Saturday, May 26, 2018

தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல் பால் கொடுத்த தாயும், குடித்த குழந்தையும் பலி

Published : 25 May 2018 19:01 IST

பிடிஐ முசாபர்நகர்
 



கோப்புப்படம்

தூங்கும்போது பாம்பு கடித்தது தெரியாமல், அழுத குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில், மண்டலா கிராமத்தைச் சேர்ந்த 35 வயது பெண், அவரின் இரண்டரை வயது குழந்தையுடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரை பாம்பு கடித்துள்ளது.

அதன்பின் சிறிது நேரத்தில் குழந்தை பசியெடுத்து பாலுக்கு அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கும் அந்த பெண் பாலூட்டியுள்ளார்.

ஆனால், சிறிது நேரத்தில் இருவரும் உயிருக்கு போராடவே, அவர்களை உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தாய் உயிரிழந்தார். சிகிச்சை பலன்அளிக்காமல் குழந்தை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து முசாபர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
2ஜி மேல்முறையீட்டு வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா?-உயர் நீதிமன்றதில் மத்திய அரசு புகார்

Published : 25 May 2018 20:37 IST

புதுடெல்லி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 10 பேர், 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே மேல்முறையீடு செய்தன. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.பி. கர்க் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், டெல்லி உயர் நீதிமன்ற நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரினர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்கை தாமதப்படுத்தும் உத்தியை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதியும் அமலாக்கத்துறை மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதியும் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.
இன்ஜி., கவுன்சிலிங்: ஜூன் 2 வரை அவகாசம்

Added : மே 25, 2018 23:55

சென்னை, அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம், ஜூன், 2 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு, மே, 3ல், துவங்கியது.நேற்று மாலை வரை, 1.15 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஆன்லைன் பதிவுக்கான அவகாசம், ஜூன், 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன், 2 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. அனைத்து மாவட்ட மாணவர்களும், இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'என்னத்த சொல்றது...'கண்ணீர் சிந்திய ஜெ., தோழி

Added : மே 25, 2018 23:48 | 

 


சென்னை, மே 26-''ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை, அவரை பார்க்க அனுமதிக்கவில்லை,'' என, அவரின் பள்ளித் தோழி, பதர் சயீத் கண்ணீர் மல்க கூறினார்.ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது. இதுவரை, 50க்கும் மேற்பட்டோரிடம், விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்று, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல், ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத் ஆகியோர், விசாரணை கமிஷனில் ஆஜராகினர். காலை, 10:30 மணி முதல், மதியம் 12:30 வரை, இருவரிடமும் விசாரணை நடந்தது.விசாரணை குறித்து, பதர் சயீத் கூறுகையில், ''ஜெயலலிதாவின் பள்ளித்தோழி என்ற முறையில், என்னை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர் உயிரோடு இருந்தபோது, அவரை பார்க்க அனுமதி மறுத்தனர். மருத்துவமனையில் இருந்த போதும், பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் இறந்த பின், நான் என்னத்தை சொல்வது; சொல்வதற்கு ஒன்றுமில்லை...'' என, கண்ணீர் சிந்தினார். சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், நேற்றைய விசாரணைக்கு வரவில்லை. சசிகலா உறவினரான டாக்டர் சிவகுமார், ஜெ., உதவியாளர் பூங்குன்றன், பாதுகாவலராக இருந்த, கூடுதல் எஸ்.பி., வீரபெருமாள், ராஜ்பவன் உதவிப்பிரிவு அலுவலர் சீனிவாசன், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தாஷீலா நாயர் ஆகியோரிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், இன்று குறுக்கு விசாரணை நடத்த உள்ளனர்.

'அது இறைவனுக்கு தான் தெரியும்!'

பொன்.மாணிக்கவேல், 2011 செப்டம்பரில், உளவுத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்தார். டிசம்பரில், ரயில்வே போலீசுக்கு மாற்றப்பட்டார். அவர், உளவுத்துறையில் இருந்தபோது தான், ஜெயலலிதாவுக்கு எதிராக, சசிகலா குடும்பத்தினர் திட்டம் தீட்டியதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில், சசிகலா குடும்பத்தை, போயஸ் கார்டனில் இருந்து, ஜெ., வெளியேற்றினார்.இது தொடர்பாக, நேற்றைய விசாரணையில், பொன்.மாணிக்கவேலுவிடம், நீதிபதி கேட்டதற்கு, தான் பணியிலிருந்த போது, அவ்வாறு தகவல் எதுவும் கொடுக்கவில்லை என, கூறியுள்ளார்.ஜெ., தோழி பதர் சயீத்திடம், நீதிபதி ஆறுமுகசாமி, கமிஷன் வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர், பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். பெரும்பாலான கேள்விகளுக்கு, பதர் சயீத் உணர்ச்சி வசப்பட்டுஉள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: என் மீதிருந்த நம்பிக்கை காரணமாக, சிறுபான்மை கமிஷன் தலைவராக, 1991ல், ஜெயலலிதா என்னை நியமித்தார். அதன்பின், அடுத்தடுத்து பதவிகளை வழங்கினார். 2006ல், திருவல்லிக்கேணி வேட்பாளராக நிறுத்தி, வெற்றி பெற வைத்தார். 2011 வரை, பல முறை, ஜெ.,வை சந்தித்தேன். எப்போது வேண்டுமானாலும், அவரை சந்திக்க முடிந்தது.அதன்பின், என்னை அணுகவிடவில்லை. பலமுறை முயற்சித்தும் பார்க்க விடவில்லை. அவரின் உதவியாளர் பூங்குன்றனிடம், பல முறை அனுமதி கேட்டு, கடிதம் கொடுத்தேன். 'வேண்டுமானால் சாலையில் நில்லுங்கள்; காரில் வரும்போது பார்த்தால், உங்களிடம் பேசுவார்' என, கூறினார். அதில், எனக்கு உடன்பாடில்லை.கடந்த, 2011ல் இருந்து, ஜெ., இறக்கும் வரை, பல முறை அவரை சந்திக்க முயற்சித்தும், முயற்சி கைகூடவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோதும், அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. ஒரு முறை மட்டும், இரண்டாவது தளம் வரை அனுமதித்தனர். அங்கு, சுகாதாரத்துறை செயலரை சந்தித்து பேசினேன். அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஜெ., இருந்த அறையை பார்த்து, வணங்கிவிட்டு வந்தேன்.இவ்வாறு பதர் சயீத் கூறியுள்ளார்.'ஜெ.,வை சந்திக்க விடாமல் தடுத்தது யார்' என, கமிஷன் வழக்கறிஞர் பார்த்தசாரதி கேட்டதற்கு, 'அது, இறைவனுக்கு தான் தெரியும்' என, பதர் சயீத் பதில் அளித்துள்ளார்.
நெல்லை கலெக்டர் பொறுப்பேற்பு

Added : மே 25, 2018 23:12 



  -திருநெல்வேலி,நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக ஷில்பா பொறுப்பேற்றார்.திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்துாரி, துாத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.2011ல் திருச்சியில் உதவிகலெக்டராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.நேற்று அவர் நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது கலெக்டர் இவர்.

முதல் பெண் கலெக்டரும் இவர்தான்.

நெல்லை மாவட்ட புதிய கலெக்டராக ஷில்பா பொறுப்பேற்றார்.திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்துாரி, துாத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து நெல்லை கலெக்டராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.2011ல் திருச்சியில் உதவிகலெக்டராக பொறுப்பேற்றார். சென்னை மாநகராட்சியில் துணை கமிஷனராக பணியாற்றியுள்ளார்.நேற்று அவர் நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது கலெக்டர் இவர்.
பழநி வைகாசி விசாகம் நாளை திருக்கல்யாணம் மே 28ல் தேரோட்டம்

Added : மே 25, 2018 22:40




பழநி, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 'வைகாசி விசாக' விழாவை முன்னிட்டு, நாளை (மே 27) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் (மே 28) வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கிறது.வசந்த உற்ஸவவிழா எனப்படும், வைகாசி விசாக விழா பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மே 22 முதல் 31 வரைபத்து நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை ஆறாம் நாள் இரவு 7:00 மணிக்கு முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மே 28ல் வைகாசி விசாகத்தன்று பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் மாலை 4:30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.அன்று மலைக்கோயில் அதிகாலை 4:00 மணி நடைதிறக்கப்படும். விழா நாட்களில் சுவாமி தங்கமயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளுகிறார்.பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
ஆரம்பமே அமர்க்களம் வலுவான சாரலுடன் துவங்கிய தென்மேற்கு பருவமழை

Added : மே 25, 2018 22:41

தேவாரம்,தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவக்கத்தின் அறிகுறியாக நேற்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் பலத்த சாரல் பெய்தது.தேனி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியிலிருந்து கோடை மழை பரவலாக பெய்தது. போடி, குச்சனுார் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கண்மாய்கள் நிறைந்தன. சில நாட்களாக கோடை மழையின் தாக்கம் குறைந்திருந்த நிலையில் , நேற்று காலை 11:00 மணிக்கு மேல், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் சாரல் பெய்தது. உத்தமபாளையத்தில் பிற்பகலில் 13 மி.மீ., மழை பதிவானது.விவசாயிகள் கூறுகையில், ''மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவை தருவது தென்மேற்கு பருவமழை. கடந்த மூன்று ஆண்டுகளாக உரிய அளவு பெய்யாததால் வறட்சி தலை துாக்கியது. இந்தாண்டு வழக்கத்திற்கு முன்பே மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. காற்று வீசாமல் வலுவான சாரல் பெய்ததால், இந்தாண்டு வழக்கத்தை விட கூடுதல் மழையிருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.'', என்றனர்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...