Wednesday, October 24, 2018

மதுரை மருத்துவ கல்லுாரியில் 3 நாட்களுக்கு 'வியூகா-18'

Added : அக் 24, 2018 06:27

மதுரை: மதுரை மருத்துவ கல்லுாரி சில்வர் ஜூபிளி அரங்கில் அக்., 26, 27, 28ல் 'வியூகா-18' என்ற மாணவர் திருவிழா நடக்கிறது. இதில் பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளன. முதல் நாளில் பாரம்பரிய நடனம், பட்டிமன்றம், நாட்டுப்புற நடனம், ஆங்கில கட்டுரை, கவிதை போட்டியில் மாணவர்கள் திறமை வெளிப்படுத்துவர். இரண்டாம் நாளில் குறும்படம், மோனோ ஆக்டிங், மேற்கத்திய நடனம் இடம் பெறும். மூன்றாம் நாளில் இசைநிகழ்ச்சி, 'பேஷன் ஷோ', ரங்கோலி, தமிழ் கட்டுரை, கவிதை போட்டி, பென்சில் ஓவியம், முகத்தில் பெயின்டிங் உள்ளிட்ட போட்டிகள் நடக்கும்.பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களது கல்லுாரி அடையாள அட்டை, இரண்டு 'பாஸ்போர்ட்' புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும். நிகழ்ச்சியை பொறுத்து நபர் ஒருவருக்கு ரூ. 200-ரூ.300 செலுத்த வேண்டும். முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள செல்வ பிரகாஷ்(97891 76598)தங்கும் விடுதிக்கு தனிநபர், நாள் ஒன்றுக்கு ரூ.100 மற்றும் காப்புத் தொகை ஒவ்வொரு கல்லுாரிக்கும் ரூ. 700 செலுத்த வேண்டும்.தங்கும் விடுதிக்கு தொடர்பு கொள்ள: சஞ்சய் கிஷோர்(74025 80006).

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...