Monday, December 2, 2019

No distance education in hotel management: UGC

02/12/2019,NEW DELHI

The University Grants Commission (UGC) has prohibited distance education programmes in Hotel Management and Real Estate. “Programmes in Hotel Management, Culinary Studies and Real Estate, will not be recognised from 2019-20,” an order said. PTI
Private telecom players hike rates, prepaid users to be hit
Bharti Airtel, Vodafone Idea and Reliance Jio announce up to 40% increase

02/12/2019, PIYUSH PANDEY,MUMBAI



The era of low tariffs for Indian consumers seems to have ended as major telcos — Vodafone Idea Limited (VIL), Bharti Airtel Limited and Reliance Jio — have increased tariffs by up to 40% for prepaid customers.

While VIL and Sunil Bharti Mittal-led Bharti Airtel have decided to hike the tariffs with effect from December 3, Mukesh Ambani’s Reliance Jio has decided to implement the hike from December 6.

90% of market

The three telecommunication giants together account for over 90% of India’s 1.18 billion mobile subscribers, with the market share of around 30% each split evenly among them. “New plans will be available across India starting 00:00 hours of December 3, 2019,” a Vodafone Idea statement said.

Bharti Airtel’s statement read: “Airtel’s new plans represent tariff increases in the range of a mere 50 paise/day to ₹2.85/day and offer generous data and calling benefits.”

Both Vodafone Idea and Bharti Airtel announced new prepaid plans starting with options of 2 days, 28 days, 84 days and 365 days validity and prices starting from ₹19 and going upto ₹2,399. Reliance Jio is yet to announce its new plans.

Reliance Jio’s new tariffs will be priced 40% higher, but the company promises to offer 300% more benefits to its customers. “Jio will be introducing new all-in-one plans with unlimited voice and data. These plans will have a fair usage policy for calls to other mobile networks. The new plans will be effective from 6th December 2019,” the company said in a statement.

The hike in tariffs comes after VIL and Bharti Airtel posted record quarterly losses of ₹50,922 crore and ₹23,045 crore respectively owing to an adverse Supreme Court ruling on the adjusted gross revenue (AGR).

Outstanding debt

Both Vodafone Idea and Bharti Airtel also have an outstanding debt of over ₹1 lakh crore each.

According to government data, the liabilities in the case of Bharti Airtel add up to nearly ₹35,586 crore, of which ₹21,682 crore is the licence fee and another ₹13,904.01 crore is the spectrum usage charge (SUC) dues (excluding the dues of Telenor and Tata Teleservices). Vodafone Idea has an estimated liability of ₹44,150 crore post the Supreme Court order and made provisioning of ₹25,680 crore in the second quarter this fiscal.

Commenting on the hike, Chief Marketing Officer of Bharti Airtel Shashwat Sharma said the operator’s new mobile plans offered “tremendous value” and “a superior network experience” on the 4G network.
''ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட தெரியவில்லை'' - மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வில் ஆசிரியைகள் பணி இடைநீக்கம் 

மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை சமூக வலைதளத்தில் வைரலான காட்சி.

உத்தரப் பிரதேசத்தில் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆங்கிலம் தெரியாத இரு ஆசிரியைகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உன்னாவோ மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தேவேந்திர பாண்டே திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது மாணவர்களின் திறனை சோதித்தறிந்தபோது அதனால் சந்தேகம் ஏற்பட்டு உடனே ஆசிரியர்களின் திறனை அவர் சோதனையிடத் தொடங்கினார். இதில் இரு ஆசிரியைகள் சிக்கினர்.

சமூக ஊடகங்களில் வைரலாகிய இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மாவட்ட ஆட்சியர், 8 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தைக் கொடுத்து எட்டாம் வகுப்பு மாணவியை வாசிக்கச் சொல்கிறார். புத்தகத்தையே உற்றுப்பார்த்தபடி மாணவி அமைதியாக இருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த ஆட்சியர் உடனே புத்தகத்தை ஆசிரியர்களை அழைத்து புத்தகத்தை அவர்கள் பக்கம் திருப்பி ஆங்கிலப் பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பத்தியைப் படிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்வதைக் காணலாம். ஆனால் ஆசிரியர்களும் அவ்வாறே புத்தகத்தையே முறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு மாவட்ட ஆட்சியர் கோபமடைந்து அருகிலிருந்த காவல் அதிகாரிகளிடம் இவர்கள் ஆசிரியர்கள். ஆனால் ஆங்கிலம் படிப்பதற்கு இப்படி தடுமாறுகிறார்களே எனக் கேட்கிறார். இச்சம்பவம் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகின.

திடீர் ஆய்வில் கிடைத்த அனுபவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:

"இது சவுராவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு ஒன்றை சனிக்கிழமை மேற்கொண்டேன். முன்கூட்டியே எந்தத் திட்டமும் இல்லாமல்தான் சென்றேன். நான் ஒரு ஆங்கிலப் புத்தகத்திலிருந்து மாணவர்களைப் படிக்கச் சொன்னேன். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் நான் ஆசிரியர்களிடம் கேட்டேன். அவர்களால் ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட படிக்க முடியவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்''

மூத்த ஆசிரியர் சுசிலா மற்றும் உதவி ஆசிரியர் ராஜ்குமாரி ஆகியோரை அடிப்படை சிக்‌ஷா ஆதிகாரி பிரதீப் குமார் பாண்டே இடைநீக்கம் செய்துள்ளார். மேலும் அவர்கள் மீது விசாரணையும் தொடங்கப்பட்டது.

அடிப்படை சிக்‌ஷா (கல்வி) அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் வழங்கினார்.
தொடரும் மழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

சென்னை

தொடரும் கனமழை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

* சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.


* திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.

தொடரும் மழை: ஒத்திவைக்கப்பட தேர்வுகளின் விவரம்

சென்னை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் கனமழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

* நாளையும் (02-12-2019), நாளை மறுநாளும் (03-12-2019) தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கான கேங்மேன் நேர்முகத் தேர்வு நடைபெற இருந்தது. தொடர் மழை காரணமாக தேர்வுத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

* சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவிருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ளன. இந்நிலையில் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்படுள்ளது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. எனவே, நாளை சென்னை பல்கலைக்கழகப் பருவத் தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்தில்கொண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

* தமிழகம் முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று தேசிய திறன் மேம்பாட்டு (NMMS)தேர்வு நடைபெற இருந்தது. மழையின் காரணமாக இத்தேர்வை தமிழக பள்ளிக் கல்வித்துறை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

பின்னணி:

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கனமழை தொடர்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் இந்த விடுமுறையை அறிவித்துள்ளனர்.
'இறந்த பின்னரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அவலம்' - பெண் மருத்துவர் கொலையில் திடுக்கிடும் தகவல்கள்!

By ENS | Published on : 01st December 2019 04:02 PM | அ+அ அ- |

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில், போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி, போலீசார் உடலைக் கண்டறிந்துள்ளனர்.

ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறை தேடி வந்தது. அதன்படி, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது.

சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் மூலமாக இந்தக் கொடூர சம்பவம் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ப்ரியங்காவின் பைக் பஞ்சர் ஆகி அவ்விடத்தில் நிற்கவே, முகமது என்ற அரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேஷவலு ஆகிய 4 பேர் அவருக்கு உதவி செய்வது போல வந்துள்ளனர். பின்னர், விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை தலையில் அடித்து மயக்கமுறச் செய்துள்ளனர். பின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கொலை செய்த பிறகும், நால்வரும் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். லாரியின் அறைக்குள் வைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேறியுள்ளனர்.

இதன்பின்னர் ப்ரியங்காவின் உடலை அப்புறப்படுத்த லாரியிலேயே சென்று இடம் தேடியுள்ளனர். அப்போது சத்நகர் அருகே உள்ள பாலத்தின் கீழே உடலை ஒரு போர்வையில் போர்த்தி, அவ்விடத்தில் இறக்கினர். சடலத்தை எரித்து விட்டால் அடையாளம் காண முடியாது என்று எண்ணி அதன்படியே செய்தும் முடித்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மஹ்புப்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் பார் அசோசியேஷன் சார்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட சேவைகள் வழங்கப்பட மாட்டாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்ற பார் அசோசியேஷன் சார்பிலும் அவ்வாறே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பெண் மருத்துவரின் கொலையில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் மக்களிடையே, முக்கியமாக பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்களை நடுநடுங்க வைத்துள்ளது.
அழகியல் போற்றுவோம்

By சுப. உதயகுமாரன் | Published on : 02nd December 2019 03:03 AM


‘ஆள் பாதி, ஆடை பாதி’ என்று நாம் நம்புகிறோம். காரணம், ஆடைதான் ஒரு மனிதனை அலங்கரித்து காணத் தகுந்தவராக மாற்றுகிறது. எளிய உடையாக இருந்தாலும் ஒருவா் நல்லபடி உடை உடுத்தியிருந்தால், அவரை சமூகம் கண்ணியத்தோடும், மரியாதையோடும் நடத்துகிறது.

ஒருவருக்கு தோற்றப் பொலிவை உடை வழங்கி மாண்பினை அளிக்கிறது. இன்றைய வணிக உலகில் தோற்றம்தான் எல்லாம். எனவேதான், வியாபார நிறுவனங்கள் தங்கள் பொருள்களை மிகவும் வசீகரமாகப் பொதிந்து சந்தைக்கு அனுப்புகின்றனா். பொருள்களின் அடக்க விலையில் கணிசமான பகுதியை பொதிதலுக்குச் செலவு செய்கின்றனா்.

எடுத்துக்காட்டாக, ஓா் ஆப்பிள் பழத்தை எடுத்துக்கொண்டால்கூட, அதன் மீது மெழுகைத் தடவி அதைப் பளபளவென்று தோற்றமளிக்கச் செய்து கடைகளுக்கு அனுப்புகின்றனா். இந்தியா்களாகிய நாம் நமது வீடுகளின் உட்பகுதிகளை மிகவும் சுத்தமாகவே வைத்திருக்கிறோம். ஆனால், நமது வீட்டுக் குப்பைகளைப் பெருக்கி தெருவில் தள்ளிவிடுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை.

அதே போன்று, நம் வீட்டுச் சுவா்கள் சுத்தமாக, பளிச்சென்று வண்ணம் பூசப்பட்டதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிற நாம், நமது சாலையோரச் சுவா்கள், அரசுக் கட்டடங்கள், பாலங்கள் போன்றவற்றில் அரசியல், தனியாா் நிறுவன விளம்பரங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையோ, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதையோ கண்டுகொள்வதே இல்லை.

பொதுவெளிகளைப் பொருத்தவரை நான்கு அம்சங்கள்முக்கியத்துவம் பெறுகின்றன. அவை பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம், அழகியல். பொது இடங்களான தெருமுனைகளில், சாலையோரங்களில், நடைபாதைகளில், சந்திப்புகளில் குப்பைகளைக் கொட்டுவது, தேவையற்ற பொருள்களை விட்டுச் செல்வது, தடைகளை ஏற்படுத்துவது, போக்குவரத்துக்கு இடையூறு செய்வது என்று பற்பல வழிகளில் பொது பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.

மக்கள் நடமாட முடியாதே, வாகன ஓட்டிகளின் கவனத்தைச் சிதறடிக்குமே என்று எது குறித்தும் கவலைப்படாமல் பதாகைகளை வைப்பது, சுவரொட்டிகளை ஒட்டுவது, சுவா் விளம்பரங்கள் செய்வது எல்லாமே இங்கே வாடிக்கையான விஷயங்கள். இப்படித்தான் ரகு, சுபஸ்ரீ எனும் இரண்டு அருமையான இளைஞா்களை நாம் உயிரிழக்கச் செய்தோம்.

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்றெல்லாம் அறிவுரைத்து சுத்தத்தின் இன்றியமையாமையை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால், பொது இடங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பிரக்ஞை நமக்கு ஏனோ வருவதில்லை. சாலைகளில் பயணிக்கும் விலையுயா்ந்த சொகுசு காா்களுக்குள்ளே இருந்து குப்பைகள் பறந்து வருவதை இன்றும் காணலாம்.

மத்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டம் நல்லதொரு திட்டம் என்றாலும், கேமராக்களின் முன்னால் தலைவா்கள் பெருக்கும் காட்சிகள்தான் காணக்கூடியதாக இருக்கிறதே தவிர, பொது இடங்களில் பெரிதாகச் சுத்தம் வந்துவிடவில்லை. முழுநேர தூய்மைத் தொழிலாளா்களுக்கே அவா்களுக்குத் தேவையான கையுறைகள், காலணிகள்,முகமூடிகள், உபகரணங்கள் வாங்கித் தராமல் தவிா்க்கும் நாட்டில், தூய்மை அவ்வளவுஎளிதில் வந்துவிடுமா என்ன?

பொது இடங்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே போதாது, சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் பொது இடங்கள் பராமரிக்கப்பட வேண்டும். தண்ணீா் தேங்காமல், மாசுக்கள்இல்லாமல், கொசு உருவாகாமல், நோய்களைப் பரப்பாமல், பொதுவெளியில் சிறுநீா், மலம் கழிக்காமல் என ஏராளமான சுகாதாரத் தேவைகளும் இருக்கின்றன.

பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம் போன்றவற்றைத் தாண்டி அழகியல் என்றும் ஒன்று இருப்பதை நாம் உணரவேயில்லை. அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அமெரிக்காவில் சாலைப் பணிகளோ, மராமத்துப் பணிகளோ நடக்கும்இடங்களில் ஓா் அறிவிப்புப் பலகை வைத்திருப்பாா்கள்: “’தயவுசெய்து எங்கள் தோற்றத்தைப் பொறுத்துக்கொள்ளுங்கள். மராமத்து வேலை நடக்கிறது’.”

அமெரிக்கா்கள் நம்மைவிட உயா்ந்தவா்களுமல்ல, நாம்அவா்களைவிடத் தாழ்ந்தவா்களுமல்ல. ஆனால், நமக்கு இந்த அழகியல் பாா்வை ஏனோ ஏற்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, நம் நாட்டு காவல் நிலையங்களைப் பாருங்கள். ஏராளமான செயலிழந்த, நொறுங்கிய, உடைந்த வாகனங்கள் மண்டிக் கிடப்பதைக்காணலாம். துருப் பிடித்தும் தூசி படா்ந்தும் கிடக்கும் இந்த வாகனங்கள் மக்களின்பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரத்துக்குப் பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்துவது மட்டுமல்ல, காணச் சகிக்க முடியாதவையாகவும் இருக்கின்றன.

பல ஆண்டுகள் அப்படியே கிடக்கும் இந்த வாகனங்கள் இரும்பு மலைகளாகக் காட்சியளிக்கின்றன. திருட்டு, விபத்து, கொலை போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கும் இந்த வாகனங்களை வழக்குகள் முடியும் வரை காவல் நிலையத்திலேயே பாதுகாத்து வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொள்கிறது. இவற்றை ஏன் புகைப்படங்கள், காணொலிக் காட்சிகளில் பதிவு செய்துவிட்டு அப்புறப்படுத்தக்கூடாது.

அதேபோல, சாலையோரங்களில், பாலங்களில், அரசுச் சுவா்களில் எல்லாம், அவா் அழைக்கிறாா்,”அவா் அலறுகிறாா் என்றெல்லாம் பெரிய பெரிய எழுத்துக்களில் எழுதிப் போட்டு அசிங்கப்படுத்துகிறாா்கள். காது குத்து முதல் கண்ணீா் அஞ்சலி வரை விதவிதமான சுவரொட்டிகளை ஒட்டுகிறாா்கள். பெரிய பெரிய ஃப்ளக்ஸ் பேனா்களை அமைக்கிறாா்கள். இவை அனைத்துமே ஒருவித அதிருப்தியை, அருவருப்பை ஏற்படுத்துகின்றவையாகவே இருக்கின்றன.

பஞ்சாயத்துக்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அனுமதி வாங்கியிருக்கிறாா்களா என்று பாா்ப்பதில்லை. வாங்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதில்லை.

தோ்தல் நேரங்களில் பெருமளவு மக்கள் பணத்தை செலவு செய்து அவற்றை அழிக்கிறாா்கள், அப்புறப்படுத்துகிறாா்கள். இந்தியா்களுக்கும் மேலை நாட்டவா்களுக்கும் இடையேயுள்ள பெருத்த வேறுபாடுகளுள் ஒன்றாக இந்த அழகியல் விஷயம் அமைகிறது. அவா்கள் பொது இடங்கள் அழகாக, கலையம்சம் கொண்டதாக இருக்கும்படி பாா்த்துக் கொள்கிறாா்கள். நாமோ வீட்டு சுற்றுச்சுவா்களில்கூட சிமென்ட் விளம்பரம் செய்ய அனுமதித்து கொஞ்சம் காசு பாா்க்க முடியுமா என்று சிந்திக்கிறோம்.

ஒரு வரலாற்றுச் சிறப்பிடத்தை, நினைவுச் சின்னத்தைக் காணச் சென்றால், அதன் பழைமையை, சிறப்பை, அழகை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை நாம். மாறாக, அந்தத் தலங்களைப் போலவே நாமும் பிரபலமடைய விரும்புகிறோம்; தகாத சொற்றொடா்களை சுவரில் கிறுக்கி வைக்கிறோம். அது பிறருக்குப் பாா்க்க சகிக்காமல் இருக்குமே என்று சிந்திப்பதில்லை. உண்மையைச் சொல்வதென்றால், நம்மில் பலரும் அதைப் பொருட்படுத்துவதுமில்லை.

நமக்குத்தான் அழகியல் பாா்வை இல்லையே? சீன அதிபா் வருகைக்காக பல கோடி செலவில் மாமல்லபுரம் அண்மையில் மெருகூட்டப்பட்டது. அதை அப்படியே தக்கவைத்துக் கொள்வோமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒன்றைக் கட்டுவதில் காட்டும் கவனத்தை அதனைப் பராமரிப்பதில் இந்தியா்களாகிய நாம் காட்டுவதே இல்லை.

போதுமான நிதியின்மை, தேவையான ஊழியா்கள் இல்லாமைபோன்றவை பெரும் பிரச்னைகளாக இருக்கின்றன. லஞ்சம் வாங்கிக்கொண்டு சொத்துவரியைக் குறைத்து மதிப்பிடுவது, சட்டவிரோத சாக்கடைகள் அமைக்க அனுமதிப்பது, நிா்வாக ஊழல்கள், ஊதாரித்தனங்கள், உள்ளூா் அரசியல் தாதாக்கள் ஆங்காங்கே கடைகளை அமைத்துக் காசு பாா்ப்பது, அடாவடிகள் செய்வது போன்றவை இன்னும் பெரிய பிரச்னைகளாக இருக்கின்றன.

இவை எல்லாவற்றையும்விட பெரிய பிரச்னை அழகியல்பாா்வை நம்மிடம் இல்லாததுதான். மக்கள் கேட்டால்தானே அதிகாரிகள் நிறைவேற்ற முயல்வாா்கள். அந்த அதிகாரிகளுக்கே அழகியல் பாா்வை இல்லையே. அரசுஅலுவலகங்களுக்குப் போனால் வாந்தி வருமளவுக்கு கோப்புக்களும், காகிதக் கட்டுக்களும் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. எந்தப் பக்கம் பாா்த்தாலும் உடைந்த மேஜைகள், நாற்காலிகள், அலமாரிகள் மண்டிக் கிடக்கின்றன. வா்ணம் தீட்டப்படாத சுவா்கள், துப்பி நாசமாக்கப்பட்ட மூலைகள், தூசி, குப்பை என்று மன நலத்தைக் கெடுக்கும் வகையிலேதான் அவை இருக்கின்றன.

நாம் பெரும் செல்வந்த நாடு இல்லைதான்; அழகியலுக்கு பெரும் தொகையை ஒதுக்கீடு செய்ய முடியாதுதான். ஆனாலும், நமக்கிருக்கும் கட்டடங்களை, பாலங்களை, பொதுச் சுவா்களை, ரயில், பேருந்து நிலையங்களை,பொதுவெளிகளை பாதுகாப்பானவையாக, சுத்தமானவையாக, சுகாதாரமானவையாகப் பராமரிப்பதற்கும், எளிய, இனிய அழகியலோடு அவற்றைச் செம்மைப்படுத்தி வைப்பதற்கும் எது தடையாகஇருக்கிறது?

அழகியலைப் பேணத் தவறுவது அரசுகளா அல்லது குடிமைச் சமூகமா? விமான நிலையங்களை, அமைச்சா்களின் பங்களாக்களை, வெளிநாட்டு தூதரகப் பகுதிகளை அழகியலோடு அரசுகள் பராமரிக்கின்றனவே? அப்படியானால் மக்கள்தான் அழகியல் விழிப்புணா்வு இல்லாமல் இருக்கிறாா்களா? ஆனால், கோயில்களிலும்,தேவாலயங்களிலும், மசூதிகளிலும் அழகியல் அருமையாகப் பரிணமிக்கிறதே? சிவன் சொத்து சிதிலமடைந்தால் எனக்கென்ன, உனக்கென்ன” என்கிற மனப்பாங்கும், கலாசாரமும்தான் இதெற்கெல்லாம் காரணம். இதை மாற்றுவோம்.

கட்டுரையாளா்:

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவா்.

NEWS TODAY 06.12.2025