Sunday, December 30, 2018


லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : ரூ.4.60 லட்சம் பறிமுதல்

Added : டிச 29, 2018 23:14

சென்னை: தமிழகத்தில், வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அரசு அலுவலகங்களில், வெகுமதி பெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நேற்று முன்தினம், வெவ்வேறு இடங்களில், திடீர் சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத, 4.60 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதன் விபரம்:● சென்னை, ராயபுரம், சார் - பதிவாளர் அலுவலகத்தில், மாலை, 6:00 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத, 74 ஆயிரத்து, 330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● திருவண்ணாமலை மாவட்டம், சார் -பதிவாளர் - 2 அலுவலகத்தில், கணக்கில் காட்டப்படாத, 1.84 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் நீலகண்டன், சட்ட விரோதமாக, பார் நடத்துபவர்களிடம் இருந்து, பணம் வசூல் செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி, சோதனை நடத்தப்பட்டதில், அவரிடம், 1.18 லட்சம் ரூபாய், அவரது வாகன ஓட்டுனர் சுரேஷ் என்பவரிடம், 8,590 என, மொத்தம், 1.25 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது● கிருஷ்ணகிரி, கட்டிநாயனப்பள்ளி கிராமத்தில், 25 வீட்டுமனை பிரிவிற்கு ஒப்புதல் பெறும் பொருட்டு, தர்மபுரி மண்டல நகர ஊரமைப்பு அலுவலகத்தில், கோவிந்தராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு, தர்மபுரி மண்டல துணை இயக்குனர் வசந்தி, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்; மேற்பார்வையாளர் மணிகண்டன் என்பவர், 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.அந்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, துணை இயக்குனர் வசந்தி, மேற்பார்வையாளர் மணிகண்டன், இடைத்தரகர்கள் அரிக்குமார் மற்றும் வடிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில், இடைத்தரகர்களிடம் இருந்து, 75 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மாணவரை, 'ராகிங்' செய்த 5 பேர் கைது

Added : டிச 29, 2018 23:53

பெங்களூரு: பெங்களூரு மருத்துவ கல்லுாரியில், தலித் மாணவரை, 'ராகிங்' செய்த, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.தலைநகர், பெங்களூரில் உள்ள, இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, ௧௯ வயது தலித் மாணவர், முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில், அவர் தங்கியுள்ளார்.அதே விடுதியில் தங்கி, எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கும் ஐந்து மாணவர்கள், சமீபத்தில், தலித் மாணவரின் அறைக்குச் சென்று, அவரை, 'ராகிங்' செய்துள்ளனர்.தலித் மாணவரை தாக்கியும், ஜாதிப் பெயரை சொல்லியும் இழிவுபடுத்திய சீனியர் மாணவர்கள், அந்த மாணவரின் தலை முடியை வெட்டிஉள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவர் அளித்த புகாரின்படி, ஐந்து சீனியர் மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, வன்கொடுமை தடுப்பு மற்றும் கர்நாடக மாநில கல்வி சட்டத்தில் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலை தரிசன டிக்கெட் ஜன., 4ல் ஏப்., முன்பதிவு

Added : டிச 30, 2018 00:12

ஈரோடு: திருமலை திருப்பதி சேவா டிக்கெட்களுக்கான, ஏப்ரல் மாத முன்பதிவு, ஜன., 4ல் துவங்குகிறது.திருமலை திருப்பதியில், தினமும் ஊஞ்சல் சேவா, கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சேவா நடக்கிறது. இதில் சுவாமி தரிசினம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும், 2019 ஏப்ரல் மாதத்துக்கான சேவா டிக்கெட் முன்பதிவு, வரும், 4ம் தேதி செய்யப்படுகிறது.தேர்வு நேரம் என்பதால், ஏப்ரல் மாதம் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். எனவே இந்த வாய்ப்பை, பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் சுதா சேஷையன்

Added : டிச 29, 2018 23:36



சென்னை: தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.பல்கலை துணை வேந்தராக இருந்த கீதாலட்சுமி, இரு தினங்களுக்கு முன் ஓய்வு பெற்றார். துணை வேந்தர் பதவிக்கு, 48 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், டாக்டர்சுதா சேஷையனை, துணை வேந்தராக தேர்வு செய்து, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நியமித்துள்ளார். இவர், இப்பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார்.சுதா சேஷையன், முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில், முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் உடையவர். சென்னை மருத்துவ கல்லுாரியில், உடற்கூறு இயல் துறை இயக்குனராகவும், பேராசிரியையாகவும் பணியாற்றி உள்ளார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். நிர்வாகத் துறையிலும், அனுபவம் மிகுந்தவர். மருத்துவம், ஆன்மிகம் தொடர்பாக, பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார்; சிறந்த பேச்சாளர்.முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, தொகுத்து வழங்குவதில், சிறப்பு பெற்றவர். லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட, ஆன்மிக இசையிலும் சிறந்து விளங்குபவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததும், அவரது உடலுக்கு, 'எம்பாமிங்' செய்தவர்.

ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது நவபிருந்தாவன யாத்திரை ரயில்

Added : டிச 29, 2018 23:17

சென்னை: மார்கழியில், நவபிருந்தாவன கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., நவபிருந்தாவன யாத்திரை சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த சிறப்பு ரயில், மதுரையில் இருந்து, வரும், 10ல் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், சென்னை எழும்பூர் வழியாக செல்லும். இப்பயணத்தில், கர்நாடகா மாநிலம், நவபிருந்தாவனத்தில், ராகவேந்திரரின் குருநாதரான சுதீந்திர தீர்த்தர் மற்றும் எட்டு குருக்களின் ஜீவ சமாதிகளையும் தரிசிக்கலாம். ஆந்திராவில், மந்த்ராலயம் மற்றும் அகோபிலம் நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று வரலாம். ஐந்து நாட்கள் சுற்றுலாவுக்கு, ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 6,160 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., உதவி மையத்தை, 90031 40680, 90031 40681 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.irctctourism.com என்ற, இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

அதிக கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து : கற்பித்தல் தரம் உயர்த்த யு.ஜி.சி., திட்டம்

Added : டிச 29, 2018 23:58

புதுடில்லி: உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுா ரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதை அதிகரிக்க, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு திட்டமிட்டுள்ளது.உயர் கல்வி வழங்கும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளை கண்காணிக்கும் அமைப்பான, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, அவ்வப்போது புதிய கொள்கைகளை அறிவித்து வருகிறது.உயர் கல்வியில் கற்பித்தல் தரத்தை உயர்த்தும் வகையிலும், மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையிலும், கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிப்பதை அதிகரிக்க, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.தன்னாட்சி அந்தஸ்து பெறும் கல்லுாரிகள், ஏற்கனவே உள்ள பாடத் திட்டங்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்யலாம். மேலும், மாணவர்களின் திறனை சோதிக்கும் திட்டங்களையும் வகுப்பதுடன், தேர்வுகளையும் தானாகவே நடத்திக் கொள்ளலாம்.அதேசமயம், அவை இடம் பெற்ற பல்கலைகளே, பட்டச் சான்றிதழ்களை அளிக்கும். அதில், கல்லுாரியின் பெயரும் இடம்பெறும்.தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கு, கல்லுாரிகளில் குறிப்பிட்ட வசதிகள் இருக்க வேண்டும்; திறமையுள்ள ஆசிரியர்களும் இருக்க வேண்டும். தன்னாட்சி பெறுவதற்கான கொள்கையில், யு.ஜி.சி., இந்தாண்டு துவக்கத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளது.இதன் மூலம், அதிக அளவிலான, கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில், இந்த நடைமுறையை, 'ஆன்லைன்' மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மட்டும், 37 கல்லுாரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளின் எண்ணிக்கை, 106 பல்கலைகளில், 672 கல்லுாரிகளாக உயர்ந்துள்ளது.கடந்த, 2007 - 08 முதல் 2017 - 18 கல்வியாண்டு வரை, தரம் உயர்த்தப்பட்ட கல்லுாரிகளின் எண்ணிக்கை, 55 பல்கலைகளில், 281 கல்லூரிகள் என்பதில் இருந்து, 105 பல்கலைகளில், 635 கல்லுாரிகள் ஆக அதிகரித்துள்ளன.தன்னாட்சி பெற்ற கல்லுாரிகளில், தென் மாநிலங்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. மொத்தம், 183 தன்னாட்சி கல்லுாரிகளுடன், இந்தப் பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆந்திராவில், 97 கல்லுாரிகளும், கர்நாடகாவில், 70 கல்லுாரிகளும், தெலுங்கானாவில், 59 கல்லுாரிகளும் தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ளன.அதேசமயம், மிகப் பெரிய மாநிலங்களான, உ.பி.,யில், 11 மற்றும் ராஜஸ்தானில், ஐந்து கல்லுாரிகள் மட்டுமே இந்த அந்தஸ்தை பெற்றுள்ளன. கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இந்த மாநிலங்களில் இருந்து அதிக கல்லுாரிகள், தன்னாட்சி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கும் என, யு.ஜி.சி., எதிர்பார்க்கிறது.
நெருக்கடி!
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு...
ராஜினாமா செய்ய உத்தரவு?
மறுத்தால் பதவி நீக்க முடிவு

dinamalar 30.12.2018
தமிழக அமைச்சரவையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரரை கழற்றி விடும்படி , முதல்வர் பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.



விஜயபாஸ்கர் ராஜி னாமா செய்யாவிட்டால், அவரை பதவி நீக்கம் செய்வது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அமைச்சர்களில், அதிக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவராக, விஜயபாஸ்கர் உள்ளார். எதிர்க்கட்சிகளை, சட்டசபையில் கடுமையாக விமர்சனம் செய்ததற்காக, அவருக்குஅமைச்சர் பதவியை, ஜெயலலிதா வழங்கினார்.அதன்பின், சசிகலா தயவில், அசைக்க முடியாதவராக மாறி விட்டார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், சசிகலா முதல்வர் பதவி ஏற்பதற்காக, அனைத்து பணிகளையும் செய்தார்.எம்.எல்.ஏ., க்களை, கூவத்துாரில் தங்க வைத்த போது, அவர்களுக் கான செலவுகளை யும் ஏற்றார். பன்னீர்செல்வத்தை, கடுமையாக எதிர்த்தார். சென்னை, ஆர்.கே. நகரில், தினகரன் போட்டியிட்ட போது, அவருக்காக, பணம் பட்டுவாடா செய்யும் பொறுப்பை ஏற்றார். அவர்

வீட்டில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, பணம் பட்டுவாடா ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யும்படி, எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின;ஆனால், அவர் கண்டு கொள்ளவே இல்லை.அவர் வீட்டில் நடந்த சோதனை காரணமாக தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில், அவர் பெயர் சேர்க்கப் படாதது குறித்து, நீதிமன்றமே ஆச்சரியப் பட்டது. அதன்பின், தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள், தடையின்றி விற்பனை செய்ய, லஞ்சம்பெற்றதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும், எதிர்க்கட்சிகள், அவரை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தின; அவர் மசியவில்லை.

குட்கா வழக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. அமைச்சரின் உதவியாளர்களிடம்,சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டது. அதன்பின், அமைச்சரை நேரில் அழைத்தும், சி.பி.ஐ., தரப்பில் விசாரிக்கப்பட்டது. அதன் பிறகும், தார்மீக பொறுப் பேற்று, பதவி விலக அவர்முன்வரவில்லை. முதல்வரே, அவரை ராஜினாமா செய்யும்படி கூறிய போது,'என்னை ராஜினாமா செய்ய சொன்னால், உங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி விடுவேன்' என, மிரட்டியதாக கூறப்படுகிறது.

பல்வேறு நெருக்கடி ஏற்பட்டபோதும், அவர் பதவி   விலக முன்வரவில்லை.'இவரால், ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்ப டுகிறது; அவரை நீக்குங்கள்' என, மற்ற அமைச்சர்கள் வலியுறுத்தியும், முடிவெடுக்க முடியாமல், முதல்வர் திணறி வந்தார்.

இந்நிலையில், கூட்டணி குறித்து பேசுவ தற்காக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், இரு தினங்களுக்கு முன், டில்லி சென்றனர். மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினர்.அப்போதும், விஜயபாஸ்கர் விவகாரம் தான் கிளப்பப்பட்டு உள்ளது. 'விஜயபாஸ்கரை நீக்குங்கள். அப்போது தான், அரசுக்கு ஓரள வாவது நல்ல பெயர் கிடைக்கும்' என, மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.அதை, முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜய பாஸ் கருக்கு, நெருக்கடி அதிகரித்துள்ளது. அவராக பதவியை ராஜினாமா செய்யா விட்டால், அவரை,'கழற்றி'விடுவது குறித்து, முதல்வர் ஆலோசித்து வருவதாக,தகவல் வெளியாகி உள்ளது.

NEWS TODAY 25.01.2026