Tuesday, October 2, 2018


நீதிபதி மனைவிக்கு, 'அல்வா'


Added : அக் 02, 2018 02:10


சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்ப முயன்ற, இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.'திருமணமான ஆண் மற்றும் பெண் தகாத உறவு வைத்துக் கொண்டால் தவறில்லை' என, சில தினங்களுக்கு முன், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, விழுப்புரம் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு, அல்வா மற்றும் மல்லிகை பூ அனுப்பும் போராட்டம் நடத்தினர்.விழுப்புரம் தலைமை தபால் நிலையத்தில், நேற்று மாலை, 3:45 மணிக்கு, இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு தலைவர் ஆசைத்தம்பி தலைமையில், நிர்வாகிகள் திரண்டனர்.பின், தங்கள் கையில், 'திருமதி தீபக் மிஸ்ரா' என எழுதப்பட்ட தபால் கவரின் உள் அல்வா, மல்லிகை பூ வைத்து விரைவு தபால் அனுப்ப, தபால் அலுவலகத்தில் நுழைந்தனர்.முன்னதாக, அங்கு குவிக்கப்பட்டிருந்த விழுப்புரம் டவுன் போலீசார், ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பீர், மது விற்பனை அமோகம்

Added : அக் 02, 2018 04:18

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி, சென்னை மற்றும் புறநகரில், ஒரே நாளில், 25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, பீர் மற்றும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம்.தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில், 840 மதுக் கடைகள் உள்ளன.சென்னை, நந்தனத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழாவை, நேற்று முன்தினம், அரசு நடத்தியது. அதில் பங்கேற்க, பல மாவட்டங்களில் இருந்தும், அ.தி.மு.க.,வினர், சென்னையில் குவிந்தனர்.அவர்களில் ஏராளமானோர், மது வகைகளை வாங்க, சென்னை மற்றும் புறநகரில் உள்ள, மதுக் கடைகளில் குவிந்தனர். இதனால், ஒரே நாளில், 25 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.இது குறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள, மதுக்கடைகளில், தினமும் சராசரியாக, 2 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, மது வகைகள் விற்பனையாகும்.விடுமுறை நாட்களில், மது விற்பனை, 1 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும். மாத இறுதி என்பதால், சனிக்கிழமை விற்பனை மந்தமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., விழாவிற்கு வந்த, அ.தி.மு.க.,வினர், சென்னை மட்டுமின்றி, அதை சுற்றிய பல இடங்களுக்கும் சென்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகரில் உள்ள, 500 கடைகளில், மது விற்பனை அமோகமாக இருந்தது. ஒரு கடையின் விற்பனை சராசரியாக, 5 லட்சம் ரூபாயாகும்.இதை, 500 கடைகளுக்கும் கணக்கிட்டால், மொத்த விற்பனை, 25 கோடி ரூபாய். இது, வழக்கத்தை விட, 10 கோடி ரூபாய் அதிகம். மொத்தம், 46 ஆயிரம் பெட்டி மது வகைகளும்; 34 ஆயிரம் பெட்டி பீர்களும் விற்பனையாகின. எஞ்சிய, 340 கடைகளையும் சேர்த்தால், மொத்த மது விற்பனை, 30 கோடி ரூபாயை தாண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
துணை மருத்துவ படிப்பு கவுன்சிலிங்

Added : அக் 02, 2018 01:34

சென்னை, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, 17 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை, அக்.,4 முதல், 16 வரை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுகிழமை விடுமுறை. மேலும், விவரங்களை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடிக்கு சிறப்பு ரயில்

Added : அக் 02, 2018 00:35

சென்னை, சாய்பாபா நுாற்றாண்டு விழாவையொட்டி ஷீரடிக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயிலை இயக்குகிறது.மதுரையில் இருந்து வரும் 21ல் புறப்பட்டு, திண்டுக்கல், கரூர், ஈரோடு, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடி செல்கிறது. ஷீரடி, பண்டரிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தில், மந்த்ராலயம் சென்று வரலாம். ஏழு நாள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, 90031 40681, 90031 40682 போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.www.irctctorism.com இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

'சிம் கார்டு' வாங்க ஆதார் கேட்க தடை


புதுடில்லி : 'மொபைல் போன் சிம் கார்டுகள் வாங்க, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, ஆதார் பயன்பாட்டை நிறுத்த, 15 நாட்களுக்குள் செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



'அரசு சலுகைகளை பெறுவதற்கு மட்டுமே ஆதார் பயன்படுத்த வேண்டும்; மற்றபடி, தனியார் நிறுவன அங்கீகாரங்களுக்கு, ஆதார் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, புதிய சிம் கார்டுகள் வாங்க, ஆதார் அவசியமில்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால், 'மொபைல் போன் சேவை நிறுவனங்கள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய அடையாள அட்டை வழங்கும் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வாடிக்கையாளர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க, ஆதார் எண் பயன்பாட்டுக்கு பதில், புதிய செயல் திட்டத்தை வகுத்து, அதை அக்., 15க்குள் தாக்கல் செய்யும்படி, தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, வாடிக்கையாளர் அங்கீகாரத்துக்கு, பழைய முறைப்படி, கையெழுத்துடன் கூடிய ஆவணங்களை பெற்று, சான்றுகளை சரி பார்த்த பின், இணைப்பை வழங்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள்

Added : அக் 01, 2018 23:56

சபரிமலை, ''சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதை தவிர்க்க வேண்டும்,'' என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர், தேவசம்போர்டு உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் பங்கேற்றனர்.பின், அமைச்சர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களுக்காக நிலக்கல், தங்கும் இடங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் 10 ஆயிரம் பேர் தங்க வசதி செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை சாத்தியமில்லை. தரிசனம் முடிந்த பின் அவர்கள் தனிமைப்படும் நிலை ஏற்படும்.சபரிமலை செல்லும் அனைத்து பாதையிலும் பெண்களுக்கான வசதிகள் செய்யப்படும். பெண்களுக்காக கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க கட்டுப்பாடு விதிக்கப்படும். தரிசனம் முடிந்த பக்தர்கள் இரவில் அங்கு தங்காமல் உடனடியாக புறப்பட வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் இதை பின்பற்ற வேண்டும்.கோயில் திறந்திருக்கும் நேரம், நாட்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். பக்தர்களுக்கு டிஜிட்டல் முன்பதிவு முறை செயல்படுத்தப்படும். பம்பையில் பெண்கள் குளிப்பதற்கு வசதிகள் செய்யப்படும். நிலக்கல்- பம்பை பஸ்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார், துப்புரவு பணியில் பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலையில் பெண்களுக்கு வசதிகள்கேரள அரசு அறிவிப்பு 

dinamalar 2.10.2018

''சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பஸ்சில் இட ஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்படும்,'' என, கேரள தேவசம் போர்டு அமைச்சர், கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.




ஆலோசனைக் கூட்டம்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், போர்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் அமைச்சர் கூறியதாவது: சபரிமலை வரும் பெண்களுக்காக, நிலக்கல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்காக தனி வரிசை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. பெண்களுக்காக கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்படும். கோவில் திறந்திருக்கும் நேரம்,

நாட்களை அதிகரிப்பது குறித்து, தந்திரியுடன் பேசி முடிவு செய்யப்படும்.

இட ஒதுக்கீடு

பம்பையில் பெண்கள் குளிக்க வசதி செய்யப்படும். நிலக்கல் - பம்பை பஸ்களில், பெண்களுக்கு, 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


BHOPAL NEWS