Sunday, July 29, 2018

கன்னத்தைக் கடித்த கிளியை அடித்துக் கொன்ற பெண் 

28/7/2018 14:16 Update: 28/7/2018 21:25

சிங்கப்பூர்: வலக் கன்னத்தைக் கடித்த வளர்ப்பு மகளின் செல்லக் கிளியை அடித்துக் கொன்றுவிட்டார் ஒரு பெண்.

வியட்நாமைச் சேர்ந்த 38 வயது ஹாங், தனது கன்னத்தைக் கடித்த கிளியை வீட்டைவிட்டு அனுப்பி விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், மறுநாள் கிளி வீட்டில் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர், ஆடைகளை உலர வைக்கும் மூங்கில் கம்பால் கிளியை அடித்துக் கொன்றார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் வளர்ப்பு மகள் யூ மேய் அவருக்கு எதிராக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளார்.

விலங்குகளைத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

விலங்குகளைத் துன்புறுத்திய குற்றத்துக்காக 18 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, 15,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.


No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...