Saturday, May 26, 2018

2ஜி மேல்முறையீட்டு வழக்கு தாமதப்படுத்தப்படுகிறதா?-உயர் நீதிமன்றதில் மத்திய அரசு புகார்

Published : 25 May 2018 20:37 IST

புதுடெல்லி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 10 பேர், 9 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நிராகரித்தது. அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே மேல்முறையீடு செய்தன. இதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.பி. கர்க் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், டெல்லி உயர் நீதிமன்ற நோட்டீஸ் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரினர்.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “வழக்கை தாமதப்படுத்தும் உத்தியை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்” என குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார். சிபிஐ மேல்முறையீட்டு மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 2-ம் தேதியும் அமலாக்கத்துறை மனு மீதான அடுத்த விசாரணை ஆகஸ்ட் 6-ம் தேதியும் நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...