Sunday, July 29, 2018

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மஹா.,வில் 33 பேர் பலி

Added : ஜூலை 29, 2018 01:09

ராய்கட், மஹாராஷ்டிராவில், வேளாண் பல்கலை ஊழியர்கள் சென்ற சுற்றுலா பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 33 பேர் பலியாகினர்.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள், 34 பேர், கர்நாடகாவில் உள்ள மஹாபலேஸ்வருக்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.அதன்படி, நேற்று காலை, ரத்னகிரியிலிருந்து, ராய்கட் வழியாக பஸ்சில் சென்றனர். ராய்கட் மாவட்டத்தில், மலைப் பாதையில் பஸ் சென்ற போது, திடீரென, 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஸ்சில் பயணித்த, 33 பேர் சம்பவ இடத்திலேயேபலியாகினர்.உயிர் தப்பிய ஒருவர், விபத்து குறித்து, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...