவிக்கும் டாக்டர்கள்

ஆகஸ்ட் 18,2017,21:40 IST


இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், பாடத் திற்கான அங்கீகாரம் காலவதியானதால், படிப்பை முடித்த டாக்டர்கள், மருத்துவ கவுன்சி லில் பதிவு செய்து, பணிக்கு செல்ல முடியா மல், பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.





மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ், சென்னை, கே.கே.நகர், இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இதில், 2011ல், 14 இடங்களுடன், எம்.டி., - எம்.எஸ்., என்ற, முதுநிலை மருத்துவ படிப்புகள் துவக்கப் பட் டன.இந்த படிப்புகளுக்கு, எம்.சி.ஐ.,என்ற, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி,2015ல்

முடிந் தது.போதிய கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்தாதது, போதிய பேராசிரியர்கள் நியமிக்கா ததை காரணம் காட்டி, முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கு, அங்கீகாரம் தர, எம்.சி.ஐ., மறுத்து விட்டது. இதனால், 2015ல் படிப்புகளில் சேர்ந்து, முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்களால், மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியவில்லை.

இதனால், எம்.பி.பி.எஸ்., படித்தவர்களாக மட்டுமே கருதப்படுகின்றனர்; அவர்களால், உயர் சிகிச்சை அளிக்க முடியவில்லை; படிப்புக்கேற்ற வேலைக் கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து, முதுநிலை படித்தடாக்டர்கள் கூறியதாவது:

இந்த கல்லுாரியில், முதுநிலை மருத்துவ படிப் பிற்கு உள்ள, 14 இடங்களில், ஐந்து இடங்களுக்கு, எம்.சி.ஐ., அங்கீகாரம் கொடுத்துள்ளது. பல்வேறு காரணங்களால், ஒன்பது இடங்களுக்கு அங்கீகாரம் தர மறுத்து விட்டது. இதனால், அந்த இடங்களில் சேர்ந்து படித்து, சான்றிதழ் பெற்றாலும், முறைப்படிபதிவு செய்ய முடியவில்லை; அதற்கான பலன்களை பெற முடியவில்லை.

எங்களுக்கு, உதவி கோரி, மருத்துவ கல்லுாரி முதல்வரை பல முறை சந்திக்க முயன்றும், அனுமதி மறுக்கப்படுகிறது. மத்திய தொழி லாளர் நல அமைச்சகம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 28.01.2026