Saturday, October 27, 2018

சென்னை: தீபாவளிக்கு ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கம்

Added : அக் 26, 2018 19:32




சென்னை: தீபாவளி நெரிசலை தவிர்க்கும விதமாக சென்னையில் இருந்து ஆறு இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து கும்பகோணம் ,தஞ்சை மற்றும் அதை தாண்டிய ஊர்களுக்கு இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து திருச்சி வேளாங்கண்ணி, மதுரை நெல்லை, செங்கோட்டை, பண்ருட்டி ,விழுப்புரம் , சேலம், கோவை, பெங்களூரு, எர்ணாகுளத்திற்கு இயக்கப்படுகிறது.

பூந்தமல்லி பஸ்நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் ஆரணி, ஆற்காடு வேலூர், தருமபுரி ,ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கே.கே.நகர் பணி மனையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது.

ஆம்னி பஸ்கள்

கோயம்பேடு மார்க்கெட் E சாலையில் இருந்து இயக்கப்படும். மதுரவாயல் பறவழிச்சாலை, 100 அடி சாலையில் இருந்து வடபழனி நோக்கி செல்ல ஆம்னி பஸ்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...