Monday, November 21, 2016

திருமண வீட்டாருக்கு நாளை முதல் ரூ.2.5 லட்சம்: வங்கி அதிகாரி தகவல்

திருமண வீட்டார் தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சத்தை பெறும் நடைமுறை நாளை அல்லது நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்று வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பணத் தட்டுப்பாட்டால் திருமண வீட்டார், விவசாயி கள், வியாபாரிகள் பாதிக்கப் படுவதாக மத்திய அரசிடம் புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து திருமண வீட்டார் தங்களின் செலவுக்காக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சகம் கடந்த 17-ம் தேதி அறிவித்தது.

அதன்படி தந்தை அல்லது தாயார் அல்லது மகன் அல்லது மகள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் இருந்து இந்தத் தொகையை எடுக்கலாம். இதற்காக திருமண பத்திரிகை, சொந்த உறுதிமொழி கடிதம், பான் எண் விவரங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதுதொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷா அனந்த சுப்பிரமணியன் கூறியதாவது:

திருமண வீட்டாருக்கு ரூ.2.5 லட்சம் வழங்குவது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். ரிசர்வ் வங்கி சொல்லாமல் எதுவும் செய்ய முடி யாது. திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வழிகாட்டு நெறிகள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.

அதைத்தொடர்ந்து திருமண வீட்டார் தங்கள் வங்கிக் கணக் கில் இருந்து ரூ.2.5 லட்சத்தை எடுக்கும் நடைமுறை அமலுக்கு வரும். மணமகன், மணமகள் வீட்டார் தனித்தனியாக வங்கி களில் விண்ணப்பித்து தலா ரூ.2.5 லட்சம் பெறலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025