Wednesday, December 6, 2017

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: 350 சிறப்பு பஸ்கள் இயக்கம் 



காரைக்கால்: திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்(சனி பகவான் கோயில்) உள்ளது. இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கேசவன் பேசுகையில், 'தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது. பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். கோயில்கள் நிர்வாக அதிகாரி விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். 

 
Dailyhunt

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...