Friday, May 15, 2015

மதுரை விமான நிலையத்தில் நெரிசல் தவிர்க்கப்படுமா: பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க வெளிநாடு, உள்நாடு பயணிகளுக்கு தனித்தனி நுழைவு பாதைகள் அமைக்க விமான போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையிலிருந்து சர்வதேச விமானங்களை இயக்க ஏதுவாக ரூ.135 கோடியில் அமைக்கப்பட்ட டெர்மினல் 2011ல் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது கொழும்பு, துபாய்க்கும், சென்னை, மும்பை உட்பட நாட்டின் பிற பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

கொழும்புக்கு ஒரு நாளைக்கு இரண்டு, துபாய்க்கு ஒரு விமானம் இயங்குகிறது. தென் மாவட்டத்தினர் ஏராளமானோர் துபாய் உட்பட மேற்கு ஆசியா நாடுகளில் பணிபுரிகின்றனர். மதுரையிலிருந்து துபாய்க்கு விமானம் இயக்கப்பட்டதற்கு பிறகு, தினமும் சராசரியாக 150 பேர் சென்று வருகின்றனர். கொழும்பு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதே அளவு உள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு தினமும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வெளிநாட்டு பயணிகள் மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு செல்ல தனித்தனி பாதைகள் இல்லை. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் ஒரே வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதனால் காலதாமதமாவதுடன் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளதால்,
பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். வெளிநாட்டிற்கு செல்லும் பயணிகள் செல்வதற்கு என்று உள்ள தனிப்பாதையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இடவசதியின்மை, விமான நிறுவனங்களில் ஊழியர்கள் இல்லாதது போன்றவற்றை இதற்கு காரணங்களாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பயணிகள் விமான நிலையத்திலிருந்து நேரடியாக விமானத்தில் ஏறி அமரும் வகையில் மூன்று ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன. அவற்றையும் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குனர் குல்தீப் சிங் கூறியதாவது: பாதுகாப்பு அம்சங்கள் உட்பட பல விஷயங்களை ஆராய்ந்து விமான போக்கு வரத்து ஆணையம் ஒப்புதல் கொடுத்ததும் சர்வதேச கார்கோ சேவை துவக்கப்படும். ஏரோபிரிட்ஜ்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது மதுரையிலிருந்து செல்லும் பயணிகள் நெரிசலின்றி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...