பத்மநாபசாமியை வழிபட பாடகர் ஜேசுதாஸ் விருப்பம்
த.கதிரவன்
பின்னணி பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான ஜேசுதாஸ், பிறப்பால் கிறிஸ்துவர். ஆனால், இந்து மத நம்பிக்கைகள் மீது மரியாதையும், இந்து மதக் கடவுள்களை வணங்கிவருவதில் ஆர்வமும் கொண்டவர். அய்யப்பன் குறித்துப் பாடகர் ஜேசுதாஸ் பாடிய பாடல்கள், மிகவும் பிரபலம்.

சில குறிப்பிட்ட இந்து கோவில்களில், மற்ற மதத்தினர் சென்று வழிபட அனுமதி கிடையாது. ஆனால், கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த பாடகர் ஜேசுதாஸ், மதமாச்சரியங்களைக் கடந்து இந்து கோவில்களுக்கும் சென்று மனமுருகி வழிபடக் கூடியவர். அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று அவர் மனமுருக தரிசனம் மேற்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. தற்போது, கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் உள்ள 'பத்மநாபசாமி கோவிலில்' தரிசனம் செய்ய அவர் ஆர்வமுடன் உள்ளார்.
எனவே, தனது விருப்பத்தை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தும்விதமாக ஓர் அனுமதி கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்துமதம் குறித்து தான் கொண்டிருக்கும் உயர்வான எண்ணம் குறித்தும், பத்மநாப சாமியைத் தரிசிக்கும் தனது ஆவல் குறித்தும் விளக்கமாக எழுதியுள்ளார். மேலும், பத்மநாபசாமியைத் தரிசனம் செய்யவும் தனக்கு அனுமதி அளிக்குமாறு கோரியுள்ளார்.
ஜேசுதாஸின் இந்தக் கடிதத்துக்குப் பதில் அளிக்கும்விதமாக, கோவில் நிர்வாகத் தரப்பிலும் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்துப் பேசும் கோவில் நிர்வாகிகள், ''இந்து மதத்தின்பால் நம்பிக்கைக் கொண்ட எவரும் சாமியைத் தரிசனம் செய்வதில் தடையேதும் இல்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
விரைவில், பத்மநாப சாமியைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு பாடகர் ஜேசுதாஸுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!

No comments:
Post a Comment