Saturday, October 27, 2018

'18 பேரை காவு கொடுத்து சுயேச்சையான தினகரன்'

Added : அக் 27, 2018 01:50

சென்னை, ''ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்து விட்டு, தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி விட்டார்,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அ.தி.மு.க.,வில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, உறுப்பினராக இல்லாத ஒருவர், தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ள, தன்னை அதிகார வளையத்திற்குள் கொண்டு வர செயல்பட்டார். தமிழகத்தின் எந்த மூலையிலும், இரட்டை இலை சின்னத்தில், ஓட்டு கேட்காதவர், தினகரன். அவர் பேச்சை கேட்டதால், எதை இழக்கக் கூடாதோ, அதை இழந்து, 18 பேரும் துன்பத்தில் இருக்கின்றனர்.தோற்பது அனுபவம் என்கிறார். ஏனெனில், அவருக்கு எந்த இழப்பும் கிடையாது. 18 எம்.எல்.ஏ.,க்களை காவு கொடுத்துவிட்டு, அவர், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாகி உள்ளார். அவர், இவர்களை காப்பாற்றுவாரா; இழந்த பதவியை பெற்றுத் தருவாரா?தற்போது, தினகரன் அணியில் குழப்பம் வந்துள்ளது. 'நடுத்தெருவில் நிறுத்தி விட்டீர்களே; இது நியாயமா' என, பதவி இழந்தவர்கள் கேள்வி எழுப்புவதால், பதில் கூற முடியாமல், தினகரன் திணறி வருகிறார். துன்பம் வந்தாலும், சிரிப்பது போல் காட்டிக் கொள்ளும், அவர் வாழ்க்கை சிரிப்பாய் போய் விட்டது.தினகரனிடம் இருப்போர், அ.தி.மு.க., வர நினைத்தால், முதல்வர் மற்றும் துணை முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

No comments:

Post a Comment

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':

US doctor warns against using DOLO-650, says it is not a 'candy':  Liver, kidney-related side effects to know etimes.in | Apr 16, 20...