Tuesday, October 2, 2018

சபரிமலையில் பக்தர்கள் தங்க வேண்டாம் தேவசம்போர்டு அமைச்சர் வேண்டுகோள்

Added : அக் 01, 2018 23:56

சபரிமலை, ''சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இரவில் தங்குவதை தவிர்க்க வேண்டும்,'' என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.'சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. அமைச்சர், தேவசம்போர்டு உறுப்பினர்கள் ராகவன், சங்கரதாஸ் பங்கேற்றனர்.பின், அமைச்சர் கூறியதாவது:சபரிமலையில் பெண்களுக்காக நிலக்கல், தங்கும் இடங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல்லில் 10 ஆயிரம் பேர் தங்க வசதி செய்யப்படும். சன்னிதானத்தில் பெண்களுக்கு தனி வரிசை சாத்தியமில்லை. தரிசனம் முடிந்த பின் அவர்கள் தனிமைப்படும் நிலை ஏற்படும்.சபரிமலை செல்லும் அனைத்து பாதையிலும் பெண்களுக்கான வசதிகள் செய்யப்படும். பெண்களுக்காக கூடுதல் கழிவறைகள் அமைக்கப்படும். சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க கட்டுப்பாடு விதிக்கப்படும். தரிசனம் முடிந்த பக்தர்கள் இரவில் அங்கு தங்காமல் உடனடியாக புறப்பட வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் இதை பின்பற்ற வேண்டும்.கோயில் திறந்திருக்கும் நேரம், நாட்களை அதிகரிப்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். பக்தர்களுக்கு டிஜிட்டல் முன்பதிவு முறை செயல்படுத்தப்படும். பம்பையில் பெண்கள் குளிப்பதற்கு வசதிகள் செய்யப்படும். நிலக்கல்- பம்பை பஸ்களில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் கூடுதல் பெண் போலீசார், துப்புரவு பணியில் பெண் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...