Tuesday, July 31, 2018

'குரூப் - 4' தேர்வு,'ரிசல்ட்' வெளியீடு

Added : ஜூலை 30, 2018 23:22

சென்னை: நமது நாளிதழ் செய்தியை தொடர்ந்து, ஐந்து மாதங்களாக வெளியிடப்படாமல் இருந்த, 20 லட்சம் பேர் எழுதிய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.தமிழக அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில் அடங்கிய, 9,351 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2018, பிப்., 11ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, 494 காலி இடங்களும், இந்த தேர்வில்இணைக்கப்பட்டது. இதில், 4,096 இளநிலை உதவியாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்தர், 156 வரைவாளர் உட்பட, மொத்தம், எட்டு வகை பதவிகளுக்கு, தேர்வு நடந்தது.

20.69 லட்சம் பேர் : எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஒரு நாளில் நடந்த போட்டி தேர்வில், 20.69 லட்சம் பேர், தேர்வு எழுத அனுமதி வழங்கப் பட்டது.ஐந்து மாதங்களாக தேர்வு முடிவு வெளியாகாததால், அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவித்து வந்தனர்.இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று மாலைவெளியிட்டது.முடிவுகளை பார்க்க, தேர்வர்கள் ஒரே நேரத்தில் முயற்சிப்பர் என்பதால்,http://results.tnpsc.gov.inமற்றும்http://www.tnpsc.gov.in ஆகிய, இரண்டு இணையதளங்களில், பதிவு எண் வாரியாக, முடிவுகள் வெளியிடப்பட்டன.

அறிவிப்பு : எவ்வளவு பேர் தேர்ச்சி; விடை திருத்தம் நடந்தது எப்படி; தேர்ச்சி பெற்றவர்களின் அடுத்த நிலை என்ன என்பது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்த குமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் ஆகியோர், இன்று அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...