Wednesday, December 27, 2017

Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம்- குருமூர்த்தி விளக்கம்

 Posted By: Lakshmi Priya Published: Tuesday, December 26, 2017, 20:09 [IST]

  சென்னை: Impotent என்று தான் கூறியது அரசியல் ரீதியாகதான் என்றும் மற்றவர்கள் தவறாக எடுத்து கொண்டால் அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் குருமூர்த்தி விளக்கமளித்துள்ளார். தினகரனின் ஆதரவாளர்களை 6 மாதத்துக்குப் பிறகு நீக்கியது குறித்து துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆண்மையற்றவர்கள் என அவர் பதிவிட்டிருந்தார். S. Gurumurthy says that Impotent means incapability இதற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் என்ற பதவிக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார்,

ஆண்மையில்லாதவர்கள்தான் ஆண்மை குறித்து பேசுவார்கள் என்று தெரிவித்தார். பொறுப்புணர்ந்து பேச வேண்டும், நான்காம் தர வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு குருமூர்த்தி பதிலளிக்கையில் எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்திருந்தார். இப்படியே இவர்களின் முற்றல் மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில் இம்போடன்ட் என்ற வார்த்தைக்கு குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் impotent என்று கூறியது அரசியல் ரீதியாகத்தான். மற்ற படி அவர்கள் எப்படி என்பது பற்றி எனக்கு அவசியம் இல்லை. Impotent என்றால் திறனற்றவர்கள் என்றுதான் அர்த்தம் உண்டு. வேறு அர்த்தம் அவர்கள் மனதில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. அரசியல் ரீதியாக அவர்கள் impotent தான். நான் நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/s-gurumurthy-says-that-impotent-means-incapability-306505.html
ஆடிட்டர் குருமூர்த்தி பதிவு: அ.தி.மு.க., அதிர்ச்சி

சென்னை : தினகரன் ஆதரவாளர்கள் நீக்கம் தொடர்பாக, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின், 'டுவிட்டர்' கருத்து பதிவு, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.




ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியை தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் இருந்து, தினகரன் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. 'ஆறு மாதங்களை தாண்டிய பின், வலுவில்லாதவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இவர்கள் சரியான திறமையற்ற தலைவர்கள்' என, 'துக்ளக்' ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான, குருமூர்த்தி, டுவிட்டரில் கருத்தை பதிவு செய்துள்ளார்.

தன்மானம்

இதில் திறமையற்றவர்கள் என்ற பொருள்படும், 'இம்போடென்ட்' என்ற ஆங்கில வார்த்தைக்கு, ஆண்மையற்றவர்கள் என்றுகூறியியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ''குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. எங்களுக்கு ஆண்மை உண்டு. அ.தி.மு.க., நிர்வாகிகள் காங்கேயம் காளைகள். தன்மானத்தை விட்டு கொடுக்க மாட்டோம். அ.தி.மு.க., பொங்கினால், என்ன நடக்கும் என்பதை, குருமூர்த்தி புரிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குருமூர்த்தி மேலும் சில கருத்துகளை, டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.அதில், கூறியிருப்பதாவது:

எந்த தவறும் இல்லை

என் மீது அரசு நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் கூறியுள்ளார். எத்தனையோ அரசுகள் எடுத்த நடவடிக்கையை  பார்த்திருக்கிறேன்; இதையும் சந்திப்பேன். அரசியல் ரீதியாக அவர்களை திறனற்றவர்கள் என்றேன். மற்றபடி, அவர்கள் எப்படி என்பது எனக்கு தெரியாது. நான் கூறியதன் அர்த்தம் அமைச்சருக்கு புரியவில்லை.அ.தி.மு.க., அமைச்சர் மட்டுமே, என் வார்த்தையை, ஆண்- - பெண் சம்பந்தப்படுத்தி அர்த்தம் கொடுக்கிறார். அதற்கு நான் பொறுப்பல்ல. நான் கூறியதில் எந்த தவறோ, கண்ணிய குறைவோ கிடையாது.இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்.
உ.பி., மருத்துவக்கல்லூரியில் பெல்லி டான்ஸ்.. ஆம்புலன்ஸில் மதுபாட்டில்..

Added : டிச 27, 2017 07:15




மீரட்: உ.பி., மருத்துவ கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழாவில் ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு மதுபான விருந்து பரிமாறப்பட்டதுடன் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

உ.பி., மாநிலம் மீரட் மருத்துவக்கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த1992ம் வருடம் இக்கல்லூரியில் பயின்ற டாக்டர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆம்புலன்ஸில் மதுபாட்டில்கள் கொண்டுவரப்பட்டு பரிமாறப்பட்டது. மேலும் ரஷ்ய பெல்லி டான்ஸ் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகியதையடுத்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இச்சம்பவம் குறித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: ஆவடி அருகே மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து - ரெயில் சேவை பாதிப்பு

பதிவு: டிசம்பர் 27, 2017 07:54

சென்னை செண்ட்ரலில் இருந்து பட்டாபிராம் நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.



சென்னை:

சென்னை செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை பட்டாபிராம் நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரெயில் ஆவடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது, ரெயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள், ரெயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம்; முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி


டிச.31-ல் ரஜினி புத்தாண்டு வாழ்த்து வேண்டுமானால் சொல்வார். அரசியல் பிரவேசம் பற்றி சொல்வாரா என்று கூற முடியாது. எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம் என்று நடிகர் எஸ்.வி சேகர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகரிடம் ரஜினியின் அறிவிப்பு குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

''ரஜினிக்கு அரசியல் புதிதல்ல, அதை அவர் அறியாதவரும் அல்ல. விஜயகாந்த் அரசியலுக்கு வருவதற்கு முன் மூன்று முறை தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். மோடி பிரதமராக போட்டியிடும் முன் 5 லட்சம் கிலோ மீட்டர் இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அது போன்று செயல்பட ரஜினியின் உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று எனக்கு தெரியவில்லை. 35 வயதில் விட்டதை 65 வயதில் பிடிக்க முடியுமா தெரியாது.

96-ல் கிடைத்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்தான் ரஜினிகாந்த். அவர் திரும்ப வருவாரா? மிக வேகமாக ஓடுவாரா? அதற்கு அவர் உடல்நிலை ஒத்துழைக்குமா எனக்கு தெரியாது. ஒரு எம்.எல்.ஏ ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டால் சரி. முதல்வராக வேண்டும் என்பது மிகப் பெரிய விஷயம். அவருக்கு கடவுள் அருள் இருந்தால் முடியும்.

ரஜினி 31-ந்தேதி செய்தி சொல்வார் என்று சொல்கிறார்கள், எனக்குத் தெரிந்து அவர் அரசியல் பிரவேசம் பற்றிச் சொல்வதை விட ஹாப்பி நியூ இயர் என்று தான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

ரஜினி திரைப்படம் வெளியாகும் நேரத்தில் அரசியல் பற்றிப் பேசுவார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனோ ஒவ்வொரு தடவையும் அப்படி நடக்கிறது. ரஜினி குறித்து அமிதாப் பேசலாம். தமிழருவி மணியன் பேசுவது நகைச்சுவையாக உள்ளது. அரசியல் பிரவேசம் அறிவிப்பு அவர் அறிவிக்கும் வரை உலகத்தின் மிகப் பெரிய சூதாட்டமாகத்தான் இருக்கும். ரஜினிக்கு பாஜக ஆதரவு தருமா என்பதை அமித்ஷா தான் முடிவு செய்வார்''.

இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சிறையில் எப்படி இருக்கிறார் லாலு பிரசாத்?

Published : 26 Dec 2017 11:32 IST
அமர்நாத் திவேரி



லாலு பிரசாத் (கோப்பு படம்)

ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத், கடந்த 1990-ம் ஆண்டு பிஹார் முதல்வராக இருந்தபோது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 5 வழக்குகள் பதிவான நிலையில், 2013-ல் ஒரு வழக்கில் லாலுவுக்கு சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, 2-வது வழக்கிலும் லாலு பிரசாத் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அவர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறை வளாகத்தில் உள்ள உயர் வகுப்பு அறையில் அடைக்கப்பட்டார்.

பிஹார் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பதால் அவருக்கு சிறையில் விஐபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. டிவி, செய்தித்தாள், கொசு வலை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவருக்கு கைதி எண் 3351 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறையின் உயர் வகுப்பில் லாலுவுடன் சேர்ந்து வேறு 6 அரசியல் விஐபிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்வான் லக்தா, தன்பாத் பாஜக எம்எல்ஏ சஞ்சய் சிங், லகர்தக்கா முன்னாள் எம்எல்ஏ கமல் கிஷோர் பகட், ஜார்கண்ட் முன்னாள் அமைச்சர் ராஜா பீட்டர், எம்எல்ஏ எனோஸ் எக்கா உள்ளிட்டோரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லாலுவுக்கு இரண்டு சப்பாத்தியும், சாதமும் கூடுதலாக முட்டைகோஸ் உள்ளிட்ட வேகவைத்த காய்கறி உணவாக வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, அவர் விருப்பமுடன் மென்று சுவைக்கும் ‘பான்’ வழங்கப்படுகிறது. அவரை சந்திப்பதற்காக, நேற்று (திங்கள்) உறவின்ரகள், வழக்கறிஞர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்தனர்.

அதிகமானோர் வந்தததால் அவர்களை உள்ளே விட சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. குறிப்பிட்ட சிலரை மட்டுமே அனுமதிக்க முடியும் என கூறியது. இதை கண்டித்து லாலுவின் ராஷட்ரீய ஜனதாள கட்சியினர் போராட்டம் நடத்தினர். எனினும் அனைவரையும் ஜெயிலுக்குள் அனுமதிபப்தில் சிக்கல் இருப்பதாக சிறை நிர்வாகம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவர் அன்னபூர்ணா சிங், லாலுவை சிறையில் பார்த்து விட்டு வந்து தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''லாலு பிரசாத் நலமுடன் இருக்கிறார். அவருக்கு தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றன. மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது'' எனக் கூறினார்.

கடந்த 2013-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டபோது, லாலு பிரசாத் மிகவும் பதற்றத்துடனும், கோபத்துடனும் இருந்தார். ஆனால் தற்போது அமைதியுடன் காணப்படுவதாக சிறை நிர்வாகிகள் தெரிவித்தனர். மற்ற கைதிகளுடன் கலகலப்புடன் பேசுவதாகவும் அவர்கள் கூறினர்.

அதேசமயம் லாலு பிரசாத்துக்கு, 2014-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதால், அவரது உடல்நலத்தில் சிறை நிர்வாகம் கவனத்துடன் இருக்க வேண்டும் என, அவரது மனைவியும், பிஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேசமயம் கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பணிகளில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஈடுபட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி எதிரொலி: அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனை - கண்கலங்கிய அமைச்சர்கள்.. கதறி அழுத தொண்டர்கள்

Published : 26 Dec 2017 08:22 IST
சென்னை




அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் தோல்வியடைந்த இ.மதுசூதனன் ஆகியோர் வந்தபோது கதறி அழுத தொண்டர்கள் | படங்கள்: ம.பிரபு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் பங்கேற்ற சில அமைச்சர்கள் கண் கலங்கினர். தொண்டர்கள் கதறி அழுதனர்.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஆளும் கட்சி யான அதிமுக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டும் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமே பிடித்தது. இதனால், அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்று பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, அவைத் தலைவர் இ.மதுசூதனன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார்,எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரது முகத்திலும் ஆர்.கே.நகர் தோல்வியால் ஏற்பட்ட சோகத்தை காண முடிந்தது. பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டத்துக்கு வந்தபோது, அங்கே திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பலர் கதறி அழுதனர். கூட்டத்திலும் சில அமைச்சர்கள் கண் கலங்கியுள்ளனர். நிர்வாகிகள் சிலர் கதறி அழுதனர். அவர்களை ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தேற்றினர்.

ஆர்.கே.நகர் தோல்விக்கான காரணத்தைவிடவும், தோல்விக்கு பிறகு என்னென்ன நடக்கலாம், அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்றுதான் அதிகமாக விவாதித்துள்ளனர். தினகரன் பக்கம் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும், “மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் தினகரனால் ஆட்சி அமைக்க முடியாது. பிரதமர் மோடியின் துணையின்றி அவர் ஆட்சி அமைக்க முயன்றால் அது தேர்தலுக்கே வழிவகுக்கும். மத்திய அரசின் துணை இருப்பதால் ஆட்சி கவிழாது” என நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டினர்.

5 அமைச்சர்கள் புறக்கணிப்பு?

ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பாஸ்கர் ஆகியோர் புறக்கணித்தனர். இது அதிமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

திருவில்லிபுத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘நான் ஊர் திரும்பிய பிறகு கூட்டத்துக்கான அழைப்பு வந்தது. உடனடியாக திரும்ப முடியாது என்பதால், சரி அங்கேயே இருங்கள் என்று கூறிவிட்டனர். தேர்தலில் தோல்வி அடைந்ததால் ஒரு இயக்கம் அழிந்துவிடாது’’ என்றார்.

திண்டுக்கல் வந்திருந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, ‘‘ முதல்வர் அனுமதியின்பேரில்தான் நானும், செய்தித்துறை அமைச்சர் கடம் பூர் ராஜுவும் டிசம்பர் 31-ம் தேதி நடக்கவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை பார்வையிட வந்துள்ளோம்’’ என்றார்

NEWS TODAY 29.01.2026