Wednesday, December 27, 2017

'நீட்' தேர்வில் மாற்றம் : கருத்து கூற வாய்ப்பு

Added : டிச 27, 2017 00:29

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார
அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு களுக்கு, நீட் தேர்வின்படி, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. தற்போது, அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும், இந்தத் தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்நிலையில், 2018 முதல், உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வில் மாற்றம் செய்ய, மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனை மற்றும் கருத்துகளை, mepsection-mohfw@gov.in என்ற, இணையத்தில், ஜன., 5க்குள் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

புத்தாண்டில் ரூ.200 கோடி மது விற்பனைக்கு இலக்கு

Added : டிச 27, 2017 01:40

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, 200 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், தன் மது கடைகளில், பீர் மற்றும், ஐ.எம்.எப்.எல்., எனப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய்... விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகளும் விற்பனையாகின்றன. சபரிமலை சீசனால், இரு மாதங்களாக, டாஸ்மாக் விற்பனை குறைவாக இருந்தது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு புத்தாண்டு தினத்தின் போது, செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப்புழக்கம் குறைவாக இருந்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில், வழக்கமான விற்பனை தான் இருந்தது. மழை மற்றும் சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், நவம்பர் முதல் தற்போது வரை, மது விற்பனை சற்று குறைவாக உள்ளது. கிறிஸ்துமஸ் துவங்கி, ஆங்கில புத்தாண்டு வரை, மது விற்பனை நன்றாக இருக்கும்.
இதனால், கடைகளுக்கு, ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனுப்பப்பட்டு
வருகின்றன. டிச., 31 விற்பனைக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை, விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்காக, கூடுதலாக, 'பீர்' வகைகள் கொள்முதல் செய்யப் பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இப்படியும் கோரிக்கை : புத்தாண்டிற்கு, மது விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, சங்கத்தின் மாநில அமைப்பாளர், ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தாண்டையொட்டி, வரும், 31 மற்றும், 1ம் தேதிகளில் மது விற்பனை அதிகரிக்கும். இந்த நேரத்தில் சிலர், மதுக்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதால், மதுகுடிப்போர் பாதிக்கப்படுகின்றனர். புத்தாண்டின்போது, மதுக்களின் விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
வெளிநாடுகளுக்கு விமான சுற்றுலா

Added : டிச 27, 2017 00:39

  சென்னை: புத்தாண்டையொட்டி, பிரான்ஸ், ஆஸ்திரியா உட்பட, எட்டு நாடுகளுக்கு, இந்தியன் ரயில்வே உணவு, சுற்றுலா வளர்ச்சி கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து, எட்டு நாடுகளுக்கு, 2018 மார்ச், 23ல், புறப்படும் வகையில், சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், லண்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் இத்தாலியில் வாடிகன் நகருக்கும் சென்று வரலாம். ஒருவருக்கு, 2.72 லட்சம் ரூபாய் கட்டணம். மேலும் தகவல்களுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 98409 02918, 90031 40718 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
ஜன்னலோர இருக்கைக்கு ரயிலில் கூடுதல் கட்டணம்?

Added : டிச 27, 2017 01:57 






புதுடில்லி : ரயில்களில், ஜன்னலோர இருக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

கடந்த, 2016 செப்டம்பரில், ரயில்களில், 'பிளக்சி பேர்' எனப்படும், பண்டிகை நாட்கள் மற்றும் கோடை விடுமுறையில், பயணியரின் கூட்டத்திற்கேற்ப கட்டணங்களை உயர்த்தும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களில், முதல், 30 சதவீத இருக்கைகளுக்கு, வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும்.அதன்பின், ஒவ்வொரு, 10 சதவீத இருக்கைகளுக்கும், 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். பயண நாள் வரையில், 50 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படும்.

இந்நிலையில், அடுத்தபடியாக, ஜன்னலோர இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும், 'சைடு பெர்த்' எனப்படும், பக்கவாட்டு படுக்கைக்கான கட்டணத்தை குறைக்கவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசியலில் குதிப்பதா? இல்லையா? 31-ந்தேதி அறிவிப்பேன் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

அரசியலில் குதிப்பதா? இல்லையா? 31-ந்தேதி அறிவிப்பேன் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதை 31-ந்தேதி அறிவிப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 
 
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று காஞ்சீபுரம், திருவள்ளூர், கிருஷ்ண கிரி, தர்மபுரி, நீலகிரி மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அடையாள அட்டையுடன் வந்த ரசிகர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அடையாள அட்டை இல்லாத ரசிகர்களும் திரண்டு வந்தார்கள். அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அந்த ரசிகர்கள் மண்டப வாயிலில் நின்று ரஜினிகாந்தை வாழ்த்தியும், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்புவிடுத்தும் கோஷம் போட்டபடி இருந்தனர்.

ராகவேந்திரா மண்டபத்தை சுற்றிலும் “வருங் கால முதல்வரே, முடக் கத்துடன் இருக்கும் தமிழகத்தை அடக்கத்துடன் ஆட்சி செய்ய வா, புனித போர் முழக்கத்தால் விடியும் வேளை வரப்போகுது, போருக்கு தயாராகும் மக்கள் சக்தியே” என்றெல்லாம் சுவரொட் டிகள் ஒட்டி இருந்தனர்.

ரசிகர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

“என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களே உங்களுக்கு என் அன்பான வணக்கம். நான் கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு மீண்டும் இரண்டு மாதம் கழித்து விடுபட்ட ரசிகர்களை சந்திப்பது என்று முடிவு செய்து இருந்தேன். ஆனால் ‘காலா’ படப்பிடிப்பால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு சந்திக்க முடியாமல் போனது.

அதன் பிறகு மழை வந்தது. தொடர்ந்து மண்டபமும் காலியாக இல்லை. அதனால் அப்படியே தள்ளிப்போய் இப்போது அந்த நல்ல நேரம் வந்து இருக்கிறது. உங்களையெல்லாம் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். உங்களை பார்க்கும்போது எனக்கு புத்துணர்வு ஏற்படுகிறது.

எனது பிறந்த நாளில் 28, 30 வருடமாக நான் வீட்டில் இருப்பது இல்லை. அன்று மட்டும் தனியாக இருக்க ஆசைப்படுவேன்.

அதனால் வெளியூர் போய்விடுவேன். ஆனால் இந்த பிறந்த நாளுக்கு எனது வீட்டுக்கு நிறைய ரசிகர்கள் வந்து ஏமாற்றத்தோடு திரும்பியதாக கேள்விப்பட்டேன். வருத்தமாக இருந்தது. என்னை தவறாக நினைக்க வேண்டாம். நிறையபேர் என்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். வரும் காலங்களில் அதை பார்க்கலாம்.

அரசியல் விஷயமாக நான் என்ன சொல்லப்போகிறேன். எனது முடிவு என்ன? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ ஊடகங்களுக்கு ரொம்ப ஆர்வம். போர் வரும்போது பார்க்கலாம் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். போர் வந்தால்தான் பார்ப்பீர்களா? போர் வந்து விட்டதா? ஏன் சேருகிறார்கள், இழுக்கிறார்கள். ‘பில்டப்’ கொடுக்கிறார்கள், என்றெல்லாம் பேசப்படுகிறது.

அரசியலுக்கு நான் புதுசு இல்லை. 1996-ல் இருந்தே அரசியலுக்கு நான் வந்து இருப்பதால் அதில் என்ன கஷ்ட நஷ்டங்கள் இருக்கிறது, அதில் இருக்கும் ஆழம் என்ன? என்பதையெல்லாம் தெரிந்து இருக்கிறேன். அதனால்தான் தயங்குகிறேன். தெரியாமல் இருந்திருந்தால் ‘ஓ.கே’ என்று சொல்லி வந்து விடலாம்.

யுத்தத்திற்கு போனால், ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பதற்கு வீரம் மட்டும் போதாது. வியூகம் வேண்டும்.

அரசியல் விஷயத்தில் நான் இழுப்பதாக சொல்கிறார்கள். வருகிற 31-ந்தேதி எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பற்றி தெரிவிக்கிறேன். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவில்லை. 31-ந்தேதி நான் என்ன முடிவு எடுக்கப்போகிறேன் என்பதை சொல்லப்போகிறேன்.

ரசிகர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு முக்கியம். குடும்பம், தாய், தந்தை, குழந்தைகளை முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். பசங்களை நன்றாக படிக்க வையுங்கள். நிறைய ஊடகங்கள் வந்து விட்டன. சமூக ஊடகங்களும் வந்து விட்டன. எதிர்மறை சிந்தனை, எதிர்மறை விஷயங்களை மனதுக்குள் எடுத்துக்கொள்ளாதீர்கள். நேர்மறையாகவே சிந்தியுங்கள்.

அப்பாவை பையன் கொலை செய்தான். பையன் அம்மாவை கொலை செய்தான். என்பதையெல்லாம் நீங்கள் பார்க்காதீர்கள். அது மனதை கண்டிப்பாக பாதிக்கும். வெளியில் போய் வந்து முகத்தை துடைத்தால் அழுக்கு இருப்பது தெரியும். அதே மாதிரி எதிர்மறை சிந்தனைகள் இருந்தால் அவை மனதில் தங்கி விடும்.

அதை எடுக்க வேண்டும் என்றால் தியானம் செய்ய வேண்டும் அல்லது நல்ல கருத்துகளை உள்ளே வைக்க வேண்டும். எனவே எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Tuesday, December 26, 2017

Excess Payment Can’t Be Recovered From Pensionary Benefits If There Is No Fault On Employee’s Part: Calcutta HC [Read Judgment] | Live Law

Excess Payment Can’t Be Recovered From Pensionary Benefits If There Is No Fault On Employee’s Part: Calcutta HC [Read Judgment] | Live Law: The Calcutta High Court, in Shiba Rani Maity vs. The State of West Bengal, has held that excess payments cannot be recovered from pensionary benefits of an employee, if the excess payment was not made on account of any fault, fraud or misrepresentation on part of the employee. Justice Arijit Banerjee made this observation while hearing …
அதோ அந்தப் பறவைப் போல வாழ வேண்டும்

Published : 22 Dec 2017 11:26 IST
மிது



உலகில் விந்தையான மனிதர்களுக்கு அளவே இல்லை. விலங்குகள் மீதான பாசத்தால், சிலர் விந்தையான விபரீதமான செயல்களைக்கூட செய்பவர்கள் உண்டு. அப்படி விசித்திரமான செய்கையால் உலக அளவில் பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இவர்களில் இங்கிலாந்தில் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் டெட் ரிச்சர்ட்ஸும் ஒருவர்.

இவர் ஒரு பறவைப் பிரியர். பறவையின் மீது அளவற்ற பிரியத்தால், தனது தோற்றத்தையே பறவை போல மாற்ற முடிவு செய்தவர். இதற்காக இவர் முதலில் தனது முகத்திலும் புருவங்களிலும் பறவைகளைப் போல் பச்சை குத்திக்கொண்டார்.


அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, ஓரிரு நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் தனது காதுகளையும் அகற்றிக்கொண்டார். அடுத்து தனது மூக்கையும் பறவைகளைப் போல் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அதுவும் கிளிகள் என்றால், இவருக்கு கொள்ளைப் பிரியம். அதனால், பறவை அலங்காரங்களில் கிளி அலங்காரத்துக்கு இவர் முன்னுரிமை அளிக்கிறார். “பறவைகளுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். என்னுடைய கிளி அலங்காரத்தைப் பார்த்து என்னை பலரும் ‘டெட் பேரட்மேன்’ என்றே அழைக்கிறார்கள்.

எனக்கு உறவினர்கள் இருந்தாலும், என்னுடைய குடும்பம் பறவைகள்தான்” என்று பறவைப் புராணம் பாடுகிறார் 57 வயதான டெட் ரிச்சர்ட்ஸ்.

இதுவரை உடலில் 110 பறவை டாட்டூகளையும், முகத்தில் 56 வித்தியாசமான வளையங்களையும் பொருத்திக்கொண்டு பறவையைப்போலவே காட்சியளிக்கிறார் இந்தப் பறவைப் பிரியர்!

NEWS TODAY 29.01.2026