Sunday, July 29, 2018

மதுரையில் 16 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி மூதாட்டி பலி 

Added : ஜூலை 29, 2018 01:19 |

  மதுரை, மதுரையில், குடியிருப்புகள் நிறைந்த மதிச்சியம் பகுதியில், 16 வயது சிறுவன், கார் ஓட்டி பழகினான். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி, சாலையோரம் இட்லி விற்றுக்கொண்டிருந்த, 60 வயது மூதாட்டி பலியானார்.மதுரை வைகை வடகரை புளியந்தோப்பில், சாலையோரம் இட்லி வியாபாரம் செய்து வந்தவர் பழனியம்மாள், 60. ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் வைகைமூர்த்தி; அ.தி.மு.க., பேச்சாளர். இவரது போர்டு ஐகான் காரை, 16 வயது பேரன் நேற்று காலை, 8:45 மணிக்கு ஓட்டியுள்ளான்.அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து, பழனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது:சிறுவன் கார் ஓட்டி பழகியதில், இவ்விபத்து ஏற்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 16 வயது சிறுவனை, கார் ஓட்ட வைகைமூர்த்தி அனுமதித்தது தவறு. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள சிறுவன், மாட்டுத்தாவணி பகுதியில் மெக்கானிக்காக உள்ளான்.ஓட்டுனர் உரிமம் இல்லாமல், 18 வயதுக்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, முரட்டுத் தனமாக வாகனம் ஓட்டியது உட்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுவனை கைது செய்து உள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...