Tuesday, December 5, 2017

New system to bring heavy rain to Chennai from Tuesday

TNN | Updated: Dec 2, 2017, 08:51 IST

CHENNAI: The city and its suburbs can expect heavy to very heavy rain from Tuesday as a "well-marked low pressure area over the South Andaman sea and adjoining Strait of Malacca is likely to become a depression by Sunday". The India Meteorological Department has forecast one or two spells of rain or thundershowers on Saturday and said rainfall would reduce until the next weather system approaches the Tamil Nadu coast.

Area cyclone warning centre director S Balachandran said, "By Monday or Tuesday, the low-pressure system is very likely to move towards north Tamil Nadu and the South Andhra Pradesh coast."

City received 100cm rain since October

The Central Water Commission, meanwhile, said the pouring might trigger a rapid rise in the water level of rivers in Kerala and Tami Nadu and had advised the states to monitor the water levels in all the major river sytems in the states.

Mahesh Palawat of Skymet Weather, a private forecaster, said there was a 25% chance the well-marked low pressure area could turn into a cyclone. Palawat said Cyclone Ockhi, which passed the southern peninsula, had drained the energy in the region. "It is rare for two cyclones to form one after another in such short duration. But there is a good chance that the system could intensify into a deep depression, bringing very heavy rainfall in Chennai," he said.

Cyclone Ockhi brought exceptionally heavy rainfall in southern Tamil Nadu, wreaking extensive damage. During the 24 hours between 8.30am on Thursday and 8.30am on Friday, Papanasam in Tirunelveli was virtually drowned, receiving 45cm of rain, while Manimutharu (Tirunelveli district) received 38cm, Mylaudy (Kanyakumari district) 19cm, Gudalur (Theni district) 16cm and Watrap (Virudhunagar) 15cm all received copious rain.

In Chennai, during the same period, the DGP's Office on the Marina received 8cm rainfall, Anna University and Nungambakkam received 7cm each, while Chennai Airport got 5cm of rain. Balachandran said, "More rainfall is expected in Tamil Nadu and Puducherry on Saturday. Heavy rainfall can be expected in Nilgiris, Coimbatore, Theni and Dindigul."

Every year, Chennai on average receives 80cm of rainfall during the northeast monsoon from October to December. This year, since October, the city has already recorded nearly 100cm of rain. However, despite the excess rainfall, the four reservoirs that supply drinking water to the city's residents still only have a combined storage of 45% of the total capacity.
College of Engineering ‘sought’ special class fees without permission

Ram Sundaram| TNN | Dec 5, 2017, 06:00 IST




CHENNAI: The College of Engineering, Guindy, under Anna University, 'illegally' collected fees for special classes for weak students, show documents taken up for review by the higher education department in 2016.

Besides ?22 lakh collected from these students, mostly from economically backward families, ?17 lakh was spent on staff remuneration in the past without proper permission from the university syndicate, the documents show.

The Centre for Faculty Development in CEG decided to conduct in 2010-11'refresher courses' for various subjects for the students, to help them clear arrears. A total of 1,117 students, who joined CEG between 2004 and 2010, registered.

Based on then Vice-Chancellor Mannar Jawahar's instruction, ?2,000 was collected from per student per course. This, the management claimed, would be used to pay faculty members, heads of departments and programme co-ordinators.

Spl classes are obligatory work of teachers: Report

While faculty members handling such classes were entitled to ?15,000 per subject, HODs got ?10,000 and co-ordinators ?1,000-?1,500.

As per the university statute, approval of the finance committee (FC) and syndicate is needed to collect money from students and pay staff who handled those classes.

The varsity, documents show, neither got the approval of the FC nor the syndicate but collected ?22.34 lakh from students.

"Itis a part and parcelof theduty of teachers to 'uplift' the poor and weaker students by coaching them specially. Conduct of special classes is obligatory work of teachers to train the weaker studentswithservice motive," said D Rathinavelu, deputy director of local fund audit, in his report for the particular year released in August 2016 Collecting ?2,000 from each student without prior approval for such classes was not in order, the report said and recommended prior approval from syndicate and FC in future.

While former VC Jawahar claimed the decision was ratified after the 2016 August Assembly session, incumbent authorities could not confirm it. "It was not taken up for discussion in syndicate meetings conducted after March this year," sources told TOI.

Sources added that many students failed in mathematics and physics that year and the programme was aimed at helping them. However, they refused to comment on not getting prior approval.

அருவருப்பல்ல, எதார்த்த உண்மை!

By இரா. செல்வம்  |   Published on : 04th December 2017 02:10 AM  
 
மாதவிடாய் என்பது பெண்களின் பாலின முதிர்ச்சி தொடங்கும் போது / பருவ மாற்றத்திற்கேற்ப இயற்கையாக ஏற்படும் ரத்தப் போக்காகும். 52% பெண்களுக்கு இது ஏற்படுகின்றது. பெண்கள் தங்கள் வாழ்நாளில் 6 -7 ஆண்டுகளை மாதவிடாய் காலங்களில் கழிக்கிறார்கள். இருப்பினும் மாதவிடாய் காலங்களில் சுகாதார மேலாண்மையைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனை இல்லை. இந்தியாவில் 70% தாய்மார்கள் மாதவிடாயை ஓர் அருவருக்கத்தக்க நிகழ்வாகப் பார்க்கின்றார்கள் என்று "வாட்டர் எயிட்-இந்தியா' அமைப்பு கூறுகிறது.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதும், சமையல் அறைக்குள் நுழையக் கூடாது எனவும், ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது எனவும், அவர்களைத் தொடக்கூடாது, தீட்டு என்று ஒதுக்கி வைப்பதும் இன்றும்கூட சில வீடுகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு மாதவிடாய் ஏற்படும்போது, பெண்களை சமூகம் இழிவாகக் கருதுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். இது ஒரு சமூகப் பிரச்னை மட்டுமல்லாமல், மனித உரிமையைப் பாதிக்கும் செயலுமாகும். "மாதவிடாய் காலத்தில், சமூகத்தில் பெண்களை அருவருப்பாகப் பார்ப்பது, மனித கண்ணியத்தையும், உரிமையையும் மீறும் செயல்' என 2014-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் ஜோதி சங்ஹெர கூறியுள்ளார்.

இந்தியாவில் 35.5 கோடி பெண்களும், மாணவிகளும் மாதவிடாய் பருவத்தில் உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் மாதவிடாய் பருவத்தில் கண்ணியத்துடன் நடத்தப்படவில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், இவர்களுக்கு மாதவிடாய் காலம் சுமுகமாகவும் இல்லை.

பருவமெய்தியவுடன் 20% மாணவிகள் இந்தியாவில் பள்ளிப் படிப்பைக் கைவிடுவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை குறிப்பிடுகிறது. இதனால், பெண்களின் கல்வியறிவு பெரும் அளவில் பாதிப்படைகிறது. 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆண்களின் கல்வியறிவு 82.1% மற்றும் பெண்களின் கல்வியறிவு 65.5%-ஆகவும் குறைந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

எனவே, மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை சமூகத்திலும் குறிப்பாக, மாணவியர் மத்தியிலும் ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். இதில் மாணவிகளும், பெண்களும் படும் அவலங்களை அமைதியாகப் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இருப்பது சரியான சமூக வளர்ச்சியை ஏற்படுத்தாது.

இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. ஒன்று, மாதவிடாய் பற்றிய சரியான விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துதல். இரண்டாவது, மாதவிடாய் சுகாதார மேலாண்மை. அதாவது மாதவிடாய் காலங்களில் சானிடரி நாப்கின்களை அதிகம் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தையும், மேலும் அதனை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் பெண்களிடம் கொண்டு செல்லுதல்
.
மாதவிடாய் பற்றி சமூகத்தில் ஒரு தெளிவான பார்வை இருந்தால் மட்டுமே பெண்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பை சரியாகத் தொடரவும், அன்றாடம் வேலைக்குச் செல்லவும், வீட்டு வேலைகளை கவனிக்கவும் முடியும். பள்ளி, கல்லூரிகளில் சரியான சுகாதார வசதி இன்மையானது பெண்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. இதைப் பற்றி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் பெண்கள், மாணவ- மாணவிகளிடம் ஓர் ஆரோக்கியமான விவாதம் இல்லை.

மேலும், பெண்களுக்கு என்று அலுவலகங்களிலும், மாணவிகளுக்குப் பள்ளிகளிலும் தனிக் கழிவறைகள் இல்லாதது, பிரச்னையை அதிகப்படுத்துகிறது. இது குறித்துப் பேசுவதற்குப் பெண்களும், பெண் ஆசிரியர்களும் மாபெரும் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது. மேலும், வீட்டில் பெற்றோரும் இதைப் பற்றிய விழிப்புணர்வை மகள்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இன்று பாலியல் தொடர்பான விஷயங்களையும், மாதவிடாய் தொடர்பான விஷயங்களையும் பற்றிப் பேசுவதற்கு ஒரு சமூகக் கட்டுப்பாடு உள்ளது. இதை வெளியில் விவாதிப்பது தவறான ஒன்று என்கிற இறுகிய மனநிலை நிலவி வருகிறது. இதைப் பற்றிய விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களிடையே ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் அலுவலகங்களிலும், கிராமப்புறங்களில் பருவமைடைந்த மாணவிகளிடத்திலும், பெண்களிடத்திலும் ஒரு சரியான புரிதலை உருவாக்க வேண்டும். மாதவிடாய் குறித்துப் பேசுவதை சமூகம் வெட்கக்கேடாக நினைக்கிறது. இன்றும் மத, புராண கட்டுக் கதைகளின் அடிப்படையில் சமூகத்தில் ஒரு பாதி அங்கத்தினர்களின் பிரச்னையை மறுபாதி அங்கத்தினர்கள் பேசாமலும், புரிந்துகொள்ளாமலும், மேலும் அதற்கான தீர்வைக் காணாமலும் இருப்பது, ஒரு சமமான சமூக வளர்ச்சிக்கு இட்டு செல்லாது. ஆண்களின் பாலின முதிர்ச்சியை இழிவாகக் கருதாத சமூகம், பெண்கள் பருவமடைந்து மாதவிடாய் ஏற்படுவதை மட்டும் அருவருப்பாகப் பார்ப்பது ஒரு மனவளர்ச்சி குன்றிய சமூகத்தின் பிரதிபலிப்பேயாகும்.

இந்தியாவில் இப்போது 12% மகளிர் மட்டுமே மாதவிடாய் காலங்களில் நாப்கின்களைப் பயன்படுத்துவதாகவும், மீதம் 88% பெண்கள் துணிகளையும், கந்தலாடைகளையும், சாம்பலையும், செய்தித்தாள்களையும் பயன்படுத்துவதாகவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் மட்டுமே நாப்கின்களை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். ஆனால், கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் நாப்கினிற்குப் பதிலாக மற்ற வழிமுறைகளையே அதிகம் பயன்படுத்துகின்றார்கள்.

இதற்கான முக்கிய காரணங்கள் ஒன்று, கிராமப்புறங்களில் நாப்கின்கள் அதிகம் கிடைப்பதில்லை என்பதும், அப்படியே கிடைத்தாலும் நாப்கின்களை வாங்கிப் பயன்படுத்தும் அளவிற்கு வசதி இன்மை காணப்படுவதும்தான். பழைய துணிகளோ, கந்தலாடைகளோ வீட்டிலே கிடைப்பதால் கடைக்குச் சென்று வாங்க முற்படுவதில்லை. இதனால் ஏற்படும் பெரும் சுகாதாரக் கேடுகள் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லை. மேலும் மாதவிடாயை ஒரு வெட்கப்படக்கூடிய நிகழ்வாக சமூகம் பார்ப்பதால், பெண்கள் நாப்கின்கள் வாங்குவதன் மூலம் அதனை மற்றவர்களுக்கு வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதும் இல்லை.

இவை அனைத்திற்கும் மேலாக, பயன்படுத்திய சானிடரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதும் மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. நகர்ப்புறங்களில் பயன்படுத்திய நாப்கின்கள் கழிப்பிடங்களிலும், சாக்கடைகளிலும், தெருக்களிலும் வீசப்படுகின்றன. 

இந்திய நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மற்றும் கையாளும் விதிகளின்படி பயன்படுத்திய நாப்கின்கள் எரிக்கப்பட வேண்டும். பயன்படுத்திய நாப்கின்கள் 800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (ரஏஞ) கூறுகிறது. இந்த வெப்ப நிலைக்குக் குறைவாக எரிக்கப்படும்போது, அதிலிருந்து உருவாகும் நச்சு புகையானது, காற்றை மாசுபடுத்துவதுடன் அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன.

மேலும், இத்தகைய திடக்கழிவுகளை சேகரிப்பவர்களுக்கும் பல்வேறு சுகாதாரக் கேடுகளும், நோய்களும் வர வாய்ப்புள்ளது. எரிக்கப்படாமல் குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும், தெருவோரங்களிலும் தூக்கி எறியப்படும் நாப்கின்கள் மிகவும் மோசமான சுகாதாரக் கேடுகளுக்குக் காரணமாகின்றன. எனவே, பயன்படுத்திய நாப்கின்களை சரியான முறையில் பிரித்து அப்புறப்படுத்துவதற்கு வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். "கிளீன் இந்தியா' ஆய்விதழின்படி (ஸ்ரீப்ங்ஹய் ஐய்க்ண்ஹ த்ர்ன்ழ்ய்ஹப்), இந்தியாவில் 9,000 டன்கள் சானிடரி திடக்கழிவுகள் (432 மில்லியன் நாப்கின் அட்டைகள்) ஓர் ஆண்டிற்கு உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மாநகரங்களில் இத்திடக் கழிவுகளை அப்புறப்படுத்துவது மாபெரும் சவாலாக இருப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்து வருகிறது.

ஒரு சமூகத்தின் நிறைவான வளர்ச்சி என்பது, ஆண் - பெண் இருபாலரையும் சார்ந்தே உள்ளது. இருபாலருக்கும் உள்ள பிரச்னைகளைச் சரியாகப் புரிந்துக்கொண்டு தீர்வுகள் காண்பதன் மூலமே ஓர் ஊனமற்ற சமூகம் உருவாகும். இதற்குப் பல்வேறு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இருப்பினும் அரசு இன்று வெற்றிகரமாக செயல்படுத்திக்கொண்டு வரும் "தூய்மை இந்தியா' திட்டத்துடன், மாதவிடாய் சுகாதார மேலாண்மையையும் இணைத்து செயல்படுத்தினால்தான் பொதுமக்களுக்கு ஒரு மாபெரும் விழிப்புணர்வு ஏற்படும்.

கல்வி துறை, சுகாதார வளர்ச்சித் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் சேர்ந்து இதற்கான ஒரு விழிப்புணர்வை மாபெரும் அளவில் ஏற்படுத்த வேண்டும்.

மன அழுத்தம் அகல வேண்டும்!

By ஐவி. நாகராஜன்  |   Published on : 04th December 2017 02:11 AM  |

 மாறி வரும் சூழ்நிலையில் பணிச் சுமை என்பது அனைவருக்கும் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. இதற்குக் காரணம் சக்திக்கு மீறிய வேலைப்பளு, விலைவாசி உயர்வு, கூட்டுக்குடும்பம் இல்லாதது, பணிக்கும் படிப்புக்கும் சம்பந்தம் இல்லாத வேலை, கல்லூரியில் படிக்கும் போதே வேலை, அதிக சம்பளம் என்பதால் இரவில் வேலை பார்ப்பது, தூக்கத்தைத் தொலைப்பது, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது, நீண்ட நேரம் தொடர்ச்சியான வேலை, குறைந்த சம்பளம், அன்பு காட்டாத சக ஊழியர்கள், பணியில் மோதல், பணியில் தெளிவின்மை, வேலையில் நாட்டமின்மை மற்றும் நிறுவன அமைப்பு அல்லது சவாலற்ற வேலை எனக் காரணங்கள் நீள்கின்றன.

மனதிற்கு பிடிக்காத வேலையை நாளெல்லாம் செய்ய வேண்டியிருப்பதை நினைத்து பெரும்பாலானோர் சலித்துக் கொள்கின்றார்கள். அதனால் வேலைக்குப் போவது என்றாலே அவர்களுக்குக் கசக்கிறது. இதனால் அடிக்கடி விடுமுறை எடுக்கிறார்கள்.

இப்போது ஆண்களுக்கு நிகராகக் பெண்களும் கடினமான வேலைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் உடல் அளவிலும், மனதளவிலும் பெண்கள் சோர்வடைகின்றனர். இவர்களைத் தவிர வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், காவல்துறையினர், ஐடி நிறுவன ஊழியர் முதல் அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமான வருமானம் இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

இவ்வாறு வேலையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றி 2015-இல் எடுக்கப்பட்ட பொதுவான கணிப்பு என்னவென்றால், உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது. 200 மில்லியன் மக்கள் மனச்சோர்வுடனே வாழ்கின்றனர். நான்கு பேரில் ஒருவருக்கு மன அழுத்தப் பிரச்னை ஏற்படுகிறது. 57 சதவீதம் தொழிலாளர்கள் இப்போதைய பணியிடத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். 69 சதவீத பணியாளர்கள் தாங்கள் பார்க்கும் பணியால் அழுத்தம் இருப்பதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் இதுபோன்ற பிரச்னையால் அடிக்கடி வேலை இழக்கின்றனர். சிலர் பணியின் போதே மன அழுத்தம் இருப்பதனால் அடிக்கடி வேலை மாறிக்கொண்டே இருக்கின்றனர். 

மன அழுத்தம் இருந்தால் சாதாரணப் பணிகூடக் கடினமானதாகத் தோன்றும். மேலும், மன அழுத்தம் இருந்தால் உடல் அளவில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். குறிப்பாக சோர்வு, தசைப் பதற்றம், தலைவலி, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, உடல் படபடப்பு, தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தசை மற்றும் மூட்டு வலி, உடல் நடுக்கம், செரிமான பிரச்னை, மனதளவில் மனச்சோர்வு, கவலை, தனிமை, அவநம்பிக்கை, அதிகப்படியான கவனக்குறைவு, பயம், உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் எரிச்சல்படுவது, வேலையில் செயல்திறன் குறைதல், தனிப்பட்ட உறவுகளில் சிக்கல், பின்தங்கிய நிலை இப்படி ஒவ்வொரு பணியாளரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றனர்.

காலப்போக்கில் இவை அதிகரித்து எளிய வேலை என்றாலும் அமைதியின்மை, அதிகமான அல்லது மிகக் குறைவான தூக்கம், கொழுப்புள்ள திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகள் அதிகம் உண்ணுதல், தற்கொலை எண்ணங்கள், மது மற்றும் போதை போன்றவற்றிற்கு அடிமையாதல் உட்பட்ட பல பாதிப்புகளைச் சந்திக்கின்றனர்.
மன அழுத்தம் உள்ள ஒருவர் உங்களுடன் பணி புரிந்தால் அவரை உற்சாகமூட்டும் வகையில் நடந்து கொள்ளுங்கள். அவர் எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பதை நினைவூட்டுங்கள். அவரால் வேலையைச் சரியாகச் செய்ய முடியும் என்பதை சொல்லி ஊக்கப்படுத்துங்கள். அவரை வீழ்த்தும் செயல் எதுவாக இருந்தாலும் அவரால் அதை சமாளிக்க முடியும் என்பதையும், அவரின் திறமைகளை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதையும் அவருக்கு உறுதிபடுத்துங்கள்.
மன அழுத்தம் குறைக்க, நமக்குள்ள பிரச்னையை நமது நலம் விரும்பி, உயிர்த்தோழன் அல்லது தாயிடம் சொல்லி மனதை லேசாக்கிக் கொள்ளலாம். மன உளைச்சல் நம்மை மீறும்போது மூன்று அல்லது ஐந்து முறை ஆழமாக மூச்சு விடுதல் நன்மை பயக்கிறது. படபடப்பான நேரத்தை சிறிது நேரம் மூச்சு விடுவதற்காக நாம் எடுத்துக் கொள்வதால் அந்தக்கால அவகாசம் படபடப்பு குறையவழிவகுக்கும். 

மூளையில் புதைந்துள்ள ஞாபகசக்தி தூண்டப்படுவதால் மனதிற்கு அமைதி தானே வந்துவிடும். வரும் பிரச்னையை எப்படி சமாளிக்கலாம் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்தப் பிரச்னையால் அதிகபட்ச இழப்பு என்ன? நாம் முயற்சித்தால் மாற்றக்கூடிய விஷயமா? எனப் பல கேள்விகளை உங்களுக்குள்ளே கேட்டு அவற்றிற்கு பதில் சொல்லிக்கொண்டே வாருங்கள்.

உங்களால் முடிந்தவற்றை செய்தாகிவிட்டதா? அதற்குமேல் உங்கள் கையில் எதுவும் இல்லையென்றால் பின் எதற்காக அதைப்பற்றி கவலைப்பட வேண்டும்?

கவலைப்படுவதால் மட்டும் எந்தப் பிரச்னையும் தீராது என்று நம்மை நாமே
தேற்றிக்கொண்டு மன அழுத்தத்தை சமாளிக்கலாம்.

எப்போது நாளுக்கு நாள் மன அழுத்த பாதிப்பை சமாளிப்பது கடினமாகிறதோ அப்போது நீங்கள் உளவியல் ஆலோசகரை (கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்) அணுக வேண்டும். உங்கள் பாதிப்புகள் எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிந்தபின் உங்களுக்கு உளவியல் நிபுணரை (சைக்யாட்ரிஸ்ட்) அவர் பரிந்துரைப்பார். உளவியல் நிபுணர்கள் மனநோய் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசகர்கள் மன ஆரோக்கியத்திற்கான சிகிச்சை அளிப்பார்கள்.
உளவியல் ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்களை அணுகுவதில் இன்னமும் கூடப் பலர் தயக்கம் காட்டுகின்றனர். மன நோயாளி என்று சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்கிற அச்சம்தான் அதற்குக் காரணம். அந்த மனத்தடை உடைத்து எறியப்பட வேண்டும். உளவியல் ஆலோசனைகள் பெறுவது என்பதல்ல நோயின் அறிகுறி. ஆலோசனை பெறாமல் இருப்பதுதான் தன்னம்பிக்கையின்மையின், தாழ்வு மனப்பான்மையின் அறிகுறிகள். அதுதான் உண்மையான நோய் என்பதை உணர வேண்டும்.
முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் காலமானார்
By DIN | Published on : 05th December 2017 04:13 AM




முதுபெரும் ஹிந்தி நடிகர் சசி கபூர் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் திங்கள்கிழமை மாலை 5.20 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்னையால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக டயாலிசிஸ் சிகிச்சையை அவர் பல ஆண்டுகளாக பெற்று வந்தார்' என்றார்.
சசி கபூரின் உடலுக்கு செவ்வாய்க்கிழமை காலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனாக கடந்த 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி சசி கபூர் பிறந்தார். கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் சசி கபூர் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், "ஆக்' (1948), "ஆவாரா' (1951) ஆகியவை சசி கபூருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.
இதையடுத்து கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார். அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார்.
அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்: ஹிந்தி நடிகர் சசி கபூரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், சசி கபூர் நடித்த கதாபாத்திரங்கள் பலதலைமுறைகளுக்கும் நினைவு கூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சேலத்தில் முதலில் செல்வது யார்? என்பது தொடர்பாக அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
முதலில் செல்வது யார்? சேலத்தில் அரசு–தனியார் பஸ் டிரைவர்கள் திடீர் மோதல்
சேலம்,சேலம் பழைய பஸ்நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சிக்கு அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு அரசு டவுன் பஸ் ஒன்று கன்னங்குறிச்சிக்கு புறப்பட தயாராக இருந்தது. பஸ்சில் 45–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதேநேரத்தில் தனியார் பஸ் ஒன்றும் கன்னங்குறிச்சி செல்வதற்கு புறப்பட்டது. இதனால் முதலில் யார் செல்வது? என்பது தொடர்பாக இரண்டு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. இதனால் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி மோதிக்கொண்டனர். பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் அதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் பழைய பஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் உடனடியாக அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இந்த தகராறில் தனியார் பஸ் டிரைவர்கள் அருண், நித்திஸ், கண்டக்டர் கோபி ஆகியோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கலெக்டரை வசை பாடிய 'மாஜி' எம்.எல்.ஏ., கைது
Added : டிச 04, 2017

பெரம்பலுார்: அரியலுார் கலெக்டரை ஒருமையில் பேசிய, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ.,வை போலீசார் கைது செய்தனர். அரியலுார் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர், லட்சுமிபிரியா தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, காங்கிரஸ் முன்னாள், எம்.எல்.ஏ., நல்லமுத்து, 'மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை' எனக் கூறி, கலெக்டரை ஒருமையில் திட்டினார். கலெக்டர் உள்ளிட்ட அரசு அலுவலர்களை ஒருமையில் பேசியதுடன், பணி செய்ய விடாமல் தடுத்த நல்லமுத்துவை கைது செய்யுமாறு, கலெக்டர், லட்சுமிபிரியா, போலீசாருக்கு உத்தரவிட்டார். அரியலுார் போலீசார், நல்லமுத்துவை கைது செய்தனர்.
நல்லமுத்து, பெரம்பலுார் மாவட்டத்தைச் நேர்ந்தவர். இவர், 1984ல், பெரம்பலுார் சட்டசபை தொகுதியின் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். டாக்டரான இவர், தற்போது, அரியலுார் மாவட்டம், திருமானுாரில் கிளினிக் நடத்தி வருகிறார்.

NEWS TODAY 06.12.2025