Thursday, September 12, 2019

எம்.பி.பி.எஸ்., 'சீட்' மோசடி

Added : செப் 12, 2019 00:50

மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கு போலி உத்தரவு தயாரித்துக்கொடுத்த கும்பல் குறித்து விசாரணை நடக்கிறது.

ஆந்திராவை சேர்ந்த மாணவர் ரியாஸ். நேற்று முன்தினம் மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் வனிதாவை சந்தித்தார். தனக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழை காட்டினார். அதை ஆய்வு செய்த போது போலியானது என தெரிந்தது. ரியாசிடம் போலீசார் விசாரித்தனர்.அவர் 'நீட்' தேர்வில் தோல்வி அடைந்தவர். அவரை தொடர்புகொண்ட மோசடி நபர் ஒருவர் எம்.பி.பி.எஸ்., சீட் வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் பெற்றுள்ளார். மதுரை கல்லுாரியில் இடம் கிடைத்திருப்பதாக சான்றிதழையும் அனுப்பியுள்ளார்.

அதை 'உண்மை' என நம்பி கல்லுாரியில் சேர வந்தபோது தான் போலி என ரியாசுக்கு தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த மோசடி பின்னணியில் கும்பல் ஒன்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துணைவேந்தர் பதவிக்கு 147 பேர் போட்டா போட்டி

Added : செப் 12, 2019 01:05

கோவை : கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த, 147 பேரின்விபரங்கள், பல்கலை இணையதளத்தில் நேற்றுவெளியிடப்பட்டன.பாரதியார் பல்கலை துணைவேந்தர் பணியிடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது.

பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, இயக்குனர் உட்பட அனைத்து முக்கிய பணியிடங்களும், பொறுப்பு பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால், நிர்வாக முடிவுகள் மேற்கொள்வதில், சிக்கல்கள் உள்ளன.நீண்ட இழுபறிக்கு பின், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் பெறும் பணி, கடந்த மாதம் துவங்கியது. செப்., 9ல், விண்ணப்ப செயல்பாடுகள் நிறைவு பெற்றன. விண்ணப்பித்தவர்கள் பட்டியல், நேற்று வெளியானது. பாரதியார் பல்கலையில், தற்போது பொறுப்பில் உள்ளவர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள், 20க்கும் மேற்பட்டோர், இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தேடல் குழு உறுப்பினர், சுப்பிரமணியம்கூறியதாவது:துணைவேந்தர் பதவிக்கு, 147 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களது விபரங்களை, பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். தொடர்ந்து, சான்றிதழ்கள், கொடுக்கப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய உள்ளோம். நல்ல மனிதராகவும், நல்ல கல்வியாளராகவும் உள்ள ஒருவரை, வெளிப்படையான முறையில், விரைவில் தேர்வுசெய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பொங்கல் ரயில் பயணம் முன்பதிவு நாளை துவக்கம்

Added : செப் 11, 2019 23:30

பொங்கல் பண்டிகைக்கு, ரயிலில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், நாளை முன்பதிவு செய்யலாம்.ரயிலில் பயணம் செய்ய, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை, ஜன., 15ல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு, இன்றுடன் சேர்த்து, இன்னும், 125 நாட்கள் உள்ளன. வரும், 2020 ஜன., 11, 12, சனி, ஞாயிறு விடுமுறை. ஜன., 13, 14 என, திங்கள், செவ்வாய், இரண்டு நாட்கள் வேலை நாட்கள். அடுத்து, 15ம் தேதி புதன் அன்று பொங்கல்; 16ம் தேதி வியாழன் மாட்டு பொங்கல்; 17ம் தேதி, வெள்ளியன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.அடுத்து, சனி, ஞாயிறு என, இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். ஜன., 13, 14ல், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால், ஒன்பது நாட்கள் விடுமுறையை அனுபவிக்கலாம்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அதிகம் பேர் சொந்த ஊர் செல்வர் என்பதால், ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும்.ஜன., 10 வெள்ளிக்கிழமைக்கு ரயிலில் பயணிக்க, நாளை முன்பதிவு துவங்குகிறது. ஜன., 11ல் பயணிக்க, வரும், 14ம் தேதி; ஜன., 14 போகியன்று பயணிக்க, வரும், 17ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.இந்த தேதிகளில் முந்தினால், படுக்கை வசதியுடன் டிக்கெட் பெறலாம்.
சிங்கப்பூர் பெண்ணுடன் சென்னிமலை வாலிபர், 'டும்டும்!'

Added : செப் 11, 2019 22:10

சென்னிமலை : சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் பெண்ணை, சென்னிமலை வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, பசுவப்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மோகன்குமார், 31; பிஎச்.டி., பட்டதாரி. இவர், சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தி பிரிவில், சீனியர் ஆராய்ச்சி இன்ஜினியராக பணிபுரிகிறார்.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார், ராசாம்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர், மூன்று தலைமுறைகளுக்கு முன், சிங்கப்பூர் சென்று, வாழ்ந்து வருகின்றனர்.அந்த குடும்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி, 26, என்பவரும், மோகன்குமாரும் காதலித்து வந்தனர். இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர், ஒரு வாரத்துக்கு முன், கோவை வந்து தங்கினர்.நேற்று, காங்கேயம் நால்ரோடு அருகேயுள்ள, மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன், பட்டு வேட்டி,- சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத, உற்றார், உறவினர்கள் வாழ்த்த, திருமணம் நடந்தது.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர், எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய, 'எண்ணங்கள்' புத்தகம், இலவசமாக வழங்கப்பட்டது.

மணமகள் தனலட்சுமி கூறுகையில், ''நான், சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன். தமிழ் கலாச்சாரத்தை படித்துள்ளேன். இதுவரை தமிழகம் வந்தது இல்லை.''இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகு முறை, உபசரிப்பு போன்றவை, மிகவும் பிடித்துஉள்ளது,'' என்றார்.
Chennai: Cobra causes flutter at State secretariat

DECCAN CHRONICLE. | D SEKAR

PublishedSep 12, 2019, 2:29 am IST

Luckily, we have not encountered any snake coming for these rats, so far”, said a Secretariat staffer.



A four feet long cobra at the VIP gate of secretariat in Fort St George on Wednesday. (Photo: DC)

Chennai: A young cobra about four feet long caused panic at the VIP gate of State secretariat in Fort St George on Wednesday. The women constables on duty nearby raised alarm when they saw the snake trying to go up the steps and gain entry to the office from the Assembly/Press Room side.

“We immediately alerted our superior officers and also the fire service. The snake by then had curled up in a corner, perhaps wanting to get out the reach of the disturbing humans”, said a policewoman, sounding very excited.

She said the security personnel and others gathered at the place were “very scared and quite concerned that the snake might enter the office and disappear into the scattered furniture and files”. If such a ‘calamity’ happened, it would have been net to impossible to trap the reptile.

“We usually find many rats, some of them as huge as bandicoots, running here and there, and making noise as they ran over the false ceilings in the secretariat departments. Luckily, we have not encountered any snake coming for these rats, so far”, said a Secretariat staffer. He pointed out that the offices were almost empty since it was a government holiday owing to Muharram.

A police officer on frequent guard duty at the main entrance said there “are many snakes in the wild plant growth around the Fort St George” and neither the Army, which owns and controls the area, nor the government that has occupied most of the space for its many departments, have cared to keep the surroundings free of rodents and hunting snakes.
Chennai: 21 SRM students chosen for Harvard internship

DECCAN CHRONICLE.

PublishedSep 12, 2019, 2:37 am IST

It was this loss which further strengthened her resolve to find a cure for cancer.



Meghna Mukherjee

Chennai: When Meghma Mukherjee’s sister succumbed to cancer a few years back, the tragedy not only shook her world but also became a turning point in her life.

It was this loss which further strengthened her resolve to find a cure for cancer.

Her dream will soon become a reality with her becoming one of 21 select students from SRM Institute of Science and Technology chosen to pursue a six-month-long internship at the prestigious Harvard Medical School.

“The internship at the Lab is perfect for me as I will get to observe the behaviour of cancer cells in response to different treatments and how they interact with our immune system,” says an excited Meghma.

The internship will commence in January next year and the students will be mentored by Shiladitya Sengupta, Head, Laboratory of Cancer NanoMedicine at the Brigham and Women’s Hospital in Cambridge, Massachusetts in the United States.

For many of these students, this Harvard internship is a once in a lifetime opportunity and they say they hope to make the best out of it.

SRM students have been selected for Harvard internships in the past, but this happens to be the first time that such a high number of students are being admitted for their internship programme.
Kitchen licence of Murugan Idli Shop suspended in Chennai

DECCAN CHRONICLE.

PublishedSep 12, 2019, 3:34 am IST

Fails to address issues raised by food safety officials.



Notice issued by food safety officials regarding the unhygienic kitchen conditions at the outlet located in Ambattur. (Photo: DC)

Chennai: The kitchen licence of popular food joint Murugan Idli Shop has been temporarily suspended after the restaurant failed to rectify the shortcomings cited by the food safety officials during an earlier visit. Food safety officials from Tiruvallur district cancelled the licence of the restaurant’s central kitchen, located in Ambattur Industrial Estate on Tuesday and an announcement regarding the suspension of license was displayed on the restaurant’s door.

The central kitchen supplies food to 23 other branches around the city.

In an earlier inspection conducted by the officials last month on August 7, the department had expressed concern over the unhygienic kitchen conditions. The officials had also pointed out 10 major defects in the working conditions of the kitchen including damaged flooring in the kitchen, improper temperature control of storage refrigerators and unclean washing area. Reportedly, the restaurant did not follow pest control methods and the medical certificates of the food handlers were also not submitted. Further, hair caps and hand gloves were also not provided to workers.

The food safety officials had then given a 50-day ultimatum to the restaurant to rectify the shortcomings.

However, the restaurant’s failure to respond to their notices prompted the officials to issue a showcause notice, which too was met with a similar response.

Following this, the officials temporarily suspended the kitchen licence of the restaurant. The restaurant can rectify the defects and can app-eal to revoke the suspension. Notably, the Parry’s outlet of the restaurant was in news lately after a customer found worms in his meals. He had then filed a complaint with the food safety department through their WhatsApp complaint number. However, a few branches of the shop were fully functional on Wednesday.

NEWS TODAY 06.07.2026