Friday, July 20, 2018

Bar on women for Sabarimala purity, temple board tells SC

AmitAnand.Choudhary@timesgroup.com

New Delhi:20.07.2018

Travancore Devaswom Board, which manages the Sabarimala temple, on Thursday justified the ban on entry of women in the menstruating age group of 10-50 years into the temple and told the Supreme Court that the restriction was in place to maintain purity of the temple which depicted “perennial brahmacharya (celibacy)”.

Appearing before a constitution bench of Chief Justice Dipak Misra and Justices R F Nariman, A M Khanwilkar, D Y Chandrachud and Indu Malhotra, the board’s counsel Abhishek Manu Singhvi argued it was wrong to say that there was gender discrimination and ban on entry of women as there was just a restriction on entry of women in the age group of 10-50 years. He said people from all castes and religions were allowed to enter the temple as were women below 10 years and above 50 years.

He said there were thousands of Ayyappa temples across the country and such restriction was not there in any of them and women, irrespective of their age, could visit those temples.

“Why do women want to visit only Sabarimala temple? There are many other temples of Lord Ayyappa and they can go there. There is no such restriction. Sabarimala temple is supposed to depict ‘naishtika brahmacharya’, his great powers deriving specifically from his ascetic endeavours, in particular from abstention from sexual activities, and the practice is also followed by pilgrims before and during the pilgrimage to Sabarimala,” Singhvi said.

The bench, however, said it was devotion that drove people to go to a particular temple and it was the choice of devotees. “Once you say a person is not allowed to visit the temple, then you have to justify the prohibition,” the court said. It also questioned why the board’s notification only talked about age restriction when the purpose was to restrict menstruating women from entering the temple.

The board said the court would have to go into history and mythology to find out what set this temple apart from others and to find out why women in the reproductive age group, that is between 10 and 50 years, were not allowed.

The hearing remained inconclusive and will resume on July 24.



‘TEMPLE DEPICTS CELIBACY’

Thursday, July 19, 2018

`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு


மு.பார்த்தசாரதி

``சென்னையைச் சேர்ந்த 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்'' எனச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறினார்.



சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமிக்குக் கடந்த ஏழு மாதங்களாக அந்தக் குடியிருப்பில் பணியாற்றும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸிடம் அளித்த புகாரின் பேரில் 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியைத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இந்தப் பாதகச் செயலுக்கு எதிராகத் தமிழகத்திலுள்ள பலரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், ``7-ம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடந்த 7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகப்போவதில்லை எனச் சங்கம் சார்பில் முடிவெடுத்திருக்கிறோம். அதோடு, இந்த முடிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள சங்கங்களுக்கும் பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த 17 பேரும் அங்கிருந்த வழக்கறிஞர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல!


தமிழ்ப்பிரபா

இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.




ஒரு சிறுமியிடம் பதினேழு பேருக்கும் மேற்பட்டோர் வல்லுறவு கொண்டிருக்கும் செய்தி பல உண்மைகளை மீண்டும் நமக்கு நினைவுக்குக் கொண்டுவருகின்றன. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையும், சட்டமும் இருக்கிறது. அவர்கள் இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஒன்றைச் செய்வதில் மட்டுமே நாம் இந்த விஷயத்தில் தன்னிறைவு அடைந்துவிடப் போகிறோமா? இனி பெண் இனத்துக்குக் கொடுமை இழப்பவர்கள் யாரும் இல்லாமல் ஆகி விடுவார்களா?



தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களுக்கு மட்டும்தான் குற்றவாளி என்று பெயர். ஆனால், இன்னும் மாட்டிக்கொள்ளாமல் சராசரி மனிதன் என்கிற போர்வையில் விதவிதமான துன்புறுத்தல்களை பலபேர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதினேழுபேரும் ஓரிரு தினங்களுக்கு முன்பு அன்பான அப்பாவாக, தோழனாக, தாத்தாவாக நடமாடிக் கொண்டிருந்தவர்கள்தானே? இவ்வளவு வக்கிரமான மனப்போக்கு ஆணுக்கு எங்கிருந்து உருவானது, அவர்களுக்குள் அந்த எண்ணத்தை எது வலுப்படுத்துகிறது எனச் சிந்திக்கிறபோது பல்வேறு வகையான சமூகக் காரணிகள் நமக்குக் கிடைக்கின்றன. எல்லா ஆண்களையும் பொதுமைப்படுத்தவில்லை எனினும் இதற்கு நாம் எல்லோரும் கூட்டுப் பொறுப்பு ஏற்றே ஆக வேண்டும். அந்தக் குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்திய அனைவர்க்கும் உள்ள ஒற்றுமை, அவர்களனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்கிற தகவல் உணர்த்துவதை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது.

தன் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு உடலோ, வயதோ, பாலினமோ, உறவுமுறையோ முக்கியமில்லை என்பதை ஆணாதிக்கச் சமூகம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாகவே நீடிக்கும் இந்தக் கசப்பான உண்மையை நம்மிடையே வைத்துக்கொண்டு பிறகு எதன் அடிப்படையிலும் நாம் நாகரிகமடைந்துவிட்டோம் எனச் சொல்ல முடியாது.

செவித்திறனற்ற, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சரியாகச் சொல்லக் கூடத் தெரியாத ஒரு சிறுமியை, தன் பேத்தி வயதுடைய குழந்தையைத் தடவிப்பார்க்க வேண்டுமென 66 வயதுள்ள ஒரு பெரியவருக்கு எப்படித் தோன்றுகிறது? அந்தப் பதினேழு பேரில் ஏழுபேர் ஐம்பது வயதுக்கு மேற்போட்டோர் என்கிற அதிர்ச்சி நம் வீட்டுப் பிள்ளைகளின் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தத் தோன்றுகிறது. தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு வடிகாலும் தெரியாமல் இறுகிப்போன ஒரு சூழலில் காமவெறியுடன் வாழ்பவர்களை எப்படி இணங்காணுவது.

அந்தச் சிறுமி வசித்த அப்பார்ட்மென்ட்டில் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்திருக்கின்றன. அதில் 30 சதவிகிதம் குடும்பங்களால் நிரம்பியிருக்கிறது. என்ன இருந்து என்ன பயன்? ஏழுமாதமாக ஒரு சிறுமியை இத்தனை பேர் அதே வளாகத்தில் வைத்தே வல்லுறவு கொண்டிருக்கிறார்கள். மட்டுமன்றி, செய்கின்ற தவறை வீடியோ எடுத்து ரசிக்கும் அளவுக்கு குரூரமான மனம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தச் சூழல் அவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது.



அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கும் அப்பார்ட்மென்ட் கலாசாரத்துக்கு இன்னும் எத்தனை பேரை பலிக்கொடுக்கப் போகிறோம்?

அந்தச் சிறுமி, தனக்கு நடந்ததைக் கூறுவதற்கு ஊரிலிருந்து தன் அக்கா வரும்வரை ஐந்து மாதம் காத்திருந்திருக்கிறாள். வீட்டிலுள்ள மற்றவர்களிடம் அவள் அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அவளை தடுத்தது எது என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

`குட் டச் பேட் டச்' என்கிற தொடு உணர்வுகள் பற்றிய புரிதல் எல்லா வகையான குடும்பங்களிலும் பரவலாகத் தெரிய வர வேண்டும். தனக்கு எது நடந்தாலும் வெளிப்படையாக அதைச் சொல்லுகிற தைரியத்தை குழந்தைகளிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தன்னையொரு ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே ஒருவன் பார்க்கிறான் என்றும், பல வகையான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துகிறான் என்றும் பெண்களுக்குத் தெரியும். அதை வெளியே சொல்லாமல் பெண் சமூகம் தயங்குவது எதனால் என யோசிப்பதிலிருந்துதான் இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் நகர முடியும்.

மாறாக, குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென நாம் உணர்ச்சிவயப்படுவதும், இவர்களுக்காக யாரும் வாதாடக் கூடாது என வழக்கறிஞர் சங்கர் அறிக்கை விட்டிருப்பதும் தற்காலிகமாக இதைக் கடந்துபோகும் எதிர்வினைகள் மட்டுமே. இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும்.
வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்..! - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ


கார்த்திக்.சி

அமெரிக்காவின், அலபாமா நகரில், வேலையில் சேர்வதற்காக 20 மைல் தூரம் நடந்துசென்றவருக்கு, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அவரது சொந்தக் காரை பரிசாக அளித்துள்ளார்.



அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் ரிப்பேராக இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, வேலையில் சேர்வதற்காக அந்த இரவே நடக்கத் தொடங்கினார். அவர் வசித்து வந்தது நகருக்கு சற்று வெளியே என்பதால் வேறு வாகன வசதி இல்லை. அவரிடம் காரை சரி செய்யும் அளவுக்கு பணமும் இல்லை. அதனால் இரவு முழுவதும் சுமார் 20 மைல் தூரம் நடந்து, ஹோம்உட் என்ற பகுதியிலிருந்து பெல்ஹாம் என்ற பகுதிவரை நடந்துள்ளார்.



அப்போது, அந்த வழியாக வந்த பெல்ஹாம் பகுதி காவல்துறையினர், காவல்துறை வாகனத்தில் அழைத்துச்சென்றனர். அவருக்கு, உணவு அளித்து, ஜெனிஃபர் லேமி என்பவரது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். வால்டர் கார், நடந்த வந்த கதையைக் கேட்ட ஜெனிஃபர், அந்தச் சம்பவத்தைப் பற்றி உருக்கமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவருடைய பதிவு, ஒரே நாளில் வைரலானது. அந்தப் பதிவை, வால்டர் கார், வேலைக்குச் சேர்ந்த பெல்ஹூப்ஸ் மூவிங் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும் பார்த்துள்ளார். உடனே வால்டரை, அழைத்த நிறுவன தலைமைச் செயல் அதிகாரி, வால்டருக்கு அவருடைய சொந்தக் காரை பரிசாக அளித்தார்.
``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்!’’ - பிரியங்காவின் தோழிகள்


வெ.வித்யா காயத்ரி

``சட்டென ஏதோ ஒரு கோபத்தில் இந்த முடிவை எடுத்திருக்கணும். முந்தாநாள்கூட எங்ககிட்ட பேசினா. ஒருநாள் விட்டு ஒருநாள் வாட்ஸ்அப் குரூப்ல பேசிப்போம். நேற்று பேசியிருந்தால்கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாளோன்னு தோணுது."

சின்னத்திரை நடிகைகளின் தற்கொலைப் பட்டியலில் இன்று மற்றொரு பெயர் இடம்பிடித்து அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. 'வம்சம்' சீரியலில் ஜோதிகா என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகை பிரியங்கா, தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜீ தமிழ், சன் டிவி, வேந்தர் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் வீஜேவாக பணியாற்றியவர். அவரின் இந்த முடிவு சின்னத்திரையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையில் மட்டுமல்ல; படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாக வலம்வந்தவர் பிரியங்கா. 'வம்சம்' சீரியலில் அவருடன் நடித்த கிருத்திகா, கலங்கிய கண்களுடன் நம்மிடம் பேசினார்.



``செட்டில் ரொம்ப சுட்டியான பொண்ணு பிரியங்கா. ஆங்கரிங் பண்ணினவள் என்பதால், அந்தக் கலகலப்பும் துருதுருப்பும் எப்பவும் இருக்கும். அவளால் ஒரு நிமிஷம்கூட அமைதியா இருக்கவே முடியாது. அவளுக்கும் பர்சனல் பிரச்னைகள் இருந்துச்சு. எல்லா வீடுகளிலும் இருக்கும் கணவன் - மனைவி பிரச்னைதான். ஆனாலும், 'என் மாமா இல்லைன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன் அக்கா'னு சொல்வா. அவளுடைய கணவரை மாமான்னுதான் கூப்பிடுவா. அவர் மேலே ரொம்ப அன்பு வெச்சிருந்தா. ரெண்டு பேருக்குள் என்ன பிரச்னைன்னு தெரியலை. ரொம்பவே பாஸிட்டிவான பொண்ணு, இப்படி ஒரு முடிவு எடுப்பான்னு கொஞ்சமும் நினைச்சு பார்க்கலீங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் ஒரு பார்லர் ஓப்பன் பண்ணினாள். நாங்க எல்லாரும் போய்ட்டு வந்தோம். ரெண்டு நாளைக்கு முன்னாடிகூட அவளைப் பார்த்தேன். இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாளே'' என வருத்தப்பட்டார்.


`அபூர்வ ராகங்கள்' சீரியலில் பிரியங்காவுடன் இணைந்து நடித்த ஸ்ருதிராஜ், ``எல்லோரிடமும் ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி அவங்களுடைய பொட்டிக் ஓப்பனிங்குக்கு கூப்பிட்டாங்க. அவங்க இறந்துட்ட செய்தியைக் கேட்டு ஜீரணிக்கவே முடியலை. செட்டில் அவங்க ஒருநாளும் சோகமா இருந்து பார்த்ததே இல்லே. எனர்ஜடிக் வுமன். பர்சனல் விஷயங்களைப் பகிர்கிற அளவுக்கு நாங்க குளோஸ் இல்லே. தவிர, அவங்க ஃபேமிலி பற்றி நெகட்டிவா எதுவுமே பேசினதில்லே. `அபூர்வ ராகங்கள்' டீம் ஒரு வாட்ஸ்அப் குரூப் வெச்சிருக்கோம். ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு அந்த குரூப்ல எல்லோரும் வருத்தப்பட்டு பேசினோம். அவங்களுக்குள்ளே என்ன வருத்தம்னு புரியலே. சின்னத்திரை நடிகைகள் எல்லோருக்கும் சொல்ற விஷயம் ஒண்ணுதான். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. தற்கொலை எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. சிரிச்ச முகத்தோடு பிரியங்காவைப் பார்த்த நினைவுகளே எனக்கு போதும். பிணமா அவங்களை பார்க்கவே தயாராக இல்லே. அதனால், பார்க்ககூட போகலை'' என்கிறார்.
 

பிரியங்காவின் நெருங்கிய தோழியும், 'வம்சம்' சீரியலில் நடித்தவருமான சந்தியா, ``பிரியங்கா எனச் சொன்னதும் எனக்கு ஞாபகம் வர்றது 'எனர்ஜடிக் கேர்ள்' என்கிற வார்த்தைதான். இந்தச் சின்ன வயசிலேயே சாதிக்கும் எண்ணத்தோடு வலம் வந்தவள். நாலு வருஷமா ஒரே ஃபேமிலி மாதிரி பழகினோம், சீரியல் முடிஞ்சும் அதே நட்புடன் இருக்கோம். என்னை அக்கான்னுதான் கூப்பிடுவா. 'வம்சம்' ஃபேமிலிக்குன்னு ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கு. அதில் பேசிட்டே இருப்போம். சினிமாவுக்குப் போகிறது, வெளியே மீட் பண்றதுன்னு இருந்தோம். அக்காவா, அம்மாவா, அண்ணனா நாங்க பழகினோம். எந்த விஷயத்தையும் ஷேர் பண்ற அளவுக்கு எங்க உறவு இருந்துச்சு. அப்படியிருந்தும் எப்படி இந்த மாதிரி ஆச்சுன்னு நினைக்கிறப்போ பேசவே முடியலை.



சொந்த ஃபேமிலியில் இழப்பு ஏற்பட்ட மாதிரி இருக்கு இந்த இறப்பு. சின்ன வயசிலிருந்து பிரியங்கா சந்திச்ச கஷ்டங்களை ஷேர் பண்ணியிருக்கா. சின்ன வயசுல அவளுக்கு மஞ்சள் காமாலை அதிகமாகி டாக்டர்ஸ் காப்பாற்றவே முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம். 'ஆனாலும், எனக்குச் சரியாயிடும்னு நம்பிக்கையோடு போராடி பிழைச்சேன்'னு சொல்லியிருக்கா. டியூஷன் சொல்லிக் கொடுத்துதான் அவளுடைய காலேஜ் ஃபீஸ் கட்டிருக்கா. ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கா. ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு. கணவன் - மனைவிக்குள்ளே என்ன நடந்ததுன்னு தெரியலை. கடந்த இரண்டு மணி நேரமா `வம்சம்' டீம் நண்பர்கள் முழுக்க பிணவறை வாசலில் நின்னுட்டிருக்கோம். அவள் ஃபேமிலியைச் சேர்ந்தவங்க மதுரையில் இருக்காங்க. அவங்க வந்து கையெழுத்து போட்டதுக்கு அப்புறம்தான் போஸ்ட் மார்ட்டமே ஆரம்பிப்பாங்க. இன்னைக்கு அவள் முகத்தைப் பார்க்கவே முடியாதுன்னு நினைக்கிறப்போ அழுகையா வருது. பிரியங்கா கண்ணுக்குள்ளவே நிக்கிறா. நாலு வருஷம் ஃபேமிலியா வாழ்ந்திருக்கோம். போன மாசம் திறந்த பொட்டிக் ஷாப்புக்கு சந்தோஷமா போய்ட்டு வந்தோம். சட்டென ஏதோ ஒரு கோபத்தில் இந்த முடிவை எடுத்திருக்கணும். முந்தாநாள்கூட எங்ககிட்ட பேசினா. ஒருநாள் விட்டு ஒருநாள் வாட்ஸ்அப் குரூப்ல பேசிப்போம். நேற்று பேசியிருந்தால்கூட இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாளோன்னு தோணுது. மாமா, மாமான்னு அவ கணவர் பற்றி சொல்லிட்டே இருப்பா. ரெண்டு பேரும் க்யூட் ஜோடி. அவ்வளவு அன்பா இருந்தாங்க. என்ன நடந்துச்சுன்னு தெரியாமல் குழப்பத்தில்தான் இருக்கோம். இந்த இறப்பை எங்களால் சுலபமா கடந்துட முடியாது'' என்றார்.

ஏப்ரல் 19, 2016 அவள் விகடனில், 'கேபிள் கலாட்டா' பகுதிக்கு பிரியங்கா கொடுத்த இன்டர்வியூவிலிருந்து...

``மதுரைப் பொண்ணு நான். டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட். பி.எஸ்ஸி., ஃபிசிக்ஸ் முதல் வருஷம் படிச்சுட்டிருந்தப்போ, லோக்கல் சேனலில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். பாரதிராஜா சாரின் ‘அன்னக்கொடி’ படத்தின் ஷூட்டிங்கை பார்க்கப்போக, அதில் எனக்கும் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மதுரையில் இருந்துகிட்டே சென்னையின் சேனல்ஸுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். இமயம், கேப்டன் என வாய்ப்பு கிடைச்சது. காலேஜ் படிச்சுட்டிருந்ததால், சனிக்கிழமை சென்னை வந்து நாள் முழுக்க ஷூட் முடிச்சுட்டு, சண்டே மதுரைக்கு பஸ் ஏறிடுவேன். படிப்பு முடிஞ்சதும் சென்னைப் பயணம்.

ஜீ தமிழ் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, சன் டி.வி ‘அழகி’, விஜய் டி.வி ‘சரவணன் மீனாட்சி’ சீரியல்னு சேனல் ஏரியாவுக்குள்ளே வந்து, இப்போ சன் டி.வி-யின் ‘வம்சம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘பைரவி’, ராஜ் டி.வி-யில் ஒரு சீரியல்னு பிஸியா நடிச்சுட்டிருக்கேன். ‘வம்சம்’ சீரியல் ‘ஜோதிகா’ கேரக்டர்தான், எனக்கான அடையாளத்தை வாங்கிக்கொடுத்துச்சு. ஐ.ஏ.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி `குரூப் 1' எக்ஸாமுக்கு சீரியஸா படிச்சுட்டிருக்கேன். எப்பவும் புக்கும் கையுமாதான் இருப்பேன்!''

தற்கொலை எதற்குமே தீர்வாகாது!

Permitting Candidate To Inspect His Answer Sheet Won’t Affect Public Interest Or Govt Functioning: SC [Read Order] | Live Law

Permitting Candidate To Inspect His Answer Sheet Won’t Affect Public Interest Or Govt Functioning: SC [Read Order] | Live Law: While directing the Uttar Pradesh Public Service Commission (UPPSC) to allow a candidate to see the answer sheets of the examination
நினைவுகள் முளைக்கும்: மகள் திருமணத்துக்காக எம்எல்ஏ அடித்த வித்தியாசமான அழைப்பிதழ்

Published : 18 Jul 2018 21:39 IST

திருவனந்தபுரம்,
 


விதைகள் தூவப்பட்ட அழைப்பிதழ் - படம் :சிறப்பு ஏற்பாடு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது மகள் திருமணத்துக்காக வித்தியாசமான முறையில், யாரும் வீணாக்காத வகையில் அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.

கேரளாவில் ஆளும் கட்சியான இடதுசாரி முன்னணிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுயேட்சை எம்எல்ஏ வி.அப்துர் ரஹிம். இவரின் மகள் ரிஸ்வானா. இவருக்குத் திருமணம் செய்ய அப்துர் ரஹிம் முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். வரும் 22-ம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூரில் திருமணம், அதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

இதில் அழைப்பிதழை இதுவரை யாரும் உருவாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகச் சிந்தித்து வித்தியாசமாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் அழைப்பிதழை தயாரித்துள்ளார்.

கைகளால் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், பூக்களின் விதைகளும், காய்கறிகள், மூலிகை விதைகளும் கலந்து செய்யப்பட்டு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் திருமண அழைப்பிதழைத் திருமணம் முடிந்த பின் கீழே வீசி எறிந்து விடுவோம்.

ஆனால், இந்த அழைப்பிதழைப் பூமியில் சிறிது ஆழக் குழிதோண்டி மண்ணில் புதைத்து சிறிது நீர் விட்டு சில நாட்கள் கழித்தால், அதிலிருந்து ஏராளமான மூலிகைச் செடிகளும், பூச்செடிகளும், மர விதைகளும் துளிர்விட்டிருக்கும். அதுமட்டுமல்லமால், இந்த அழைப்பிதழின் பின்புறம், ''அழைப்பிதழை வீணாக்கி வீசிவிடாதீர்கள் மண்ணில் புதையுங்கள் முளைத்து வருவேன்'' என்று விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இது குறித்து எம்எல்ஏ அப்துர் ரஹ்மான் தொலைபேசியில் கூறுகையில், ''திருமண அழைப்பிதழ் என்பது வாழ்வில் ஒரு முறை அடிப்பதாகும். அன்பையும், பாசத்தையும், காதலையும் கலந்து அந்த அழைப்பிதழ் இருக்க வேண்டும். வழக்கமாகத் திருமணம் முடிந்த பின் அந்த அழைப்பிதழ்களைக் குப்பையில் வீசுவார்கள், அல்லது எரித்துவிடுவார்கள். ஆனால், பெங்களூரில் இருக்கும் நண்பர் ஒருவர் வித்தியாசமான முறையில் பத்திரிகை தயாரிக்கும் முறையைக் கூறினார்.

அதன்படி 100 சதவீதம் மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட காகிதத்தில், மரவிதைகள், பழமர விதைகள், பூக்கள், மூலிகைச் செடிகளின் விதைகள் பூசப்பட்ட அழைப்பிதழைத் தயாரிக்க முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் அழைப்பிதழையும் தயாரித்து, திருமணம் முடிந்தபின் அழைப்பிதழை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் குறித்து அதில் குறிப்பிட்டோம்.

இந்த அழைப்பிதழின் மீது சிறிது மண்ணைக் கொட்டி, அதில் தண்ணீர்விட்டு, வெயில் படுமாறு வைத்துவிட்டாலே சில நாட்களில் அழைப்பிதழில் உள்ள விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இந்த அழைப்பிதழைத் தயாரிக்கும் சிறிது காலம் தேவைப்படும். இதன் விலை குறைவுதான். நூற்றுக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளிக்கும் தொழிலாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட அழைப்பிதழை யாரேனும் வீசி எறிவார்களா, தோட்டத்தில் புதைத்துவைத்தால், அழைப்பிதழோடு சேர்ந்து என் மகளின் திருமண நினைவுகளும் சேர்ந்து முளைக்கும்'' என்று அப்துர் ரஹிம் தெரிவித்தார்.

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...