Thursday, July 19, 2018

`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு


மு.பார்த்தசாரதி

``சென்னையைச் சேர்ந்த 11 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்'' எனச் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறினார்.



சென்னையிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் மாற்றுத்திறனாளியான 11 வயது சிறுமிக்குக் கடந்த ஏழு மாதங்களாக அந்தக் குடியிருப்பில் பணியாற்றும் ஊழியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் போலீஸிடம் அளித்த புகாரின் பேரில் 17 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியைத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் இந்தப் பாதகச் செயலுக்கு எதிராகத் தமிழகத்திலுள்ள பலரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், ``7-ம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடந்த 7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் குற்றவாளிகள் 17 பேருக்கு ஆதரவாக எந்த ஒரு வழக்கறிஞரும் ஆஜராகப்போவதில்லை எனச் சங்கம் சார்பில் முடிவெடுத்திருக்கிறோம். அதோடு, இந்த முடிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலுள்ள சங்கங்களுக்கும் பரிந்துரைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த 17 பேரும் அங்கிருந்த வழக்கறிஞர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...