Monday, September 18, 2017

’சுற்றுலா பயணிகள்கிட்ட திட்டு வாங்கிதான் எங்க பொழப்பே ஓடுது!’ - கலங்கும் ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள்

செ.விக்னேஷ்

விடுமுறை நாட்களில் சுற்றுலா திட்டமிடும் போது தவிர்க்க முடியாத சுற்றுலா தளமாக ஒகேனக்கல் திகழ்கிறது. மீன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இச்சுற்றுலாத் தளம் அமைந்துள்ளது.



பரிசலில் சென்று சுற்றி பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த பரிசல் ஓட்டும் தொழிலாளர்களின் நிலையோ மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. முதலில் இரண்டு ஷிப்ட் முறையில் இயங்கிய பரிசல் துறை, மாற்றப்பட்டு தற்போது ஒரே ஷிப்டாக இயங்குகிறது.




இந்த முறையில் பரிசல் ஓட்டுவது உங்களுக்கு சிரமம் இல்லையா என நாம் கேட்டபோது "இங்க மொத்தம் 400 பரிசல்கள் இருக்குங்க, ஆனால் ஓடுறதோ வெறும் 200 தான். மீதி இருக்குற பரிசல்கள் ஓட்ட முடிவதில்லை. லைப் ஜாக்கெட் இல்லாததே இதுக்கு காரணம். குறைந்த பட்சம் 900 லைப் ஜாக்கெட்டாவது வேணும். ஆனா எங்களுக்கு கொடுத்துள்ளதோ வெறும் 350 தான். இதனால சுற்றுலா பயணிகள் 1.30 மணி நேரத்துக்கு மேல காத்திருக்க வேண்டியிருக்கு. அந்த கோவத்த அவங்க எங்க மேலதான் காட்டுறாங்க. கடுமையா திட்டுராங்க. சுற்றுலா பயணிகள்கிட்ட திட்டு வாங்கிதான் எங்க பொழப்பே ஓடுது’ என்று குமுறுகிறார் ஒரு பரிசல் ஒட்டி.

அங்கு வேலை பார்க்கும் பெண் பணியாளரிடம் பேசினோம், ’ காலைல 7 மணிலருந்து ராத்திரி 7 மணி வரைக்கும் வேலை பாக்குறோம். ஒரு நாளும் எங்களுக்கு லீவு இல்லை. எங்களுக்கு சம்பளமா 233 ரூபா தரனும் ஆனா 203 ரூபா தா தராங்க’ என்றார்.

உங்களுடைய தேவை என்ன என வயது முதிர்ந்த பரிசல்ஓட்டியிடம் கேட்டபோது ’அதிகமா தண்ணி வந்தாலோ, சுத்தமா தண்ணி வரலைன்னாலோ பாதிக்கப்படுவது என்னமோ நாங்கதாங்க. எங்களுக்கு பரம்பரை பரம்பரையா இதுதான் தொழில். எங்களுக்கு விவசாயம் பாக்க தெரியாது, கம்பெனியும் இங்க இல்ல சுத்தி காடு தான் இருக்கு, அதனால தண்ணி இல்லாத காலத்துல குறைந்தபட்ச இழப்பீடாவது அரசாங்கம் தரணும்னு கேட்டுக்குறோம். இத நம்பி தா எங்க வீட்ல சாப்பாடு , புள்ளைங்க படிப்பு எல்லாமே, இத அரசாங்கத்துக்கிட்ட வாங்கி தாங்கனு கேக்குறோம்’ என்கிறார்.

நம்மை மகிழ்விக்கும் பரிசல் ஓட்டிகளின் நிலைமை இப்படி இருக்கிறது. இவர்களின் கோரிக்கையை அரசாங்கம் கருத்தில் கொள்ளுமா????
'வி மிஸ் யூ பெரியார்!' – இன்றைய சாமான்ய இளைஞனின் கடிதம்!
ர.முகமது இல்யாஸ்




தோழர் பெரியார் அவர்களுக்கு,

வணக்கம். இறந்தவர்களுக்கு கடிதம் எழுதுவது பகுத்தறிவில் சேராது என்றாலும், காலத்தின் தேவை கருதி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 'பெரியார்' என்பவர் ஒரு மனிதர் மட்டுமல்ல; அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்தியல் என்பதை உளப்பூர்வமாக நம்புகிறேன்.

சமூகநீதிக்கு எதிராகவும், மாநில சுயாட்சிக்கு எதிராகவும் நிகழ்த்தப்பட்ட போரில், சில நாட்களுக்கு முன்னர், அனிதாவை இழந்திருக்கிறோம். அனிதா எங்களுள் ஒருத்தி. நாங்கள் இந்தக்கால தலைமுறையினர். நீங்கள் இறந்து ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் எங்கள் தலைமுறை மீண்டும் உங்களுக்காக ஏங்குகிறது.

நாங்கள் தொண்ணூறுகளில் பிறந்தவர்கள். நாங்கள் பிறக்கும்போது, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகியவற்றோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் கல்வித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறையாக மாறியிருந்தது. நாங்கள் இந்தியாவின் மனித வளங்களாக பிறந்தோம்.

‘பெரியார்’ என்ற மனிதர் குறித்த அறிமுகங்களை நாங்கள் பயின்ற பள்ளிகள் எங்களுக்கு ஏற்படுத்தித்தரவில்லை. மகாத்மா காந்தியோடு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட பெரியாரை, சில மதிப்பெண்களுக்காக நாங்கள் படித்திருக்கிறோம். உங்களைப் போலவே, உங்கள் நண்பர் அம்பேத்கரும் ‘இந்தியாவின் அரசியலமைப்பை எழுதியவர்’ என்ற அளவில் மட்டுமே எங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தார்.

அதையும் மீறி, பேருந்து நிறுத்தங்களிலோ, சாலை முனைகளிலோ உங்கள் சிலைகளைப் பார்க்கலாம். சிலைக்குக் கீழே கடவுள் மறுப்பு குறித்து நீங்கள் பேசிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். உங்கள் நண்பர் அம்பேத்கரின் சிலை ஊருக்கு வெளியே சிறைவைக்கப்பட்டிருக்கும். அம்பேத்கர் சிலைகள் ஊருக்கு வெளியே இருப்பதையும், கூண்டுகளுக்குள் அவர் அடைபட்டிருப்பதையும் கேள்விக்குள்ளாக்கியபோது, இந்திய மக்கள் ‘சாதி’ என்ற நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதை எங்களால் அறிய முடிந்தது.

தமிழ்நாட்டில் சாதியை மிக வலிமையாக எதிர்த்ததும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூகநீதியான இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்ததும் திராவிட இயக்கங்கள். எங்கள் காலத்தின் மிக முக்கியமான அரசியல்வாதிகள் திராவிடத்தின் பெயராலேயே இயங்கி வருகின்றனர். அவர்கள் தங்களைத் தாங்களே உங்களின் வழித்தோன்றல்களாக முடிசூட்டிக்கொண்டாலும், நாங்கள் உங்களை ஏற்றுக்கொண்டதைப் போல அவர்களை ஏற்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் அதனையும் பெரும் போராட்டமாக வெளிப்படுத்தினோம்.

1951-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்து பல போராட்டங்கள் மேற்கொண்டு உங்களால் கொண்டுவர முடிந்தது. கல்வி மறுக்கப்பட்ட எங்கள் முன்னோருக்குக் கல்வி நிலையங்களுக்குள் நுழைய அது வாய்ப்பாக அமைந்தது.

நாங்களும் கடந்த ஜனவரி மாதம் ஏறத்தாழ ஏழு நாட்கள் போராட்டம் நடத்தினோம். வாடிவாசலில் காளைகள் நுழைவதற்கான போராட்டம் அது. எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்ட மாபெரும் போராட்டம் அது. சென்னையின் மெரினா கடற்கரை முழுவதும் இளைஞர்களால் நிரம்பியிருந்தது. மத்திய அரசுக்கு எதிரான அந்த எழுச்சியை நீங்கள் கண்டிருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பீர்கள்! நாங்கள் அந்த போராட்டத்தில் வெற்றிபெற்றோம். எனினும் அண்ணாவின் பெயரிலும், திராவிடத்தின் பெயரிலும் இயங்கும் ஆளுங்கட்சியின் உத்தரவால் காவல்துறையினர் எங்கள்மீது வன்முறையைத் தொடுத்தனர். மீனவ மக்கள் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அவர்களது குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன.

வன்முறைகள் அனைத்தும் ஓய்ந்த பின்னர், காவல்துறை அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார். அந்த பேட்டியில், "உங்கள் குழந்தைகளை யாராவது போனில் அழைத்து, 'தோழர்' என்று பேசத் தொடங்கினால், உடனே அவர்களின் தொடர்புகளைத் துண்டிக்கச் செல்லுங்கள்" என்று கூறினார். சமத்துவத்திற்காக, "பெரியார் என்று என்னை அழைக்கவேண்டாம்; தோழர் என்றே அழையுங்கள்” என்று நீங்கள் கூறியதை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம்.

நீங்கள் கருஞ்சட்டைப் படை அமைத்தபோது, உங்களுக்கும் அண்ணாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டது என்பதைப் படித்திருக்கிறோம். எனினும், அண்ணா அதிகாரத்தை எதிர்த்து, யாரும் எதிர்பாராதவாறு, கறுப்புச் சட்டையில் தோன்றி பேருரை நிகழ்த்தியிருக்கிறார். கறுப்புச் சட்டை இன்றும் அதிகாரத்தை உறுத்தும் ஆயுதம். மெரினா எழுச்சிக்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிந்து மாணவர்கள் கூடினாலே காவல்துறை அச்சம் கொள்கிறது. இன்று நாங்கள் படிக்கும் பல பொறியியல் கல்லூரிகளில் கறுப்புச் சட்டை அணிந்து வரத் தடை இருக்கிறது.



கடந்த மே மாதம், சென்னை மெரினாவில், ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்ச்சி மே 17 இயக்கத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. தடையை மீறி மெரினாவில் மக்கள் கூடுவதை தமிழக அரசு விரும்பவில்லை. நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களைக் கைது செய்தார்கள். அப்போது கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்த வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதுக்கு சொல்லப்பட்ட காரணம், அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்திருந்தார்கள் என்பது. எந்த அண்ணா, தான் பாடுபட்ட இயக்கத்திற்காக கருஞ்சட்டை அணிந்து இளைஞர் படைக்கு தலைமை தாங்கினாரோ, அந்த அண்ணாவின் பெயரில் இயங்கும் ஆளுங்கட்சி மேடையேற்றிய அவலக்காட்சிகள் இவை.

நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தி, ஈழப்போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, நூறு நாட்கள் கடந்து இன்னும் சிறையில் உள்ளனர். திருமுருகன், தமிழ்நாட்டு மக்களிடையே மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியவர்.

நீட் தேர்வு சமூக நீதியின் அடிப்படையையே மறுக்கிறது. எங்களில் பலர் மருத்துவர்களாக இருக்கின்றனர். எனினும், நாங்கள் எங்களுக்கு அடுத்து வருபவர்களைச் சிந்திக்கின்றோம். ஒரு மனிதன் தன் எஞ்சிய வாழ்வைக் கழிப்பதற்கு இரண்டு விஷயங்களைத் தன் விருப்பப்படி தீர்மானிக்க வேண்டும். ஒன்று கல்வி; மற்றொன்று திருமணம்.

எங்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு பெறப் போராடியது போல, சுயமரியாதை திருமணங்களையும் பல்வேறு இன்னல்களைத் தாண்டி நடத்தி வைத்தீர்கள். இன்று ஒரு ஆணும் பெண்ணும் சுயமரியாதையோடு, தங்கள் சாதி மறுத்து, திருமணம் செய்துகொள்வது, அவ்வளவு எளிதானது அல்ல. சாதிமறுப்பு திருமணம் செய்யும் இளைஞர்கள் அவர்களது பெற்றோராலேயே சாதி கெளரவத்திற்காகக் கொல்லப்படுகின்றனர். உடுமலைப்பேட்டையில் கெளசல்யா, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கரை திருமணம் செய்து கொண்டார். அதன் விளைவாக, நடுவீதியில் வைத்து இருவரும் வெட்டப்பட்டனர். சங்கர் உயிரிழந்தார்.

இன்று, கெளசல்யா உங்களையும், உங்கள் நண்பர் அம்பேத்கரையும் மக்களிடம் எடுத்துக்கூறி சாதிக்கு எதிரான பறையை வீரியமாக ஒலித்து வருகிறார். அவரைப் போலவே பல பெண்கள் இன்று போராட்டக் களத்தை நிரப்பி வருகின்றனர். அன்று உங்களால் கள்ளுக்கடை மறியலுக்கு நாகம்மையாரும், கண்ணம்மாவும் தலைமை தாங்கினர். அதன் நீட்சி, இன்று தமிழ்நாட்டில் அரசு மதுபானக்கடைகளுக்கு எதிராக பெண்களைப் போராட வைக்கிறது.

கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராடியதாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு விடுதலை பெற்றிருக்கிறார் வளர்மதி. விடுதலை பெற்றவுடன் போராட்ட களத்திற்கே சென்றிருக்கிறார். அனிதாவுக்காக தனது அரசுப் பதவியை உதறிய சபரிமாலா முதலானோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றனர்.

தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக, அதிக போராட்டங்கள் நடத்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இது திராவிட இயக்கத்தின் மூலம் நீங்கள் விதைத்தது. அதிலும் இன்றைய ஆளும்கட்சியான அ.இ.அ.தி.மு.க. ‘வெங்காயம்’ ஆக முளைத்திருக்கிறது. ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்று நீங்கள் சொன்னது மிகப்பொருத்தம்.

அனிதாவின் மரணம், தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த மாணவர்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழக அரசோ எந்தச் சலனமும் இல்லாமல் போராடும் மாணவர்களை ஒருபுறம் கைது செய்துவிட்டு, மறுபுறம் மாணவர் அமைப்பான சாரணர் படைக்கு பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவை தலைவராக்க முயற்சித்து, தோல்வி அடைந்தது.

அண்ணாவையும், திராவிடத்தையும் முன்னேற்றுவதாகக் கட்சி நடத்திக்கொண்டு, அமித் ஷா-வுக்கும் தமிழிசைக்கும் பணிசெய்து கொண்டிருக்கிறார்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். பாரதிய ஜனதா கட்சி இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டிற்குள் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது.

உங்கள் வழித்தோன்றல்களை எங்களுக்கு முந்தைய தலைமுறையினர் நம்பினர். எங்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கை குறைந்திருக்கிறதே தவிர, கூடவில்லை. உங்களைப் போன்ற அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யாத, துணிந்து போராடக்கூடிய கருத்தியல் தலைமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறோம். போராட்டங்களுக்காகவே காத்திருக்கிறோம்;

வி மிஸ் யூ பெரியார் அவர்களே!

இப்படிக்கு,

சாமான்ய இளைஞன்.
’எம்.ஜி.ஆர் உருவாக்கிய பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்படுகிறது’ -கொந்தளிக்கும் பெ.மணியரசன்

RAMAKRISHNAN K

தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி அமைப்பதற்கான ஏற்பாடுகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்கான இடத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதற்கு தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.



இது குறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன் ’தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் இந்தித் திணிப்புப் பள்ளியான கேந்திரியா வித்தியாலயா பள்ளி தொடங்கப்படுவது கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் முதன்மொழியான தமிழுக்கு உலகிலுள்ள ஒரே பல்கலைக்கழகம், தஞ்சையிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமாகும். 1981 செப்டம்பர் 15 அன்று, தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், இப்பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார். 25 துறைகளின் உயராய்வுக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்திற்கு, 972 ஏக்கர் அரசு நிலத்தையும் எம்.ஜி.ஆர். வழங்கினார்.ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு வந்த தி.மு.க-வை விட அ.தி.மு.க. அரசுகள் தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை தமிழ் வளர்ச்சி அல்லாத பிறப் பயன்பாடுகளுக்கு திருப்பி விடும் பணிகளை செய்து வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தையும் முறையாக நடத்தாமல் சீரழித்து வருகின்றனர்.



முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலிகைப் பண்ணையின் 25 ஏக்கர் நிலத்தை இந்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு வழங்கியது தமிழ்நாடு அரசு. அதன்பின், 50 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு அளித்தது. அங்கு இப்போது வீடு கட்டி, தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதன்பின், 2012 -ல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக 62 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இப்போது, அதையெல்லாம் விட மிக மோசமாக இந்தி - சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு வரும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிக்கே - தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடமளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
பத்மநாபசாமியை வழிபட பாடகர் ஜேசுதாஸ் விருப்பம்

த.கதிரவன்

பின்னணி பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான ஜேசுதாஸ், பிறப்பால் கிறிஸ்துவர். ஆனால், இந்து மத நம்பிக்கைகள் மீது மரியாதையும், இந்து மதக் கடவுள்களை வணங்கிவருவதில் ஆர்வமும் கொண்டவர். அய்யப்பன் குறித்துப் பாடகர் ஜேசுதாஸ் பாடிய பாடல்கள், மிகவும் பிரபலம்.




சில குறிப்பிட்ட இந்து கோவில்களில், மற்ற மதத்தினர் சென்று வழிபட அனுமதி கிடையாது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பாடகர் ஜேசுதாஸ், மதமாச்சரியங்களைக் கடந்து இந்து கோவில்களுக்கும் சென்று மனமுருகி வழிபடக் கூடியவர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று அவர் மனமுருக தரிசனம் மேற்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. தற்போது, கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள 'பத்மநாபசாமி கோவிலில்' தரிசனம் செய்ய அவர் ஆர்வமுடன் உள்ளார்.

எனவே, தனது விருப்பத்தை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும்விதமாக ஓர் அனுமதி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்துமதம் குறித்து தான் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் குறித்தும், பத்மநாப சாமியைத் தரிசிக்கும் தனது ஆவல் குறித்தும் விளக்கமாக எழுதியுள்ளார். மேலும், பத்மநாபசாமியைத் தரிசனம் செய்யவும் தனக்கு அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளார்.

ஜேசுதாஸின் இந்தக் கடிதத்துக்குப் பதில் அளிக்கும்விதமாக, கோவில் நிர்வாகத் தரப்பிலும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்துப் பேசும் கோவில் நிர்வாகிகள், ''இந்து மதத்தின்பால் நம்பிக்கைக் கொண்ட எவரும் சாமியைத் தரிசனம் செய்வதில் தடையேதும் இல்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

விரைவில், பத்மநாப சாமியைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு பாடகர் ஜேசுதாஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!
13,20,000 கி.மீ... பூமியை 33 முறை சுற்றியதற்கு நிகர்... பெரியார் பயண சுவாரஸ்யங்கள்!

வரவணை செந்தில்

தந்தைப் பெரியார் பயணங்களில் பெருமளவு விருப்பம் கொண்டவர். அவரின் பயண விருப்பம் என்பது தன்னலம் சார்ந்தது அல்ல. அதிக அளவில் மக்களைச் சந்திக்க வேண்டும் என்கிற விருப்பத்தினால் உருவானது. பெரியாரின் பயணங்களை கணக்கிட்டால் அவர் வாழ்ந்த 94 வயது வரை அவர் பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர். இந்தப் பூமியை 33 முறை சுற்றி வந்தால் எவ்வளவு தொலைவு ஆகுமோ அந்தத் தூரத்தை தன் ஒட்டுமொத்த வாழ்நாளில் கடந்துள்ளார். பெரியாரின் பயணங்கள் பெரும்பாலும் இரவில்தான் இருக்கும். அவரின் பயணத்தின் நோக்கம் மக்களைச் சந்திப்பது என்பதால் இரவுப்பயணத்தை மட்டுமே தேர்வு செய்தார். பெரியார் என்கிற தமிழ்ச்சமூகத்தின் மிகப்பெரிய ஆளுமையின் பயணங்களில் நடந்த நிகழ்ந்த சுவையான சம்பவங்களை திருச்சி.செல்வேந்திரன் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் இருந்து சில..



பெரியார் சிக்கனம் உலகமறிந்த ஒன்று. ஊர்தி ஓட்டுநர்கள் விடுப்பில் சென்று விட்டாலும் சரி வேலையை விட்டுப் போய்விட்டாலும் சரி கவலைப்படாமல் புதிய ஓட்டுநர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்வாராம். புதிய ஓட்டுநர்கள் அப்போதுதான் ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களாக இருப்பர். இதைப் பார்த்து "அய்யா, சுயமரியாதை இயக்கத்துடன் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் நடத்துகிறார்" என்று கிண்டல் செய்வார்களாம். "இரவில்தானே பெரும்பாலும் பயணம் செய்கிறோம். அதனால் சீக்கிரம் கற்றுக்கொள்வார்கள்" என்பாராம் பெரியார்.

அது போல பெரியார் தனக்கு பயணம் செல்ல வாகனம் வாங்கினால் அது பயணத்துக்க மட்டுமல்லாமல் பிரசாரம் செய்யவும் பெரிய திறப்பு கொண்ட பகுதி இருக்க வேண்டும் என்று நினைப்பார். அதில் மைக், ஒலிபெருக்கி உள்ளிட்ட அனைத்தும் தயாராக இருக்கவேண்டும். பேசப்போகும் ஊரில் மேடை போடப்படாவிட்டால் தன் வேனில் இருந்தே பேசிவிட்டு திரும்புவாராம். வாகனப்பராமரிப்பு என்பது பெரியாரிடம் அறவே கிடையாது. ஒரு வாகனம் வாங்கினால் அதை முழுக்க முழுக்க பயன்படுத்தி இனிமேல் எந்தச் சூழலிலும் அது ஓடாது என்கிற நிலை வரும் வரை பயன்படுத்திவிடுவாராம்.

தன் பிரசார வாகனம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பெரியார் தூங்கிவிடுவாராம். ஆனால் முழித்து இருந்தார் என்றால் தன்னுடன் வரும் தொண்டர்களுடன் சலசலவென பேசிக்கொண்டே வருவாராம். பெரியார் வேன் பயணங்கள் தவிர்த்து ரயிலில் அதிகமுறை பயணித்துள்ளார். ஆனால் எப்போதுமே மூன்றாம் வகுப்பில் தான் பயணம் செய்வாராம். மக்களோடு மக்களாகப் பயணம் செய்வதிலே அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை ஜிடி.நாயுடு பெரியார் வசதியாகச் செல்லட்டும் என்று முதல்வகுப்பு சீட்டு எடுத்துக் கொடுத்துள்ளார். சிக்கனத்தின் சின்னமான அவர் அதை கேன்சல் செய்துவிட்டு மூன்றாம் வகுப்பு சீட்டு வாங்கிக்கொண்டாராம். மீதி பணத்தையும் கவனமாக வைத்துக்கொண்டாராம்.

ஒரு முறை இரவு கூட்டம் முடித்து விட்டு அடுத்த நாள் நிகழ்ச்சி உள்ள ஊருக்கு தன் வேனில் கிளம்பியுள்ளார். அப்போது பெரியாரின் வேன் செல்லும் வழியில் போக வேண்டிய சில தோழர்கள் பயணச்சீட்டை மிச்சம் செய்ய பெரியாரின் வேனிலேயே ஏறிவிட்டனராம். வண்டி போகப்போக அவர்களின் பேச்சில் இதனைக் கண்டுபிடித்த பெரியார் அனைவரிடமும் அவர்கள் பேருந்துக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை வசூலித்துவிட்டாராம். ஆனால் அது எல்லாமும் கட்சிக்குத்தான் சென்றது. ஏனென்றால் பிறப்பிலேயே அவர் பெரும் கோடீஸ்வரர். தான் சேர்த்த செல்வங்களை மக்கள் பணிக்கே விட்டுச்சென்றுள்ளார்.

பெரியாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களில் ஒன்று சிக்கனம்.

PG students can opt for UGC-recognised on-line topics

The Mangalore University  

Orientation will help students how to select topics

Moving along with developments in higher education, Mangalore University will allow its post-graduate students to opt for the University Grants Commission (UGC) recognised on-line topics of study as part of the two-year programme from this academic year.
It would allow the study of Massive Open Online Courses (MOOC), as they are called, to start with for students of 2017-18 batch from second semester from this December. Prior to this, the university would provide an orientation to students on how to select the topics.
Students can opt for the on-line topics of study in their second and third semesters. If the students passed these topics, they will get credits like in any other subjects of their study under the Choice Based Credit System (CBCS) of study existing in the university.
The students have been opting for one open elective subject, which is nothing but an inter-disciplinary subject, in their second and third semesters. Each department announced a list of such open electives taught on regular class basis.
Now, a student has the option to go for the UGC recognised on-line topic as an open elective instead of selecting from the list of open electives announced by a department. Opting for an on-line topic is not mandatory. A student has the option to remain in the old system by selecting the open electives announced by a department, a senior official-cum-professor of the university, who was a member of the university committee on the introduction of MOOC, said.
The official said that a student can opt for on-line topic in both the semesters. Flexibility has been provided to select an on-line topic in the second semester and remain in the old system in the third semester and vice-versa.
In addition, the official said, a student can select an on-line subject as a soft core subject.
Each post-graduate student studied four subjects — two hard core and two soft core —during the two-year programme. Hence, one of the soft core subjects can be from the on-line.
According to K. Byrappa, Vice-Chancellor of the university, about 350 on-line topics are available. Orientation for students would be conducted in October, he said.
Earlier, in June, the UGC had written to the universities to take steps to enrol students for its on-line courses by taking approval from their decision-making bodies. It is to expose students to open education resources.

Driving without original licence

Two-wheeler riders top the list

Its two-wheelers riders who are topping the list again. After having the highest number for road accidents and traffic offences, they have topped the list of motorists who were fined for not carrying original driving licence. A week after police started the enforcement, two-wheeler riders accounted for more than 95 % motorists fined for the offence.
As on September 14, traffic police had fined 1,070 motorists who did not carry original driving licence.
Except 18 persons, all others fined for the offence were two-wheeler riders. While Traffic East police fined 235 two-wheeler riders, 835 were fined by Traffic West police. More than Rs. 5 lakh was collected as fine from all the offenders.
As per police statistics, two-wheeler riders are involved in more than 55 % of road traffic accidents. “While the rationale behind the new order was to reduce road accidents through cancellation of driving licence for six major traffic offences, two-wheeler riders are yet to fall in line,” says a traffic police officer.
Apart from imposing fine of Rs. 500 as fine, the police have decided to refer particulars of the driving licence of offenders for cancellation by Road Transport Authority.
Meanwhile, the enforcement part by police is entangled with various issues including low manpower. While there are at least 150 major roads in the city to be checked, strength of traffic police is barely enough to conduct checking on 10 roads a day apart from managing other duties such as regular traffic management and VIP escorts. As of now, traffic police have been asked to verify original licence during routine vehicle checking. City Police Commissioner A. Amalraj said that traffic police were effectively enforcing the new order.
Reporting by Wilson Thomas
thcbereporting@gmail.com

NEWS TODAY 17.07.2026